மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, February 13, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 18

 

அதே கோடம்பாக்கத்தில் அந்த வெளிநாட்டுக்கார் காம்பவுண்ட் கேட்டை தொடுவதற்கு முன்பே சாலையில் நீளமான ஹார்ன் நடிக்க செக்யூரிட்டி பதறிப்போய்,  இது பெரிய கேட்டுகளை அகலமாக திறந்து விட்டான்.

அது மிகப்பெரிய சினிமா ஸ்டுடியோ . நீண்டகால சினிமா துறையில் பெரும் பங்காற்றிய பாரம்பரிய ஸ்டுடியோ நிறுவனம் அது.

 அந்த ஸ்டூடியோவின் கேட்டுகள் இதற்கு முன்பும் பல பேருக்காக பதட்டத்துடன் அடிக்கடி திறக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு உச்சகட்ட நடிகருக்காக அந்த இரும்புக் கதவுகள் இதே க்ரீச்  சப்தத்துடன் திடுக்கிட்டு திறந்து மூடி இருக்கின்றன.

சொல்லப்போனால் எல்லோரையும் விட அதிக அளவில் பல புகழ்மிக்க நடிகர்களுக்கு அது வழி விட்டிருக்கிறது,  அதுவே  அவர்கள் உள்ளே வராதபடி நிரந்தரமாக சாத்தப்பட்டும் இருக்கிறது.

இப்போது அது பரபரப்புடன் திறக்கப்படுவதற்கு காரணம் அந்த வெளிநாட்டு கார்.  அந்த காரில் பின் சீட்டில் பாதி படுத்து,  பாதி உட்கார்ந்து வந்து கொண்டிருக்கிற அந்த ஒல்லிபிச்சான் நடிகன் மாதேஸ்வரன் என்னும் மாதேஷ் .

தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியா பாலிவுட்டில் கூட மாதிரி இவனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.  கூடிய சீக்கிரம் ஹாலிவுட் படத்தில் கூட நடிக்க இருப்பதாக சொன்னார்கள்.காதலுக்கு கண்ணில்லை காமத்துக்கு கண்ணில்லை’  என்பது சொல்வதெல்லாம் எப்படி உண்மையோ அது போல தான் சினிமாவில் ஜெயிப்பதற்கு கண்ணில்லை. லாஜிக் இல்லை. இங்கே திறமையை விட, அதிர்ஷ்டம் அதிகமாகவே கைகொடுக்கும்.

 கட்டாயம் இந்த நடிகன் பெரிய ஆளாக வருவான் என அடித்து சொல்லப்பட்ட நடிகன் உருத்தெரியாமல் ஸ்டூடியோ வாசலில் பெட்டிக்கடை வைத்திருப்பதை இந்த உலகம் கடந்து தான் போய்க்கொண்டிருக்கிறது .

கொஞ்சம் கூட எதிர் பார்க்காமல் வந்த நடிகர்கள், துணை நடிகர்கள், சினிமா ஷுட்டிங்க் பார்க்க வந்தவர்கள் எல்லாம் பெரிய அளவிற்கு உயரத்துக்கு போயிருக்கிறார்கள்.  நடிப்பு திறமையும்,  அர்ப்பணிப்பும் இருந்தால் கூட மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடிகர்கள் நடிகைகள் டைரக்டர்கள் பல தொழில்நுட்ப கலைஞர்கள் காரணமே தெரியாமல் வீதிகளில் அலைந்து கொண்டிருப்பார்கள் .இதுதான் சினிமா உலகம்.

 தமிழ் சினிமாவுக்கு என்றும் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில், உள்ள சினிமா கூடாரங்களும் இப்படித்தான். உலக அளவிலான சினிமா நடிகர்களும் அப்படித்தான்.

இந்த ஆளை கடைசி வரிசையில் துணை நடிகராக கூட நிற்க வைக்க முடியாது, இவன் முகத்தில் முகபாவம் என்பது துளிகூட இல்லை, எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் வைத்திருக்கக்கூடிய மூஞ்சி இவனுடையது ,சினிமாவிற்கு முகபாவம் மிக முக்கியம் .ஏதோ இந்த ஆள் பாடிபில்டர் என்பதற்காக எல்லாம் சினிமாவில் நடிக்க வைக்க முடியாது.  அப்படி எல்லாம் நீங்கள் ரிஸ்க் எடுத்தால் போட்ட பணம் காலிதான்”  என சொன்ன இயக்குனரை புறம்தள்ளி அந்த தயாரிப்பாளர், அந்த பாடி பல்டர் மீது நம்பிக்கை வைத்து வேறொரு இயக்குனரை வைத்து படமெடுத்து உலகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.

 படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த நடிகர் அர்னால்ட் .அதன்பிறகு அர்னால்டு கொடுத்த ஹிட்டு படங்கள் மற்ற ஹாலிவுட் நடிகர்களை விட அதிகமாக இருந்தது .வசூலையும் வாரி குவித்தது.  உலகம் முழுக்க அர்னால்டுக்கு ரசிகர்கள் உருவானார்கள் . பாடிபில்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அந்த கால இளைய தலைமுறை தெரிந்து கொண்டதே அர்னால்ட் சினிமா  பார்த்து தான்.

