மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 11, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2060 ( திபூவை இறுதி பாகம்)

 

ண்ணனின்  இளைய மகள் சகலத்தையும்  சொல்ல இன்ஸ்பெக்டர் வியப்பாக கேட்டு கொண்டார்.

கேஆர்எஸ் டேம், சத்தியமங்கலம் பாரஸ்ட், என பல சுற்றுலாதலங்களுக்கு காலேஜ் டூராக கிளம்பி கடைசியாக தமிழ்னாடு கர்னாடகா எல்லையில் உள்ள பான சங்கரி கோயிலில் டூரை முடிக்க ஆர்த்தி  படிக்கும் காலேஜ் டீம் முடிவு செய்ய ., ஆர்த்தி அங்கு தான் சுரேஷை, ஹரிஷீன் தம்பியை பார்த்தாள்.

அதன் பின் நடந்தது தான் இவ்வளவும்..

 

ஓ மை காட் .. கிரான்டனி குரூப்பா? இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியானார், பெரிய கேஸ்.. மீடியாவுக்கு  தெரிவிக்கப்பட்டது.

சஞ்சனா பவித்ராவுக்கு தெரிவித்தாள்.

கொஞ்ச நேரத்தில் பெங்களூரில் விஷயம் தெரிவிக்கப்பட்டது. கிரான்டனி மாளிகை அதிர்ந்தது. பெங்களூர் அதோகளப் பட்டது, மடமட வென போனில் தகவல்கள் பரிமாறப்பட்டது. உத்தரவுகள் போடப் பட்டன.

 

ஓசூரின் உதவி கமிஷனர் சம்பவ இடத்திற்கு போய் விட்டு ஹாஸ்பிட்டல் ஓடி வந்தார். நொடிக்கு  நொடி மேலதிகாரிகளுக்கு சுரேஷின் உடல் நிலை சொல்லப்பட்டது. ஆனால் லிங்கப்பாவின் பேர் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்ப்பட்டது.

ஜஸ்ட்முன் விரோதம் என சொல்லப்பட்டது. சாட்சிக்கு மலர் சொன்ன ஸ்டேட்மென்ட் அழுத்தமாக பதிக்கப்பட்டது.

 

விஷயம் கேள்விப்பட்டு கிரான்டனி நிறுவனம் ஸ்தம்பித்துப் போய் நின்றது. 135 சைட் கட்டுமானப் பணிகள் ஒரே சமயத்தில்   நின்று போயின. யாரோ  கிரான்டனி குரூப்பில் ஒருத்தர் செத்துட்டாராம். வதந்தி பரவி ஷேர் வேல்யூ தடாலென இறங்க,பங்கு சந்தை விழி பிதுங்க்கியது.  போட்டியாளர்கள் சந்தோஷப் பட்டார்கள்.

ஏல் எல் எப் ராஜீவ் குப்தா ஓசூர் கமிஷனரிடம் பேசினார்.  அரசாங்க ஆட்களை விரட்டினார்.

 கிரான்டனி பெரியப்பா பேய் பிடித்தது போல அலறினார். பெரியம்மா மயங்கி சரிந்தாள்.

கண்னன் சார்.. பல்லை கடித்து ஆத்திரத்தை கட்டுப்படுத்தினார்.

முட்டாள் முட்டள் சுரேஷ் .. நீ பாட்டுக்கு செத்து தொலைச்சே.. நாயே தொலைச்சிடுவேன்…“ அவர் விழிகள் முனுமுனுத்து கொண்டு இருக்க , அவரது பெரிய காரில் குடும்பம் ஓசூரை நோக்கி பறக்க., அவர் கைகள் நடுங்கின.

:ஆர்த்தியை டூர்  கேன்சல் செஞ்சிட்டு வர சொல்லுடிகண்ணன் சார் மனைவி, கண்கள் கலங்கி மகள் திவ்யாவிடம் சொல்லி கொண்டிருந்தாள்.

 லட்சக்கணக்கான  கிரான்டனி வாடிக்கையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கிரான்டனி ஊழியர்கள்,  அதிகாரிகள் ஓசூரை  நோக்கி   காரில் விரைய ஹோசூரை இனைக்கும் புற வழி சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஆகின. அந்த சிறிய ஊர் விழி பிதுங்க., பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.