மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, May 9, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1743

 

அமுதா போனை நடுங்கி கொண்டே வைத்தாள்.

அவன் குரலில் மிரட்டல் இல்லை. உறுதி தெரிந்தது. முதல் முறையாக பயந்தாள்.

அன்று பிள்ளைகள் கூட படுத்து கொண்டாள். அவளுக்கு பயமாக இருந்தது.. அந்த ஈஸ்வர் ராஸ்கல் நம் பிள்ளைகளை? நோ அப்படியெல்லாம் ஒன்றூம் செய்துவிட முடியாது. இந்த உலகில் எதும் அறிவியல் தான்.

அறிவியலை மீறி முட்டாள்தனமான லாஜிக் இந்த உலகில் இல்லை. யாரும் என்னை அணுகிட முடியாது. என் பிள்ளைகளிடம் பேசிவிட முடியாது. பெரியவன் பாதி தூக்கத்தில் இருந்து புரண்டு படுத்தான்

"மகேஷ்..மகேஷ்ஷ்...

".ம் மா..சொல்லு"

"ம்ம் உனக்கு நாளைக்கு என்ன டிபன் செய்யட்டும்..?"

"ம்ம்ம் மேகி...." அவன் அவளை கட்டி கொண்டான்.

"இல்லடா அரிசி உப்புமா செய்யட்டுமா?'

அவன் திடுக்கென கண் விழித்தான்., "அரிசி உப்புமாவா? அப்படின்னா?"

"ஆமாண்டா.அரிசியை ரவை மாதிரி பொடியாகி ., உப்புமா செய்யட்டுமா?"

"அய்யோ அதெல்லாம் வேனாம் மம்மி....மேகி இல்லாட்டி தோசை"

"ஆர் யு ஷ்யுர்? திரும்ப கேக்க மாட்டியே "

'ம்ஹூம்...."

அவள் அவன் தலையை தடவி கொடுத்தாள்.

மறுனாள் காலை எழுந்ததுமே பெரியவனை பார்த்தாள். தூங்கி கொண்டிருந்தான். அடுத்த அறைக்கு போய் கணவன் மைத்ரேயன்
எழுந்தானா?  பார்த்தாள். அவன் தலை வாரி கொண்டிருந்தான்.

என்னடி நைட்டு குழந்தைங்க கூடயே தூங்கி எனக்கு டிமிக்கி கொடுத்துட்டே? ரொம்ப நேரம் முழிச்சிகிட்டிருந்தேண்...

"என்ன? இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்க?"

"ஜாகிங்க்"

"ரெகுலரா போக மாட்டேங்கிறீங்க.."

"இனிமே ரெகுலரா போவேன்..."

டக்கென அவளுக்கு ஈஸ்வர் ஞாபகம் வந்தான்... அவன் கால் விரல்களை பார்த்தாள்

"இ.இன்னிக்கு ஜாகிங்க் வேணாமே?"

"ஏண்டி லூசு?"

"சரி போங்க...ஆனா ஷூ போடாம போகாதீங்க"

"லூசா நீ?  ஷூ  போடாம எப்படி ஜாகிங்க்? ஏண்டி உளறுரே"

"சரி பத்திரமா போங்க...."

அவன் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தான்.

அவனிடம் ஈஸ்வரிடம் உண்டான மோதல் பற்றி சொல்லலாமா? என யோசித்தாள். வேண்டா, நம்மை ஒரு வீரமங்கை ரேஞ்சுக்கு நினைத்திருக்கிறான்.. நாமே பயந்தது போல் காட்டி கொள்ள கூடாது.,

கிச்சன் போய் சிலிண்டர் பற்ற வைத்தாள். பாலை வைத்து டீ போட்டு குடித்தாள். பின் குக்கரில் பருப்பு வைத்து குளிக்க சென்றாள்.

குளித்து விட்டு ஆடை அணிய.,

யாரோ கதவை தட்டும் சப்தம்..

"ய..யாரது.....?"

"ம..மம்மி...."

"ஏய் மகேஷ் கண்னா சொல்லுடா."

"எனக்கு அரிசி உப்புமா செஞ்சு தரியா?" கேட்டான் மகேஷ்.


******************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்