மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, June 14, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 12

 நவம்பர் 17 ஆம் தேதி., ரகுவின் மொத்த ஆபீசே லீவு போட்டது.  நிகழ்ச்சிக்கு ரகு, சிட்டியில் பெரிய விஐபிக்களை தனிப்பட்ட முறையில் பேசி வரவழைத்தான்.

அந்த அரங்கம் கூட்டத்தால் திணறிப் போனது, சீட்டுகளை தாண்டி தரையிலும், கதவின் வெளியிலும் ஆட்கள், ரசிகர்கள் சூழ.. பேர் ஊர் தெரியாத ஒரு டான்சருக்கா இவ்ளோ ஆர்ப்பாட்டம் என மீடியாக்கள் கூட இந்த திடீர் நட்சத்திரத்தின் புகழை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்து போனது.

 

மாலை 6 ஆக,

நிகழ்ச்சி துவங்கியது. ஸ்பான்சர்கள் அறிமுகம் முடிந்தவுடன் , சாஸ்த்ரிய சங்கீத பின்னணி ஒலிக்க, ரத்தச் சிவப்பு புடவையும்,  சந்தனக் கலர் ரவிக்கையுமாய் ஜடை பின்னலிட்டு, பூச்சூடி விஜி அசத்தலான மேக்கப்பில் மேடை ஏறினாள்.

அவளைப் பார்த்ததும் எழுந்த பலத்த ஆராவரம், கைத்தட்டல் பலமாய் ஒலிக்க விஜி உற்சாகமாய் நடனத்தை இசையுடன் ஆரம்பித்தாள். எடுத்த எடுப்பிலேயே எல்லாரையும் கட்டி போட்டாள். அவள் பிடித்த பல அபிநயங்கள் சுவாரசியமாக, புதுமையாக , வெகு நளினமாக இருந்தது. நாட்டிய ரசிகர்கள் வியந்து போய் ரசித்தார்கள். விஜி தான் கற்று இருந்த மொத்த வித்தையையும் மேடையில் இறக்கினாள்.

கிட்டத்தட்ட 30 நிமிடம்  வெவ்வேறு நடன அசைவுகள், சிருங்காரங்கள்,  இதுவரை காணாத நடனமாக அது அமைந்தது.

அங்கு வந்திருந்த பல ரசிகர்களுக்கும் விஜயலட்சுமியின்  நடன அசைவுகள் மிகவும் புதிதாக இருந்தது. நொடிக்கு நொடி கற்பனை வளம் மிக்க ஏராளமான புதிய நாட்டிய முத்திரைகள் அங்கே காண்பிக்கப்பட்டன.

அப்படி ஒரு அற்புதமான பேரழகு மிக்க நடன பெண்மணியை அந்த நாரத தான சபா பார்ப்பது அதுவே முதல் தடவை. அந்த சபாவுக்கு நடனத்துறையை சார்ந்த பலரும் ஆவலோடு வந்திருந்தார்கள்.

'என்ன தான் ஆடுறா  பாப்போமே?' என வந்த பலரும் மெய்மறந்து விஜயலட்சுமியின் நடனத்தை பார்த்து ரசித்தார்கள்.

விஜயலட்சுமி அன்றைய நாள் நிகழ்ச்சியில் தான் உச்சம் தொட்டாள். தளர தளர ஆடினாள். புது அசைவுகள், முத்திரைகள், அபினயங்கள், பாவம்., லயங்கள்.

தோற்றபொலிவும், முகப் பொலிவும் விஜியை பல மடங்க்கு அழகாக்கி காட்ட,

நாட்டிய விமர்சகர்கள் கூட அயர்ந்து போனார்கள்.

  அவள் ஆடிவிட்டு போக ஷோபனாவும் வந்து ஆடினாள். எல்லாருக்கும் கை தட்டி தட்டி வலித்தது. சிறிது நேரம் கழித்து, விஜி வேறு உடையில் வந்து கலந்து கொண்டு இணையாக ஆட.

"தத்தோம் தத்தித்தோம் தரிகிட தரிகிடத்தோம்'' தாளக்கட்டு மாறி மாறி ஒலிக்க இசையும் நடனமும் ஒன்றையொன்று விஞ்ச சபாவின் அரங்கு மெய்சிலிர்க்கும் உணர்வுகளால் நிரம்பி இருந்தது.

'பாத்தா செம்ம கட்டையா இருக்காளுங்க மச்சி' என ஆசைப்பட்டு வந்த சபல கேஸ்கள் கூட, அவர்களது நடனத்தை பார்த்து, வெட்கி,  திகைத்துப் போனார்கள்.

அடிக்கடி வந்து சபாவின் கூச்சலை எட்டிப்பார்த்த சக்திவேல் கூட விஜியின்  நடனத்தை பார்த்து  வெட்கப்ப்பட்டான்.

