ஸ்டுடியோ மொத்தமும் ஸ்தம்பித்து
போய் பார்க்க., எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு மேக்கப் ரூம்லயே உட்கார்ந்து இருந்தான் மாதேஷ்
'எப்படி எப்படி இவளுக்கு தெரிந்தது? அந்த சந்தியா நாய் எல்லாவற்றையும் அக்காவிடம் போட்டு கொடுத்து விட்டாளா? அவனுக்கு கோபத்தில் நெஞ்சு படபடக்க., சுஷ்மிதாவின் டிரைவருக்கு போன் செய்தான்.
' ஐயா நான் அம்மா கூட கார் ஓட்டலைய்யா ? நான் வீட்லதான் இருக்கேன் "
"என்னடா சொல்றே? அப்ப இப்போ சுஷ்மிதா வந்துட்டு போறாளே "
"அம்மாவே சோழா
ஓட்டல்ல இருந்து காரை ஓட்டிட்டு வந்தாங்கய்யா.."
"சோழா ஓட்டலுக்கா? ஏன்? அங்க
யார பாக்க போனா"
" பத்மா மேடம் இருக்காங்க இல்லையா ? அவங்கள பாக்கணும்னு சொன்னாங்க அம்மாவை கிண்டி சோலா ஓட்டலுக்கு கூப்பிட்டு போனேன். அங்க என்னாச்ச்சுன்னு
தெரில. கோபமா வந்து என்னை வீட்டுக்கு போவ சொல்லிட்டு ., ஸ்டுடியோ வந்துட்டாங்க
போல.."
அவன் சொல்ல மாதேஷ் ஆத்திரத்தில் பல்லை கிடைத்தான். ஓ பத்மா செய்ற வேலையா இது? பத்மா.. இருடி,,, உன்னை....
மறுநாள் காலையிலேயே ' இனி இவனுடன் வாழ்ந்து பலன் இல்லை ' என ட்விட்டரில் செய்தியை போட்டாள் சுஷ்மிதா.
இண்டஸ்ட்ரி
பற்றி கொண்டு எரிந்தது. சோசியல் மீடியா சுறுசுறுப்பானது. கோடம்பாக்கமே
அல்லோகலகப்பட்டது . ஏகப்பட்ட போன் கால்கள் . ரங்கராஜ்ஜால் எதையும் சமாளிக்க முடியவில்லை. அவருக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள் தாங்க முடியாத மன அழுத்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.
வியாபாரத்தில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை பார்த்தவர் ரங்கராஜ். ஆனால் தான் பெற்ற மகள்களால் வரக்கூடிய துன்பங்களை தாங்கும் சக்தி இல்லாமல் இருந்தார் . ரங்கராஜன் யார் எது கேட்டாலும் 'எனக்கு தெரியாது . அது அவர் அவர்களின் தனி உரிமை. விருப்பம்" என சொல்லி முடித்துக் கொண்டார்.
அவர் சதுரகிரி மலைக்கு திடீர்ப்
பயணம் கிளம்ப,
அன்று மாலை மாதேஷை விவாகரத்து செய்வதாக சுஷ்மிதா நமது அப்பாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில்
வெளியிட்டாள்.
'என்ன இருந்தாலும் ரங்கராஜன் மகளுடன் வாழ்ந்தால் தான் தனக்கு மரியாதை அது இல்லை என்றால் சினிமா உலகம் தன்னை கேலியாக பார்க்கும்' என நினைத்தான் மாதேஷ்.
மாதேஷ்க்கு மட்டுமல்ல எல்லா ஆண்களுக்குமே தனது மனைவியுடன் இருந்தால் தான் மரியாதை .
மாதேஷ் சுஷ்மிதா முடிவால் ஆடிப் போனான்.
எத்தனையோ சமாதான தூது விடுத்து பார்த்தான். சுஷ்மிதா கேட்கவே இல்லை 'இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்கள் முகத்தை பார்க்க கூடாதா?" என சுஷ்மிதாவின் அம்மா கூட சொல்லிப் பார்த்தாள்.
அவள் யார் பேச்சையும் கேட்க வேண்டும் எண்ணம் இல்லாமல் இருந்தாள். சுஷ்மிதா விவாபாரத்து செய்த விஷயம் கேள்விப்பட்டு சந்தியா அவளிடம் போய் நிற்க இருவரும் எதையும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்கள் . ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆற தழுவி அழுதார்கள்.
