மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, March 17, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 2

 அப்பா வினாயகம் அந்த காலத்து நாயன வித்துவான். கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் எல்லாம் செய்திருக்கிறார். ஆனால் ஆஸ்துமா பிரச்சனை காரணமாக நாயனத்தை தூக்கி போட்டு விட்டு ஏடிஎம் வாசலில் செக்யூரிட்டியாக உட்கார்ந்துவிட்டார். ஒரு சங்கீத வித்துவானை கலா ரசிகரை பேங்கின் வாசலில் காவலுக்கு வைத்துவிட்டது தான் அவருக்கு கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம்.

மனைவி சியாமளாவுக்கு ஓரளவு பாட்டு வரும். இந்த ரெண்டு பேரின் பாதிப்பு அபர்ணாவையும் தொற்ற., அப்பா தான் அப்போதே தடுத்து விட்டார்.

"பாட்டெல்லாம் சோறு போடாது அபர்ணா நீ சி.ஏ படி.. 2030 ல இண்டியால 15 லட்சம் சிஏ வேணுமாம் "

"15 லட்சத்துல நான் ஒன்னு குறைஞ்சா என்னப்பா கஷ்டம்? நான் பாட்டு சொல்லிக்கறேன் " அபர்ணா கேட்கவே இல்லை. அவளுக்கு பாட்டு தான் உயிர்.

மதுரையில் இருந்த சுமாரான வித்துவான்களிடம் பாட்டு கற்றாள். அப்பா சொன்னதற்காக பி.ஏ கர்பரேட் செக்ரட்டரிஷிப் படித்தாள். தன் ஆசைக்காக பி ஏ இன்டியன் மியூசிக் படித்தாள். படிப்பு முடித்து ஒரு மார்கெட்டிங்க் ஆபீசில் வேலை கிடைக்க., அடச்சீ நான் ஒரு மார்கெட்டிங்க் செய்யும்  சாதாரண பெண்ணா? என்றாலும், அவள் ஒரு ஆண்டாய் அங்கு தான் சலித்துக் கொண்டு வேலை செய்தாள்.

இப்போது தான் ஒரு விமோசனம் வந்திருக்கிறது. பாடகி சௌம்யா வடிவில்., மேடம் அவர்களிடம் மட்டும்  போய் சேர்ந்துவிட்டால் போதும். அவள் உள்ளம் குதித்தது.

‘சரி .. சௌம்யா மேடம் பத்தி கேளும்மா”

‘சௌம்யா  மேடம் முழுப்பேரு..”

“சௌம்யா பாலகிருஷ்ணண்”

“எத்தினி வயசுல பாட ஆரம்பிச்சாங்க?”

“ம்ம் ஒன்பது வயசு”

“எத்தனை கிராமிய அவார்டு வாங்கி இருக்காங்க”

“..பதினேழு”

“எத்தனி சினிமா பாட்டு பாடி இருக்காங்க?”

“ஒன்னே ஒன்னு’

“என்ன அது?”

அபர்ணா  பாடிக்  காட்டினாள். “சௌம்யா மேடத்துக்கு புடிச்ச ராகம் .. அமிர்தவர்சினி..” அவள் பாட.,

“ஏய்ய் அதை பாடுனா மழை வரும்னு சொல்வாங்க..இப்ப தான் துணியை காய வெச்சேன். மழ வரப்போவுது”

“அம்மாவா நீ?” சௌம்யா அடிக்க பாய., சியாமாளா பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்ப மொத்தினாள்.,

அபர்ணாவின் தந்தை நாயனகாரர் வேதவினாயகம் சிரித்தார். அபர்ணாவுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும். மகள் நல்லாவே பாடுகிறாள். தன் வயிற்றில் பிறந்த ஒரே ஒரு குழந்தை  அபர்ணா. அந்த குழந்தைக்கு இயற்கையாகவே அமைந்த கர்நாடக சங்கீத ஞானம் அவளை பாட்டு பாட அழைக்கிறது.

அபர்ணாவுக்கு தேனில் ஊறிய பல போல ஒரு அற்புதமான குரல். ஆனால். இதைவிட  நூறு மடங்கு சிறந்த குரல் வளம் அந்த சௌமியா பாலகிருஷ்ணகிருஷ்ணனுக்கு. இளமை துடிப்பாக இருக்கிறது குரல். அவளுக்கு மணமாகவில்லை.,  அல்லது அது பற்றி சரியாக வெளியே தெரியவில்லை. இங்கே குரலே முக்கியம். அவரும் பலமுறை அந்த குரலை கேட்டு இருக்கிறாள் . ஆனாலும் காக்கைக்கும் தன் குஞ்சு போகும் பொன் குஞ்சு அல்லவா? அதுவும் அபர்ணா,  குயில் குஞ்சு அல்லவா?

“சௌமியா  எத்தன மேடைக் கச்சேரி பண்ணி இருக்காங்க?”  