'ஆளு தெரியாம கை வைக்க பார்த்தாமோ. ச்சே.." அவன் மனதுக்குள் குமுறினான்.

"செம்ம புரோகிராம்பா.. அந்த அம்மாவை வெச்சி ரெகுலரா புக் பண்ணு. சக்தி... இப்பதான் சூப்பரான ஆளை தான் செலக்ட் பண்னியிருக்கே? நீயே இவங்களை ஆடிஷன் பண்ணேனு கேள்விப்பட்டேன்.? " ஒரு மூத்த  நாட்டிய விமர்சகர் சொல்ல.,

"யெஸ் சார்' என்றான்.

"வெரி நைஸ்" எல்லாரும் பாராட்டினார்கள்.

 நிகழ்ச்சியின் இறுதியில், இன்னும் 12 இளம் நடன மங்கைகள், மாணவர்கள் வந்து மேடை ஏறி ஆட, அந்த நடன மேடை பரதத்தால் நிறைய, எல்லாரும் மெய்மறந்து ஆர்ப்பரித்தார்கள்.

 

விஜி, ஷோபனாவின் ஆட்டத்தை பார்த்த ஒவ்வொருவரும் 'சந்தோஷம் சந்தோஷம்' என சொல்லிக் கொண்டு போனார்கள்.  நிறைய யூடியூப் சேனலும், டிவி சேனலும், லோக்கல் கேபிள்  வீடியோ சேனல்களும் அந்த நடன நிகழ்ச்சி ஒளிபரப்பி ஹிட் அடித்தன. அதற்கெல்லாம் தனி வருமானம் கிடைத்தது.

 

பலத்த ஆரவாரத்தினூடே விஜியின் நடனம் நிறைவாக, விஐபி பேச்சாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மேடை ஏறி விஜியை பாராட்ட ஆரம்பித்தார்கள். விஜியின் நாட்டிய நடன நிகழ்ச்சிக்குப் பிறகு பல சிறப்பு பேச்சாளர்களைப் பேச , தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்பாடு செய்திருந்தான்.  அவர்கள் எல்லாம் வந்து விஜயலட்சுமி வாழ்த்தி பேசிவிட்டு போனார்கள்

பாராட்டு மாலை, புகழ் மாலை என பலரும் விஜியை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்த, எட்டரைக்கு புரோகிராம் முடிந்தது. மாலை,  சால்வை, பதக்கம் என வாங்கி வாங்கிச் சோர்ந்தாள் விஜி .

விஜயலட்சுமி 'தான் பிறந்ததே, அன்றைய அந்த ஒரு நாளுக்காகத்தான்' என்பது போல வாழ்ந்தாள்.

விழா முடிந்து அவர்கள் எல்லாம் காரில் ஏறினார்கள். எட்டிப்பார்த்து ஓரமாய் நின்ற சக்திவேலை கையசைத்து ரகு கூப்பிட்டான்.

"ஸாரி.. அன்னிக்கு உன்னை பயங்கரமா அடிச்சுட்டேன்லே? சாரி.." சொல்லி அவன் கன்னத்தை தடவினான்.

"பரவாயில்ல சார்.. இனிமே சபால எப்ப டேட்டு கேட்டாலும் கிடைக்கும் சார்"

"கண்டிப்பா .. இந்தாங்க சக்திவேல்" அவன் பாக்கெட்டில் அம்பதாயிரம் ரூபாயை திணித்தான்.

பணம் வர சக்திவேல் வாங்கிய அடியை மறந்தான்.

"சாரி மேடம்,  அன்னிக்கு உங்ககிட்ட" சக்திவேல் ஏதோ சொல்லப் போக,

"ப்ச்ச்.ஷ்ஷ்" அவள் தன் மகள் அங்கே இருக்கிறாள் என சொல்லி கண்ணை காட்டினாள். அவன் விலகி போனான்.

விஜியும் அவள் குடும்பமும் பலரிடமும் பாராட்டு வாங்கி அலுத்து, போய் வீடு வந்து சேர்ந்தது.

அந்த நாள் இன்னும் முடியாமல் இருக்க..

தனி அறையில்  தன் தங்கை ஷோபானாவின்  மீது சாய்ந்து அழுதாள். சந்தோஷத்தில்  நெஞ்சு வெடிப்பது போல உணர்ந்து, அதன் வீர்யம் தாளாமல் குதித்தாள்.

" என்னக்கா போதுமா? ஹாப்பியா?"  ஷோபனா கேட்க

"மம்மி இவ்ளோ சந்தோஷப்பட்டு நான் பாக்கவே இல்ல சித்தி? "

"ஓ பெருமாளே"

"என்ன மம்மி போதுமா?'

