மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 21, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1782

 மறுநாள் காலை சுஜாதா ஈஸ்வரின் செண்டருக்கு போக., விஜயா வாசலில் நின்றிருந்தாள்.

"உள்ள வாடி'

விஜயாவுடன் லைனில் கூட காத்திருக்காமல் விறுவிறுவென அவன் அறைக்குள் சென்றாள்  சுஜாதா. அவள் பின்னாலேயே சிப்பந்திகள் 'மேடம் மேடம் 'என ஓடி வர., அவள் அறைக்குள் நுழைந்ததுமே அவளை பார்த்து முகம் மலர்ந்த ஈஸ்வர் பின்னால் வந்த ஆட்களை என சைகை காட்டி போகச் சொன்னான்.

"ஹாய் சுஜா"

"சார்.."

' சொல்லுங்க மேடம் எப்படி இருக்கீங்க?"  என கேட்டான்.

" என்ன சார் ஒரு பிரச்சினை என்றதால் தானே இந்த மேடத்தை உங்களை பார்க்க சொன்னேன்.  நீங்க அவங்களை என்ன ஏதுன்னு கேட்கவே இல்லையாமே ?"

"நான் கேட்கலன்னு யார் சொன்னது மேடம்.. இவங்க ஹஸ்பண்ட்  ட்ராவல் கம்பெனி வச்சிருக்காரு.  அங்க வந்த ஒரு லேடி அவர் கிட்ட பேசி இம்ப்ரஸ் பண்ணி இருக்குஇவரு அவளைத் தேடி போக.அவ யாரோ ஒரு லோக்கல் ஆள் கிட்ட வாங்கின வசியமருந்து ஜூஸ்ல போட்டு கலந்து கொடுத்து இருக்கா.இப்போ அந்த மருந்து அவர் உடம்பெல்லாம் பரவி இருக்கு, அதனால அந்த பொண்ணு நசிமாவையே அவர் சுத்தி வந்திருக்காரு. இதுவரைக்கும் 34 லட்ச ரூபாயை அந்த பொண்ணோட அக்கவுண்ட்ல போட்டிருக்கார்.  இன்னும் அவங்க பெருசா எதிர்பார்க்கிறாங்க. அந்த குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். அந்த ஃபேமிலி ல அப்பா கிடையாது.

"சார்.." அவர்கள் திகைப்பு மாறாமல் பார்க்க.,

"இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது., தெரியாதது என்னன்னா., அந்த கும்பலுக்கு இவங்க புருஷன்  15 வது பிராஜெக்ட். அவங்களுக்கு இந்த வேலை எல்லாம் செஞ்சு கொடுக்கிறது கோடம்பாக்கத்துல முஸ்தபான்னு  ஒரு பாய், அவனை கூப்பிட்டு ஒரு அறை போட்டு  பார்க்கிங்க்ல உக்கார வெச்சிருக்கேண். அவன் பண்ன எல்லாத்தையும் டிஸ்மாண்டில் பண்ண சொல்லி இருக்கேன்.  இவங்க வீட்டுக்காரரு இரண்டு நாள்ல கம்ப்ளீட்டா சரியாயிடும் .அப்புறம் வேற என்ன விசேஷம்? சுஜாதா"  என கேட்க.விஜயா விழிகள் விரிய ஈஸ்வரை பார்த்தாள். கண்ணீர் ததும்ப நன்றி சொன்னாள்.,

 சுஜாதாவிற்கு ஈஸ்வர் சந்திரனின் விஸ்வரூபம் புரிந்தது .இவன் சாதாரண ஆள் இல்லை. விர்ச்சுவல் விஷயத்தில் இவன் தாதா. பயங்கரமான வலிமை பொருந்திய ஆள் என்பதை புரிந்து தலை குனிந்தாள் .

"விஜயா மேடம் உங்க பிரச்சினை ஓவர். நீங்க வெளிய கவுண்டருக்கு போனீங்கன்னா பில்லு தருவாங்க .பணத்தை கொடுத்துட்டு போகலாம் " என்றான் விஜயாவிற்கு ஒன்றும் புரியவில்லை .

