மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 5, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2056 ( திபூவை இறுதி பாகம்)

 

கோயிலுக்கு வந்தால் மன பாரம் இறங்கும் என்பார்கள். ஆனால் சுரேஷுக்கு மனபாரம் அதிகமாகியது. இந்த ஆள் இங்கே உட்கார்ந்து கொண்டு எனது பூர்வீகத்தை .எனது செயலை. எல்லாம் புட்டு புட்டு வைக்கிறாரே என நினைத்தபடி வெளியே வந்தான்.

ர் குடும்பம் அவளை சூழ்ந்துகொண்டது.

என்ன ஆச்சு ரொம்ப கவலையா இருக்கே?” என மலர் கேட்டாள் அவன் ஒன்றும் இல்லை எனக் கூறி சமாளித்தான்.

தூரத்தில் பெண்கள் கூட்டம் தெரிய., அவன் கண்கள் ஏனோ அந்த சிவப்பு சுடிதார் பெண்ணை தேடியது.

பேருந்துக்கு அருகே,. ஏதோ ஒரு  குடும்பம் வெண்பொங்கலை எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்தது. அதை வாங்க அந்த இடத்தில் ஒரு தற்காலிக வரிசை ஒன்று உருவானது. வரிசையில் மர் குடும்பம், சுரேஷ், எல்லோரும் நின்றார்கள். ஒரு ஐந்து வயது பெண் குழந்தை கரண்டியில் எல்லோருக்கும் வாரி சந்தோஷமாக கொடுத்துக்கொண்டே இருந்தது.

சுரேஷ் கொஞ்ச நேரம் வரிசையில் நின்ற அவன் எதையோ நினைத்தபடி வரிசையில் இருந்து விலகிவிட்டான்.

அவன் அந்த கோயில் முழுக்க பார்வையை வீசினான். இது பிரசித்தி பெற்ற கோவில் தான். ஆனாலும்  கூட்டமில்லை. சரியானபடி கோயில் பிரபலமாகவில்லை. இது எனது தலைமுறைக் கோயிலாம்.  இதில் நிறைய கட்டுமான புதுப்பித்தல் செய்ய வேண்டும். ஒரு பத்து கோடி வைத்தால் இந்த கோயிலை அம்சமாக கொண்டு வந்துவிடலாம் . ஊரறிய செய்து விடலாம். ஆனால் இந்த ஹரீஷ் ஏன் இதெல்லாம் செய்ய மாட்டேன்? என்கிறான்.

ஹரீஷை விடு.  நமக்கே இப்போதானே ஒருவர் சொல்லி உரைக்கிறது புத்தியில்.

ஏன் நமக்கு இதைப் பற்றியெல்லாம் தோணவில்லை.

சதா ரூமில் படுத்து கோண்டு, சிகெரெட் பிடித்து புகைவிட்டு, மது குடித்து,. இன்னிக்கு எவ வருவா? ந்னு காத்திருந்து..ச்சே

ஆக்கபூர்வமான வேலையெல்லாம் விட்டு. ,விட்டு..

 

அவன் கோயிலை சுற்றி பார்த்தான்.

இந்த கோயில் அருகில் ஒரு ஹோட்டல் ,விடுதிகள், கடைகள் இல்லை. அதனால் வருகிற மக்கள் உணவுக்காக மிகவும் அல்லல் படுகிறார்கள். தண்ணீர் வசதியும் இல்லை. மின் வசதியும் இல்லை.

கிராண்டனி குடும்பத்தின் குலதெய்வம் கோயில் எப்படி இருக்க வேண்டும்? இது ஏன்  கிராண்டனி  நிர்வாகத்திற்கு தெரியவில்லை? பெரியப்பா, கண்ண சார் எல்லாம் என்ன செய்கிறார்கள்? என தனக்குள்ளேயே ஏதேதோ பேசிக்கொண்டு வந்தான்.

 

வெண் பொங்கல் வரிசை நகர, நகர அது தெரியாமல் அவன் யோசித்துக் கொண்டிருக்க., கடைசியில் சுதாரித்துக் கொண்டு வரிசைக்கு செல்ல அங்கே வெண்பொங்கல் காலி ஆகி விட்டிருந்தது .

அதுக்குத்தான் ஒழுங்கா வரிசையில் வரணும் இல்ல, ஒழுங்கை விட்டு போனா இப்படி தான் ஆகும். இப்ப பாருங்க உங்களுக்கு பொங்கல் கிடைக்கல என ஐந்து வயது  குழந்தை சொல்ல. அவன் திகைத்துப் போய் நின்றான்.

அவனை யாரோ மல்லாக்க போட்டு மண்வெட்டியால் மண்டையை பிளப்பது போல் அந்த குழந்தையை பார்க்க.,

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என யாரோ அந்த குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் திரண்டு நின்றது.

அவன் உடல் மெல்ல தளர்ந்த்து.

அங்கேர் குடும்பத்தை காணவில்லை. வேனுக்கு போயிருக்கலாம். ஆனால், அவனுக்கு பசித்தது. காலை புறப்பட்ட்திலிருந்து அவன் ஏதும் சாப்பிடவில்லை.

சென்னையிலிருந்து வரும்போது வேனில் இட்லி தந்தார்கள். அவன் சாப்பிடவில்லை. குல தெய்வத்தை தரிசிக்கும் வரை விரதம் இருக்கலாம் என இருந்தான். அவன் ஏதும் உணவில்லை.  

