மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, March 9, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2015 ( திபூவை இறுதி பாகம்)

அவள் மயக்கமாக சுரேஷ் பதட்டமானான். காரை வேகமாக ஓட்டினான். எது நியரஸ்ட் ஆஸ்பிட்டல்?

கார் தறி கெட்ட வேகத்தில் ஓடியது. உண்மையிலேயே அவன் பதட்டமாக இருந்தான்.

ஹலோ பாரதிராஜா ஹாஸ்பிடல்கார் ஓட்டி கொண்டே பேசினான் சுரேஷ்.

 “யெஸ்..’

லேடி பேஷண்ட்டு ஒருத்தருக்கு சட்டனா கிட்டினஸ், ஃபீவர்., மயக்காகிட்டாங்க.. அங்க தான் அழைச்சிட்டு வரேண்.. ரெடி ஸ்டெரெக்சர்.. அன்ட் மெடிக்கல்  யெய்ட்ஸ். க்விக்

யெஸ் சார்..”

ஃபாஸ்ட்கத்தினான்.

அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனை வாசலில் சுரேஷின் கார் போய் நிற்க மருத்துவமனை ஊழியர்கள் , டாக்டர் குழு வாரி அவளை எடுத்து கொண்டது. கீர்த்தனா பாதி மயக்கமும்  விழிப்புமாய் இருந்தாள்.

காதில் பல குரல்கள் கேட்டன., சுரேஷ் பதட்டமாக இருந்தான்.. அவளால் கண்னை தீறக்க முடியவில்லை..

மெல்ல சுரேஷின் குரல் அமிழ்ந்து போய் .. மனோவின் குரல்

..இல்லங்க.,எனக்கு  பயங்கரமான ஜொரம்

என்ன ஒரு நூத்தி பத்து டிகிரி இருக்குமா?

இல்லங்க..உடம்பு டயர்டா இருக்குங்க..,

ஜொரம்னா போய் டாக்டரை பாரு.. அறுக்காதே

இல்லங்கதலைவலி ஜாஸ்தியாய் இருக்கு., மூச்சு விட முடியலை..எனக்கு கொரனா இன்ஸ்பெக்ஷன் இருக்குமோன்னு பயமா இருக்கு

 “..என்னடி சொல்றே?”

..ஆமாங்க..”

மை காட்..எப்ப இருந்துடி உனக்கு இந்த சிஸ்டம்ஸ்?’

நேத்து ஈவ்னிங்கலேருந்து…… மைல்டா இருக்குங்க…”

மண்ணாங்கட்டி அப்ப எங்கூட நைட்டு படுக்கறப்ப சொல்லி தொலைக்க வேன்டியது தானே..?”

“....என்ன்ங்கஅவள் திகைக்க.,

இப்ப எனக்கும் பரப்பி விட்டுட்டியா..ப்ளடி மேட்..”

அய்யோ என்னங்க…”

புத்தியே இல்லடி.. உனக்குமைகாட் .. நான் என்னடி பண்ணுவேன்? அடுத்த வாரம்.. நான் டெல்லி போகனும்டி.. உன்னால எனக்கு இன்பக்ஷ்ன் ஆகியிருந்தா? ச்சே எல்லாம் போச்சா? சரியான உபத்திரமவம்டி.. நீ

அவளுக்கு தலை கிக் கிண்னென வலித்தது

அவளை ஏதோ ஒரு மெஷினில் விட்டு எடுத்தார்கள்.

 

றுபடி குரல்கள்இது சுரேஷின் குரல்.,

இவங்க யாரு உங்க ஒய்பா?’

யெஸ் மேடம்அடபாவி..

பல்ஸ் டவுனா இருக்குஒரு சைன் போடுங்கசப்ளிமென்டரி மெடிசின் போட்டிருக்கோம்.. லங்க்ஸ் இன்பெக்சன் செக் பண்னனும்இவங்க கூட யாரெல்லாம் இருக்காங்கபிபிஅப்னார்மல்.. இக்துக்கு முன்னாடி  வந்திருக்கா? என்ன ஏஜ் இவங்களுக்கு? என்ன சாப்ட்டாங்க? ”

சுரேஷ் எல்லாவற்றீற்கும் பதிலளித்தான்

கீர்த்தனாவுக்கு கல்யாணம் நடக்கிறது.. மனோ தாலி கட்டுகிறான். உற்று பார்த்தாள் இல்லை இல்லை. தாலி கட்டுவது சுரேஷ். மை காட்.. இவன் ஏன் எனக்கு தாலி கட்டுகிரான்.. ராஸ்கல்..

