மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, June 26, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 77

"என்னாச்சு.... சொல்லி தான் தொலையேன்"

 "கார் பள்ளத்துல மாட்டிகிச்சும்மா?

 மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு......ஊஊஊஊ' அடச்சே இதென்ன? இந்த இக்கட்டான நேரத்தில் இப்படி ஒரு பாடல்வரி என் மனதுக்குள்.,

 "காரை ஆக்சில் கொடு"

 சரிங்கம்மா...அவன் கடுமையாக முயற்சித்தான் . கார் ஏறவில்லை.

 "இருங்கம்மா பின்னாடி போய் பாக்குறேன்"

 'நான் ஸ்டேரிங்க் பிடிக்கட்டுமா?

 'வேணாம்மா. இருங்க " அவன் கதவை திறந்து பின்னல் போய் பள்ளத்தை பார்த்தான். அந்த பழைய பள்ளம் தான். ஆனால் அன்றை விட  இன்று பெரிதாய் ஆகி இருந்தது. பள்ளம் முழுக்க நீர்  நிரம்பி இருக்க., சந்திராவுடன் வந்த போது சிக்கிய அதே பழைய பள்ளம் தான். ஆனால் அது திடம் இது எதிர்பாராதது. காரை கண்டிப்பாக ஒரே ஆளால் தூக்கி தள்ள முடியாது.,

  என்ன ஆச்சு?" சௌம்யா கேட்டுக் கொண்டே  காரில் இருந்து இறங்கி வர

 "அய்யோ நீங்க ஏன் வந்தீங்க? கார்ல போய் இருங்கம்மா"

 "இருக்கட்டும். இப்ப என்ன பண்றது?

 .,  நனையறீங்களே நீங்க?"

 "ஏன் கத்தறே? ஒன்டி ஆளு நீ எப்படி தூக்குவே?"

 " அம்மா., அத   நான் பாத்துக்கறேன்  நீங்க உள்ள போங்களேன்"

 ஷட் அப் எப்ப பாத்தாலும் அம்மா அம்மா அம்மா., அவளுக்கு அவனை ஏனோ திட்டவேண்டும்  போலிருக்க.,

 " இரு நான் போய் ஆக்சில் கொடுக்கறேன்..,  நீ தள்ளு.."

 அவள் அவன் சீட்டில் போய் உட்கார்ந்தாள். சீட்டில் படர்ந்து இருந்த அவனது உடல் சூடு அவளுகு பரவ,. அவள் திகைத்து போய்., செய்வதறியாது விழிக்க

 "அம்மா அம்மா தள்றேன்மா"

 "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" ஆக்சல் கொடுத்தாள்கார் மேடேறியது,. அவன் வர.,  அவள் கதவை திறக்க, கதவு அவன் ,மீது இடிக்க.,

'இடியட்....தள்ளி நில்லு மரம் மாதிரி வழில நிக்கறியே " அவனை அவள் தேவையில்லாமல் திட்டினாள்.

'சாரிங்கம்மா"

"பள்ளம் கூட பாத்து வர மாட்டியா?"

'தண்ணில பள்ளம் தெரிலம்மா "

'சரியான  மட சாம்பிராணி., ஞான சூன்யம்"

" மேடம்? " அவன் திகைக்க

:தினமும் வர வழிதானே?"

"சாரிங்கம்மா"

"போற புதுஇடத்துல இப்படி வகை தொகை இல்லாம வண்டி ஓட்டிடாதே... புரிதா?'

"சரிங்கம்மா" தன் எஜமானிக்கு ஏன் தீடிரென இவ்ளொ கோபம். அவன் புரியாது விழித்தான்.

 "வண்டிய எடு"

 அவள் பின்சீட்டில் வந்து உட்கார்ந்தாள். உடல் முழுக்க அனலாய் அடித்தது. படபடவென மார்பு கூடுகள் துடித்தன. அவள் காட்டு இருளை பார்த்து அச்சப்பட்டாள்.

