மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, August 23, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1828

 வீட்டுக்கு போன பின் காமினி தனித்து விடப்பட்டாள். அன்று மாலை முதல் கோபாலை அவளால் பார்க்க முடியவில்லை. காமினியை தனி அறையில் வைத்து பூட்டினார்கள். வெளியில் இருந்து சில உயர் ஜாதி பெண்கள் வந்தாரகள். காமினியை அலங்கரித்தார்கள்.

அவர் எங்கே கோபால்?” என கேட்க,

இப்ப அவனை பார்க்க கூடாது. ராத்திரி பத்து மணிக்கு தான் அவனை பார்க்கணும். அதுதான் எங்க ஊர் வழக்கம் என்றார்கள். காமினிக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. அவள் குளித்து முடிக்க அவள் உடல் முழுக்க வாசனைத் திரவியங்கள் அள்ளி தெளிக்கப்பட்டது. அவளை சிறுனீர் கழிக்கசொல்லி மூலிகை போட்டு ஆய்வு செய்தார்கள். முகம் மலர்ந்தார்கள்.

 அவள் அவள் மிகப்பெரிய வைபவத்திற்காக தயாராகும் தங்க விக்கிரகம் போல ஜொலித்தாள். வந்த பெண்கள் அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்கள்.

நான் கூட சிட்டில இருக்கிற பொண்ணு ஒல்லி குச்சியா இருக்கும் ஒட்டடைக்குச்சியா இருக்கும் அப்படி நினைச்சேன். ஆனா நான் அலங்காரம் பொண்ணுங்கள்ல நீதாண்டி அம்மா அவ்ளோ அழகு. எதுவும் கூட இல்ல, ‘குறை இல்ல, எங்க கோபால்க்கு நீ ரொம்ப அதிகம் தான்.  என சொல்லி சிரித்துக் கொண்டே சென்றார்கள். காமினி சந்தோஷத்தில் ஜொலித்தாள்.

அந்த அறைக்கு இரவு 10 மணிக்கு கோபால் பைஜாமாவில் உள்ளே நுழைந்தான். அவள் எழுந்து அவனை நமஸ்கரிக்க அப்படியே அணைத்துக் கொண்டான். அவள் கழுத்தில் கன்னத்தில் முத்தமிட்டான் அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டான். அவளை காதலுடன் பார்த்தான்,

காமினி,  நீ முதல்ல உன் காதலை சொன்னப்ப கூட, நான் உன்னை சாதாரணமாகத் தான் நெனச்சேன். ஆனா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ரூமுக்குள்ள நான் வந்து இருக்கிற நிமிஷம் வரைக்கும் குறைஞ்சது அம்பது பேராவது உன் அழக பாராட்டாதவங்களே கிடையாது.வ்வளோ ஏன் எங்க சித்தி, ஸாரி எங்க அம்மா யாரையுமே பாராட்டி சொல்ல மட்டாங்க அவங்களுக்கே உன்ன பிடிச்சிருக்கு. எங்க அப்பாவுக்கும் உன்ன பிடிச்சிருக்கு. அழகான பொண்ணு, பொறுமையான பொண்ணுன்னு சொல்றாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம், ஜஸ்ட் ஒரு கிராமத்தான் எனக்கு இப்படிப்பட்ட ஒரு பெண்ணா?” என கேட்க

அவனது வாயை மூடினாள் காமினி,

ஏன் இப்படி சொல்றீங்க? உங்கள மாதிரி படிப்பாளி, பொறுமைசாலி, கண்ணியமான ஆளுங்க எல்லாம் இந்த உலகத்துல ரொம்ப அபூர்வம். அப்படி பார்த்தா நான் தான் உங்களை விட ரொம்ப அதிர்ஷ்டசாலி என்றாள்.

எங்க வீட்டுல இருக்கிற அத்தனை பேருக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு காமினி. எங்க அப்பா, அம்மா, எங்க பெரியம்மா ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரே பொண்ணு நீ தான். இதுக்கு முன்னாடி நிறைய வரனை நாங்க பார்த்து இருக்கோம். ஆனா எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொண்ணு நீ தான்

ஆமா, திரும்ப திரும்ப உங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கு தான் புடிச்சிருக்குன்னு சொல்றீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருக்காரே..ஏன் உங்க தம்பிக்கு என்னை புடிக்கலையா?” என அவள் சிரித்து கொண்டே கேட்க.,

கோபால் தலை குனிந்து கொண்டான்.

