மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 7, 2025

க.வெ.கொ பாகம் 6 : அத்தியாயம் 144

 

அங்கே மும்பையில் ஹோட்டலை விட்டு ரானா காரில் ஏற.,

“இருங்க ஜி.. அவ எங்கே எப்படி போனா’ன்னு ஹோட்டல் சிசிடிவி புட்டேஜை பாத்து அவளுக்கு லாடம் கட்டிடடேறேன்.” மற்றவர்கள் நாலாபக்கம் போயிருக்க., ஒருவன் மட்டும், ரானாவிடம் பவ்யமாய் சொல்லி கொண்டிருந்தான்.

“எதுக்குடா முட்டாள்.அவ என்னை எங்கிட்ட கொள்ளையடிச்சிட்டா போனா? ”

“ இருந்தாலும் அவ மேல ஆசைப்பட்டீங்க.. இப்ப போயிட்டா இல்ல “

“முட்டாள் நான் எப்படா., அவளை போடனும்னு சொன்னேன்?”

“அப்ப எதுக்கு., அவளை கூட்டியாற சொன்னீங்க?”

“... என் நகைக்கடை ஆட்ல நடிக்க கூப்பிட்டேன்”

“ஜுவல்லரி ஆடா? ஆங்க் கதை உடாதே பாஸ்.,”

“யார்டா கதை விடறா?.”.

“பாஸ்.. பொண்ணு கிடைக்கலன்னு சமாளிக்காதீங்க?”

 “அடிங்க் பாஞ்சோத்..” ராணா அவனை பளாரென அறைந்தான்.

‘பாஸ்..”

“ஏன்டா. நான் எப்படா., பொண்ணுங்களை ஹோட்டலுக்கு கூப்ட்டிருக்கேண். எல்லாம் என் கெஸ்ட் ஹவுஸ்ல வெச்சி தானே செய்வேன்..அதான் இவளை நான் கூப்ட்டது ஜுவல்லரி ஆட்ல நடிக்க ..ஆங்க் வெயிட் வெயிட்...அவ கிட்ட என்ன சொன்னீங்க ?ரானா கூப்ட்டார்னு மொட்டையா சொன்னீங்களா?”

“ஆமா பாஸ். ரானா காலிங்க்னாவா அதானே அர்த்தம்?’

“அடப்பாவி நிஜமாவே அவளை போடனும்னு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லடா”

“அய்யோ பாஸ்! கேரளா நீங்க தானே சொன்னீங்க கேரளா பொன்ண்ணுங்களை போட்டதே இல்லன்னு..”

“வாஸ்தவம் தான்.. ஆனா இவளை என் கம்பெனி ஆட் ல நடிக்கனும் தான்டா, சம்பளம் பேச நேர்ல  கூப்ட்டு வரச் சொன்னேன்.. சொதப்பிட்டீங்களேடா”

‘சாரி பாஸ்..”

“அவளை யாரும் தேட வேண்டாம். அவ நம்பர் கொடு., பேசறேன்., பயந்து எங்கயாச்சும் ஒளிஞ்சிருக்க போறா”

“ நம்பர் அந்த விளம்பர பட கம்பெனி கிட்ட இருக்கும்.”

“ சரி வாங்கு” உத்தரவிட்டான் ராணா.

“பாஸ்”

“என்ன?”

“தப்பா நினைச்சிக்காதீங்க., நிஜமாவா அவ பேர்ல உங்களுக்கு கிரஷ் இல்லியா? இல்ல., அவளை நடிக்கற மாதிரி கூப்ட்டு., மெதுவா லவ் மோடுக்கு மாத்தி, எஞ்சாய் பண்ற மாதிரி லேட் பிளானா?’ இரு கன்னத்தையும் பொத்தி கொண்டு அவன் கேட்க.,

“.............”

“பாஸ்”

“ராஜு ரொம்ப வருஷமா என் கூட இருக்கே., உனக்கு என் சிஸ்டர் தெரியுமில்ல.”

“ஆமா சின்ன வயசுல, ஆக்ஸ்டென்டுல செத்து போச்சே”

“...ம்.. அவ இப்ப இருந்தா அசப்புல இவ மாதிரி தானே இருப்பா?’

ராஜு மண்டையை சொறிந்தான். இந்த பீமசேனன் எந்த நேரத்தில் என்ன சொல்வான்? என தெரியலையே. ஆனால் இவனோட சிஸ்டர்,. ஒரு குண்டு கத்திரிக்காய், இப்ப உயிரோட இருந்தால் மார்கெட் போன  நமீதா மாதிரி இருக்கலாம். ஆனால், மஞ்சிமா மாதிரி அழகு பெண்னாய் இருக்க சான்சே இல்லை. எதுக்கு வம்பு? என நினைத்து.

