மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, October 13, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1877

 அமர் உடனே வீட்டுக்குப் போய் விடாமல் தோட்டம் முழுவதும் ஒரு சுற்று சுற்றி வந்தான் .

ரோஜா தோட்டத்தில் கடைசி மூலையில் அவளது கணவன்  சோனு மண்வெட்டியால் பெரிய பாத்தி கட்டி உரங்களைக் கொட்டி கலந்து கொண்டிருந்தான்.

இவனைப் பார்த்ததும் அடடே அர் தம்பியா ? என்ன தம்பி இவ்வளவு தூரம் ?’ என்பதாய் தனது தலைப்பாகையை கழட்டி அருகே இருந்த சிமெண்ட் பெஞ்சில் போட்டான்.

அமர்.. வேண்டுமென்றே யாரு யாரு?” என அவன் தலையை திருப்பி நாலா திசையும் பார்க்க

இங்கே ங்க தம்பி

“..”

உங்க தோட்டக்காரன் சோனு தான்…”

 அமர் அவன் இருக்கும் திசையை நெருங்க சோனுவின் கம்பீரமான உடல்வாகு தெரிந்தது. யப்பா அடித்து போட்டால் பாதி ஊரே  தின்னலாம்

ஆறு அடி உயரமும் அதற்கேற்ற அகலமும் இருந்த சோனுவிட்ம அமர் நெருங்கி நின்று பார்ப்பது அது தான் முதல் தடவை.  கண் சரியாக இருக்கும் போதெல்லாம் அவன் அருகே செல்லவே மாட்டான்.

சோனு எண்ணெய் வைக்காத பிரவுன் கலர் முடியும்  லேசான மாநிறமும் உடையவனாக இருந்தான்.

உதட்டை மறைக்கிற அடர்த்தியான மீசை. சுருள் முடிகள் கொண்ட ஒழுங்கற்றா தாடி,  அழுக்கு வேட்டி, வேட்டியை மீறிய கோவணம் என ஒரு அச்சு அசலானா பட்டிக்காட்டனாக இருந்தான்.

சோனு  நிறைய சாரயம் குடிப்பான். சுருட்டு புகைப்பான் போல. கிட்ட போனால் செம்ம நாற்றம். அவனுக்கு கல்யாணம் ஆவதற்கு முன் இருந்து இங்கே வேலை செய்கிறான். அப்போதெல்லாம் அர் சிறு பையன்.

அமர் சரியாக சாப்பிடவில்லை என்றால் சோனுவிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என அம்மா மிரட்டுவாள்.

என்றாலும் இப்பொது சோனு அமரிடம் மரியாதையாய் பேசினான்.

அவனது உடை வறுமையில் இருந்தாலும் கருளை கருளையான தோள்கள், அவனது உழைத்து உரமேறிய உடம்பு, ஆறாக பொங்கும் வியர்வை   என அவனது தோற்றம் அவனது ணவு பழக்கத்தையும், உழைப்பையும் அருக்கு சொன்னது.

அத்தனை ஆஜானுபாகுவான ஆள் வளைந்து நெளிந்து குழைந்து நம்மை கும்பிடுவது அருக்கு வேடிக்கையாக இருந்தது.

அவனிடம் ரோஜா தோட்டத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு இன்னும் இரண்டு மூன்று சுற்றுகள் அங்கேயே சுற்றி விட்டு அவன் மெதுவாக தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது குளித்து முடித்துவிட்டு உடை அணிந்து அவனுக்கு நேருக்கு நேராக ஜமுனா வந்தாள்

அவளை இவன் கண்டும் காணாதது போல் அதே பாதையில் அவன் செல்ல ஜமுனாவின் சோப்பு வாசம் அவன் நாசியை துளைத்தது. ஜமுனா அவன் தாண்டி செல்லும் வரை அமைதியாக ஒரு ஓரம் நின்றாள். அவன் தன்னை கடந்து போன பிறகு திரும்பி பார்த்தாள்.

தன்ளையலை ஆட்டி சப்தம் எழுப்பினாள். அவன் மறுபடியும் சப்தம் எங்கு வருகிறது? என அங்கே இங்கே பார்க்க

நான் தான் ஜமுனா. நீங்க இன்னும் வீட்டுக்கு போகலையா?”  கேட்டாள்.

.. இல்ல போகல மணி என்ன?” எனக்கேட்டான்

மணி ஆறு ஆக போகுது.  இருட்ட போவுது., சீக்கிரம் போங்கஎன்றான்.