" போதும்டி. உன் புருஷனுக்கு தான் நன்றி சொல்லனும். எனக்கு இது போதும் .நான் ஒரு சாதாரண கும்பகோணத்துக்காரி .எங்கேயோ கும்பகோணத்துல ஒரு தெருவில் வாழ்ந்துட்டு, அப்பளம் பொரிச்சி, பருப்பு சாதம் செஞ்சு தின்னுட்டு வாழ்ந்துட்டு போக வேண்டியது.  உங்க அப்பன கட்டிக்கிட்டதால, இங்க சென்னைக்கு வந்தேன். அப்புறம் அவர் கூட,  இந்தியா பூரா சுத்தி பார்த்துட்டேன் இன்னைக்கு என் மருமகன் வந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து என் ஆசை நிறைவேத்திட்டான். நீயும் கண்ணுக்கு அழகா ஒரு குழந்தை பெத்து எடுத்து என் மடியில போட்டுட்டே. இன்னும் என்னடி வேணும்"  என பேசி கூப்பாடு போட்டு தனது வாழ்க்கையையே அன்று முடிந்தது போல அவள் மிகவும் சந்தோஷப்பட்டான். இன்ப அதிர்ச்சியால் சிக்குண்டு தவித்தாள்.

ஆனால், இது எல்லாத்தையும் விட, ஒரு பேரதிர்ச்சியான சம்பவங்கள் சந்தோஷங்கள் இன்னும் தன் வாழ்வில் இருக்கிறது என்பது அந்த விஜயலட்சுமிக்கு அன்று தெரியாது.

-

 

மறுனாள் மாலை ஷோபனா முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி ஊருக்கு கிளம்பி  சென்றாள்.

"எதுக்குடி எப்ப வந்தாலும் தங்காம ஓடுறே?" விஜி, ஷோபனாவை கடிந்து கொண்டாள்.

" இங்க இருந்து என்ன பண்ண சொல்றே?"

"அதானே., ஷோபனாக்கா., எப்ப வந்தாலும் டக்குன்னு கிளம்பி போய்டறாங்களே ஏன்?" ரகுவும் கேட்டான்,

"ஓ..ஒன்னுமில்ல. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.." அவள் சொன்னாள்.

"ஈவன்ட்ல என்ன இன்கம்முன்னு கணக்கு எடுத்து பாக்கனுமில்லே? உனக்கும் ஷேர் இருக்கே?" பரசுவும் சொல்லி பார்த்தார்.

"ஆமாண்டி...."

""அட போக்கா கூட்டம் எனக்கோசரமா வந்துச்சு?, அதெல்லாம் நீயே வெச்சுக்க. என்னை ஆள விட்டா போதும்..அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்ல"

ஷோபனா கார் புக் செய்து போய் விட,

அதன் பின் கணக்கு எடுத்துப் பார்த்ததில், விளம்பரம், போஸ்டர் செலவு போக லாபம் மட்டும், பத்தொன்பது லட்சத்திற்கு மேல் வந்தது.

" நியாயமா இந்த காசு எல்லாம் உங்களுக்கு தான் போகணும் மாப்பிள்ளை" பரசு எடுத்து கொடுத்தார்.

" எனக்கேன் மாமா?. இது அத்தையோட உழைப்பு"

"ஆனா உன் புத்தி.."

"வேணாம் மாமா.. எனக்கெதுக்கு? இது உங்க வெட்டிங்க் டே வருதுல்லே ? அதுக்கு கிப்ட் இது "  அவன் தொடவே இல்ல.

" நான் காசுக்காக ஆடல " விஜி பொதுவாக சொன்னாள்.

அவன் சிரித்துக் கொண்டே "அதுவும் எனக்கு தெரியும் அத்தை , அதான் அடுத்த டேட் கேட்டப்ப முடியாதுன்னு சொன்னீங்களே. இனிமே உங்களுக்கு ஆட் பிலிம் காசே போதும்"

" அய்யோ அதுகூட எனக்கு எதுக்கு?  காசு காசூன்னுட்டு போதும்.... நான் வீட்டு பொம்பளை.. என்னால இனி ஆட முடியாது. அவரு சம்பாத்தியயம் போறாதா? ஷிவானிக்கு அப்பறமுன்னு வேற ஒன்னு இருக்கா என்னா? " டக்கென சோகமானாள்.

" நாங்க சம்பாதிச்சாலும் இவளுக்கு தான் கொடுக்கனும், அதுக்கு தான் நீங்க சம்பாதிக்கிறீங்களே"

"ஆனா ஆட் பிலிம் அப்படி இல்லையே அத்தை..அது உங்க பிரைட் இல்லியா?"

