மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, March 22, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 20

 

எபிசோடு : 20

 

 ஜாக்கி,  ரம்யாவை உயிருக்கு உயிராய்  ஒரு தலையாய் காதலித்தது அவனது சகாக்களுக்கு நன்றாக தெரியும்.  தான் ஒரு லோடு மேனாச்சே’ என அவன் தயங்கிய போதெல்லாம்.,

தல நீ எப்படியாச்சி இவளை உஷார் பண்ணி கல்யாணம் பண்ணிக்க., வயசு கூட இருந்தாலும் சரி. மேட்டரை முடி,.உன் லைஃப் சூப்பரா இருக்கும்’  என்றெல்லாம் சொல்லி  உசுப்பேற்றினார்கள்.

 அவனும் அதற்கு முன்பே,  பல பெண்களை அந்த வயதிலேயே ருசி பார்த்து இருந்தாலும், அவற்றில் ரம்யா கொஞ்சம் ஸ்பெஷலாக தெரிந்தாள்.  ஆனால், அந்த ரம்யா தான் அவர்களை  சொறி நாய் அளவுக்கு கூட மதிக்கவில்லை. அவனை கேவலமாக பேசி திட்டி வீட்டுக்கே அனுப்பி அவனுக்கு தாங்க முடியாத வேதனையை தந்து விட்டாள்.

 நம்மளை வீட்டுக்கு அனுப்பிட்டா இல்ல.?, அவளை ஏதாச்சும் பண்ணனும் ஏதாச்சும் பண்ணனும்’ என அவனுக்கு சகாக்கள் துடித்துக் கொண்டே இருந்தார்கள். நாளுக்கு நாள் அவனை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தார்கள் . ஜாக்கியும் வேலை இலலாத விரக்தியில் இருந்தான். இந்த லோடு மேன் வேலை கஷ்டமாக இருந்தாலும் கை நிறைய காசு கிடைத்தது . வீட்டிலேயும் கொஞ்ச மரியாதை இருந்தது .

ஆனால் வேலையைவிட்டு ரம்யா துரத்திவிட்டாள். அதற்கு பிறகு அவனுக்கு வேலை எங்குமே சரியாக அமையவில்லை. டெம்போ பாண்டி டோக்கன் போடுவதற்கு அ’ந்த இரு பையன்களே போதும்’ ஜாக்கி வேண்டாம் ‘  என்று சொல்லி விட்டான்.

 அப்படியும் ஜாக்கி மாதம் முழுக்க அந்த பார்க்கிங்க் கொட்டகையில் போய் சும்மா கல்லாவில் உட்கார்ந்து இருந்தான்.  மாதம் முடிந்ததும் சம்பளம் கேட்டதும் பாண்டியன் சிரிச்சான்.

நீ என்ன இங்க வந்து மயிர புடுங்குன? சம்பளம் கேக்குற?’ என சகாக்கள் எதிரிலேயே, பாண்டி  திட்டிவிட ஜாக்கிக்கு கோபம் ஆகிவிட்டது.

 அப்போ நான் எதுக்குடா உன் பார்கிங்கிங்க் கொட்டாய்ல டெய்லி வந்து உட்கார்ந்துக்கனும்?” என்றான்

உன்னை யார்டா வர சொன்னா?”  என்றான்  பாண்டி. அவன் வாழ்க்கையில் சந்தித்த இரண்டாவது உச்சகட்ட அவமானம் . ஜாக்கிக்கு,  படிப்பு பெரிதாக இல்லை என்பதால், திருச்சியில் அவனுக்கு சரியான வேலை கிடைக்கவிலை. பெட்ரோல் பங்கில் கூட வேலை செய்தான். ம்கூம்.. செட் ஆகவில்லை. கிடைத்த வேலை எல்லாம் மூட்டை தூக்கும் ,அட்டைப்பட்டி தூக்கும் லோடுமேன் வேலை தான்.

இனிமே லோட்மேனாக இருக்க மாட்டேன்என்ற வைராக்கத்தில் அவன் வீட்டிலேயே இருக்க, அப்பாதான் அன்று ஒரு நாள் வந்து பேசினார்.

“தம்பி.. நீ அங்கே இங்கே போய் லோல் படறத்துக்கு பதில் நம்ம கடையிலேயே இருடா. நீ முதலாளி டா. உனக்கு பொட்டலம் கட்டுறது கஷ்டம்னா சொல்லு. அதெல்லாம் அப்பா செய்றேன். நீ சும்மா கடைக்கு வா போதும்.”
“...............”

நீ கல்லால உக்காந்து ராஜா மாதிரி உட்கார்ந்து காசு வாங்கி போடுடா” என்றார்.இல்லப்பா நான் பொட்டலம் கட்டுறேன்பா. இதைவிட கேவலமான வேலை எல்லாம் நான் பார்த்தாச்சு.,  வாப்பா” என்றான். ஒரு புதன்கிழமை அந்த அழுக்கான கடையில் கால் வைத்தான்.