இப்போது சாப்பிட ஒரு பருக்கையும் அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் கண்கள் அந்தக் கோயில் முழுக்க அலைந்து அலைந்து உணவை தேட அந்த கல்லூரி பேருந்தில் பெண்கள் திரும்பி போவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்கள்.

 மீண்டும் அந்த சிவப்பு சுரிதாரை அவன் கண்கள் தேடின.

 

 திலிருந்து வெள்ளை சுடிதார் அணிந்து ஒரு பெண் அவனை நோக்கி ஓடிவந்தாள். சார் என்கிட்ட பிரசாதம் இருக்கு வாங்குகிறீர்களா?” என்று சொன்னாள்.

அந்த பெண் அவன் கண்ணுக்கு தேவதையாக தெரிந்தது. இரண்டு கைகளையும் கீழே இறங்கி வணங்கி ஏற்றுக் கொண்டான். அந்த செய்கையை அந்த பெண்ணுக்கு மிகவும் பிடித்து இருக்க வேண்டும் தேங்க்ஸ் என்றான்

வெல்கம் என சொல்லிவிட்டு அந்தப் பெண் ஓடி விட்டது. அவன் அந்த வெண்பொங்கலை சாப்பிட்டுவிட்டு இலையை ஓரம் எறிந்து விட்டு நடந்தான் .

வெளியே இருந்து சஞ்சனாவின் பிள்ளைகள் ஓடிவந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டன.

அங்க்கிள் எங்க எங்க போயிட்டீங்க?” என கேட்டன.

 மலர் குடும்பம் கோயிலுக்கு வெளியே, வேனுக்கு அருகே கையசைத்து கூப்பிட்டார்கள்.  அவன் பதிலுக்கு கையசைத்துவிட்டு பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு போய் ஏறினான்.


ப்போதுமே ஒரே கோர்வையாக , துள்ளலாக இருக்கும் அவனது மனம் இப்போது விழிப்பு நிலையில் இல்லை, ஏதோ ஒன்று நமக்கு தப்பிதமாக நடக்க போகிறது என்று மட்டும் நினைத்தான்.

அவனையே அந்த கும்பல் வேவு பார்த்தது.

அவன் வேனில் ஏறியதும் சுறுசுறுப்பானார்கள்.

வேன் கிளம்பியதும் வெளியே காத்திருந்த சிலுவையின் ஆட்கள் அந்த காரை பின் தொடர்ந்தார்கள்.

தல. இந்த ரோட்டுல தான் சிசிடிவி கேமரா கிடையாது. சுத்தமா டிராபிக்கே கிடையாது. டிரைவர் நீ என்ன பண்ற? நாலஞ்சி கிலோ மீட்டர் போன பெறவு, வேகமாக போய் லெப்ட் உடை என்றான் சிபு.

ஆங்க் இது ரொம்ப சின்ன ரோடு. வேன் டிரைவர் லெப்ட்ல உடைச்சா பள்ளத்துல வேன் கண்டிப்பாக கவிழ்ந்துடும்,. காப்பாத்துற மாதிரி போய்,  நகையும் பணமும் எடுத்துட்டு., அப்பய்டியே அந்த பையனை மட்டும் வெளியே இழுத்து போட்டு குத்தி போடலாம் என ஒரு அவசர திட்டம் சொன்னான்.

அப்படியே செஞ்சிடலாம் சிவமும்.. ஆதியும் ஏற்க., என சொன்னபடி டிரைவர்காரை வேகமாக ஓட்டினான்.

 

ந்த கார் ஹார்ன் அடிக்காமல் எதற்கு இவ்வளவு வேகமாக வருகிறது ஓர் இனம்புரியாத பயத்தில் மலரின் வேன் டிரைவர் பிரேக் அடிப்பதா? ஓரங்கட்டுவதா? நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கார் பலமாக வந்து இடது புறம் மோத அந்த டிரைவர் பிரேக் அடிக்க.,

அய்யோ..யோ

 சறுக்கிக்கொண்டே போனாலும் வேனின் கனம் காரணமாக, வேன் கவிழாமல் சாலையில் இருந்து இறங்கி வயல் வெளியில் போய் நிற்க வேனுக்குள் குய்யோ முறையோ என குரல் கேட்டது .

என்ன தல? வேனு கவிழலையே?”

அட வாடா

உடனே சிபுவின் ஆட்கள் இறங்கி வேனை சுற்றி வளைத்து உள்ளே இருந்தவர்களை எடுத்துப் போட்டார்கள்.

யார்? யார்? என்ன என்ன?” என உள்ளே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க., வாகன நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் அவர்கள் எல்லோரையும் போட்டு அடித்தார்கள்.

முகத்திலும் வயிற்றிலும் சரமாரியாக போட்டு அடித்தார்கள். அந்த இடமே ஒரே கலவரமும் அழுகையாக இருக்க., சுரேஷால் தன்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது? என்பது கூட புரிந்து கொள்ளவில்லை. அந்த திடீர் தாக்குதலால் அவன் பிரமை பிடித்தவன் போலவே இருந்தான். அவனுக்கு எந்த காட்சிகளும் பதியவில்லை.