"அதெல்லாம் பின்னாடி பாக்கலாம். ஆனால் இந்த பணம் எப்படி இருந்தாலும் உங்களுக்கு தான் சேரும் " என விஜி சொல்லி அவன் கையில் பையை திணிக்க

"சரி ஒன்னு பண்ணுவோம்.எதிர்ல காலி லேன்ட் இருக்குல்லே., அதை வாங்கி, ஷெட் போட்டு நாட்டிய பள்ளி வைப்போம். விஜி நாட்டிய பள்ளி' எப்படி பேரு?"

"அய்யோ போறுமே விஜி விஜின்னுட்டு,."

" அப்ப பேரை சொல்லுங்க"

"கிடையாது, விஜி டேன்ஸ் ஸ்கூல்' தான் . சீக்கிரம் நேம் போர்ட் ரெடி பண்ணுங்க ரகு" ஷிவானி சொன்னாள்.

"ரகு நீ நம்பலனா ஒரு விஷயம் சொல்றேன்,  அவ டெல்லியில் டான்ஸ் கிளாஸ் நடத்திட்டு இருந்தா அந்த போர்டு கூட எங்க பெட் ரூம்ல இருக்கு.," பரசுவும் சொன்னார்.

"என்ன சொல்றீங்க மாமா?  டான்ஸ் கிளாஸ்ஸா ? ஆன்டி அப்ப டான்ஸ் டீச்சரா? இதெல்லாம் டூ மச் மாமா. ஒரு மிகப்பெரிய நாட்டிய தாரகையே கிச்சன்ல வெச்சு ஊத்தப்பம் சுடச் சொல்றீங்களே கொஞ்சம் கூட நியாயமே இல்லை"

" அதுக்கு என்ன பண்றது அவங்க அவங்க தலையெழுத்து "

"ஐயோ நீங்க சொல்றது நம்பறா போலவே இல்லையே"

"அட அவளுக்கு டெல்லி ஸ்டாப் கோட்ரஸ் அசோசியேஷன் சார்பா நிறைய அவார்ட்ஸ் டிராபி எல்லாம் குடுத்து இருக்காங்க.  அது மட்டும் இல்ல அவ காலேஜ் படிக்கிற டேஸ்லயே நிறைய டிராபி எல்லாம் வாங்கி இருக்கா"

" என்ன மாமா அதிர்ச்சிமேல, அதிர்ச்சியா குடுக்குறீங்க?"

" கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல, நீங்க இந்த விஷயம் எல்லாம் எங்கிட்ட சொல்லவே இல்லையே ..'

"எனக்கும் தெரியாதுப்பா இவ்வளவு அக்கறைய நம்ம மருமகன் அத்தையை பத்தி விசாரிப்பாருன்னு., அவங்க திறமையை பத்தி கேட்பான்னு எனக்கும் தெரியாது"

"எனக்கு அதெல்லாம் இப்பவே பாக்கனும்"

"அப்போ, ஆல்ரெடி டெல்லில உங்க ஆன்டி ஸ்கூல் நடத்தி இருக்காங்க"

"ஓ ஐ சீ"

"ஆமா சின்னதா மொட்டை மாடில.. இருவத்தி அஞ்ச்சி கேர்ள்ஸ் வந்திருப்பாங்க.. ரகு இன்னும் கூட அந்த டான்ஸ் கிளாஸ் போர்டு பரண் மேலையோ,  இல்ல கட்டில் கீழேயோ தான் இருக்கும் "

"மை காட்! அத்தையை  நான் ரொம்ப சாதாரண ஹவுஸ் ஒய்ஃபா நினைச்சுட்டு இருந்தேன். இவ்வளவு டேலன்ட்டை உள்ளுக்குள்ள வச்சிருக்காங்களா?  "

"ரகு அது மட்டும் இல்லப்பா.,  அவ பாட்டும் கத்திருக்கா.  அவளுக்கு நல்ல சாரிரம். கீர்த்தனைங்க அசால்டா வரும்"

"என்ன மாமா அதிர்ச்சி மேல அதிர்ச்சியா சொல்லிட்டு இருக்கீங்க. ஒரு மல்டி டேலண்ட் பொண்ணையா நீங்க கட்டிக்கிட்டு இருக்கீங்க.."

"பெஸ்ட் நாட்டியா உமன் அவார்டு கூட அவ டெல்லி ரோட்டரி கிளப்புல"

"மாம்ஸ் ப்ளீஸ் ஸ்டாப்.. இதுக்கு மேல சொல்லாதீங்க. அப்ப நாம கண்டிப்பா டான்ஸ் ஸ்கூல் வெக்குறோம். விஜி டான்ஸ் ஸ்கூல்"

"விளையாடாதீங்க. லேண்ட் எப்படியும் 70, 80 லட்சம் போகும். அப்புறம் தரை, கூரை ஹட்டிங்க், இன்டீரியர் இதெல்லாம் ஒன்னை தாண்டும்," விஜயலஷ்மி வாயை திறந்தாள்.