 முதல் இரு நாட்கள் மளிகை கடையில் பொட்டலம் காட்டும் போது அவனது கண்கள் அழுது கொண்டே இருந்தன.

இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த வேலை செய்ய வேணாம்பா”  என் அப்பா சொன்னாலும்இல்லப்பா இதெல்லாம் நான் முதலிலேயே எப்பவோ செஞ்சிருக்கணும். அதை நினைச்சு தான்பா அழுகிறேன்”  என்றான்.

 கண்ணாடியில் நின்று தான் முகத்தைப் பார்த்தான் . நமக்கு நல்ல அப்பா , நல்ல அம்மா, நாம் என்னவெல்லாம் பொறுக்கித்தனம் செய்தாலும் நம்மை பெரிதாக கண்டிக்கவில்லை.

 ஆனால், நான் தான் இப்படி தலை முடியை அசிங்கமாக புள்ளிங்கோ போல  வெட்டிக் கொண்டு, கழுத்தில் ஸ்படிக மாலை போட்டு ரௌடி கணக்காக டிரஸ் போட்டு ,  துண்டு தாடி வைத்துக்கொண்டு மிகக் கேவலமாக இருந்திருக்கிறோம்.

இதுதான் அழகு” என இருந்திருக்கிறோம்.

இப்படி இருந்தால் பெண்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள் என நான் நினைப்பது பிசகு. ரம்யா போல நிறைய பேர் சொறி நாய் என்று தான் விலகி இருப்பார்கள்.

அவன் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தான். முடியை சீராக திருத்தினான். சிகரெட் பிடிப்பதை முழுவதுமாக நிறுத்தினான். குடியை மறந்தான். அதிகாலையிலேயே எழுந்தான்.  வலிக்க வலிக்க்க உடற்பயிற்சி செய்தான். பார்க்கிங்கில் போய் கடலை போட்டு பெண்களை துரத்துவதை தவிர்த்தான்.

கடையில் கடுமையாக உழைத்தான். நேரத்திற்கு சத்தான உணவு சாப்பிட்டான்.  3 வேலையும் வீட்டு சாப்ப்படுதான். மதியம் திருப்தியாக தூங்கினான் .

அவனது மனமாற்றமும் உடல் மாற்றமும் , வாழ்க்கை முறையும் மாற அவனது உடலும் முகமும் மெல்ல மாற ஆரம்பித்தது . கன்னங்கள் சதை போட்டன. முகத்தில் தேஜஸ் வந்தது.  பேச்சும் மாறியது.

முன்பெல்லாம் அவன் பெண்கள் மத்தியில் போனால் அவனை யாருமே சட்டையே செய்ய மாட்டார்கள்.  இப்பொழுது 10 பெண்களிக் 5 பெண்களாவது அவனை திரும்பி பார்த்தார்கள் .

அவன் சந்தோஷம் அடைந்தான்.  ஆனால், அவன் எத்தனை அளவுக்கு மாறினாலும் ரம்யா மீது இருக்கும் கோபம் மட்டும் போகவில்லை.  ரம்யாவை எப்படியாவது அடைந்தே தீருவது’ என அவன் தீர்மானித்திருந்தான் .

ஒன்று காதலித்து ஏமாற்றி கற்பழிப்பது, அப்படி இல்லையெனில் பலவந்தமாக அவளை அடைவது.

இரண்டிலே எதை செய்தாலும் அது சரியானது என நினைத்திருந்தான் . அத்தனை பெரிய திருச்சியில் அவனால் அவளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 கடை  விட்டால் வீடு, வீடு விட்டால் கடைஎன இருந்ததால்,  ரம்யா எங்கே இருக்கிறாள் என அவனால் தேடவே முடியவில்லை .அதிகபட்சமாக வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் அவளை தேடிக்கொண்டிருந்தான். அவன் தேடிக் கொண்டிருந்த அந்த காலத்தில் ரம்யா வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தாள்,  என்பது வேறு விஷயம்.

 இந்த விஷயத்தில், ரம்யா இப்போது எங்கே இருக்கிறாள்? என்ன செய்கிறாள் ? என்பதை தெரிந்து கொள்ள  அவனுக்கு உதவியது மைதிலி தான்.

 ரம்யா வேலை செய்த நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்த மைதிலிதான் அவனுக்கு இந்த உதவியை செய்தாள்.அவளுக்கு இந்த தகாத வேலையை அவனுக்கு செய்யும் படியாய் ஒரு கட்டாயம்.

அவள் தான் ரம்யா என்னும் தங்க மீனை பிடிக்க உதவியாக இருந்த இன்னொரு தூண்டில் மீன்.



கள்ளம் கபடம் காமம்- 1 - 6