“அறுனூத்தி முப்பதும்மா”

 “ அவங்க  பிறந்த ஊர் எது?”

“ மார்த்தாண்டம் “

“ பாலகிருஷ்ணன்றது யாரு? “

“ அவங்க அப்பா”

இன்னும் நிறைய கேள்விகள் அதில் இருந்தன.  அதெல்லாம் ஒரு தகவலாக  அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள் . ஆனால், அபர்ணாவோ அதற்கான பதில்களை எல்லாம் ஆத்மார்த்தமாக அனுபவித்து சொல்லிக் கொண்டிருந்தாள்.  தனது மகளுக்கு அந்த பாடகி மீது எத்தனை காதல் இருக்கிறது? எத்தனை பக்தி இருக்கிறது? என ஒரு நிமிடம் வியந்து போனார் வேதவினாயகம்.

 இனி இவளை அந்த வேலைக்கு,   மார்த்தாண்டத்துக்கு அனுப்ப முடியாது’ என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  

சௌமியாவிடமிருந்து,  “கர்நாடகா சங்கீத  ஞானமுள்ள உள்ள ஒரு  பெண் உதவியாள் தேவை “ என விளம்பரம் வந்ததிலிருந்து,  ஒரு வாரமாக அவளிடமும் அப்பாவிடமும் தொடர்ந்து கெஞ்சி கெஞ்சி சண்டை போட்டு கடைசியில்  மார்த்தாண்டம் போக அனுமதி வாங்கி விட்டாள்.

 “ அம்மா சௌமியா மேடம் பாட்டு கேட்கிறது எனக்கு ரொம்ப புடிச்ச வேலை. அந்த வேலையை செய்றதுக்கு சம்பளம்., அப்படின்னா அதைவிட நல்ல வேலை எனக்கு கிடைக்குமா? :’

“அதுசரி”

“அது மட்டுமில்ல., அவங்க கூட இருந்தா. நானும் இன்னும்  ம்யூசிக் அதிகமா கத்துக்கலாம் . அது என் கேரியருக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். தயவு செஞ்சி நான் சொல்றதை கேளும்மா ’’

“தனியா எப்படி அவ்ளோ தூரம் தனியா அனுப்பறது உன்னை “ தங்கற இடம் சேப்டியா?’

“அம்மா முதல்ல வேலை கிடைக்கட்டும். மார்த்தாண்டம் இங்கேயிருந்து 270 கிலோ மீட்டர்தான்.. என்னை பாக்கனுமின்னா அஞ்சு அவர்ல  நீ மதுரையிலருந்து வந்துடலாம்.. வீக்லி ஒன்ஸ் நீ வா.. இல்ல நான் வரேன்..”

எப்படியோ பேசி பெற்றோரை சம்மதி அப்பா அம்மாவை சம்மதி சம்மதிக்க வைத்து விட்டாள்.

துணி மணி பேக்கிங்க் செய்து மார்த்தாண்டம் பஸ் பிடித்து தனியாகவே  கிளம்ப .,மணி மூன்று.,

 

வழிப்பயணத்தில் அபர்ணா  நிறைய கர்னாடக சங்கீத நுணுக்கங்களை நெட்டுரு போட்டுக் கொண்டே போனாள்.  

இரவு போய் மார்த்தாண்டத்தில்  டவுனில் இறங்கினாள். அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் காலையில் டவுனில் இருந்து உள்ளே ஒரு ' தேன்கடையூர் ' என்னும் சிற்றூரில் சௌமியாவின் வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து போய் இறங்கினாள்.

உள்ளே நுழையப் போன அவளுக்கு  தலையே சுற்றியது. சௌம்யா  வீட்டு ஹாலில் கூட்டம் நிரம்பி அதற்கு கீழே போர்டிகோ கார்டன் எல்லாம் ஆட்கள்  புல் தரையில் உட்கார்ந்து கொண்டு திருவையாறு கச்சேரி போல கும்பல் கும்பலாய் பாடிக் கொண்டிருந்தார்கள்.

'என்னை என்ன செய்தாய் வெண்குழலி.......ஆஆ" யாரைப்பாத்தாலும் கர்னாடக இசையை பீறிட்டுக் கொண்டிருந்தார்கள். அய்யய்யோ....

தப்பி தவறி திருவையாறு வந்து விட்டோமா?  என்பது போல கர்நாடக சங்கீத பாடல்கள்  கோரசாய் சுதி சுத்தமாய்  ஒலித்துக் கொண்டிருந்தன .

எப்படியும் அறுபது பேராவது இருப்பார்கள். ஓ மை காட்..! அம்மா சியாமளா என்ன இது சோதனை?.

திரும்ப  மதுரை  போய்விடலாமா ? என  யோசித்தாள் அபர்ணா.



காமப்புனல் 6 ஆம் பாகம்

 காமப்புனல் 6 ஆம் பாகம்

இந்த வார இறுதியில்  மிகப் பெரிய  பாகமாய்............