ஆஹ்., இருட்டா? வெளிச்சமும் இருட்டும் எனக்கு ஒன்னுதானே?” என சொல்ல.,

சட்டென ஒரு நிமிடம் ஜமுனா அமைதியாக இருந்தாள்அவளிடம் பேசிக்கொண்டே நடக்க, அமர் வேண்டுமென்றே அங்கிருந்த பூந்தொட்டியில் கால் வைத்து இடித்துக் கொண்டு விழப்பார்க்க,

அவள் ஐயோ ?” ண்றபடி ஓடிவந்து பார்த்தாள்.

யாரது வழியில் பூந்தொட்டியை வைச்சது?” எனக் கேட்டான்

வழியில ஒன்னும் பூந்தொட்டி வைக்கல., நீங்கதான் வழிவிட்டு கிராஸா போயிட்டீங்க என்றாள்.

ஓ அப்படியா இந்த டைரக்ஷன் தானே?”  எனக் கேட்க.,

ஆமா அப்படித்தான் போகணும் இருங்க .,நான் வேணா உங்கள கைய பிடிச்சி வீட்ல விட்டுடறேன்..”என சொன்னாள்.

அவன் தயக்கமாக தலையாட்ட ஜமூனா அவனது கையை பிடித்துக்கொண்டு அவனை அழைத்து வந்தாள்.

ஜமுனா இரண்டு குழந்தைகளைப் பெறும் வரை இந்த வீட்டில் வந்தது கிடையாது. ஆனால் இப்போதுதான் குழந்தைகளுக்கு புத்தி நன்றாக தெரிந்து விட்டது.  அதுமட்டுமில்லாமல் ஒரு ஏக்கரில் போட்ட பூந்தோட்டம் இப்போது மூன்று ஏக்கர் ஆகி விட்டதால் என்னால் ஒரு ஆளாக வேலை செய்ய முடியாது. வாரம் ரென்டு நாளைக்கு உரம் போடனும், நான் உரம் தயாரிக்கிறேன். நீ உரம் போடு ., துணைக்கு வா என சோனு கூப்பிடவே இவள் வர ஆரம்பித்து விட்டாள்.

வர ஆரம்பித்த பின்புதான் இந்த வீட்டில் இரு இள வயது ஆண்கள் இருப்பதையும் அவள் பார்த்தாள்அட சினிமா நடிகன் கணக்கா இருக்கனுங்களே.

ஜமூனாவது குக்கிராமம்., அங்கிருந்த இள வட்டங்களுக்கு சுத்தம் என்றால் என்ன? என தெரியாது. படிப்பு வாசனை கிடையாது. வாயெல்லாம் பான் ப்ராக் கறை. அந்த கிராமத்தின் வழி தவறி வந்த தேவதை போல ஜமூனா திரிந்தாள். அவள் அப்பாவிற்கு ஜமூனாக்குபின் வரிசயாக நாலு பெண்கள், மாப்பிள்ளை சோனுவுக்கு சொந்தமாக 25 ஆடுகள் 90 வாத்துகள் இருப்பதை கேள்விப்பட்டு வயது வித்தியாசம் கூட பார்க்காமல் ஜமூனாவின் பள்ளி இறுதித் தேர்வை நிறுத்தி விட்டு சோனுவுக்கு தாரை வார்த்தார்.

ஜமூனாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது,. ஆனாலும் சோனுவுடன் வாழப் பழகிக் கொண்டாள். இந்த பத்தாண்டுகள் வீட்டில் தான் அடங்கி கிடந்தாள். சோனுவுக்கு ஜமூனாவின் அபரிதமான அழகு உறுத்த வாத்து மேய்க்க., ஆடு பரமாரிக்க கூட அவளை எங்கும் வெளியில் அனுப்பவில்லை. இந்த கிராமத்தினை கூட அவள் முழுதாக பார்த்த்தில்லை

முதன் முறையாக இந்த பெரியவீட்டையும், மஞ்சள் ரோஜா தோட்டத்தையும் பார்த்ததும் வியந்து போனாள்.   அது போலவே அமரையும், கோபாலையும் பார்த்து அவர்களின் நாகரீக தோற்றத்தினையும் பார்த்து திகைத்தாள்.

அதில் பெரியவன் கோபால் யாரிடமும் பேசமாட்டார். இந்த பையன் துருதுருவென்று இருப்பான். லேசான பெண்மை கலந்த முகம், வசீகரமான சிரிப்பு, ஆனால் இந்தப் பையனுக்கு போய் இப்படி ஒரு விபத்து நடந்து விட்டதே., பாவம் அழகான பையன். அமைதியான பையன். பெரிய பணக்கார வீட்டு பையன் என்கிற திமிர் இல்லாத பையன் , இவனுக்கு போய் இப்படி ஒரு நிலை வந்திருக்கிறதே.,  என அவள் நினைத்து வருந்தினாள். கணவனிடம் கூட அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பாள். ஆனால் அமரிடம் சகஜமாக பேசியதில்லை. இப்போது தான் அமரிடம்  நெருங்கி பேசுகிறாள்.