திரும்ப திரும்ப குரல்கள்.. அமைதிஎலக்ட்ரானிக்  டிவைஸ்….

 

றுபடி கீர்த்தனாவின் குரல்.. கூடவே  கார் சத்தம்

ஒருவேளை கொரானா எங்கிட்ட இருந்து உனக்கும் தொத்திகிச்சுன்னா?’

 “கொரானா இப்படி  தொட்டா எல்லாம் வராது. “

பின்னே?”

ரொம்ப  நேரம் கிஸ் அடிச்சா வரும்

ஏய்..பாத்தியா? அதுக்கு தான் உன் கூட வரமாட்டேன்னு சொன்னேன்

சரி சாரிவா. நீ என் வாய கிளறாதே

நான் என்ன கிளறுனேன் ?”

பின்னே.. உன் கொரனா எனக்கும் வந்தான்னு என்னை பிரிச்சி பாக்குறே? அது மட்டும்  உங்கிட்ட வந்துச்சுன்னா அதை விட சந்தோஷம் எனகென்ன?”

ஏன் உங்களுக்கு என்ன தலையெழுத்து?”

அய்யோ அதில்ல. உன் மூலமா எனக்கு எது வந்தாலும் சம்மதம்

சொல்லு ..சொல்லு

என்ன சொல்லனும்?”

கீர்த்தனா..கீர்த்தனா கண்னை தீற

அவள் கண்ணை திறக்க., எதிரே சுரேஷ்

அவளுக்கு ,முழிப்பு  வந்து விட்டது.

 

கீர்த்தனா ஆர் யூ ஓகே?”

“..ம்

பை தி பை.. எனக்கு கொரானா வராதுசுரேஷ் சொன்னாள்.

இசிட் .. ஒய்?”

ஏண்னா உனக்கு கொரானா இல்லையேசிரித்தான்.

அவளுக்கும் சிரிப்பு வந்தது.

 

கதவை திறந்து கொண்டு.,

வெள்ளை யூனிபார்மில்,.  டாக்டர் குழு,,,

என்னங்க மிஸஸ் சுரேஷ். எல்லாரையும் பயமுறுத்திட்டீங்க?’

சார்ர்..”

உங்க லங்க்ஸ்ல வைரஸ் இன்ஸ்பக்ஷன்.. பட் இது நார்மல் வைரஸ்.. காலையில சரியா சாப்பிடாதது., ஹெவி ஃபீவர் இதெல்லாம். .உங்க பல்ஸை டவுன் பண்ணிடுச்சி. அப்புறம் உங்களை பத்தி உங்களுக்கே பயம், ஸ்டெரஸ் இதெல்லாம் சேத்து உங்களை மயக்க நிலைக்கு கூட்டி போய்டுச்சி..”

இங்க வரதுக்கு முன்னாடி., லங்க்ஸுக்கு ஸ்டீம் ப்ரீத் பண்ணியிருக்கீங்க.. அதுலய பாதி வைரஸ் போய்டுச்சி. நௌ நோ பிராப்ளம்.. கீர்த்தனா

அவள் விழிகளால் சுரேஷை தடவினாள்.

சார் எப்போ டிஸ்சார்ஜ்?”

ம்ம் எப்படியும்….  நீங்க ஒன் மந்த் இங்க  இருக்கனும்

சார்கீர்த்தனா அதிர்ச்சி ஆக.,

அட எழுந்து வீட்டுக்கு போம்மாடாக்டர் சிரிப்புடன் சொல்லி விட்டு

மணி  இப்ப மூனு ஆகுது,. ஒரு பைவ் ஹவர்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு போங்க,. டிரிப்ஸும் ஏத்திக்கங்க

சுரேஷ்  கூடவே இருந்தான். அடிக்கடி சிஸ்டரிடம் போய் விசாரித்தான். அவன் அந்த ரூமில் உட்காராமல வெளீயவே ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான்.

இது அவளுடன்  ஒட்டி கொள்வதற்கான சந்தர்ப்பமாக அவன் நினைக்காமல் இருந்தது தான் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. இப்படி திடீர் அட்மிட் ஆகி விட்டோமே.. மனோவுக்கு போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை.

அவளுக்கு மனம் பாரமாக இருந்தது.

 


---------


பார்ட் 32 இறுதி பாகம் 

சுரேஷ் + கீர்த்தனா டிராக் மற்றும் திபூவை கிளைமாக்ஸ் மட்டும் ( 400 பக்கங்கள்) இப்போதே படிக்க..

TPV Suresh - Keerthana & Climax (400 பக்கங்கள்)