"தாண்டட்டுமே. அத்தைக்காக நான் காசு கொடுக்க மாட்டேனா?'

"ரகு சொல்றது சரி. இந்தாப்பா ரகு நம்ம சேவிங்க்ஸ்,. அப்புரம் இந்த காசு எல்லாம் போட்டு எதிர் லேண்ட் வாங்குவோம்."

"அதில்லாம நிறைய ஆட் பிலிம் ஆஃபர் இருக்கே. ஈஸியா நீங்க ஒன்னை (கோடியை) தொடலாம். உங்க காசு உங்க உழைப்பு.."

இத்தனை  ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு திருப்புமுனையா? நம்மை முன்ணிறுத்தி ஒரு  நல்ல காரியமா? விஜிக்கு கண் கலங்க ரெடியாக இருக்க.,

"விஜி வீட்டு எதுக்கவே, சின்னதா ஒரு நாட்டிய சென்டர் வைப்போம். நீயும் பிசியா இருப்பே" பரசு ஆமோதித்தான்.

" இல்ல., ஸ்டூடன்ஸ் வரனுமே"

"எல்லாம் வருவாங்க..  நீங்க தான் ரொம்ப பேமஸ் ஆகிட்டீங்களே.

ஏன் மாமா? முப்பது ஸ்டூடண்டுன்னா. மாசம் முப்பதாயிரம் வரட்டுமே.சொத்துக்கு சொத்துமாச்சு. மாசம் வருமானம் , வேலையுமாச்சு இல்ல?" ரகு பிடிவாதமாக இருந்தான்.

"வீட்டுல எனக்கு வேலயே இல்லையா?"

" இருக்கட்டுமே. நாள் முழுக்கவா ஆடபோறீங்க?  அஞ்சு டூ ஆறு மட்டும் தானே" ரகு சொல்ல விஜிக்கும் ஆசையாக இருந்தது.

 

அடுத்த ஒரு மாசம் விஜி ரொம்ப ஆட் பிலிமில் பிஸியானாள். எல்லா  காசும் போட்டு லேன்ட் வாங்க, டேன்ஸ் ஸ்கூல் பில்டிங்க் கட்ட ரகு லோன் வாங்கி தந்தான்.  முழுக்க முழுக்க கூரை மூங்க்கில் என்றாலும் நிறைய ஓய்வறைகள், உடை மாற்றும் அறைகள். ஸ்கூலின் பின்னால், முன்னால் தோட்டம், நீரூற்று.  நேச்சுரல் செட்டிங். என அடுத்த ஒரே மாதத்தில் உறுதியான குடிசை போடப்பட்டு போர்ட் மாட்டப்பட விஜிக்கு அதுவும் இன்னொரு இன்ப அதிர்ச்சி.

வழக்கம் போல மார்கெட்டிங்கில் ரகு கலக்க . அதன் விளைவாக இருநூறு விண்ணப்பங்கள் வர, அவள் 40 பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து இருவது, இருவதாக கணக்கிட்டு காலை, மாலை என இரண்டு பேட்சாக பிரித்தாள். விஜி பிஸியாகவும் சந்தோஷமாகவும் இருந்தாள்.

ஆனால் அது..அது நீடிக்காமல் போய் அவளின் திருமண  வாழ்வு திசை மாற துவங்கியது..

 


கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 11


 மொத்தம் ஒன்னரை மணி நேரம். அதில் 30 நிமிடம் விஜி சோலோ.. பெர்பாமன்ஸ் அவள் தங்கை ஷோபனா 10 நிமிடம் , இருவரும் சேர்ந்து 10 நிமிடம், பிளான் செய்தார்கள். மற்ற லோக்கல் பரத நாட்டிய டான்சர்கள், பக்க வாத்தியங்கள் அனைவரையும் அழைத்து அடிக்கடி ரிகர்சல் பிராக்டீஸ் செய்தார்கள். வீடே கல்யாணம் போல் களை கட்டி இருந்தது. கூட்டம், சங்கீதம், இசை , நாட்டியம். அந்தவீடு உச்சக்கட்ட சந்தோஷத்தில் மிதந்தது. தெருவுக்கு தனி அழகினை கொடுத்தது.

"எல்லாம் சரிப்பா. ஆனா சபாவில கூட்டம் வரல்லைன்னா நல்லா இருக்காதே.  அது பெரிய சபா. 1,200 பேர் இருக்குற சபா . அதுல குறைஞ்சது ஒரு ஆயிரம் பேர் இருந்தா தானே மரியாதையா இருக்கும்?" பரசு திடீரென குண்டை தூக்கி போட, அது ரகுவிற்கும் நியாயமாகப்பட்டது.

