மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, March 24, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 22

 

எபிசோடு : 22

 

 மறுநாள் அவனை பார்த்ததும் தனியே கூப்பிட்டு கேட்டாள்.” ஏண்டா உனக்கு ஏன் அவ்ளோ திமிரு?  வீட்டுல தான் சாப்பாடு கட்டித்தர சொன்ன தர போறாங்க”., என சொல்ல,

அதெல்லாம் உங்களுக்கு புரியாது மேடம்.  வீட்டு பிரச்சினை சொல்ல ஆரம்பிச்சா ரொம்ப நேரம் ஆகும் .நான் இனிமேல் வீட்டில சாப்பிடக்கூடாது அப்படின்னு நினைக்கிறேன்.”

வீட்ல சாப்பிட முடியாதுன்னா காசு வச்சிருக்க இல்ல ஹோட்டல் போய் சாப்பிடு”அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க உங்க வேலைய பாருங்க. ஒரே ஒரு நாள் தான் உங்களதை  சாப்பிட்டேன்.  அதுக்கே,  மறுநாள் சாப்பாடு கொண்டு வராத ஆள் தானே நீ ?”

என சொல்லிவிட்டு அவன் போய் விட மதியம் அவனை கூப்பிட்டு உணவு அளித்தாள்/.

  நீ வெஜ்ஜா நன வெஜ்ஜா”

“ரெண்டும்.. மீன் குழம்பு ரொம்ப புடிக்கும்”

“அய்யோ நாங்க சுத்த சைவம். மீனை கண்ணால கூட நாங்க பாத்ததில்ல ”

“ஆனா நான் பாக்கறேன்”

“எங்க?” அவள் வியப்பாய் கேட்க.,

இதோ., அவன் துணிந்து அவள் கண்ணாடியை கழட்டி அவளது கண்னைக் தொட்டு காட்டினான். அவள் புளாங்க்கிதமானாள்.

காமத்திற்கு புகழ்ச்சி தேவை.. நீயே சரணம்’ என்ற உறுதி தேவை. என்ன கொடுத்தாலும் வாங்க்கி கொள்கிறேன் என யாசகம் போல் கை நீட்டினால் அங்கே அமுதசுரபியாய் கொட்டப்படும்.

அப்படி கொட்டுவதற்காகத்தான் இந்த புகழ்ச்சி, மையல், காதல் ஊடல், ஒப்பனை, சென்ட்,  வாசனை  , முத்தம் , எச்சில் எல்லாம்,.,

  “ மைதிலி மேடம் நான் உங்களை ஒன்று கேட்கலாமா ?”

“.....................”

மேடம்”

“ம்ம்”

ஏன் எப்பவுமே டல்லா இருக்கீங்க?  சிடு சிடுன்னு இருக்கீங்க. யார் கிட்டயும் சகஜமா பேச மாட்றீங்க ? ஏன்.”

. இதெல்லாம் உனக்கு யார் சொன்னா ?”

உங்கள பார்க்கும் போது எனக்கு அப்படி தோணுது .”

நான் எப்படியும் இருந்துக்கறேன் உன் வேலையை பாரு. உனக்கு சாப்பாடு கிடைச்சுதா? அதை பாரு

அப்போ உங்க கூட சாப்பாடுக்கு தான் பேசுறேன் நினைச்சிட்டு இருக்கீங்களா?”

வேற எதுக்கு பேசுற?”

சரி அப்போ இனிமேல் சாப்பாடு வேண்டாம்

சரி சரி கோவிச்சுக்காத .  நீயெல்லாம்  என்னுடைய பிரச்சனை தீர்க்க முடியுமா?”

ஏன் தீர்க்க முடியாது

அதெல்லாம் பெரியவங்க பிரச்சனை

நானும் பெரியவன் தான் சொல்லுங்க”

ஆமா பெரியவன் தான்  போடா” அவள் சிரித்து கொண்டே போய்விட்டாள்.

ஆனால், அவன் உண்மையில் பெரியவன் தான் என்பது மறுநாளே தெரிந்தது.

 

 அந்த ஏரியாவில் அவளை தினமும் ஒரு ஆட்டோக்காரன் பின்னாலே துரத்திக் கொண்டே வந்து,” என் ஆசை மைதிலியே, என்னை நீ காதலியே” என பாடிக்கொண்டே வருவான் .