ஒரே வீட்டில் இரண்டு மகள்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து நிற்கும் நிலையை கண்டு ரங்கராஜன் குடும்பம் கதி கலங்கியது .
ரங்கராஜன் மேல் பல பேர் பல கட்டத்தில் இந்த சினிமா உலகில் கோபமாக ஆத்திரமாக இருந்தார்கள் . அவர் வட்டிக்கும் பணம் கொடுத்து நெருக்கியதால்
செத்து போன பல தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் இப்போது ஆறுதல் பட்டது.
அந்த பல பேர்களுக்கும் இந்த செய்தி காதில் தேனாக பாய்ந்தது. அடுத்து வந்த நாட்களில் மாதேஷ் ஷூட்டிங் கேன்சல் செய்தான் ஓவராக தண்ணி அடித்தான். ரூமிலேயே இருந்தான் .
செயின், செயினாக சிகரெட் பிடித்து புகையை விட்டான் . சுஷ்மிதா போனது கூட பிரச்சனை இல்லை . ஆனால் பெரிய அசிங்கம் ஆகி விட்டது. கையில் இருந்த படங்கள் வேறு கேன்சல் ஆகிவிட்டது. 'ரங்கராஜன் சார் சொன்னாதான் புக் பண்ணுவோம் ' என சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் இந்த பத்மா தான். இந்த பத்மாவை எங்காவது கொன்று புதைத்து விட வேண்டும் .
இவள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையை கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். அவளை என்ன செய்வது ?
அவன் தனது ரசிகர் மன்றத்தின்
தலைவனாக இருக்க கூடிய வடசென்னை முல்லை நகர் கர்ணாவை அழைத்து பேச நினைத்தான். அவன்
கையில் போன் எடுக்க. போன் அடித்தது.
அட யார்?
புது நெம்பர்.
"ஹலோ..யாரு?"
"சார்...நான் ஷ்யாம் என்றான்
" ஷ்யாம்
-----------------
இவனா? இவன் ஏன் இப்போ கால்
பண்றான்? மாதேஷ் யோசிக்க,
" ஹலோ மாதேஷ் எப்படி இருக்கீங்க? விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு " என்றான்
" பரவால்ல பாஸ் என்ன பண்றது? லைஃப்ல நம்ம டிசைட் பண்றது என்ன இருக்குது ? நீங்க எப்படி இருக்கீங்க? நம்ம ஒன்னு ரெண்டு தடவை ஃபங்க்ஷன்ல மீட் பண்ணி இருக்கோம். ஆனா பெருசா பேசுனது இல்லல்லே?"
"ஆமா பாஸ்'
"பெங்களூர்லயா இருக்கீங்க...?"
"இல்ல சென்னைலதான்.
ஆலப்பாக்கத்துல..."
"சொல்லுங்க என்ன
திடீர்னு?"
" என்ன சொல்ல மாதேஷ்,. பட் இது சரியான சமயமா ? என்று தெரியவில்லை. உங்களை மாதிரியே எனக்கும் ஒரு பிரச்சனை. ஒய்ப் அவங்கப்பா கிட்ட போயிட்டா.
"
"அய்யோ எப்போ ?"
"டூ டேஸ் முன்னாடி.மீடியா,
பிரஸ், வெளிய யாருக்கும் தெரியாது."
"அடடா.. சினி பீல்டுல,
ஆக்டருக்கு நல்ல லைஃபே இல்லப்பா"
" எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் மாதேஷ். யார்கிட்ட ஹெல்ப்புக்கு போறதுன்னு துடிச்சிட்டு இருந்தேன் . சரியான நேரத்தில் உங்க ஞாபகம் வந்தது. இந்த உதவி பண்றதுக்கு நீங்க தான் இப்போ ஆப்ட்டான ஆளு .அதான் உங்களுக்கு கால் பண்ணேன்" என அவன் பொடி வைத்து பேச,
ஏற்கனவே குழப்பத்தில் வந்த மாதேஷ்க்கு அவனது பேச்சு எரிச்சலாக இருந்தது
'என்ன ஹெல்ப் ? என்கிட்ட கேக்குறீங்க?"