ஏன் ஏதாச்சும் தப்பா கேட்டேனா?” காமினி கேட்க,

நீ என்  தம்பியை பாத்திருக்கியா?”

ம் பாத்தேனே. எப்ப பாத்தாலும் கூலிங் கிளாஸை போட்டுகிட்டு.. எங்க அம்மா கூட, ‘என்ன சின்ன மாப்பிள்ளை அந்த கூலிங் கிளாஸை கொஞ்சம் கழட்டேன்னு கிண்டலடிச்சாங்க

.அவன் கூலிங்க் கிளாசை எப்பவும் கழட்ட மாட்டான்

..ஏங்க?”

ஏன்னா அவனுக்கு கண்ணு தெரியாது

கோபாலின் கண்னில் நீ கோர்த்த்து.

..என்னங்க்க சொல்றீங்க?” காமினி அதிர்ச்சி ஆனாள்

என்ன கண்னு தெரியாதா?”

.ஆமா ., நான் உங்கிட்ட அப்புறம் சொல்லாமுன்னு நினைச்சேன்..”

ஏங்க ., கண்ணு தெரியாது.. எப்பல இருந்து?”

‘”…ஆமா காமினி என் தம்பிக்கு சரியா கண்ணு தெரியாது என்றான்.

காமினி மணப்பெண் அலங்காரத்துடன் ஷாக்காகி அவனைப் பார்க்க.,

அவன் பிறவிக் குருடு எல்லாம் இல்லை காமினி. அவனுக்கு நல்லா கண்ணு தெரியும். பிளஸ் டூ படிச்சி காலேஜ் போற வரைக்கும் அவனுக்கு கண்ணு நல்லா தான் தெரிஞ்சிட்டு இருந்தது. இந்த ரென்டு வருஷமாத்தான். “

அய்யோ ஏண்?”

என்னன்னு சொல்றது காமினிம் ஒரு விபத்தில் தான் அவன் கண் பார்வை போயிடுச்சு

ஓமைகாட். வெரி சேட் என உள்ளுக்குள் திகைத்தாள் காமினி . அதனால தான் அந்தப்பையன் எப்பவும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டே இருந்தனா? பார்க்க சிவப்பாய், சேட்டு பையன் போல அழகாய், சிரிப்பும் குறும்புமாய் இருந்தானே.. அட என்ன இப்படி ஒரு சோகம் என அவள் நினைத்தாள்

என்ன தாங்க ஆச்சு அவனுக்கு?” என கேட்க,

அது என் தப்பு. யெஸ் நான் தான்  காரணம்.”

கோபால் எழுந்து கொண்டான்.

சின்ன வயசுல இருந்து  நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சேட்டை பண்ணுவோம். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிப்போம். எனக்கும் அவனுக்கும் ஆறு வயசு வித்தியாசம். ஆக்சுவலா எங்க அம்மாவுக்கு நான் ஒரே பையன். மஞ்சள் காமாலை முத்தி போய் கவனிக்காம, எங்க அம்மா இறந்துட்ட பிறகு எங்க அப்பா நாலு வருஷம் கல்யாணமே பண்ணிக்கல. அப்புறம் சொந்தக்காரங்க எல்லாம் சொல்ல போய் தான் எங்க சித்தி அவறை இரண்டாம் தாரமாக கட்டிக்கிடாங்க.,

அவங்களுக்கு பிறந்த பையன்தான் என் தம்பி அமர். அமர் நாத். நாங்க எவ்வளவுதான் சண்டை போட்டாலும் சந்தோஷமா இருப்போம். எங்க சேட்டைக்கெல்லாம் அளவே கிடையாது. ஆனா எங்க விளையாட்டு விபரீதமாயிடுச்சி.. அவன் சைக்கிளை நான் ஓட்டி உடைச்சிட்டேன்னு கோவத்துல அவன் ஒருநாள் நான் தலைக்கு குளிக்கும் போது சீக்கா பாக்கெட்டுல மிளகாய் தூளை கொட்டி வச்சுட்டான்.