"ரொம்ப நன்றி சார்.."

"ஆக்சுவலா இதெல்லாம் நான் செய்யறதில்ல. சுஜா கேட்டங்கன்னு தான்....."

"ரொம்ப நன்றி சுஜாதா.."

விஜயா நன்றி சொல்லி அமைதியாக எழுந்து வெளியே  நடந்தாள்.

அவள் போன பின்னும்  இன்னுமும் சுஜாதா தலைகுனிந்தபடி தான் உட்கார்ந்து இருந்தாள். அவளுக்கு மகிழ்ச்சியில் தண்ணீர் கசிந்தது.

" சொல்லுங்க மேடம்.உங்களுக்கு வேற எதாச்சும்  பிரச்சனையா ? வர்ஷா பேபி நல்லா தானே இருக்கு?" என கேட்டான்.

 அவள் குனிந்தபடியே தலை ஆட்டினாள்.  அவள் அழுகிறாள் என ஈஸ்வர் ஊகித்தான் .

"கொஞ்சம் முகத்தைக் காட்டுங்களேன் நான் கொஞ்சம் பார்க்கிறேன் " என்று சொல்ல அவள் முகத்தை நிமிர்ந்தாள். ஓரிரு கண்ணீர் துளிகள். அது ஆனந்தக் கண்ணீரா நெஞ்சை நெகிழவைதத்தால் உண்டான கண்ணீராஎன்பதற்கெல்லாம் அவளிடம் பதிலில்லை.

" என்னாச்சு  சுஜாதா.. ஒய் டியர்ஸ்? "

"ரொ..ரொம்ப..ரொம்ப தேங்க்ஸ்.."

"ஸோ.. இப்படி ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்தால் தான் என்னால் பார்க்க வரூவீங்கல்ல?"

"இ..இல்ல.ரொம்ப சாரிங்க நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன்., ஆக்சுவலா உங்க மேல ரொம்ப கோபமா இருந்தேன். நம்ம பேரை சொல்லி கூட இவரு நம்ப பிரண்டுக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு  நெனச்சேன் ., உங்கள மனசுக்குள்ளே திட்டிகிட்டு இருந்தேன் " என்றாள்.

"தெரியுமே நீங்க என்னென்ன  சொல்லி திட்டுனீங்கன்னு சொல்லட்டுமா?"  என அவள் திட்டியதெல்லாம் அவன் வார்த்தை மாறாமல் சொன்னாள். அவளுக்கு ஆச்சரியப்பட்டு ஆச்சரியப்பட்டு புத்தி வலித்தது.,

" ஐயோ போதும் .சாரி சாரி சாரி ஆயிரம் தடவை சாரி.." அவள் சின்ன பெண் போல சிணுங்கியது அவனுக்கு அதிகம் பிடித்தது.,

"பை தி பை விஜயா மேடம் வந்தப்ப ஏன் கண்டுக்கலன்னா..."

"தெரியும்"

"என்ன தெரியும்?"

"என்னை உங்க கிட்ட வரவழக்கிற ட்ராப்  இது"

'ஹஹஹ்ஹஹா" அவன் சிரித்தான்...

"லாயர்ல?  கண்டு பிடிச்சிடீங்க... சரி.. நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே"

"...................." அவள் அவனையே பார்க்க.,

"ஹலோ..உங்களை தான்'

"நீ  நீங்க தான் போன் பண்ணவே இல்லையே "

"அப்ப நேர்ல சொல்லலாமே.,”

என்னால நேர்ல எல்லாம் சொல்ல முடியாது " மீண்டும் அவள் சின்னப் பெண் போல அறையைத் திறந்து கொண்டு அதுவரை ஓடியதைப் பார்த்து புன்னகைத்தான் .

யெஸ். இப்படித்தான் நேர்மையாக ஒரு பெண்ணை கவிழ்க்க வேண்டும்.. அவன் முஷ்டி உயர்த்தி தன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டான்.