" மாதேஷ் ஒரு பொண்ணு திமிர் பிடிச்ச பொண்ணு என் லைஃபை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கு , இப்போ உங்களை எப்படி பண்ணி இருக்கோ அதே மாதிரி கிட்டத்தட்ட என்னையும் பண்ணி இருக்கு அவளால என் வைஃப் தனியா பிரிஞ்சு போகணும்னு சொல்றா "
"என்ன சொல்றீங்க ஷியாம் ? என்ன பிராப்ளம் ? எந்த பொண்ணு நீங்க என்ன சொல்றீங்க?" மாதேஷ் புரியாமல் கேட்க
" ஆக்ட்ரஸ் பத்மா இருக்கா இல்ல?"
" ஆமா "
"அதான் உங்க கூடயும் என் கூடயும் ஜோடியா நடிக்க மாட்டேன் பிடிவாதம் பிடிப்பாளே"
" ஆமா சொல்லுங்க "
"அவதான் எனக்கு பெரிய ட்ரபிள் கொடுக்கிறா."
" உங்களுக்குமா ?" அவன் கிட்டத்தட்ட எழுந்து விட்டான்
"ஆமா மாதேஷ் என் கூட நடிக்கிற ஆக்டர்ஸ் ரேணுகா இருக்கா இல்ல அவ அம்மா கூட எனக்கு ஒரு அபைர் ஆயிடுச்சு"
"ஓ... நைஸ். ஷீ இஸ் ஆல்சோ
மோர் கிளாமரஸ்."
" எப்படியோ விஷயம் லீக்காயி ரேணுகா அந்த பத்மா கிட்ட சொல்லிட்டா. அந்த பத்மா உடனே என் வைஃபை கூப்பிட்டு பெங்களூர்ல வெச்சி எல்லாத்தையும் போட்டு உடைஸ்சிட்டா"
"ஓ சேட்.. அவ இதையே வேலையா தான் சுத்துறா இல்ல? "
"ஆமா. அவ தான் உங்களுக்கு பண்ண மாதிரியே , என் வைஃபையும் கூப்பிட்டு என்ன பத்தி மோசமா சொல்லி போட்டு கொடுத்துட்டா . "
"அது சரி.
என்னோட சந்தியா விஷயம் யாருக்கும் தெரியாதே? உங்களுக்கு எப்படி தெரியும் "
"அட என்ன மாதேஷ் ? உலகமே சின்னது. அதுல கோடம்பாக்கம் உள்ளங்கை அகலம் தானே ? இங்க பாலாவுக்கு தெரிஞ்ச ஒரு ஆள் இருக்கான் முத்து ன்னு ஒரு ஆளு"
"ஆமா முத்து. எங்கப்பாவுக்கு
ஓல்ட் பிரண்டு"
"அவன் மூலமா தான் உங்களுடைய சந்தியா, விஷயம் தெரியும் "
மாதேஷ் தலையில் கையை வைத்து கொண்டான்.
"சொல்லுங்க அவள என்ன பண்ணலாம்? . உங்களுக்கும் ட்ரபுள் கொடுத்து இருக்கா . எனக்கும் ட்ரபுள் கொடுத்து இருக்கா. "
"ஷ்யாம் அவளை உரு தெரியாம அழிச்சிடனும்."
" பண்ணலாமா?"
" வெட்டி கொன்னு புதைச்சிடனும் . "
"கண்டிப்பா பண்ணலாம்"
" ஆனா அவளை சாகடிக்கிறது நம்ம நோக்கம் இல்லை, அதுக்கு மேல ஏதாச்சும் செய்யணும்"
"என்ன செய்யலாம்?"
" போன்ல பேச வேணாம் . நேர்ல பேசலாமா "
"ம்ம் கண்டிப்பா"
----------
அடுத்த ஒரு மணி நேரத்தில் மாதேஷ் போரூர் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பங்களாவிற்கு போனான். வாசலில் பாலா நின்று வரவேற்றான். அவனை அழைத்து
சென்றான்.
மாடி ரூமில் ஷாம் இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கைகுலுக்கி கொண்டார்கள்.
ஷ்யாம் பாலாவை
வெளியே போக சொல்லிவிட்டு, தன் திட்டத்தை மாதேஷிடம் சொன்னான் .
"அந்த பொண்ணு இப்போ சென்னைல தான் இருக்கு. கிண்டி மணப்பாக்கத்துல அவளுக்கு வீடு. வண்டலூர்ல ஒரு செட்டு போட்டு ஷூட்டிங் நடக்குது . இப்போ டெய்லியும் அங்கதான் போயிட்டு வரா. காலைல போனா நைட்டு தான்
வருவா.."