அந்த ஆட்டோக்காரன் அதே ஏரியா என்பதால் அவளது வீட்டு நிலையும் , கல்யாணத்திற்கு பிறகு அவளுக்கு நடந்த பிரச்சனையும் அந்த ஆட்டோக்காரனுக்கும் தெரியும் .

அன்றும் அவள் அதே போல் பாடிக் கொண்டு வர நடுவில் ஒரு புல்லட் வந்து நின்றது புல்லட்டில்  வந்த ஜாக்கி  இறங்கினான்.

“ என்ன மைதிலி மேடம் யார் இந்த ஆட்டோக்காரர்?  உங்க பின்னாடி  இடிக்கிற மாதிரி வந்துட்டு இருக்காரு”

 அந்த  நாற்பது வயதை  தாண்டிய சுருட்டை முடி ஆட்டோக்காரன் அவனைப் பார்த்து விக்கித்து நின்றான்.  இந்த பையனா ? இவன் ஏரியா வஸ்தாது ஆச்சே?  டெம்போ பாண்டியன் தோஸ்த் வேற’ என்கிற  கலவரம்  ஆட்டோக்காரன் கண்களில் தெரிய ,

சாரி மேடம் ! உங்க ஹஸ்பண்ட் இவரு என?’  ஆட்டோக்காரன் கேட்க . அவன் தன்னை அவளுடன் ஜோடி சேத்து வைக்கிறான் என தெரிஞ்சாலும், அவன் பம்முவதை பார்த்து ஜேகே உற்சாகமானான்.

  ஜாக்கி இ..இவன் ஒரு ஆட்டோ ஓட்டுற பொறுக்கி . எ..எப்ப பார்த்தாலும் பின்னாடி வந்து வம்பு பண்றான் ஜாக்கிஅவள் அழுவது போல சொல்ல.,

சட்டென   அந்த ஆட்டோவை  நெருங்கிய ஜாக்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்து இழுக்க

“வே வேணாம்பா அப்புறம் அசிங்கமாயிடும்.. ” ஆட்டோகாரன் பம்ம,

“அடிங்க் யார்க்குடா அசிங்கமாகிடும்?”  ஜாக்கியின் நரம்புகள் புடைக்க, அவன் கோபத்தை பார்த்த மைதிலி,

அய்யய்யோ  விட்டுடு ஜாக்கி... போவட்டும் “ அவள் சொல்ல., அவன்  கேளாமல் ஆட்டோக்காரனை தூக்கி வெளியே போட்டான்

இல்ல தம்பி நான் ஜஸ்ட் அந்த அம்மாவுக்கு பிரண்ட்ஸ் தான்”  என அவன் கோர்வையாக வார்த்தையை அமைப்பதற்கு முன்பே பலார் பளார் என கன்னத்தில் அறைந்தான்.

கிழடு தட்டி போன அந்த ஒல்லி  தாடையில் ஒரு வலிமையான குத்து விட, கதி கலங்கி போன ஆட்டோகாரனை, மறுபடியும் அவனது சீட்டில் தூக்கி போட்டான்

இனி இவங்களுக்கு பின்னால வந்த சாவடிச்சிடுவேன் நாயேஎன்று சொல்லிவிட்டு ஆட்டோவை எட்டி உதைக்க , அது டபுக்கென ;புகையை கக்கி கொண்டு போனது.

 கூட்டம்  சேர ஆரம்பிக்க.,

உட்காரு போலாம்”  என மைதிலியை கை பிடித்து கூப்பிட்டான்.  மைதிலி ஏதும் பேசாமல் அவன் தோளைப் பிடித்து  பைக்கில் உட்கார்ந்து கொண்டாள்.

 கம்பெனி அருகில் போகபோதும் என்னை  இங்கேயே  இறக்கி விடேன்”  என்றாள்.

ஏன்  இங்கேயே இறக்கி விடனும்,  என் கூட வந்தா தீட்டாயிடுமா? லோடு மேனு கூட வரமாட்டியா?’

“ஐயையோ அப்படிலாம் இல்லை யாராச்சும்  எதாச்சும் சொல்லுவாங்க .”

