மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 11, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1744

அமுதாவிற்கு கால் கீழே தரை முழுக்க பரவி இருந்த சோப்பு நுரை அப்படியே மேலெழுந்து சேறாகி , அது புதைகுழியாகி அவளை அழுந்துவது போல் உணர்ந்தாள்.,  உள்பாவாடையுடன் அப்படியே  பாத்ரூம் ஈர தரையில் உட்கார்ந்தாள்.
"மம்மி"
"…. மகேஷ் நீ போய்  புக்கை எடுத்து படி..மம்மி வரேன்.."
"அப்ப அரிசி உப்புமா?"
"செஞ்சி தரேன்..போ..ய் படி"
ஆண்டவா என்ன இது? என விபரீதம் இது? இந்த ஈஸ்வர் அவ்வளவு சக்தி வாய்ந்தவனா? நாம் தேவையில்லாமல் அவனிடம் வாய் கொடுத்தோமா? அவனது கோபத்தை தூண்டி விட்டோமா? ச்சே அந்த சேனல் ஹெட் சொன்னான் என்பதற்காக அவனை வெறுப்பேற்றி., இப்போது ஈஸ்வர் நமக்கு எதிராக நிற்கிறானே?
இல்லையில்லை. ச்சே நாம் சும்மாவே இருந்திருக்கலாம்.. பிள்ளையிடம் போய் அரிசி உப்புமா பற்றி கேட்டு., இப்போது அவனே வந்து அரிசி உப்புமா கேட்கிறான் .மகேஷ்க்கு அரிசி உப்புமா என்றால் என்னவென்று கூட தெரியாது. அது தான் உண்மை . தவறு நம்மீது தான். சோ. இதில் ஈஸ்வரின் பங்கு எதுவுமில்லை..
என்றாலும் கனவனின் கால்கட்டை விரல் பற்றி கவலைப்படடாள்.
அவன் வருகைக்காக பால்கனியில் அடிக்கடி எட்டி பார்த்தாள்.
கால் நொண்டி நொண்டி  புருஷன் வந்தால்? அப்படித்தான் வருவானா?
இல்லை நன்றாகத்தான் ஓடி வந்தான்.
அவள் உள்ளே போனாள்.. கடவுளே ஒரு அடியுமில்லை
கொஞ்ச நேரத்தில் மைத்ரேயன் உள்ளே வந்தான்.. கால் கட்டை விரலை தரையில் படாமல். எக்கி எக்கி வர.,
"அய்யோ என்ன ஆச்சுங்க..நல்லாதான் வந்தீங்களே?"
"நல்லாத்தான் படிக்கட்டு ஏறி வந்தேண் ஷூ ஸ்டாண்ட் இடிச்சுகிச்சு. .ஜஸ்ட் நவ் "
அவன் முகத்தில் வலியின் வேதனை
"அய்யோ... ஷூ போட்டிருந்தீங்களே"
"நீ வேற வலி உயிர் போகுது.. ஷூ அவுத்துட்டு திரும்பறப்ப.. பாக்காம இடிச்சுகிட்டேன்.. நகம்  பாதி பேந்துகிச்சு"
அதிர்ந்து போனாள் அமுதா. உடனே மின்னல் வேகத்தில்  மருந்து போட்டு கட்டு போட்டாள்.  இப்போதாவது ஈஸ்வர் பற்றி சொல்லலாமா?
வேண்டாம் இந்த பேச்சை இப்படியே விடுவோம்.. அவள் ஆபிசுக்கு போகவில்லை..
மதியம் பாத்ரூமில் போய் சத்தமாக அழுதாள். பூஜை அறை வந்து பூஜை செய்தாள்..
மாலை ஐந்து மணிக்கு ஈஸ்வரின் போன் வர கட் செய்து நம்பரை பிளாக் செய்தாள். சரியோ தவறோ? மூட நம்பிக்கையோ? மெய்ஞ்ஞானமோ? நாம் அவனிடம் மோதாது விலகிட வேண்டும். அவள் முடிவெடுத்தாள். ஆனால் அவன் வெகு உக்கிரமானான்.
வாடி. எல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லிட்டு பூஜையில உக்காந்துட்டியா? அவன் கொக்கரித்தான்.. மாலை இருளாகி இரவாக அவன் காத்திருந்தான்..,
மனதளவில்., உடைந்து போயிருந்த அமுதா ஈஸ்வரின் அடுத்த சவாலை படுக்கை சவாலை நினைவுப்படுத்தி கொண்டு பயந்து போய் வீட்டு வாசலில் செருப்பு, துடைப்பம் போட்டாள். கதவு ஜன்னலை மூடினாள். கட்டிலில்  பூஜை அறையின் திரூநீற்றை கணவனுக்கு நெற்றீயில் தடவினாள். அவனை கட்டி கொண்டு படுத்தாள்.
அவள் அவளாகவே இல்லை..
மணி 11 ஐ தாண்டியது.  அந்த படுக்கையறையில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன... ஒரு வாசம் திடீரென கமழ்ந்தது. என்ன இது? என்ன வாசனை? மெல்ல முகர்ந்தாள் .,கண்னை மூடியபடியே ஆழ முகர்ந்தாள்.
அது ..அது மரிக்கொழுந்து வாசனை...இதை எங்கோ ஸ்மெல் செய்தோமே...எங்கே...? இப்ப தான் ஓன் வீக் முன்னாடி....ஒரு வீட்டில் ஒரு நேர்காணலில்.அய்யோ இது அவன் வாசனை...ஈஸ்வர் வாசனை.
,


******************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்