"மாமா கவலையேப்படாதீங்க கூட்டத்தை வர வைக்க வேண்டியது என் பொறுப்பு." ரகு அடுத்த ஒரு வாரம் லீவு போட்டு தீயாக வேலை செய்தான்.

தெரிந்த நண்பர்களுக்கு உறவுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பினான். டிக்கெட் அச்சடித்து விலைக்கு தந்தான். மாமாவிடமும் கொடுத்தான்.

"மாமா இது டொனேஷன் புக் இல்ல, கூச்சமே படாதீங்க., உங்க மனைவியோட திறமையை வெளிய கொண்டு வரது உங்க கடமை.."

"சரிப்பா" டிகெட்ட் கட்டை வாங்கிக் கொண்டு பரசு, பையை எடுத்தார்.

"இந்தா என் ஷேர் " என ரெண்டு லட்சம் பரசு நீட்ட,

" அட வையிங்க,. மாமா நாம ஏன் காசு கொடுக்கனும்?. அத்தையோட டான்சை பார்க்க இந்த ஊரு தான் காசு கொடுக்கனும். "

"என்னப்பா சொல்றே?"

"சபாவுக்கு வெளிய பாருங்க என் ஆட்டத்தை?."

ரகு மார்க்கெட்டிங் மற்றும் புரோமஷனில் வல்லவனாக இருந்தான். ஃபேஸ்புக்கில் ஈ டிக்கெட் விற்றான். பல குழுக்களில் போஸ்ட் செய்தான். நல்ல ரிசல்ட் கிடைத்தது. வெப்சைட்டான 'புக் மை ஷோ'வில் பணம் கட்டி ரிஜிஸ்டர் செய்தான்.

எல்லா ஈவன்ட் ஷோக்களில் ஷோபனா, விஜி படம் போட்டு விளம்பரம் தர, என்கொயரி பிச்சிக்கொண்டு போக. ஷிவானி அவற்றை நிர்வகித்தாள்,

ரகு கூடவே ஆன் லைன் டிக்கெட் கொண்டு வந்தான். தன் செல்வாக்கை பயன்படுத்தி எஃப் எம் ரேடியோவில் மணிக்கொரு முறை விளம்பரம் வெளியிட்டான். தெரிந்த  மிகப்பெரிய யூட்யூப் சேனல்களை வீட்டுக்கு வரவழைத்து விஜியை பேட்டி கொடுக்க செய்து ஹிட் அடித்தான்.

மாலை பேப்பர்களில் முதல் பக்கத்தில் மூலைகளில் மேலே பவர் ஜாக்கெட் விளம்பரம் தந்தான். சபாவை ஒட்டி பிரதான சாலைகளில், விஜி போட்டோவை லேம்ப் போஸ்ட் ஆட் வரிசையாக ஒட்டினான்.  

முக்கிய சந்திப்புகளில் ஷோபனா, விஜி படம் பேனர்கள் வைக்கப்பட, எல்லாரும் அவள் அழகை கண்டு, 'யார் யார்? என விசாரித்தார்கள். இந்த சபாவில் இதற்கு முன்பு பிரபல டான்சர்கள் ஆடிய போது கூட, இப்படி புரோமேட் செய்யவில்லையே என அங்கலாய்த்தார்கள்.

நாளிதழ்கள் விஜயலட்சுமி நடனம் பற்றி தனி கட்டுரை எழுதியது.

ஒரு டிவி சீரியலின் மொத்த யூனிட்டுமே லம்ப்பாக டிக்கெட்டை வாங்க ஷிவானியிடம் பேரம் பேசியது.

அதில் அமுதம் பத்திரிகை சபா செகரட்டரி சக்திவேலை பேட்டி கண்டு 'விஜி நடனம்' பற்றி கேட்டது தான் கொடுமை. சக்திவேல் செம்மை கடுப்பில் இருந்தான்.

ரகு சளைக்காமல் வேலை செய்தான். ஏர்போர்ட் எதிரே பத்துக்கு இருபது பெரிய சைஸ் பேனர் ஒட்ட, அடிக்கடி விமான நிலையம் வரும் போகும் மனதில் விஜயலட்சுமி- ஷோபனா முகங்கள் நன்றாக பதிவாகின.

சிறிய தொலக்காட்சி நிறுவனங்களின் செய்தியின்  நடுவே விஜியின் நடன  நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பினை கொடுத்துக் கொண்டே இருக்க., விஜி தான் திக்கு முக்காடினாள்.