எவணும் ஒன்னும் சொல்ல மாட்டான்  வா”

அவளை கம்பெனி வாசலில்  கம்பீரமாக அவளை இறக்கி விட்டான். அதை ஜி.எம் உட்பட பல பேர் பார்த்தார்கள்.  அன்றிலிருந்து மைதிலியை வேர பேர் வைத்து கூப்பிட்டவர்கள், அவங்க  இவங்க என மரியாதையாய் அழைத்தார்கள்.

மைதிலி வாழ்க்கையில் ஜாக்கி என்கிற விடலை ரௌடி பையன் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டான். அவனுக்கு என்ன பிடிக்கும்? ஏது பிடிக்கும்? என கேட்டு சமைத்துக் கொண்டு வருவதே அவளுக்கு  வேலையாகிவிட்டது. அவனுக்கு பிடிக்குமே என  மீன் வறுத்து கொண்டு வந்து கொடுத்தாள்.

அவர்கள் லோடு விஷயத்தில்,  வேலை விஷயத்தில் கண்டும் காணாமல் இருந்தாள்.

 

தல சொன்ன மாதிரி சாதிச்சிட்டா தல. கவுந்த்துடாங்களா அண்ணி”

“அப்படின்னா?’

“கவுத்துட்டியா?’

“அப்படின்னா?’

“ஏய்ய் மேட்டரை முடிசிட்டியான்னு கேக்கறான்”

“ம்கூம்ம்ம் இப்ப தான் நல்ல மரியாதையா பேசறா.. “

“என்ன சொல்றே? பேசி ஒரு மாசமாச்சே”

“ இல்லடா . ஜஸ்ட் இப்பதான்   மூவ் பண்ணி இருக்கேன் . இன்னும் எதுக்கும் வாய் திறக்க மாற்ற மாட்டேங்கிறா. ஒரு தடவை இடுப்புல கை வெச்சுட்டேன்னு ரெண்டு நாளா பேசவே இல்லை.  புருஷன் இல்லாத பொண்ணு, கை வெச்சா மடங்கிடுவேன்னு சீப்பா நினைச்சுட்டே இல்லே? என் கிட்ட பேசாதேங்கிறா.”

‘இன்னாப்பா சைவ பொண்ணு?, உனக்கு  மீனெல்லாம்  செஞ்சி கொடுக்குது. இதுக்கு மட்டும் வேணாங்குதா? இன்னா தாலி காட்ட சொல்லுதா?”

“தெரிலடா.. ஆனா தொட்டுட்டு விட்டா, பாவம்டா. அழும்”

“யார்  உன்னை விட சொல்றா?. சைடுல வெச்சுக்க”

அவனே  பலமுறை வலிய போய்  பேசினான். அவள் பிடி கொடுத்து பேசவில்லை. பைக்கிலும் ஏறவில்லை.

“ நான் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. இனி கஷ்டபட முடியாது. உன் வயசுக்கு இது புரியாது”  என்றாள்.

உன் பிரச்சனை எதுவானாலும் சொல்லு

நீ தான் என் பிரச்சனை ஜாக்கி”

“என்கிட்ட சொல்லு நான் சரி பண்றேன் . “ அவள் மதிக்காமல் போக .

“ஏய் நில்லுடி”  கம்பெனி படிக்கட்டு கீழே அவளது புடவையை பிடித்து இழுத்தான். அவள் பயந்து போய் நிற்க.,

“ இப்ப சொல்றியா இல்லையா?”

அவள் படிக்காட்டில் வாய் திறந்து எல்லாவற்றையும் சொன்னாள்.

சோ. உனக்கு குழந்தை கிடைச்சா போதுமா? இல்லை  அந்த ஆள் வேணுமா’ சொல்லித் தொலை” அவன் சொன்னதில் எரிச்சல் இருந்தது.

“அந்த  ஆளை இன்னும் நினைச்சிட்டிருந்தா, உன் கிட்ட  நான் பேசுவேனா?” அவள் தலை குனிந்து கொண்டே சொன்னாள்.