“ அச்சா ஜி” என்றான்.

‘என் சகோதரியை போய் நான் எப்படி?’

என்னடா இவன் சென்டிமென்ட்?.. இதுக்கு தானா இவளை போயி  சினிமா கணக்காக சீன் போட்டு, மாஸ் காட்டி, தூக்கி வந்தோம்.? படுக்க கூப்பிடறனா? நடிக்க கூப்பிடறனான்னு சரியா சொல்லாம, இவன் சொதப்பிட்டு நம்மளை போட்டு அடிக்கிறானே படவா.. எல்லா உழைப்பும் வேஸ்டா போச்சே? ”’ என  ராஜு   நொந்து கொள்ள.,

ராஜுவின் போன் அடிக்க.,

“ஹலோ”

“ரானா கிட்ட போன் கொடு,. சூரஜ் எம் .பி பேசறென்”

“வெயிட் கரோ எம். பி சாப்..தரேன்”

“ம்...’

“ஜி.. எம்.பி.. சூரஜ் சாப் போலியா ”

“கொடு”

“ஹலோ..”

“ஆங்க் ராணா.. நான் சூரஜ்”

“போலோஜி” ராணா திடீர் பவ்மயமாக,

“ஏம்பா மஞ்சிமான்னு ஒரு மாடல் பொண்ணை தூக்கி வந்துட்டியா.?, உனக்கு இதே வேலையா போச்சு”

  மேம் நஹி சாப் .. ஏதுவும் பண்ணலியே..ஓரு ஜுவல்லரி ஆட் பிலிம்ல நடிக்க, அவளை”

“ உன் ஆட் பிலிமை தூக்கி குப்பையில போடு.. அவளை என்ன பண்ணே?”

“எ..எதுவும் பண்னல”

‘இங்க பாரு ராணா விளையாடாதே..அவளை அனுப்பி வைய்யி...அவ எனக்கு தெரிஞ்ச ஆளோட வுட்பி.. மேரே தோஸ்த் கமலேஷ்ஜி கேர்ள் பிரண்ட் ..சம்ஜே..?”

“..........ஜி சாப்”

“ பெங்களூர்ல இருந்து கிளம்பி இங்க, கமலேஷ் என் முன்னாடி தான் உக்காந்திருக்கார். அவளை பத்திரமா கூப்ட்டு.,  மும்பை வா”

“யோவ்.. மஞ்சிமா அப்பவே போயிட்டா”

“ஏதாச்சும்  பண்ணிட்டியா?.. சொல்லி தொலை பூதமே”

“திருடறவன்னாவே, அவன் திருடிக்கிட்டே தான் இருப்பானா?’

“ம்ம்கூம்ம் நீயாவது, அவளை சுத்த பத்தமா அனுப்பறதாவது?”

“நஹி சாப். அவ என் சிஸ்டர்  மாதிரி”

“குட் ஸ்டோரி.. டைரக்டட் பை தி கிரேட்  ராணா”

“ நம்புங்க ஜி.. ஏய் ராஜு நீ அவர் கிட்ட சொல்லு” ராணா ராஜுவுடம் போனைக் கொடுக்க,

அவனும் போனை  வாங்க்கி நடந்ததை சொன்னான்.

 

 

இங்கே, ராணா மஞ்சிமாவை அழைத்த உண்மையான நோக்கம் ஏதும் தெரியாமல்,  மஞ்சிமவை சீரழிக்கதான் ராணா அழைத்தான் என்பதாக நினைத்து ரகுவும் மஞ்சிமாவும் பிடறி தெறிக்க ஓட, ரகுவின் கார்.,கோவாவை நெருங்க.,

“காரை ஓரமா நிறுத்துங்க”

“ஏன்..”

ப்ளீஸ் ஸ்டாப்...”

“ அதான் ஏன்” 

“நம்பர் ஒன் “ அவள் விரலை  நீட்ட., அவன் காரை ஓரம் கட்ட, காரிலிருந்து இறங்குபவளிடம்  வாட்டர் பாட்டிலையும், நாப்கின் பேப்பரையும் கொடுத்தான் ரகு.

அவள் சங்கடமாய் சிரித்தபடியே மறைவாய் போக, 

ரகுவின் போன் அடிக்க.,

“ஹேய் ரகு... மஞ்சிமா எங்கே?’

“......ஏன் என்னாச்சு.. அவ சேஃப்டா மச்சி.. ஐயா யாரு?”

“.. போடா லூசு..  நான் அந்த ராணா கிட்ட பேசிட்டேன்”

‘...................”

“தெரிஞ்ச் சோர்ஸ் மூலமா.. ராணா கிட்ட பேசிட்டேன்..”

“..................”

