ஷோபனாவுக்கு திருமணம் முடிந்து அது விவாகரத்து ஆகி, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது என்பதும், கல்யாணம் கட்டியும் தான் கன்னியாகவே இருக்கிறோம்
என்பதையும் தனக்கு திருமணம் ஆனதையே அவள் கொஞ்சம் கொஞ்சமாக காலப் போக்கில் மறந்துவிட்டாள் .
ஆண் சுகம்,
கட்டில் சுகம், காம சுகம் இதெல்லாம் அறியாமலேயே தன் இளமையை கடந்து கொண்டிருந்தாள்.
தன் வீடு, தன் ஏர்டெல் ஆபீஸ் என தனது வட்டத்தை மிகவும் சுருக்கிக் கொண்டாள். அவ்வப்போது வீக் என்டில் சென்னைக்கு தனது அக்காள் வீட்டிற்கு வந்து அக்காவையும் ஷிவானியையும் பார்த்து பேசி
நேரத்தை செலவிடுவது
ஒன்றே அவளது நிறைவான வாழ்க்கையாக இருந்தது.
தன் நிலை
அறிந்து, சொந்த தங்கை போல நினைத்து மிகவும் கண்ணியமாக பழகும் பரசு, தனது அக்காள், ஷிவானி, இவர்கள்ளை தாண்டிய அவள் எந்த புதிய உறவுக்கும் ஆசைப்படவில்லை .
ஷோபனா தனியாய் இருக்கிறாள் என தெரிந்ததுமே அவளது அலுவலகத்திலேயே ஓரிரு பேர் அவளிடம் அவளது அழகையும் இளமையும் பார்த்து மயங்கி அவளிடம் எப்படியாவதுநெருக்கமாக முயற்சித்தார்கள்.
ஆனால் அவர்கள் எல்லோரையுமே அவள் முளையிலேயே கத்திரித்து விட்டாள். தன் திருமண வாழ்க்கையில் தான் சந்தித்த மிகவும் கேவலமான ஆள் கண்ணன் தந்த அந்த அனுபவம் ஒன்றே அவளை அனைத்து ஆண்களிடமிருந்தும் தள்ளிப் போக செய்தது.
சொல்லப்போனால் அவளை எந்த ஆணுமே கவர முடியவில்லை.. அப்படிப்பட்ட உன்னதமான நிலையில் நெருப்பாக இருந்தாள் ஷோபனா. ஆனால், என்னதான் பெண்மையை உணர்வுகளை அடி மனதில் போட்டு அடைத்து வைத்தாலும் தனது மன உணர்வுகளுக்கு தேவைப்படும் தேவைகளை மறைத்து வைத்தாலும் எப்படியாவது ஒரு புள்ளியில் அது வெளிப்பட்டே ஆகும்.
மூடி வைத்த பெண்மை என்றாவது கண் விழித்து பார்க்கும் அல்லவா? அவளது கண்மலர்கள் வழியாக நுழைந்து பெண்மை மலர்களை திறந்து
அனுபவிக்க துடிக்க இளமை துடிப்போடு ஒருவன் வந்தான்.
முப்பது
வயதைக் கடந்த முதிர்கன்னி ஷோபனாவின் பெண்மைக்கு களங்கங்கள் இல்லாமல் அவளது வாழ்வை திசை திருப்பி நல்ல முறையில் கொண்டு போக ஒரு ஆண் வந்தான்.
அவன் குருமூர்த்தி.
சென்னைக்காரன்.
நங்க நல்லூரில் பெற்றோருடன் வசிப்பவன். கணக்கியலில் பட்டம் அன்ட் பிஎச்டி படித்து சதா படிப்பு படிப்பு என இருந்த குருமூர்த்தியின் கண்களில் ஷோபனா ஒரு நாள், நங்க நல்லூர் பெருமாள் கோவிலில் ,மஞ்சள் சேலையில் அழகு சிலையாக அவன் கண்களில் முதன் முறையாக பட்டாள்.