ஆனால், நம்மை போல கணவன் சோனுவால் இப்படி அமரிடம் நெருங்கி பேச முடியாது. பத்தடி தொலைவில் தான் நிற்க வேன்டும். அவள் பரம்பரையே நெருங்க முடியாத வம்சம் அமருடையது.

அவள் கணவன் சோனு ஆஜானு பாகுவானவன். ஒருமுறை ஹை வேஸ் ரோட்டில் கணவனுடன் ஜமூனா சைக்கிளில் வரும்போது மூன்று ரவுடிகள் வம்பிழக்க., அவர்களை அடித்து துவைத்து அவர்களிடம் இருந்த பணத்தையே அடித்து பிடுங்கிய பலசாலி. கோபக்காரன், சோனு. இருக்கும் சேரிப்பகுதியில் சோனு என்றாலே  பயம் மரியாதை.., ஓரிரு வழக்குகளூம் காவல் நிலையத்தில் சோனு பேரில் இருக்கிறது.

அப்படிப்பட்டவன் கோபாலிடமும், அமரிடமும் பேசும்போது சோனு மட்டையாய் மடங்கி குழைந்து பணிவாக பேசுவதை பார்த்தால் ஜமூனாவிற்கு வியப்பாக இருக்கும்.

அடேயப்ப்பா.. அப்படியென்றால் இந்த வீட்டு பிள்ளைகளுக்கு இருக்கும் பவுஷு எப்படிப்பட்டதானது ? அதுவும் பெரியவர்  கிட்ட போய் பேச இன்னும் பயம். எல்லாத்துக்கும் மேலே அந்த வீட்டு அம்மாள் வித்யாவை பார்த்தால் சோனு மென்று முழுங்குவான்.

கணவனையே  அந்த விரட்டு விரட்டியவர்கள் அவர்கள், இப்போது என்னவென்றால் நாம் இவனின் கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். பயமும் நடுக்கமும் இருந்தாலும் அடக்கி வைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மை அவளை அப்படி நடக்க சொல்ல., அவள் அவன் கையை இறுகப் பற்றி கொண்டு தன் ஈர உடைகள் அவன் மீது பட நடந்து வந்தாள்.

அவர்கள் அந்த தோட்டத்தை விட்டு அதன் எல்லையை தாண்டி, அவர்கள் வீட்டு காம்பவுண்டின் அருகே வர,

சரிங்க தம்பி. இனிமே நீங்க போய்டுவீங்க இல்ல?”

போறீங்களா நீங்க?” கேட்டான்

“……………………….”

“…………………” அவன் அவள் கையை விட வில்லை , என்ன இவன்? யராவது வந்தால்? பார்த்தால்?

கையை விடுங்க.”

விடுறட்டுமா?”

“..….சரி நீங்க பாத்து போங்க

என்னங்க பாதியில விட்டுட்டு போரீங்க?”

பின்னே. வீட்டு வரைக்கும் வர முடியுமா?

வந்தா என்ன?”

கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு.. ஆனா?” அவள் ஏதும் பேசவில்லை.

வாசலுக்காவது வரலாமில்ல?” அவன் ஏக்கமாய் கேக்க அவள் அடிவயிறு பகிறென்ரானது.

இவர்கள் வீடெல்லாம் எப்படி இருக்கும்?

ம்கூம்..  இதுக்கு அப்புறம் நாங்க எல்லாம் உங்க வீட்டு பக்கம் வரக்கூடாது.. தெரியுமில்லே?”

. ஏன் ஜமூனா?”

ஏன்னா அதை உங்க மம்மி கிட்ட கேளுங்கஅதெல்லாம்., அப்படித்தான். நான் இப்படி உங்க கைய பிடிச்சு கிட்டு கூட்டிட்டு வரதை யாரச்சும் பார்த்தங்கன்னா., உங்கம்மா தோலை உரிச்சிடுவாங்க

உன் தோலையா? என் தோலையா?’

ரெண்டு பேர் தோலையும் தான் விடுங்க…” அவள், அவன் கைகளை வேகமய உதறி விட்டு அவள் அந்த தோட்டத்தின் மூலையில் வேலை செய்து கொண்டிருந்த அவனது கணவனை நோக்கி போனாள்.


வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)