‘செம காமெடி ரகு.. ராணா அவளை ஆட் பிலிம்ல புக் பண்ண கூப்ட்டானாம். அவனுங்க ஆளுங்க சரியா சொல்லாம அவளை தூக்கியாற., நான் தான் ஒவரா பயந்துட்டேன்.”

“என்னடா சொல்றே? ரானா நகை கடை ஷீட்டிங்குக்கு தான் மஞ்சிமாவை கூப்டானா?

“ ஹன்ட்ரன்ட் பர்சன்ட் அதான். நான் தான் கன்பியூஸ் ஆகிட்டேன்.”

‘ஓ மை காட்?”

 அவன் மோட்டோ எதுன்னு தெரியாம, உனக்கு போன் பண்ணி சொன்னேன்.. நீயும் சீன் கிரியேட் பண்னி”

“நான் சீனை கிரியேட் பண்ணேனா?’

“ஓகே ..சாரி.. எனி ஹவ், இது ஒரு நத்திங்க் மேட்டர்., ஆக்சுவலா நான் தான் ஓவரா இமாஜினேஷன் பண்ணி.. சாரி.. அவ எங்கே? போனை கொடு.”

“...............” ரகு இருண்டு போயிருந்தான். ச்சே.. இது மட்டும் மஞ்சிமாவுக்கு தெரிந்தால்? அய்யோ..எல்லாம் போச்சே?

“ஏய் போனை கொடுறா., அவ போன் ஏந் சுவிட்ச் ஆப்ல இருக்கு”

“ நீ கால் பண்ண போறேண்னு சுவிட்ச் ஆப் பண்ணிட்டாளோ என்னவோ?”

“ஏய்ய்”

“என் கிட்ட ஏன்டா கத்தறே? தோ இருக்குற பெங்களூர்ல இருந்த வர உனக்கு இவ்ளோ   நேரமா? ’

“அடிச்சி பிடிச்சு  வந்துட்டேன்டா., இப்ப மும்பைல தான் இருக்கேன். எல்லா பிராப்ளமும் சால்வ்ட்.. “

“ கமலேஷ் இங்க மஞ்சிமா ரொம்ப அப்செட்.. பை  தி பை... அந்த ரானா உங்க கிட்ட போன்ல சொன்னதெல்லாம், நம்பாதே. அவனும் அவன் ஆளுங்களும் கொலை வெறில அவளை போட தேடுனதை  நான் பாத்தேன். எப்படியோ பிளான் பண்ணி அவளை காப்பாத்திட்டேன் தெரியுமா?”

“ அதான் சொல்றேன் ரகு. அவ்ளோ சீன்லாம் இல்ல. இது ஒரு  ஜஸ்ட் மிஸ் கம்யூனிகேஷன். ராணா ஓபனா எம்பி கிட்ட சொல்லிட்டான்.. அவளை ஆட் பிலிம்ல நடிக்க தான் கூப்ட்டனாம். “

“என்னாடா சொல்றே?. நான் மட்டும் அவளை காப்பாத்தலன்னா. இன்னேரம்.,  புல் மூன் ஹோட்டல்ல ., மஞ்சிமா பஞ்சு பஞ்சா ஆகி இருப்பா...”

“ஓகே லீவ் இட்., அவ கிட்ட போனை கொடு..”

“அவ இங்க இல்லடா., பாத்ரூம் போறேன்னுட்டு போயிருக்கா..”

“ஏய்ய்”

“ஏன்டா இவ்ளோ கோபம்?”

“சரி லைன்ல இருக்கேன். வரட்டூம். நானே பேசிக்கிறேன். நீ எங்க நடுவுல கேம் ஆடாதே..”

“ நான்  ஆடலைடா., ஆனா அவ தான் உன் கிட்ட பேச விருப்பமில்லன்னு சொல்றா”

“ரகு..?”

“பெரிய பிரச்சனை வரப்ப, கரெக்டா நீ எஸ்கேப் ஆனா யாருக்கு தான் புடிக்கும்?. பாவம் அவ அழுதுகிட்டே இருக்காடா.. உன்னை பாக்கவே புடிக்கலன்னு சொலிட்டு இருக்கா”

“ரகு”

“அவ வரா.. இரு அப்புறம் பேசறேன்”

அவன் போனைக் கட் செய்து சீட்டில் போட.,

“யார் ரகு போன்ல?” மஞ்சிமா வந்தாள்.

“உன் உட்பி கமலேஷ் தான்” அவள் ஒரு கனம் திகைத்து., பின்

“...............இஸிட் என்னவாம் துரைக்கு? மும்பை வந்துட்டானா?” எனக் கேட்க.

“ இல்ல., பெங்களூர்ல தான் இருக்கான். பிளைட் கிடைக்கலன்னு பொய் சொல்றான்” ரகு மனதை கொடூரமாக்கிக் கொண்டான்.