ஷோபனாவை எப்படி எந்த ஆணுமே லேசில் மசிய வைக்க முடியாதோ அது போல தான் குருமூர்த்தியும் எந்த ஒரு பெண்ணும் டக் என்று வசியப் படுத்தி விட முடியாது.
செக்கச் சிவந்த நிறம், அடர்த்தியான கேசம், நல்ல படிப்பு, படிப்பு தந்த கண்ணியமான தோற்றம், எல்லா உயிர்களையும் தன்னுயிராக பாவிக்கிற பாவம் போன்ற பல அற்புத குணங்கள் கொண்ட குருமூர்த்திக்கு 35 வயதான பிறகும் திருமணம் கைகூடவில்லை.
பல பெண் வீட்டார் அவனை மாப்பிள்ளை கேட்டு வந்தாலும் திருமணத்துக்கு பிறகு வயதான பெற்றோரை விட்டு தனியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகவே அவன் எல்லா வரன்களையும் நிராகரித்து விட்டான் .
“உங்கம்மா, அப்பா வேணாம்முன்னு சொல்லலையே.. எங்கயாச்சும். நல்ல
ஹோம்’ பாத்து சேர்த்துட்டு வாரவாரம் போய் பாக்கலாமே” ஒரு பெண் ரவிக்கையில் ஒரு
பக்கம் முந்தானை மூடாமல் அவன் முகத்துக்கு நேராக ஆட்டி ஆட்டி பேச.,
“ அனாதை
விடுதியில சேக்க சொல்றீங்களா எங்க பேரன்ட்சை? நெவர்’ அவன் வெடிக்க,
“அப்ப
எனக்கும் நெவர்” அந்த பெண் முந்தானையை மூடினாள்.
அவன்
எழுந்து வந்து விட்டான்.
“எனது அம்மாவையும் அப்பவையும் சேர்த்து அரவணைத்து பார்த்துக் கொள்கிற பெண் மட்டும் வேண்டும் என்ற அவனது நியாயமான நிபந்தனையின் காரணமாகவே, அவனது திருமணம் பல ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டது.
“நாங்க
வேணா எங்கயாச்சும் ஹோம்ல சேந்துக்கறோம் குரு”
அப்பா சொல்ல, கண் கலங்கினான்.
“ நீங்க
ஏன்பா போகனும்? நான் என்ன செத்தா போயிட்டேன்?’
அப்பாவுக்கு
எழுவபது வயது, உடம்பு இப்ப முடியவில்லை. துணைக்கு வேலைக்கார பெண் இருக்கிறாள்.
அம்மா இரட்டை சாரீரம் ., டக்கென அசைய முடியாது.
குருமூர்த்திக்கு
ஊன், உயிர் ஊட்டி, நல்ல கல்வி தந்து அவனது
வாழ்வின் சகல ஏற்றத்திற்கும் காரணமாயிருந்த இரு ஜீவன்களை காலம் முழுக்க தன் தலை
மீது சுமப்பது தான் தனது ஒரே கடமை என குரு நினைத்தான்.
‘அதனாலயே,
‘இனி தனக்கு திருமணமே தேவையில்லை’ என்று கூட அவன் நினைத்தான்
ஆனால், நங்கநல்லூர் பெருமாள் கோயிலில் மிகவும் தற்செயலாக ஷோபனாவை பார்த்தவுடன், அவ்வளவு அழகில் அவன் திகைத்து போய் விட்டான்.
‘
வாழ்வில் பெண்ணே வேண்டாம்’ என நினைக்கும் ஆணைக் கூட தன் அழகில் இப்படி அலைகழிக்க
வைக்க முடியுமா? இப்படி ஒரு பேரழகி நமது சென்னையில் அதுவும் நங்கநல்லூரில் இருக்கிறாளே?