 கார் கிளம்ப., அவள் தேகம் கொதித்தது., மழையில் நனைந்தது, ஈர காற்று எல்லாம்  சேர்ந்து அவள் உடலை சூட்டை கிளப்ப.,

 "ஏசி ஆப் பண்னு.. "

  'சரிங்கம்மா' அவன் ஏசி பட்டனை தேட .,

 " மழை பொழியுது.. ., உடெம்பல்லாம் ஈரம் ஏசி ஆப் பண்ணனும்னு அறிவில்ல உனக்கு" கடுமையான வார்த்தைகள் வந்து விழ,.

 'அவன் திகைத்து போய். ;'மன்னிச்சுக்கங்கம்மா.."  அவன்  பதறி போய் ஏசியை ஆப் செய்தான்.

 அம்மா எப்போதும் இப்படி திட்டியதில்லையே

 அய்யோ இந்த வீடு எப்ப தான் வரும்? ஒரு பதிமூனு கிலோ மீட்டர் போய் சேர  பத்து யுகமா?

 கார்.., ஓரு வழியா சிரமப்பட்டு  பங்களாவை நெருங்கியது..செக்யூரிட்டி இல்லை.. கிருபாவே ஒடிப்போய் கேட்டை திறந்து கார எடுத்தான். பெருமழை அப்போதும் விடவில்லைஇது தான் உலகின்  கடைசி மழை  போல  வானம் கொட்டிக்கொண்டேயிருந்தது.

 

போர்டிகோவில் கார் வந்து நின்றதும்., கிருபா முதலில் இறங்கி  காரின் பின் கதவை திறந்துவிட்டான்ஆனால் சௌம்யாவால் சடென எழுந்திருக்க முடியவில்லைகோபத்தில் கத்தியதாலே என்னவோ..,  கால்களில் பலமில்லைஅதிகம் சோர்ந்து போயிருந்தாள்மாறுபட்ட மனநிலைகள், அதிக யோசனைகள், அவள் உடலின் சமனிலையை கெடுத்து அவளை ஒரு வழியாக்க., உடலை முன்னுக்கசைத்ததுமே அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.

 "சந்திராவை கூப்பிடவாம்மா"

 'வேணாம்  நீ போ., காரை ஷெட்ல விடு'

 அவள்  ஒரு காலை  காரிலிருந்து தரையில் எடுத்துக் கீழே வைத்து., கார் கதவை ஊன்றி., மறுகாலையும் எடுத்து வைக்கும்போது அவள் தள்ளாடினாள். இதென்ன தரை ஆடுகிறதா? என் உடல் ஆடுகிறதா? இறங்கி அசையாமல் நின்றாள். அவன் மரமாய் அச்சத்துடன் நிற்க.,

 "எனக்கொன்னும் இல்லநீ போன்னு சொல்றேனில்ல'

 அவள் அடுத்த அடி வைக்க போக , அது முடியாமல் அவள் கால் நகர மறுக்க உடல் பின்னோக்கி கார் பக்கம்  சாயப் போக

 'அய்யோ என்னாசும்மா? ' அவன் பதறி தூனிச்சலாகஅவளை ஆபத்துக்குதவியாய் சட்டென்று தாங்கிக்கொள்ள.

 

அவனுக்கு உடம்பு நடுங்கியது. சௌம்யாவின் உடம்பு முழுதுமாய் அவன் மீது பட்டு நசுங்கவில்லை. உடம்பும் உடம்பும் தொடவில்லை என்பது தான் அந்த பொழுதின் ஆகச் சிறந்த பெரிய ஆறுதல்அவன் விட்டால்அவள்  தளர்ந்து விழுந்து விடுவாள் போல ஒரு தலை சுற்றல், மயக்கம் .,அவளை காரிலும் அல்லாமல், தன் மீதும் அல்லாமல் அவளை ஒப்புக்கு பிடித்தவன் "ஏய்ய் சந்திரா....."  என பொண்டாட்டியை கூப்பிடுபவன் போல  அத்தனை அதிகாரம்..

 அந்த பங்களா அதிர்ந்து படபடவென நொறுங்கும்படி கத்தினான்.