“இன்னுமா பெங்களூர்ல இருக்கான்?’

“ விடு ..அவன் ராணாவுக்கு பயப்படறான்  மஞ்சிமா“

அவள் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன. உண்ன்மையில் கமலேஷ் பதட்டத்துடன் அவளை தேடி வந்தால் அவனை ரெண்டு திட்டு திட்டி, அவனை மன்னிக்கத்தான் இருந்தாள். ரானா செய்த தப்புக்கு அவன் என்ன பண்ணுவான் பாவம்? என தான் அவள் நினைத்து இருந்தாள். ஆனால் பெங்களூர்லயா இன்னும் இருக்கான்? அட பாவி.

“அவன் பேர் வெளிய வந்துடும்னு பயப்படறான் மஞ்சிமா,. டோன்ட் மிஸ்டேக்கன் ஹிம்.. அவன் ஒரு அப்பிராணி”

“......” “

“அதுவுமில்லாம அவனுக்கு நாளைக்கு., மேட்ச் வேற இருக்காம். காண்ஸ்ட்ரேட் பண்ண முடியலையாம்..”

‘................அவனுக்கு போன்  போடு...அவனை நாக்கை பிடுங்கற மாதிரி கேக்கனும்”

“எப்போ?”

“இப்போ..”

“வேணாம் ., அவன்  குடிச்சிருக்கான்”

மதுவாசனை தெரியாத கமலேஷை சூழ்னிலை கைதியாக்கினான் ரகு.

“மை காட் குடிப்பானா?’

“யெஸ் ட்ரக்ஸ் அடிக்காதப்ப ஆல்கஹால் தானே அவனுக்கு துணை”

“ஓ மை காட்”

அவள் தலையில் கை வைத்து தரையில் மடங்கி சரிந்து உட்கார.,

“ஏய்ய் ஏய்ய் என பண்றே?’

அவள் அக்குளில் கை கொடுத்து தூக்கி சீட்டில் போட்டான்.

“ஹைவேஸ் ரோட்டில என்ன அழிச்சாட்டியம் பண்றே நீ”

“ரகு நான் ஏமாந்துட்டேன் ரகு.. ப்ளடி சீட் ஏமாத்திட்டான் என்னை..பாவி., “ அவள் தேம்பி, தேம்பி அழுதாள். ரகு அவளை அணைத்து கொண்டான்.

“ டீ டோட்லர்னு சொன்னான்.  நானும் நம்பிட்டேன்..”

“விடு., மஞ்சிமா.., எல்லாரும் என்னை மாதிரி இருப்பாங்களா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ரகம்.. நான் கூட கெட்ட பழக்கமெல்லாம் விடுன்னேன். டிரக்ஸ் ஏத்துனாதான் பொண்னுங்க கிட்ட ஜாலியா இருக்க முடியுதுன்னான்”

“ அய்யோ லேடீஸ் பழக்கமும் இருக்கா? ’

“பின்னே ஃபாரீன் டோர்ன்மென்டு எதுக்கு போறான்னு நினைக்கறே?.”

“போதும். இனி எதுவும் என் கிட்ட , சொல்லாதே”

“ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லனும்.. “

“.சொல்லாதே”

“கரெக்ட் சொல்லகூடாது.. அவன் இப்ப சொன்னதை கேட்டா. நீ தாங்க மாட்டே..”

“என்ன சொன்னான்? சொள்லு”

“வேணாம் மஞ்சிமா..”

“ப்ளிஸ்., இனிமே எதையும் மறைக்காதீங்க..”

“ரொம்ப விட்டேத்தியா பேசுனான்..  இப்ப ராணா ரூம்ல எவ்ளோ நேரம் மஞ்சிமா இருந்தா?ன்னு கேட்டான்.. “

“ரகு?” அவளது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அழுகையாக வெடிக்க.,

“விடு மஞ்சிமா.. அவன் ஒரு கோழை.., ராணாவை எதுக்க திரானி இல்லாம, அவன் உன்னை குத்தம் சொல்றான்..”

‘.......................”

“கன்டினீயுவா காண்டம், பிரா ஆட் பிலிம்ல நடிக்கிறியாம்.. அதை பாத்தா ராணா இல்ல., ஊர்ல இருக்குற பணக்காரனுங்க, ரௌடி எல்லாம் படுக்க தான் கூப்பிடுவான். அவளுக்கு இது தெரியாதாங்கிறான்..போடா முட்டாள்னு போனை வெச்சிட்டான்”

அவள் இதுவரை உடையாமல் பார்த்து வந்த கமலேஷின் பிம்பம் இதன் பிறகு சுக்கு நூறாகி வெடித்தது. அவள் அதிக சப்தத்துடன் காருக்குள் அழுதாள். ரகு உள்ளுக்குள் கொடூரமாக சிரித்தான்.