ஆஹஹா. இவள் என்ன குலம், கோத்திரம் ஜாதியாக இருந்தாலும் கவலை இல்லை. எப்படியாவது இவளை தன்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.கல்யாண வயதை தாண்டி இருப்பாளோ, பாதத்தில் மெட்டி இல்லை. கழுத்தில்
மங்கல நாண் இல்லை.
‘பெருமாளே
இவளை எனக்கு கொடு’.என அவன் ‘ உலகளந்த பெருமாள்’ சன்னதியில் மனமுருகி வேண்டினான்.. வீட்டுகக்கு
போனவுடனே ஊர் பேர் தெரியாத அவளை
நினைத்து கவிதை எழுதினான்.
|”காதல் என்றும் ஓய்வதில்லை
காதல் கண்ணில் தூக்கமில்லை
கண்ணில் உனது தெரியாத பேரை
எழுதி பார்க்கிறேன்,
உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்., என என்னென்னமோ கிறுக்கினான்.
அவனுக்கு எப்போதுமே கவிதை தான் உணர்வுகளின் வடிகாலே . ஆனால் அவன் எப்போதும்
காதல் கவிதை எழுதியதில்லை. எந்த பெண்ணையும் நினைத்து உருகியதில்லை. கோவிலில் தொடர்ந்து
அரை மணி
நேரம் அவள் போகும் இடமெல்லாம்
பின் தொடர்ந்து போய் அவளை வெறிக்க வெறிக்க திகைத்து போய் பார்த்ததில், அவன் ஒரே நாளில்,
அவள் அழகில் வீழ்ந்து விட்டான் என்பது அவனுக்கு மெல்ல புரிந்தது.
அவளுக்காகவே அவன் அடிக்கடி கோவிலுக்கு வந்தான் . மறு நாளெல்லாம் அந்த அழகு பதுமையை பார்த்தான். தனியாகத்
தான் பெரும்பாலும் வருகிறாள். சில சமயம் அவளது முக சாயலில் இன்னொரு பெண். அவளது சகோதரியாக
இருக்கலாம். அவளும் அழகாக இருக்கிறாள். உடல்வாகை பார்த்தால், முகபாவங்களை, நடையை
பார்த்தால் பரத நாட்டிய மங்கைகள் போல தெரிகிறது.
ஆனால், அந்த பெண் தொடர்ச்சியாக கோவிலுக்கு வருவதில்லை. இவள் வீடு நங்கநல்லூரில்
இல்லை. வேறெங்கோ இருக்கிறாள். ஸ்கூட்டியில் வருகிறாள். கின்டி, வேளச்சேரி,
மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் என எங்காவது இருக்கலாம்.
கண்டுபிடிக்க வேண்டும்.
திடீரென்று சில வாரங்கள் காணாமல் போய்விடுகிறாள். அப்படி என்றால் அவளது ஊர் இதுவாக இருக்க முடியாது. வேறு ஏதோ ஒரு ஊரிலிருந்து இங்கு யாரோ ஒரு உறவுக்கார வீட்டிற்கு வருகிறாள் போல, சகோதரியின் வீடாக கூட
இருக்கலாம். அதுசரி இவள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?. இவள் அழகுக்கு என்ன குறைச்சல்?
அவள் அடுத்த முறை தனியாக ஸ்கூட்டியில் வந்தபோது கோவிலில் இருந்து அவள் வீட்டுக்குப் போகும் போது, பின்னாடியே போய் அவ்வளவு வீட்டையும் அட்ரஸையும் கண்டுபிடித்து விட்டான் குரு.
அவனுக்கு
அந்த செயலே மிகவும் வெட்கமாக இருந்தது. 6 கிளை நிறுவனங்கள் 600 ஊழியர்கள், 40
அதிகாரிகளுக்கு பாஸ் அவன். அவன் தான் அந்த நிறுவனத்தின் தென் இந்தியாவின் தலைமை அதிகாரி.
இது போக பல விளையாட்டு சங்கங்களின் சேர்மன்.