"ம்ம்"
" கார்ல பாதுகாப்புக்குன்னு
தனியா யாரும் இல்ல. ஒரே ஒரு டிரைவர் தான். அந்த டிரைவரை விலைக்கு வாங்கறது உங்க வேலை . அப்புறம் அவ அஸிஸ்டென்ட் பாபு.
விவரமனவன். அவனையும் சீன்ல இருந்து தூக்கனும். மத்ததை நான் பார்த்துக்கொள்கிறேன் "
"என்ன பிளான்?"
" அவளை எங்கனாச்சும் தனியா கூட்டிட்டு போய் ரேப் பண்ணிட்டு அத அப்படியே ஷூட் பண்ணிட்டு நெட்ல விட்டா போதும். செங்கல்பட்டுல எனக்கு ஒரு
பங்களா இருக்கு. அங்க வெச்சி அவளை செய்யனும் " அவன் குரலில் அளவுக்கு அதிகமான வன்மம் இருந்தது .
"அது சரி யார் ரேப் பண்ண போறோம் ?"என்றான் ஷ்யாம் சிரித்தான்
"நீங்களும் நானுமா பண்ண முடியும்? அதுக்குன்னு ஆளுங்க இருக்காங்க பாஸ் . பெங்களூரில் இருந்து ஆள வர வைக்கிறேன் "
" உங்க அசிஸ்டென்ட் பாலா மூலமாவா?'
" நோ. நோ... இதப் பத்தி எதுவும் அவனுகு தெரியாது . அவன் அநியாயத்துக்கு நல்லவன் . அவன் கிட்ட எதையும் வாய் திறந்துடாதீங்க. சிலுவை'ன்னு
நம்பிக்கையான ஆளு இருக்கான்"
"ஓ அப்படி தான் அவளை
செய்யனும். அவ கேரியரையே காலி பண்ணனும்"
"உங்க ஹெல்ப் வேனும் , மாதேஷ்"
"கண்டிப்பா நீங்க செய்யுங்க பாஸ் நான் அவரோட டிரைவர் யாரு அவன் பேக்ரவுண்ட் என்ன? என்றதை கண்டுபிடிச்சி.. ஒரு அமௌன்ட் கொடுத்து மடக்கறேன்.. அவ அசிஸ்டென்டை
தூக்கறேன். நான் பொறுப்பு. அவளை எதனாச்சும் பெருசா செய்யணும் ஷ்யாம். இத ரொம்ப ரொம்ப நாளைக்கு சினிமால பேசிக்கிட்டு இருக்கணும்.."
" கண்டிப்பா செஞ்சுடலாம். மாதேஷ் "
"சரி என்னைக்கு செய்யப் போறீங்க ?
" சனிக்கிழமை பிளான் பண்ணி இருக்கேன். இன்னும் நாலு நாள் இருக்கு. டிரைவர் மட்டுமில்ல அவ கூட ஒரு அசிஸ்டன்ட் இருப்பான் அவனையும் ஆஃப் பண்ணனும். இது ரெண்டும் உங்க வேலை மத்தத நான் பாத்துக்கிறேன் "என்றான் ஷியாம்
"ஓகே என் சைடு வேலை முடிச்சுட்டு உங்களுக்கு சொல்றேன் " அவளை அதுக்கப்புறம் ஒரு வாரம் எங்கனாச்சும் கூட்டி போய் வெச்சி நல்லா செய்யணும் . இந்த வாய்தானே எங்களை பத்தி வீட்ல போட்டு கொடுத்துச்சு , இந்த வாய்தானே எங்க கூட ஜோடியா நடிக்க மாட்டேன்னு சொல்லுச்சு, இந்த வாய் தானே எவனுக்கோ கிஸ் கொடுத்துட்டு என் கூட நடிக்க
மாட்டேன்னு சொல்லுச்சு... அவ வாய்லயே
நல்லா செய்யணும் "என்றான் மாதேஷ் .
ஷ்யாம் அவனை அணைத்துக்கொண்டான் ' என் இனமடா நீ ?" என அவன் உள்ளுக்குள் குரல் கேட்டது.
அவர்கள் விரைவாக பிரிந்தார்கள் . திட்டமிட்டார்கள்
No comments:
Post a Comment