மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1826

காமினி, அந்த வீட்டின் அழகு மருமகள்.

மஹாதேவ் -  நளினி தம்பதிக்கு ஒரே பெண். அவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து பிறந்த செல்லப்பெண். அதற்குப் பிறகு அவர்களுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. அவர்களும்  இன்னொரு குழந்தைபிறக்க வில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை

காமினி அப்படி ஒரு அழகு. எந்த கூட்டத்தில் இருந்தாலும் தனியே தனித்து தெரியும் அபரிதமான அழகு. பருவம் வந்த பிறகு காமினி இன்னும் தேவதையாக ஜொலித்தாள். காமினியின் அப்பா வருமான வரித்துறையில் நல்ல உத்தியோகம்

எனவே காமினிக்கு எல்லா சதியும் அந்த வீட்டில், ஊரில் கிடைத்தது.  உயர் கல்வியும் கிடைத்தது. அவள் அழகும், துள்ளும் இளமையும் கண்டு கொல்கத்தாவின் பணக்கார பையன்கள் சுற்றி வந்தார்கள்

லெட்டர் கொடுக்க, பேச, அவளை நெருங்க   முயன்றார்கள். அவளுக்கு ஏனோ காதில் கடுக்கண் போட்டு, ஜீன்ஸ் கிழிந்து கட்டி தெரியும்படி ஸ்டைலாக., வலம் வரும் பையன்களை பிடிக்க வில்லை. டீ ஷர்ட்டில் ஆர்ம்ஸ் காட்டி சீன் போட்டு., பைக்கில் வீலிங்க் செய்து சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த பையனையும் அவளுக்கு பிடிக்கவில்லை.

நகரத்தின் வழக்கமான கூச்சல்களை விரும்பாத காமினிக்கு கோபாலை பிடித்ததில் ஒரு ஆச்சரியமில்லை.

காமினி படித்தது கல்லூரி பெண்கள் கல்லூரி. மாப்பிள்ளை கோபால் வேறு ஒரு கல்லூரியின் உதவி கணித பேராசிரியர். அவள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக கோபாலின் கல்லூரிக்கு போயிருக்க, அங்குதான் தற்செயலாக கோபாலை அவள் சந்தித்தான், அவனது நளினமான பேச்சும், நாகரிகமான பார்வையும், பெண்களுடன் அவன் நடந்து கொள்ளும் அணுகுமுறையும், எந்த பெண்களையும் ஏறிட்டு பார்க்காத அவன் குணமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் அழகு அவளை கொஞ்சம் கூட சலனப்படுத்தாமல் இருந்ததே அவளை அவன் மீது சலனப்பட செய்தது.

வழக்கமான இளைஞர்கள் போல் அல்லாமல், அவனிடம் மிகப்பெரிய வித்தியாசத்தை கண்டாள். அவள் நெருங்க நெருங்க அவன் விலகி போனான். ஆனாலும் அவள் அடிக்கடி அவனுடன் பேசினாள். கோபால் கிராமத்தில் இருந்து தினமும் நகரத்திற்கு பணிக்கு வரக்கூடியவன். அவனிடம் கிராமத்தின் சாயல் அதிகமாக இருந்தது. அவனது வெள்ளந்தியான பேச்சும், தன்னை விட வயது குறைந்த பெண்ணிற்க்கு கூட அவன் தரும் மரியாதையும் அவனிடன் உள்ள மிக நேர்மையான எண்ணமும் காமினிக்கு காதலை வரவழைத்தது.

தினம் தினம் மாலை அவனை தேடி போய் பேசினாள். தான் இருக்கும் இருப்புக்கு காமினி மிக அதிகம் என கோபாலுக்கு தோன்றியது. கோபால் முதலில் தயங்கினான்

ஆனால், ஒட்டு மொத்த கல்லூரியே கொண்டாடும் பேரழகி காமினிவை மணக்க அவனுக்கு கசக்கவில்லை. இவள் போன்ற பேரழகி நமக்கு மனைவியாக வேண்டும் என்றால் நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஊரே நம்மை தூக்கி கொண்டாடும் என நினைத்தான். ஒரு கட்டத்தில் அவனும் காமினிக்கு இசைந்தான்.

வீட்டில் கல்யாணம் பற்றிய பேச்சு எழுந்ததும் கொஞ்சம் கூட மறைக்காமல் காமினி கோபால் பற்றி சொல்லிவிட்டாள். அவர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து அவனது குடும்பம், படிப்பு, வருமானம் பற்றி கேள்விப்பட்டதும் காமினியின் விருப்பத்திற்கு இணங்கி விட்டார்கள்.

காமினியை போல கோபாலும் அவனது அப்பாவிடமும், சித்தியிமும் மெதுவாய் சொல்ல அவனது ஆர்வத்துக்கு தடை போடாத அவனது சித்தி ஒரு நல்ல நாளில் தனது அக்காள், அக்காள் கணவர், கோபாலின் அப்பா ஆகியோரை அழைத்துக்கொண்டு காமினிவை பெண் பார்த்து.. எல்லாம் பேசி முடித்துஇதோ இன்று திருமணம் வரை வந்து நிற்கிறது .


அவள் காலை யாரோ தட்ட., கணவன் கோபால்

அய்யோ தூங்கிட்டேனா?’ அவள் பதறி எழ.,

ம் நீ தூங்கு., சாரி எழுப்பிட்டேனா? உன் கால் கீழ டவல் எடுக்க வந்தேன்..”

அவனது இந்த குணம் தான், அவளை இந்த கிராமத்து வீட்டு வரைக்கும் இழுந்து வந்திருக்கிறது.

அச்ச்ச்ச்சே. நீங்க எழுப்ப கூடாதா?… இந்தாங்க டவல்.” அவள் கொடுக்க அவன் முகம் கழுவி வந்தான். பிற்பகல் வெய்யில் சுளிரென அடிக்க .,

வாயேன்.. வீட்டை சுத்தி பாக்கலாம்கோபால் ஆசையுடன் அவளை கூப்பிட்டான்.

---------

 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)