"எதுக்கு உங்க வீட்டுக்காரர் இவ்ளோ செலவு செய்றார்.? டிக்கெட் விக்கலன்னா? கூட்டம் வரலன்னா எல்லாம் லாஸ் தானே. நாம நம்ம திருப்திக்கு தானே ஆடறோம். எனக்கு என் அம்மா, புருஷன் , மாமா வந்தா , அவங்க பாத்தா அது போதும்"

"அப்படியெல்லாம் இல்ல அத்தை. காசு வரலன்னா பரவாயில்ல.. ஆனா உங்க டான்ஸ்சை பாக்க கூட்டம் வரனும். .வரவெக்குறேன். " அவன் பம்பரமாய் சுழன்றான். ஷோபனாவுக்கும் இந்த விளம்பர தடாலடி அதிர்ச்சியாக இருந்தது. தன் ஊரிலிருந்து ஆட்களை வரவழக்க பிளன் செய்தாள்.

ரகு தனது நிறுவன கட்டிடம் அமைந்திருந்த அனைத்து பிளாக்குகளுக்கும் செய்தியை அனுப்பினான். டிக்கெட்டை அவனாகவே கணக்கில்லாமல் அச்சடித்து எல்லோருக்கும் விநியோகித்தான்.

" என்னங்க ஒரு டிக்கெட் 200, 300 ரூபான்னா யாரு வருவாங்க?' ஷிவானி கேட்க,

"வருவாங்களாவா? லூசு இது வரைக்கும் ஆயிரம் டிக்கெட் மேல வித்திருக்கு. டிக்கெட்லாம் பெரிய காசு இல்ல.   நான் கூட்டத்துக்கும், டிக்கெட் விக்கவும் தான் ஓடறேன்னு நினைச்சியா? நெவர். எல்லா டிக்கெட்டும் ஓசியில கொடுத்து கூட கூட்டத்தைக்  கூடலாம். எதுக்கு இவ்ளோ செலவு செய்யறேன். நான் பிளான் பண்றது பெரிய டார்கெட்."

"என்னாங்க?'

"கம்பெனி ஸ்பான்சர் தான் யோசிக்கிறேன்.."

"அட" ஷோபனாவும் வியக்க.

அவன் மிகப்பெரிய நிறுவனங்க்களுக்கு ஸ்பான்சர் கேட்டு மெயில் அனுப்பினான். நிறைய பேருக்கு அவனை தெரிந்திருந்தது. அவன் செய்த பெரிய விளம்பர தடாலடிகள் அந்த நிறுவனங்களை அசைத்து பார்த்தன. அந்த நாட்டிய நிகழ்வுக்கு தாராளமாக முன்வந்து உதவி செய்தார்கள்.  ஒரு மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம தடாலென 10 லட்சம் எடுத்து கொடுத்தது. " டிவி ஆட் னடிச்சி கொடுக்க சொலுங்க.. வி நீட் போத் சிஸ்டர்ஸ்' என்றது.

"அய்யோ" விஜிக்கு மயக்கம் வராத குறைதான்.

" யெஸ். இந்த காசு சபா புரோகிராமுக்கு ஸ்பான்சர் மட்டுமல்ல, விஜி மேடம் எங்க மசால பொருட்களுக்கு மாடலா ஒரு ஆட் பிலிம் நடிக்கனும். கூட ஷோபனா மேடமும் இருக்கனும்.."

"எ..என்னது?" இன்ப அதிர்ச்சி மேல அதிர்ச்சி..

தொடர்ந்து சீயக்காய், ரெடிமிக்ஸ் புட், மூட்டு வலி மருந்து என கம்பெனிகள் ஸ்பான்சருக்கு வர., 27 லட்ச ரூபாய்க்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது . யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.

"டேய்ய் ரகு இவ்வளவு நாளா எங்கேடா இருந்தே?" பரசு ரகுவை கட்டி  அணைத்து கொண்டாட.,

"அட இது ஒரு தீப்பொறி மாமா... ஆன்ன்டி பேஸ் தான் இங்க பிராண்ட்..ஜஸ்ட் வீ ஆர் டூல்ஸ்."

" நான் மூனு லட்ச ரூபாய், டிக்கெட் வித்தா போதுமுன்னு நினைச்சேன்.. நீ என்னடான்னா., முப்பது லட்சத்துக்கு கொண்டு வந்துட்டியே?" அவரால் பேச முடியவில்லை.

"பணம் விஷமில்லை ரகு. விஜிக்கு பெரிய கௌரவம் கிடைச்சிருக்கு அதான். நான் புருஷனாய் அவளுக்கு செய்ய மிஸ்  பண்ணியதை நீ செஞ்சுட்டே..ரொம்ப தேங்க்ஸ்டாப்பா"

"அட போங்க மாமா"  நாளுக்கு நாள் பணவரவு தாராளமாக இருந்தது.