 

-------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1781

 

சுஜாதாவிற்கு தெரிந்த விஜயா என்னும் தோழி ஒருத்தி  தன்  கணவன் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் ஊர் சுற்றுவதாகவும், விரைவில் அவளை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுஜாதாவிடம் வந்து அழுது கொண்டே தனது புலம்பலை தெரிவித்தாள்.

"என்னடி செய்யறது எனக்கு தெரிஞ்சு ஆள வச்சி அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கலாமா ?" என சுஜாதா கனிவாக கேட்க.,

"அதெல்லாம் நான் எவ்வளவோ அவகிட்ட  பேசிட்டேன், அந்த பொண்ணு பேமிலி அதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க . என் வீட்டுகாரரரால மூனு தடவை அபார்ஷன் பாண்னிட்டாளாம்"

"அடகடவுளே?"

"அது பெரிய கும்பல்லா இருக்கு. நுங்கம்பாக்கத்தில் தான் அவங்க வீடு. அவங்களுக்கு பணம்தான் பெரிய குறியா இருக்கு"  என்றாள்

"சரி உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசினியா ? அவர் என்ன சொல்றாரு " என கேட்க

"எனக்கு ஒன்னுமே புரியலடி. உனக்குதான் தெரியுமே அவரு டிராவல் ஏஜென்சி வச்சு இருக்காரு .ரிஷப்னிஸ்ட் வேலைக்கு, இன்டர்வியூக்கு அந்த பொண்ணு வந்து இருக்கா ., இன்டர்வியூ எல்லாம் முடிஞ்ச அப்புறமா அந்த பொண்ணும் வெளிய போயிடிச்சி.. ஆனா அன்னிகு ஈவ்னிங்க் அவர் நம்பருக்கு கால் பண்ணி உங்க கண்ணு, சிரிப்பு  ரொம்ப அழகா இருக்கு., எனக்கு புடிச்சி இருக்கு'  அப்படின்னு சொல்லி கொக்கி போட்டிருக்கா ., உடனே இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.,  அவ நம்பரை வாங்கட்டு உடனே  போய் பார்த்து இருக்கா இருக்கார். இதுதான் எனக்கு ஆபீஸ்ல சொன்னாங்க"

'அட பாவமே., சரியான ட்ராப்"

"இது எல்லாமே அவங்க பிளான் பண்ணி செய்ற பிசினஸ் போல ., எங்காவது வாக் இன் இன்டர்வியூ இருந்தா அங்க போயிட்டு ஆளு சுமாரா இருந்தா ., காசு  பார்ட்டியா இருந்தா இந்த மாதிரி பேசி கொடுக்குறாளுங்க ., இது தெரியாம அவர் அவகிட்ட .."

"சரி !இதெல்லாம் உங்கள் வீட்டுக்காரர் கிட்ட சொல்ல வேண்டியது தானே"

"இல்ல சுஜா.,  எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் எதைச் சொன்னாலும் அவர் காதில் வாங்க மாட்டார் எங்கேயோ வெறிச்சி பாக்குறாரு.. "

"அச்சச்சோ நீ என்ன நினைக்கிற ?"

"அவங்க ஏதோ இவருக்கு வசியம் மாதிரி பண்ணி இருப்பாங்க ன்னு பயமா இருக்குடி.,  இது ஏதோ பிரையினை  கண்ட்ரோல் பண்ற வேலைன்னு நினைக்கிறேன்.,"

"...."

" எனக்கு ரொம்ப பயமா இருக்கு சுஜா. என் புருஷ்னை நான் இழந்து விடுவேன்னு  பயமா இருக்கு சுஜாதா"  என அந்தப் பெண் அழ.,

" இரு விஜி ஏன் கவலைப் படுறே? எவ்ளோ சீனியர் லாயர் நீயே அழுவறே? " விஜயா சொன்ன அந்த பிரையின்  கண்ட்ரோல் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சுஜாதாவிற்கு மூளையில் ஒரு மின்னல் கீற்று வெட்டியது.