அட பாவமே

அது தெரியாம நான் தலையி தேர்ச்சி குளிக்கப் போ பயங்கரமா கண்ணெல்லாம் எரிஞ்சது. அவனால அன்னைக்கு நான் ஒரு இன்டர்வியூக்கு  முதன்முதலா இன்றைக்கு போகவேண்டியது கேன்சல் ஆயிடுச்சு. அதனால எனக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சு. .  சித்திகிட்டே சொன்னா சிரிச்சிட்டு போய்ட்டாங்க.. அப்பாவும் பெருசா எடுத்துக்கல . அதனால நான்

அதனால?”

அவனை ஏதாச்சும் பண்ணனும்னு சொல்லிட்டு, நானும் அவனை மாதிரியே சிறுபிள்ளைத்தனமாக நடந்துகிட்டேன் காமினி. அது இவ்வளவு பெரிய பிரச்சினைகளை கொண்டு வந்து நிற்கும் எனக்கு சத்தியமா தெரியாது

என்னங்க என்ன ஆச்சு ? என்ன பண்ணீங்க?” என அவள் பதற,

அமர் குளிக்க போறதுக்கு முன்னாடி அவன் யூஸ் பண்ற சோப்பு ஃபுல்லா தைலத்தை தடவி வச்சுட்டேன்.”

ஐயோ

என் தம்பி குளிக்கும் போது அந்த சோப்பை மூஞ்சி ஃபுல்ல பூச. அவன் குளிக்கபோன கொஞ்ச நேரத்திலேயே ஐயோ ஐயோ என்று கத்த ஆரம்பிச்சுட்டான்.”

அய்யோ

சத்திமா அவன் சோப்பை உடம்புல தான் முதல்ல போடுவான். எரிச்சல்ல துடிப்பான்னு நான் பாத்தா., அவன் அவன் எடுத்த உடனே மூஞ்சில போட்டு, அதிகமா தைலம் கண்னுல பட்டு…..”

அட கடவுளே

நாங்க ஓடிப்போய் பார்க்கும்போது அவன் தரையில் விழுந்து அலறிக் கிட்டிருந்தான். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போணோம். நானும் ரொம்ப பயந்துட்டேன். அவன் ரென்டு ண்னோ  பார்வை நரம்பு ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. 70% மேல் அவனுக்கு பார்வை இல்லைன்னு சொன்னாங்க

ஐயோ !“

எனக்கு ரொம்ப ஷாக்கா ஆயிருச்சு. என் அப்பா என்ன பிரம்பால அடிச்சு என் தோல உரிச்சுட்டார். அவருக்கும் அதுக்கப்பறம் உடம்பு முடியாம போச்சு. எங்கிட்ட அவர் இன்னும் சரியா பேசறதில்ல

“………………..”

அப்போ கூட என் சித்தி பெருந்தன்மையா எங்க அப்பா கிட்டே இருந்து என்ன காப்பாத்தினாங்க., என்னை திட்டவே இல்லை. என் தம்பியை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்சித்தி தான் ஞாபகத்து வரும். அவங்களோட ஒரே பையனை நான் போய்..”

“………………..”

என் தம்பிகிட்ட அதுக்கு அப்புறமா  நான் எதுக்கும் ண்டை போடுறதே. இல்ல. அத்தோட அவனுக்கு படிப்பே போச்சு. இன்னேரம் உன்னை மாதிரியே காலேஜ் போய் டிகிரி முடிக்க வேண்டிய வயசு அவனுக்கு. என்னுடைய முட்டாள்தனமான விளையாட்டால ஒரு சின்ன பையனுடைய எதிர்காலமே பாழாடிச்சு.. ஒவ்வொரு நாளும் நான் செய்த அந்த தப்புக்காக …” அவன் நான் தழுதழுக்க.,

ப்ஸ்ப்ஸ்ச் என்னங்க ஏண் கண் கலங்க்குறீங்ககாமினி அவனை பிடித்துக் கொண்டாள். அவனது கண்கள் கலங்க கணவனின் முதுகை தடவி விட்டாள்.

சரி விடுங்க இவ்வளவு பெரிய விஷயமாகும்னு உங்களேக்கு தெரியாது தானே.  நீங்க தெரியாம தானே செஞ்சீங்க,. “

இல்ல காமினி. இந்த ரென்டு வருஷமா அவன் படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. காலேஜ் முடிச்சு இப்ப வேலைக்கு போக வேன்டிய பையன். இனி அவன் லைப் என்ன ஆகும்?”

