மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, November 15, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 46

 

 நிறைய பேர் பாட்மின்டனுக்கே புதியவர்கள். தொந்தியும் வழுக்கையுமாய் இருந்தவர்கள் இடத்தை நிரப்பி இருந்தார்கள். நிறைய பள்ளி, கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள்.

 வேகமாய் தகுதிச்சுற்று ஆட விட்டு நிறைய பேரை போட்டி குழுவினர் வடிகட்டினார்கள்.

ஜஸ்ட் தகுதி சுற்று தானே? என வீணா புடவையிலே இருந்தாள்.

சுமதியும் வீணாவும் தேர்வாகி எல்லார் பேரையும் குலுக்கலில் போட்டு எந்த ஆட்டம்? எந்த நேரம்? என சொன்னார்கள்.  ஒரே சமயத்தில் நாங்கு போட்டிகள் நடந்தன. எல்லா லீக்கும் ஒரே செட் தான். பைனல் மட்டும் ., என்பதால் பெருங்கூட்டம் மெழுகாய் கரைந்து  கொண்டிருந்தது.

தேர்வான சுமதி உடை மாற்றாமல சுரிதாரிலியே ஆட விரும்புவதாக சொல்ல., மேலே ஜெர்ஸி மட்டும் அணிய சொன்னார்கள். ஆனால், வீணா புடவை அணிந்து வந்திருந்ததால்., ஸ்கர்ட், பணியன்  அல்லது ஜெர்ஸீ அணிய் சொன்னார்கள்.

"இல்ல என்னால புடவையில கம்போர்டா ஆட முடியும்" என அவள் போட்டி நடுவர் பெண்மணியிடம் சொல்ல

"புரிஞ்சுக்கோங்க மேடம்., உங்க கேம் ஜஸ்ட் பத்து நிமிஷம் தான். லேடிஸ் கூடத்தான் ஆடப் போறிங்க.. ஜஸ்ட்., பத்து நிமிஷம் ஸ்கர்ட் போட என்ன தயக்கம்? நீங்க வேற டிஸ்டிரிக்ட்லாம் ஆடி இருக்கீங்க? என்ன பிராப்ளம் உங்களுக்கு?, இங்க யாரும் செல்போன்ல போட்டோ பிடிக்க மாட்டாங்க.. போன்  நாட்  அலவ்ட்.  பாருங்க எல்லா லேடீஸும் ஸ்கர்ட் பனியன்ல தான் இருக்காங்க., ஒன்னு ரென்டு பேரு சுடி போட்டிருக்காங்க... ஜீன்ஸ் . டாப்சும் கூட ஓகே.. ஆனா புடவை  நாட் அலவ்ட்.. அது கேமோட கன்ஸ்ட்ரசேஷனையேகுறைச்சிடும். உங்களுக்கு தெரியாதா? வரப்பவே ஜீன்ஸ், சுடி போட்டிருக்கலாமே."

"இல்ல மேடம்.. இப்படி ஸ்டிரிக்ட்னு தெரியாது., சட்டனா பிளான் பண்ணிட்டோம்.."

"அப்ப ஒன்னு பண்ணுங்க எங்க தங்கி இருக்கீங்க? போய் சுடி போட்டு வாங்க..பாப்போம்”

“மேடம்”

“..பை தி பை இந்தாங்க உங்க டிரஸ்., ஷூஸ். போட்டி ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி குரூப் போட்டு நில்லுங்க.. ஹாவ் ஸ்வீட் மெமரீஸ்" அந்த குண்டு பெண் அடுத்த பெண்னுக்கு உடைகள் வழங்க போக.,

இப்போது என்ன செய்வது? ஸ்கர்ட் பனியன் அணிந்து தான் ஆகவேண்டுமா? இந்த விஜய் இப்படி திடீரென மாட்டிவிட்டானே?

வேறு வழியில்லையா? இந்த விஜய்க்கு இன்று என் முழங்காலை காட்டி தான் ஆகவேண்டுமா? அய்யோ வேறு யாராவது பார்த்தால் பரவாயில்லை. இந்த விஜய் பார்த்தால்?

அதான் நேற்று முழுதாய் பார்த்து விட்டானே?

சரிதான். ஆனால் பகலில்., இத்தனை பேருக்கு மத்தியில் ? யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும்., அவன் பார்க்க கூடாது. எப்போது அவிழ்ப்பேன் என அலைகிறான். ஸ்கர்ட் போட போகிறென் என்றதும் அவ்வளவு ஆர்வமாகி விட்டான்.

இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிவிட வேன்டும்,. இந்த நகை மேட்டரிலிருந்து தப்பிக்க வேண்டும் என பார்த்தால் இதென்ன புதுசங்கடம்?

இவள் யோசித்து விட்டு வேரிவழியில்லாமல், ஸ்கர்ட் அணிய போனாள்.