 'அய்யோ என்னாச்சு?"  உள்ளிருந்து அவள் எதிர்க்குரலிட,

 "வா இங்க சீக்கிரம்.,  அம்மாவுக்கு உடம்பு சொகமில்ல,"

 '................ஏன் ?? "

 " மழையில் நனைஞ்சிட்டாங்க நடக்க முடில வா"

 சந்திரா உள்ளேயிருந்து கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தாள்  கலவரமாக இருந்தாள்.

 "....அம்மா மழையில நனைஞ்சிட்டாங்க..."

 "...ஏன் நனஞ்சாங்க..? "

 "கார் நின்னுச்சி.,  அதுக்குள்ள அம்மா சட்டென்னு இறங்கிட்டாங்க  நீ கூட்டி போ சீக்கிரம் ., வெளி காத்து ஆகாது.."

 ''செப்பல் கழட்டறேன் முதல்ல"

 " வேணாம்.. செருப்போட போவட்டும் கால்ல ஈரம் ஏறுது..‘இந்தா இந்தா மொதல்ல அம்மாவப் புடிஇந்நேரம்  தடால்னு ..சாஞ்சி வுழுந்துடப் பார்த்தாங்க என்றான் கவலையாக

 "சரி நீ போ' நான் பாத்துக்கறேன்..

 ' சரி "

 சந்திரா சௌம்யாவை  கைதாங்கலாக பிடித்து உள்ளே அழைத்து  வந்தாள்.

 "சோபாவில உக்காந்துக்கறீங்களா?"

 ";இல்ல என் ரூமுக்கு போறேண்"

 "படி ஏறனுமே?"

 'பரவாய்யில்ல நான் போறேண்"

 'சரி... சாப்பிடலயே நீங்க?"

 "கோயில்ல வெண் பொங்கல் சாப்ட்டேன்., எனக்கு எதுவும் வேணாம்" இருவருமே  படிக்கட்டில் ஒன்றாய் ஏற., சௌம்யாவின் கனத்தை சந்திராவால்  தாங்க முடியவில்லை.

 "கிருபா கிருபா.."

 "என்ன ஆச்சு?' ரூமை நோக்கி சோர்வாய் போய் கொண்டிருந்த அவன் குரல் கேட்டு உள்ளே ஓடி வந்தான்..

 "கொஞ்சம் பிடி..... "

 அவன் திகைத்தான்.

 "ம்ம்ம் அம்மா பக்கம் பிடி,. சாயறாங்க"

 அவன் பிடித்தான். மிக மரியாதையாய் அவளின் புஜத்தை மட்டும் பிடித்தான். அவர்கள் இருவரையும் சௌம்யா பற்றிக் கொண்டாள்..

 சௌம்யாவை ஈரம் சொட்டச் சொட்ட., படிக்கட்டில்  மூவருமே மெல்ல நடக்க மேல்தளம் வந்தவுடன்.,

 'சரி நீ போ கிருபா" என்றாள் சந்திரா.

 "எதுனாச்சும்னா கூப்பிடு.. விடிஞ்சா ஆஸ்பிடல்  போலாம்"

 "ஆஸ்பிடலா? நல்ல நாளெல்லம் வருது இப்ப போயா?"

 "ஆமா நாளு கிழமைலாம் பாக்க வேணாம்"

 'சரிநீ போறப்ப கிச்சன் போய் வென்னீர் வெச்சுட்டு போ கிருபா "

 "ம்ம்" அவன் அவசரமாய் கீழே போனான்.

 என்னம்மா? எதுக்கு இப்படி மழையில்  நனையனும்? ’  கனிவுடன் கேட்டாள் சந்திரா..

 

 ‘ம்கூ ம் எனக்கு ஒண்ணுமில்ல. என்னை விடு சந்திரா.   லேசா தலைவலி., ஜொரம்.., கிட்டினஸா இருக்கு,. ஏதாச்சும் காட்டன் புடவையை  எடுத்தா. அலமாரியில தைலம் இருக்கும் எடு என்று சொன்னாள். குரலே சரியில்லபாடகிக்கு குரல் தானே முக்கியம். இப்படி கொணங்கொணவென பேசுகிறாளே' சந்திரா யோசித்தாள்.