சரி  அந்த ஆள் வேண்டாமா?”
இனிமே எதுக்கு அவன் வேணும் ? நான் என் புள்ளையை வளர்த்து ஆளாக்கி  நானே பாத்துக்குறேன்.  எனக்கு என் பிள்ளை கிடைச்சா மட்டும் போதும்”  என சொல்லஅவ்வளவுதானே  நாளைக்கி சண்டே காலையில் வந்துடு.  உன் புருஷன் வீட்டு  வாசல் நின்னுட்டு எனக்கு கால் பண்ணுஎன்றான் . அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளும் ஏதோ ஒரு தைரியத்தில் கால் பண்ண , டெம்போ , புல்லட் சகிதமாக ஆறேழு பேர்கள்  மைதிலி புருஷன் வீட்டு வாசலில் இறங்கினார்கள்.  வீடு புகுந்து அவளது புருஷனை இழுத்து போட்டு உதைத்தார்கள்

பண மாடா கேக்குற?  காசாடா கேட்கிறே? நகையாட கேக்குற நாயேஎன சொல்லி மாறி மாறி உதைத்தார்கள்.  மரியாதையா,  இவ கிட்ட அடிச்ச பணத்தை வீட்டுல இருக்குற பணத்தை  எண்ணி கொடு”  என்றான்.

“டே டேய் நான் போலீசுக்கு போவோம்டா
தாராளமா போ!  உன் கேஸ் எடுக்க மாட்டாங்க. போலீஸ்ல சொல்லிட்டு தான் வந்திருக்கோம்.. டேய்ய் மச்சான் வீடியோ எடு.. ம்மாள மேற்படி ஆளு பொண்டாட்டியை ஒதுக்கி வெச்சிட்டு, பிள்ளையை தூக்கி வந்து , பேரம் பேசறான்னு வீடியோல சொல்லு, இவன் வேல பாக்குற கவர்ன்மென்ட் ஆபீசுல சொல்லு. இவன் வேலைக்கு வேட்டு செச்சாதான் இவன் அடங்குவான்’

அவனை சரியான ஆயுதத்தால் வீழ்த்த., அவன் வீடு சரனகதி அடைந்தது.

அவனுடைய வீட்டிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் 40 சவரன்  நகையும் எண்ணி கணக்கிட்டு பிடுங்கினார்கள் . பேப்பரில் அதைக் குறித்து,  கையெழுத்து வாங்கினார்கள்.  ‘குழந்தையை கொடுடா’ என்றார்கள். குழந்தையின் டிரஸ் பையும் டாய்ஸ்களும் கொடுக்கப்பட்டன.

‘டைவர்ஸ் நோட்டீசை அனுப்பு . இவ சைன் போடறதுக்கு நான் கியாரண்டி. வா மைதிலி போகலாம்.”  ஜாக்கி பைக்கை  கம்பீரமாய் கிளப்ப, மைதிலி, தன் புருஷன் வீடு பார்க்க,  அவள் தோள் பிடித்து குழந்தையோடு பைக்கில் ஏறிக்  கொண்டாள்.

“மறுபடியும் அந்த குழந்தையை அங்க இங்க பார்த்து வழியில் தூக்கிட்டு வந்தேன்னு தெரிஞ்சது கொன்னே போட்டு விடுவேன்என  ஜாக்கி அவர்களை மிரட்டி விட்டு வந்தான் . அந்த வீடு எழவே இல்லை.

அவளது கணவன் ஒரு  வாய்சவடால் பேர்வழி தானே தவிர,  கொஞ்சம் கூட தைரியம் இல்லாதவன். அவன் இப்படிப்பட்ட   நேரடியில் தாக்குதலை வாழ்நாளில் சந்தித்ததும் இல்லை கேட்டதும் இல்லை. அவர்கள் அடித்த அடியில் பல இடங்களில் சுளுக்கும் வீக்கமும் பிடித்து கொண்டது.

 அவன் புல்லட் ஜாக்கியையும் அவன் கூட வந்தவர்களையும் பார்த்து மிரண்டு போய்விட்டான்.

 இவர்களெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்? ‘ என அவன்  அதிர்ச்சியில் இருந்தான்.

பைக்கினை ஸ்லோவாக ஓட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டான்.

“வீட்டுக்கு வாயேன்”
‘வேணாம் இன்னொரு நாள் பாக்கலாம். வரேன்”

“அ.. அவங்க திரும்ப வந்தா?”

“ வர மாட்டாங்க.. போ “ அவன் சென்று விட்டான்.


 



கள்ளம் கபடம் காமம்- 1 - 6