இப்படித்தான் ஆச்சரியங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் உடையது  சினிமா. அது பல சாதாரண மனிதர்களை மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்கள் ஆக்கி காட்டியது. அழகும் திறமையும் உள்ள பல நடிகர்களை சாதாரண மனிதர்களுக்கு தெருவில் வீசியது, யாருக்கும் எதற்கும் காரணம் தெரியவில்லை, எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டுமென அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அந்த நேரம்,  பல பேருக்கு கடைசி வரை வரவில்லை.

அனுபவஸ்தர்கள் ‘இந்தப் படம் ஓடும் என அடித்து சொன்ன படங்கள் அடுத்த வாரமே பெட்டியில் வந்து சுருண்டு கொண்டது, ‘த்தா இதெல்லாம் ஒரு படமா? தாலின்னா தெரியாத ஹீரோவா? எள்ளி நகையாடிய படங்கள் ஹிட் அடித்தன.

‘இந்த ஜனங்களை புரிஞ்ச்சுக்கவே மிடிலப்பா.. “ ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தின் வெற்றீயை பார்த்து பிரமிக்க.,

“அட நீ ஒன்னு பாட்டு சூப்பரா இருந்தா ., படம் அள்ளிக்கும். பெரியவர் என்னமா மியூசிக் பண்ணி இருக்காரு” இன்னொரு ஆள் சொல்ல.,  அதே ஹீரோ, அதே டைரக்டர்.. அதே காமெடி ஆர்டிஸ்ட் என டீமை மாத்தாமல் போய்., இன்னொரு படத்தை இந்த ஆள் ஆரம்பித்தான். பெரியவர் காலில் விழுந்து  ஆறு பாடல் கேட்டு வாங்க்கி போனார்கள்.

‘ அந்த படத்தை விட இன்னொரு படி ஹிட் ஆக்கிடனும்யா” பேய் போல வேலை செய்தார்கள். பணத்தை வாரி விட்டார்கள். படத்தின் கிரஷ் பார்த்து திருப்தியானார்கள்.

“என்ன பட்டுப்பா? சிலாகித்தார்கள்.

“கண்டிப்பா மியுசிக்கல் ஹிட்டு தான்

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து ரிலீஸ் செய்ய., முதல் இரண்டு நாள் நல்ல கூட்டம். அதன் அடுத்த வாரம் குறைய.,

‘இருப்பா வீக் என்ட் பாப்போம்.. கூட்டம் வரும்’

ஆனால் கூட்டம் வரவில்லை.. மூன்று வாரம் தாக்குப் பிடித்து ஓட,

“யோவ் உன் மூஞ்சிக்கு தான் மூனாவது வாரம் ஓட்டறேன்.. நேத்து செகண்ட் ஷோவுக்கு., மொத்தம் 14 பேருய்யா.. ஒரு நியாயம் வேணாம்..” வினியோகஸ்தரை தியேட்டர் ஆள் எகிற படம் வாபஸ் பெறப்பட்டது.

படம் செம் தோல்வி.

“பெரியவர் மியூசிக் போட்டோம்யா’

“அட போய்யா. எல்லா படத்தையும் அவரு காப்பாத்துவாரா என்ன? பாட்டாலும் படம் ஓடும்னா.. டைரக்டர் என்ன புடுங்கறதுக்கா இருக்கான்?.. எல்லாமே நல்ல இருக்கனும்யா., போதாத குறைக்கு எல்லா ஆளுங்களையும் அதே பழைய படத்துல இருந்து கூட்டி வந்திருக்கே. பாத்த படத்தையே பாக்கறமுன்னு ஜனங்க நினைச்சிக்கிச்சு.”

“எப்படிதான்யா கதை எடுக்கறது?”

“அதை தெரிஞ்சவன் இன்னும் கோடம்பாக்கத்துல வரலய்யா”

உண்மைதான் இங்கே திட்டமிட்ட வெற்றி என்கிற பின்னணி கதை யாரிடமே இல்லை.

 ஆனால் மாதேஷின் கதை அப்படிப்பட்டதல்ல, அவனது  சினிமா கேரியரும் சரி,  இப்போது அவன் பெற்றிருக்கும் இடமும் சரி,  மிகவும் திட்டமிடப்பட்டது .

ஆனால் சினிமாவில் திட்டம் போன்ற எல்லாம் வெற்றி பெற முடியாது என்பது அடிப்படை சூத்திரம் தான்.

 அந்த சூத்திரங்களை உடைத்து இவனை இவ்வளவு பெரிய ஆளாக ஆக்குவதற்கு அவனது அப்பா மிகவும் என மெனக்கெட்டார்.

 எப்படியாவது தன் மகனை உச்சகட்டத்தில் நிறுத்தி வைத்து விட பல ஆண்டுகள் போராடினார்.  தான் ஒதுக்கப்பட்ட இடத்தில் தனது மகன் நின்று விளையாட வேண்டும்’ என  சாதாரன அப்பாவாக ஆசைப்பட்டார்.

அந்த ஆசையில் வெறி இருந்தது. அந்த வெறி அவமானங்களை விழுங்கிய வெறி. அவனது அப்பாவிற்கு இப்போது சினிமாவில் செல்வராஜா  என்று பெயர். அவரது இரண்டாவது மகன் தான் இந்த மாதேஷ்.


   MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360


BUY FULL VERSION