அப்படிப்பட்ட
கண்ணியவான் இந்த செயலை செய்ய ரொம்பவும்
வெட்கப்பட்டான்.
அடுத்தடுத்த
நாள் கோவிலில் அவளை நெருங்கி போனான். அவளது சகோதரியிடம் அல்லது போனில் பேசும்போது
அவளது குரலைக் கேட்டான்.
உடன் வந்த
சகோதரி அவள் பெயரை ‘ஷோபனா’ என கூப்பிட அவள் பேரை முதன் முதலில் கேட்டபோது மெய்
சிலிர்த்தான். ‘இவள் எனக்கே எனக்கு’ என மனசுக்குள் கத்தினான். அருகே போய் பேச நினைத்தும் பேச
முடியாமல் தவித்தான்.
தன் வயதை
காரணம் காட்டி நிராகரித்து விடுவாளா?
அவன் மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியும் பொறுப்பும் வகித்தாலும் கூட ஒரு சிறு பெண்ணிடம் போய் தனது காதலை சொல்வதற்கு அவனுக்கு தயக்கமாக இருந்தது .
மிகவும் படித்தவன், பண்பானவன் என்பதால் அந்த கோயிலில் கூட அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. யாராவது அவளிடம் வழிவதை பார்த்தால்?
இத்தனை நாள் அவளை பார்க்கிறோம். அந்த பெண் ஒரு முறை கூட நம்மை பார்க்கவில்லையே. என்பதும் அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. கழுத்தில் தாலி இல்லை. கால்களில் மெட்டி இல்லை . உடலின் தனங்கள் தளராமல் இருக்கின்றன, இடுப்பு நெகிழாமல் இழுத்து கட்டியது போல் இருக்கிறது.
கண்டிப்பாக இவளுக்கு திருமணம் ஆகி இருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் முகத்தில் ஒரு சொல்லப்படாத சோகம் இருக்கிறது .அது என்னவென்று தெரிந்து கொண்டு தான் அவளது மனக்கலக்கத்தை மீறி அவளை அடைந்து விட முடியும்.
‘பெருமானே எனக்கு இந்த பெண்ணை கொடு. காலமெல்லாம் உனக்காக காத்திருப்பேன் .இந்த பெண்ணை மிகவும் கண்ணியமான முறையில் நான் வாழ்க்கை முழுவதும் நடத்துவேன். இவளை பார்க்கும் போதே குணமதியாக இருக்கிறாள். என்னையும் என் வீட்டையு,ம் என் தாய் தந்தையும் மிகவும் நல்ல முறையில் பராமரிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு தருகிறது.
மறுபடியும் இந்த பெண் அவளது சொந்த ஊருக்கு போவதற்குள் எனக்கு அவளிடம் பேச ஒரு வாய்ப்பையாவது ஏற்படுத்தி தந்து விடு’’ என அவன் காத்திருந்தான். அவன் நிறைய கவிதைகளை அவளுக்காக எழுதினான்.
அவள் சிறு விளக்கேறினால் போதும்.,
எல்லா நாளுமே என் வானம் எங்கும் பௌர்ணமி ...
என கவிதை எழுதினான்.
அவனுக்கு அதற்கு முன்பு பெண்கள் குறித்த எந்த ஒரு பெரிய அனுபவம் கிடையாது. வீட்டுக்கு வெளியிலும், அலுவலகத்திலும் அவனிடம் சிரித்து வழியும் எந்த பெண்களுமே அவனுக்கு எளிதில் பிடிக்காது.
அவனது அலுவலகத்தில் அவனது தொடலுக்காகவும், பார்வைக்காகவும் அவருடன் பேசவும் பல பெண்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் .அவற்றில் திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் எல்லோருமே அடங்கும்.
ஆனால் அவனுக்கு இந்த அனுபவம் மிக புதிதாக இருந்தது.
வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்காக உருகினான்.