" ஒன்னும் பயப்படாத  விஜி., கைவசம் ஒரு ஆள் இருக்கு., உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.,  நான் சொல்ற ஒரு அட்ரஸ்ல நேர்ல போய் பாரு., என் பேரை சொல்லு " என்றாள்.

ஈஸ்வரின்  செண்டர் விலாசத்தை தோழி விஜயாவிடம் கொடுத்தனுப்பினாள்.

விஜயா நன்றி சொல்லி வாங்கி  அன்று மாலையே போய் ஈஸ்வரை பார்த்தாள். தான் சுஜாதாவின் உயிர் தோழி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தனது பிரச்சனையை டீடெய்லாக சொன்னாள்.

ஆனால் அவன் "இங்க பாருங்க மேடம் இதெல்லாம் வசியம், செய்வினை மாதிரி ரொம்ப லோக்கலான விஷயம்.. இது அது மாதிரி இடமில்ல. ப்ரெய்ன் டெவலப்மெண்ட் செண்டர். விர்ச்சுவல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்.. அதுவும் இல்லாம., அறிமுகமில்லாத ஆளுங்க ப்ராப்ளத்தை நான் கையில எடுப்பதில்லை ., சாரி ., யூ மே கோ நௌ..' என சொல்லி அனுப்பினான்.

விஜயா கடும் ஏமாற்றத்துடன் அந்த சென்டரின் வாசலில் நின்று சுஜாதாவிற்கு போன் செய்தாள்.

"என்ன சுஜாதா அவரு இதெல்லாம் செய்ய மாட்டேன் பார்க்க மாட்டேன்னு சொல்ராரு "

'வாட்?'

"ரெபரன்ஸ் இல்லாம கேஸ் அட்டென்ட் பண்ண மாட்டாராமே?"  என அவள் சொல்ல.,

" நீ சொல்ல வேண்டியது தானே சுஜாதா பிரண்டு அப்படின்னு?"

"சொன்னேன்டி அப்போ கூட அவரு அதை ஒரு மேட்டரா எடுத்துக்கலடி... எவ்வளவு பணம் வேணாலும் கொடுக்கிறேன்னு சொன்னேன் ., அப்ப கூட அவர் எதுவுமே காதுல வாங்கல.,  என் கணவருக்கு என்ன பிராப்ளம்? என்ன பண்ணி இருக்காங்க? அப்படிங்கறதை டீடைய்லா சொல்றேன்., எதுவுமே அவரு காதுல கேட்டாப் போல இல்லை ., "

"அச்சச்சோ"

"ஒப்புக்கு தலையாட்டிட்டு ,சாரி என்னால முடியாதுன்னு  அனுப்பிட்டாரு  சுஜா இப்ப என்ன பண்றது சுஜாதா?., நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேண்"

அவள் புலம்புவதை  கேட்க சுஜாதாவிற்கு குழப்பமாகவும் இருந்தது ., அதே சமயம் ஆத்திரமாகவும் இருந்தது. இவன் வேண்டுமென்றே நம் பெயரை கேட்ட பிறகு அவளை துண்டித்து இருக்கிறான் என்ன செய்வது? என யோசித்தாள்.  விஜி தொடர்ந்து நச்சரிக்க.,அவனுக்கு போன் செய்யலாமா? என நினைத்தாள் .,

வேண்டாம் அவனே பத்து நாளாக போன் செய்யாமல் இருக்கிறான். இப்போது இதற்காக நாம் பேசினால் அது தவறாகும் என்றெல்லாம் குழம்பினாள்,

நேரிலேயே போய் பார்க்கலாம்., "சரி விஜி  நீ கிளம்பு நாளைக்கு மார்னிங்க் போய் பாப்போம்.." என்றாள்

'என்னடி சொல்றே? அவன் தான் முடியாதுங்க்கிறானே?"

"இல்ல .. நீ வா நாளைக்கு காலைல.,"


-------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்