சரி ஏதாச்சும் மருந்து .மாத்திரை சிகிச்சை கொடுத்தீங்களா? இல்லையா?”

நிறைய காசு செலவு பண்னி கொடுத்துகிட்டு தான் இருக்கோம். ஆனா கண்ணுல நிரைய நரம்பு பாதிச்சிச்சாம். இந்த மூனு வருஷத்துல 25% தான் பார்வை கூடியிருக்கு. இருந்தாலும் அதனால எதையுமே தெளிவா பார்க்க முடியாது. கலர் தெரியாது. ஏதோ ஒரு உருவம் நடந்து போனா போல தான் இருக்கும். அது யாருன்னு அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை .ப்பதான் சரியாகும் தெரியல. நாங்க நிறைய டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். இந்த நிலம் எல்லாம் வித்து அவனுக்கு சிகிச்சை செஞ்சோம்.  ஆனா பெரிய அளவில குணமாகல

நான் இப்படி பண்ணதுல அவங்க பெரியமாவுக்கு தான் எம்மேல ரொம்ப வருத்தம். எங்கிட்ட பேச மாட்டாங்க.. “

“………………..………..”

அவன்னா அவங்களுக்கு உசுரு. அவங்களுக்கு ரென்டுக்குமே பொன்னு. இவனை தான் சொந்த மகனா நினைச்சி பாத்துப்பாங்க.. அவனுக்கு போய் இப்படி ஆச்சுன்னு ரொம்ப வருத்தப்படுவாங்க., அவங்க மும்பைலை இருக்காங்க. அங்க வான்னு கூப்பிட்டு கிட்டு இருக்காங்க. ஒன்னு ரென்டு மாசம்  டிரீட்மென்ட் எடுத்தா சரியா போகுமுன்னு சொல்றாங்க. இவன் தான் அம்மாவை விட்டு போக மாட்டேங்க்கிறான். அவனுக்கு இப்படி ஆன ரென்டு மாசத்துல எங்கப்பாக்கு திடீர்னு பாரலிஸ் அட்டாக் வந்துடுச்சி ஆறு மாசம் படுத்த படுக்கை தான்.. இப்பதான் நடமாடுறார். அதுக்கப்பறம் என் மேரேஜ். இதுல அவன் கண்ணை  நாங்க சரியா கவனிக்கல..எல்லா வேலையும் முடிஞ்சப்பரம் அவனை மும்பைக்கு அனுப்பி பூரா குணாமாக்கனும்னு எனக்கு ஒரு பிளான் இருக்கு

‘……………..”

அவனுக்கு இந்த மஞ்சள் தோட்டமுன்னா ரொம்ப உசிருமணிக்கணக்கில அங்கேயே உகாந்திருப்பான். அந்த உரம் தயாரிக்கிறதை யெல்லாம் சீக்கிரம் சோனு கிட்ட இருந்து கத்துகிட்டு கூடிய சீக்கிரம் நானே  ரோஜா வளக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்படி ஆகி அவன் மூலையில் உக்காரனும்னு ஆகிப்போச்சு என்னால

‘………………………”

ஆனா அவன் ரொம்ப புத்திசாலி. போன்ல ஹெட்போன் கேட்டு  நிறைய ஆடியோ புக்சை படிச்சிகிட்டு டிரன்டிங்க்ல இருப்பான். அபார ஞாபக சக்தி. பெங்காலி, ஹிந்தி, சிந்தி, காஸ்மீரி பேசுவான்.” 

..நைஸ்

இன்னும் நாலஞ்சி வருஷத்துல முழு பார்வை கிடைக்க சான்ஸ் இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்றாங்கஅவன் சொல்லிவிட்டு காமினியை பார்க்க அவள் முகம் வாடி இருக்க.,

ஓ சார்..  நான் ஒரு மண்டு. அட்லீஸ்ட் நாளைக்காவது நான் உனக்கு இந்தப் பத்தி சொல்லி இருக்கணும். நம்ம இருவருக்கும் இன்னிக்கு முதல் ராத்திரி. இப்ப போயி இந்த சங்கடமான கதையெல்லாம் சொல்லி உன்ன வருத்தப்பட வச்சுட்டேன் என சொல்ல, இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அவன் அவளை அணைத்துக்கொண்டான்.

-------


 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)