  "இருங்க ஹீட்டர் போடறேன்.. கொஞ்சம்  பாதத்தை பக்கெட்ல வெச்சி பாருங்க" அவள் பாத்ரூமுக்கு போக., சௌம்யா பாவாடை. பிரா, பேண்டிஸ்.,ஈரப் புடவை எல்லாம் அவிழ்த்து எறிந்துவிட்டு வேறு புடவை , உடைகளை எடுத்து அணிந்து கையில் கிடைத்த துண்டை எடுத்து தலையை நன்றாகத் துவட்டிக் கொள்ளும் போது சந்திரா பக்கெட்டில்  சூடான நீரை எடுத்து வந்து தர, ஒரு  கால்களையும்  பக்கெட் நீரில் விட இதமாக இருந்தது. ஆனால் அதிக நேரம் உட்கார முடியவில்லை.

 'குடிக்க தண்ணி கொடு., படுக்கறேன்"

 'கிருபா  போயிருக்கான் சுடுதண்ணி போடகிச்சனுக்கு'

 'அவனுக்கேண் சிரமம்?"

 :பரவால்ல., அதெல்லாம் செய்வான்., "

 "சரி  நான் சாஞ்சி படுக்கறேண்., கண்ணை சுழட்டுது"

 தனது படுக்கையில் சாய்ந்து  காலை மடக்கி குளிருக்கு அடக்கமாக மெல்ல சுருண்டாள் சௌம்யா.

 சந்திரா ஈரத்துணிகளையெல்லாம் எடுத்து பக்கெட்டில் போட்டு அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது  கிருபா கதவை தட்டினான் .

 

'இரு வரேன்..,  உள்ள வந்துடாதே  ' சந்திரா திரும்பி சௌம்யாவின் ஆடைகள் எல்லாம் சரிவர இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு கதவை  பாதி மட்டும் திறந்தாள்.

 " என்னா?'

 "இந்தா வென்னீரு., அம்மா எப்படி இருக்காங்க? தூங்கறாங்களா?'

 ',,ம்ம் இப்ப தான் படுத்தாங்க.."

  உடம்புக்கு என்னவாம்?’

 "தெரில., வீட்டுக்கு தூரம் கூட இல்ல" வெளிய சந்திரா சொல்வதை கேட்டு விழித்து கொண்டிருந்த சௌம்யாவுக்கு சுளீரென  இருந்தது.

 'பாதகத்தி., எதெல்லாம் சொல்றா பார்..?. ஒரு ஆம்பள கிட்ட"

 பிறகு அவர்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள்அதெல்லாம் அவளுக்கும் சன்னமாக கேட்டது.

 " ச்..சே..வேலைக்காரர்கள்  அருகே இருக்க., முதலாளி ஜுரத்தில் படுத்திருப்பது பெரிய தர்ம சங்கடம். ' பாத்தியா என்னென்ன ஆடுனா? இப்ப பார்.. நாம ஒரு டம்ளர் தண்ணி குடுத்தா தான் ஆச்சு?'  என்பது தான் அதற்கு பொருள்.

 ஆனால், இவர்களும் அப்படித்தான் பேசுவார்களா? என்ன? தெரியலையே?

 என்ன இருந்தாலும் குடும்பம் கணவன் பிள்ளைகள் வேண்டும் தான் போல., அவளுக்கு கல்யாணம், குடும்பம் மீது மரியாதை திடீரென வந்தது.

 "என்னை சரி ஆக்கிவிடு,.  ஆண்டவாஅப்பாவின் அடுத்த மாத நினைவு  நாளில் முன்னூறூ பேருக்கு அன்னதானம் போடுகிறேன்.

 'உடம்பையும் சரி. மனசையும் சரி., சௌம்யா படுக்கையில் படுத்தபடியே ஆண்டவனை வேண்டிக் கொண்டிருந்தாள் .

 


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க