ஒரு பெரிய நாளிதழின் உரிமையாளரை சபாவுக்கு குடும்பத்தோடு  வரவேண்டும் என  அவன் அழைக்க. அவர் புரிந்து கொண்டு முதல் பக்கத்தில்  நாட்டிய  நிகழ்வு விளம்பரத்தை வெளியிட நகரமே களேபரமானது.

விஜி விதிர்த்து போனாள். அக்கம் பக்கத்தில் அவள் படு பிரபலமானாள்.

"வீட்டுல சும்மா கிடந்து சமையல்ல மஞ்சப்பொடி அரைச்சு கிடந்தவளுக்கு இப்படி ஒரு யோகமா? உன் புருஷனை ரொம்ப ஆட வேண்டாமுன்னு சொல்லு ஷிவானி. எனக்கு போதுமுன்னு தோணறது" அம்மா சந்தோஷத்தில் விம்மினாள்.

"இரும்மா.  உனக்கு லேட்டா கிடைச்சிருக்கு அனுபவி..ஷோபனா சித்தி என்ன சொல்றாங்க"

"அவளும் வேணாமுன்னு சொல்றா. ஸ்ரீரங்கத்துல அவளை  செம்மையா ஓட்டறாங்களாம்"

"ம்ம் நாம இதுக்காகத் தானே காத்துகிட்டிருந்தோம். சோலோ ஸ்டேஜ் பெர்மார்மன்ஸ்.. ? எவ்ளோ வருஷமா?"

ரகு அத்துடன் நிற்கவில்லை. கிண்டி, மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் வீடு கட்டு கொண்டிருந்த கட்டுமான நிறுவனங்களை அணுகினான்.

'குறிப்பிட்ட தேதியில் அதாவது டிசம்பர் 17 அன்று வீட்டினை புக் செய்தால் ஒரு சபா டிக்கெட் இலவசம்' என அறிவிப்பு கொடுங்கள்'  என சொல்லி பில்டர்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன் மார்க்கெட்டிங்க் டீமுக்கு விஜியின் நடன போட்டோவை அனுப்பினான். அவர்கள் நாட்டிய உடையில் இருந்த விஜயின் போட்டோவை விளம்பரத்தில் போட்டு 'இன்று வீட்டை புக் செய்யும் அனைவருக்கும் கிண்டி நாரதர் கானா விஜி- ஷோபனா சகோதரிகள்  நடன ஒரு குடும்பத்திற்கான அனுமதி இலவசம்' என அறிவித்தார்கள்.

இப்படி ஒரு கலவையான காம்போ எல்லாராலும் பயங்கரமாக பேசப்பட்டது. பஸ் பேக் பேனர்களில் தனது சொந்த செலவில் விளம்பரங்களை ரகுபதி வெளியிட்டான். எல்லாவற்றிலும் விஜயலட்சுமியின் முகமே முதன்மையாக தெரியுமடி பார்த்துக் கொண்டான். இதெல்லாம் போக, ஒரு டிவி நிறுவனம்  நிகழ்ச்சியின்  நேரடி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது தான் உச்சகட்ட ஹைலைட். அந்தசேனலே அடிக்கடி அந்த ஈவன்ட் பிரோமாவை போட்டு சிட்டியை கதற வைத்தது..

சில நாட்களிலேயே விஜயலஷ்மியை மடிப்பாக்கம் கிண்டி புழுதிவாக்கம், மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளில் பரபரப்பான முகமாக அறியப்பட்டாள்.

'பாரத கலாச்சாரத்தின் பண்பாட்டை காட்டும், பரதநாட்டியத்தின் காண வாருங்கள்'  என ஸ்லோகங்கள் வாசகங்கள் இடம் பெற்றன. ஆரம்பத்தில் 500 சீட்டு நிரம்பினால் போதும் என நினைத்தார்கள். ஆனால், ஆயிரத்திற்கும் மேல டிக்கெட் விற்பனையாகி விட ஒரே ஒரு ஏஜென்சி ஓடி வந்து,  மீதி இருக்கும் எல்லா டிக்கெட்டுகளையும் கொடுங்கள்' நாங்கள் மேல் விலைக்கு வைத்து விற்பனை செய்துக் கொள்கிறோம்' என்றார்கள் .

சந்தோஷத்தில் திக்கு முக்காடி ஷிவானி எல்லா டிக்கெட்டுகளையும் கொடுத்து விட்டாள். அவர்களீடமிருந்து அவுட்ரைடில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. டிக்கெட் காசு மட்டுமே நாலு லட்சம் வசூலாகி இருந்தது.



கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "