மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, April 25, 2022

திபூவை பார்ட் 34 (வீணா - ஆல்பர்ட்- சுகன்யா)

ஹாய் ப்ரன்ட்ஸ்!
1.  பல நண்பர்கள் பார்ட் 34  (வீணா - ஆல்பர்ட்- சுகன்யா) பற்றி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் இறுதி என்றீர்களே. என்ன ஆயிற்று ? என கேட்கிறார்கள். உண்மைதான் நூத்தி சொச்ச பக்கங்களில் அந்த ஒரு டிராக்கை எழுதி முடிக்க நினைத்தேண் . ஆனால்  தவிர்க்க முடியாமல் , கதை பிண்ணனிக்காக  இன்னும் படு சுவாரசியமான இரண்டு டிராக்  சேர்க்கப்பட்டதால்.,  கதை 400 பக்கங்களுக்கு மேல் விரிவடைவதால்.,  தாமதம் ஆகி இருக்கிறது. 
இதில் வரும் கல்லூரி + ட்யூஷன் டிராக் நிச்சயம் புது அனுபவத்தை உங்களுக்கு தரும்.
நண்பர்கள் ரிலீஸ் தேதி கேட்கிறார்கள். அட்லீஸ்ட் 90% முடிந்தால் தான்  ரிலீஸ் தேதியை உறுதியாக  சொல்ல முடியும். விரைவில் சொல்கிறேன்.

2.  சில பேர் திபூவை போன்று  முழு நீள நாவலாக இல்லையென்றாலும் பரவாயில்லை.. வாரம் ஒரு சிறுகதையாக ,வெவ்வேறு கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள் என்கிறார்கள். வாரம் ஒரு சிறுகதை அல்லது குறு நாவல்  என்பது  நல்ல ஐடியாதான். நான்கு அல்லது ஐந்து மணி நேரம் செலவழித்தால் என்னால் ஒரு சிறுகதையை எழுத முடியும்.
ஆனால்,. கதையை மெயிலில் தான் அனுப்ப வேண்டி இருக்கிறது.அதுதான் பணிச்சுமை.    வாரா வாரம் சிறுகதைக்கு பணம் செலுத்தியவர்களுக்கு தனிதனியே கதையை மெயிலில் தான் அனுப்பவேண்டும். அதற்கு நேரம் இருக்க வேண்டுமே. (ஏனெனில் இனையத்தில் சில பேருக்கு தான் டவுன்லோடு லிங்க் காட்டுகிறது.) இருப்பினும் திரும்புடி சீசன் 2 முழுதும் முடிந்த பிறகு  அதுபற்றீ முயற்சிக்கிறேன்.

3. நான் முன்பு எழுதுவதாக சொன்ன. டிடெக்டிவ் நாவல், சரித்திர நாவல் பற்றியும் அடிக்கடி விசாரிக்கிறார்கள். எனக்கு கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தில்., திபூவை முழுதும் முடிந்த பிறகு டிடெக்டிவ் நாவல், சரித்திர நாவல் நிச்சயம் எழுதுவேன்.  
பொதுவான கதைகளில் படு சுவாரசியமான 70 க்கும் மேற்பட்ட, ஒன்றுக்கொன்று வேறுபட்ட  புதிய திரைகதைகளை  ஒவ்வொரு Phara வாக  சுருக்கமாக MS Word- ல் பதித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக எழுத ஆசை தான். ஆனால்  நேரம் கிடைக்க வேண்டுமே. இதில் புக் ரிவியூற்காக,  அவர்கள் புக்ஸை இனையத்தில் சேர்க்க  பல பேர் மெயில் அனுப்புகிறார்கள். ரெஸ்பான்ஸ் செய்ய முடியாது போனால், ஒருமையில் திட்டி மெயில் அனுப்புகிறார்கள். பொறுத்தருள்க.

4. விடுபட்ட பாகங்களை ( பாகம் 32,33,34 & 35) எங்களால் படிக்க முடியுமா? என பிளாக் ரீடர்ஸ் கேட்கிறார்கள். நிச்சயம் முடியும். திபூவை 1730 எபிசோடுகளையும் நான் இலவசமாகதானே கொடுத்தேண்?.

5. அயல் நாட்டு வாசகர்களும், அமேசானில்  ஏற்கெனவே சந்தா கட்டியவர்களும் மீண்டும் கேடிபி யில் திபூவை' யை வெளியிட சொல்கிறார்கள்.   உங்களுக்காக முயல்கிறேன்.
ஆனாலும் பாகம் 31 முதல் தான் அமேசானில் வெளியிட முடியும் (ஏற்கெனவே பாகம் 30 வரை வெளியிட்டு விட்டதால்)  விரைவில்  எதிர்பாருங்கள்.

- என்.வி.