மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, May 9, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2058 ( திபூவை இறுதி பாகம்)

 

யாரு..யாரு என்னாச்சுஹேய் நிறுத்துப்பா

அய்ய்யோ ராப்பாரிப்பா

 ஹேய்ய் அந்த பேமிலி.. கோயில்ல பாத்தோமே..”

அய்ய்யோ.. ஹேய் கத்தில குத்தறான்பா..”

வரிசையாக வந்த கல்லூரி பேருந்துகள் மூன்றிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறங்கி ஓடி வர சிபுவின் டீம் மிரண்டுபோனது .

 நிலைமையை  புரிந்து கொண்ட கல்லூரி பஸ் டிரைவர், கிளீனர்களும் இறங்கி தப தபவென ஓடி வந்தார்கள்.

அந்த ,கும்பலின் காரை வளைத்து கொண்டார்கள்

டேய்ய் காரை கவர் பண்ணிட்டாங்கடா..” ஆதி மிரண்டான்.

கார்  போச்சு .எப்படி நாம இங்கேருந்து போறது?”

சொன்டி மவனே.. பயங்கர மிஸ்டேக்டா. அந்த காலேஜ் பஸ்ஸை மறந்துட்டோமே.. அந்த பஸ் நம்மளை பாஸ் பண்ணி போன அப்புறம் தான்டா இதை செஞ்ச்சிருக்கனும். சொத்தப் பிட்டேடா

சரியா மாட்னோம்டா

அதற்குள்ஹேய்ய்ய்ய்ய்ய்ய்.” என ஆவேசமாய் கூட்டம் ஓடிவர.

சரி தல முதல்ல இவனையாயது முழுசா முடிச்சி விட்டுடு.. குத்துயிரும்., கொலை உயிருமா இருக்கான்ஒருவன் சொல்ல.,

ஆமா முடிச்சிட்டுஅப்படியே காட்டு பக்கம் ஓடிடலாம்

சிபு மண்ணில் விழுந்த கத்தியை தேடிக் கொண்டுவந்து குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சுரேஷ்ஷை குத்த ஓங்க.,  அதற்குள் பெண்கள் கூட்டம்  அந்த நால்வரையும் சூழ்ந்துகொண்டது.

அந்த சிவப்பு சுரிதார் அணிந்த  பெண் காலை எட்டி சிபுவின் நெஞ்சில் உதைக்க, அவன் தரையில் பொத்தென்று மல்லாந்து வி,. அவளை சுற்றி எல்லா பெண்களும் செருப்பு கால்களால் அவன் முகத்தை பயமின்று உதைக்க,.,. சிபுவின் கண்ணில் ஏதோ பானசங்கரி உருவம் கண நேரம் வந்து போனது.

பெண்களிடம் செம்மையாக  உதைபட்டு அவசர மயக்கத்துக்கு அவன் போக. கூட வந்த மற்றவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

சுரேஷ் சுத்தமாய் மயங்கி இருந்தான். அந்த சிவப்பு சுரிதார் அவனை தூக்கி எழுப்ப முயற்சி செய்தாள். உள்ளுர் கிராம ஆட்களும் தகவல் அறிந்து உதவிக்கு ஓடிவந்தார்கள். காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.  போலீஸ் வந்து ரவுடிகளை சுற்றி வளைத்தது.’ மடேர் மடேர் என அடித்த்து..

சுரேஷ், மலர் குடும்பம் மீட்கப்பட்டது.  நகை, பணம் மீட்கப்பட்டு கணக்கு பார்க்கப்பட்டது.

எல்லாருக்குமே அடி பட்டிருக்கு., ஆனாலும்  பொம்பளைங்க, குழந்தை சேஃப்.. ஆம்பளைங்களுக்கு செம்மை அடி.. அதில் இவருக்கு தான் டேஞ்சர்..இவரு பேரு என்ன?”

..கத்தில குத்திட்டாங்க..” மலர் அழுதபடி சொன்னாள்.

பேரு என்ன?”

சுரேஷ்

உயிர் இருக்கானு பாருங்கயாரோ சொல்ல அசைவிண்றி இருந்த சுரேஷ் உள்ளுக்குள் சிரித்தான்.

 

சுரேஷை தூக்கி ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து வேனில் ஏற்றினார்கள்.  ஓசூர், சந்திர சேகரா ஹாஸ்பிட்டலுக்கு சீக்கிரம் கொண்டு போங்க..” யார் யாரோ உத்தரவு போட்டார்கள்.,

குடும்பமே அடிபட்டிருக்க., குழந்தைகள் அழுதபடி இருக்க., அவர்களை அணைத்தபடி.,

ப்ப்ச்ச்சு அழாதீங்க.. சும்மா சினிமா ஷூட்டிங்கண்களை துடைத்து, முத்தமிட்டு அந்த சிவப்பு சுரிதார் பெண் அவர்களுடன் வேனில் ஏறினாள்.

நீங்க போங்க., அப்புரம் வந்து  நான் ஜாய்ன் பண்ணிக்கறேன்அவள் கல்லூரி பேருந்துகளை அனுப்பிவிட்டாள். அந்த நேரத்தில் அவள் உதவி மலர் குடும்பத்திற்கு அவசியமாக  இருக்க., அவள் எடுத்த முடிவு சரியானதாக இருந்தது.