மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, May 8, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1742

அடுத்த மூன்றாவது நாள் ஈஸ்வரின் நேர்காணல் ., டிவியில் ஒளிபரப்பானது.

அவனை ஒரு கோமாளியாக சிந்த்தரித்து ., மூட நம்பிக்கை பரப்பும் ., பில்லி, சூனிய ஆளாக பாவித்து செம்மை ஓட்டு ஓட்டி இருந்தார்கள்.,

அதன் விளைவாக அவனது மையத்தில் வரக்கூடிய ஆட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய அவனுக்கு கடும் கோபம் வந்தது..

மெய்ஞ்ஞானத்தில் சுடர் வீச நினைக்கும் ஆத்மாக்களுக்கு காமமும் கோபமும் வரகூடாது. ஆனால் ஈஸ்வருக்கு வந்தது.

அவளை போனில் அழைத்தான்..

"என் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது நாய் மாதிரி அலைஞ்சீங்க..இப்ப என்னடான்னா..என்னை கேவலமா சித்தரிச்சி  புரோகிராம் பண்றீங்களே?"

'பின்னே ? நீங்க நடத்தறது என்ன?யோகா செண்டரா? தியானா மையமா? என்னமோ.. முதுகு தண்டு வடத்தை தடவிட்டு அடைபட்டு கிடக்குற ஆதர்ஷ சக்தியை பெருக்கறேன் சொல்லி.சீட்டிங்க் பண்ணிகிட்டு இருக்கீங்க"

"உங்களெக்கெல்லாம்.. ஆசிரமம் நடத்திட்டு சிடி போட்டு வித்துகிட்டு. கயிறு, கங்கா தண்ணி., தகடு வித்து மார்கெட்டிங்க் பண்றவன்தாண்டி...நல்லவன்..கோடி கோடியா கொட்டி கொடுப்பீங்க.., ஹேய்ய் முண்டம் ஆதர்ஷ சக்தின்னா உனக்கு தெரியுமா?"

"யோவ்வ் மரியாதையா பேசு"

"வெளக்கெண்ணெய் முண்டம்., எல்லாருக்கும் உள்ளுக்குள்ள அதீத சக்தி எப்பவும் இருக்கு. ஒரு வெறி நாய் துரத்தும் போது ஒரு மனுசன் பயத்துல 35 கிமி ஸ்பீட் ஓடறான்னா அந்த சக்தி அப்போ எங்கே இருந்தது..? அதான் ஆதர்ஷ சக்தி... ஒவ்வொரு பிள்ளைக்கும் நல்லா படிக்கிற., மனப்பாடம் செய்ற சக்தி உள்ளூக்குள்ள இருக்கு.. நான் அதை தூண்டி  விடறேன்..."

"ஆனா.,நீங்க என்னமோ உலகத்தை சுத்தி வந்துடுவேன்..இன்னொருத்தர்  மூளையில உக்காந்து ஆட்டி படைப்பேன்னு சொன்னா அது கொழுப்புதானே.?"

"கொழுப்பு தாண்டி.. உன் கொழுப்பை குறைக்கிறேண்டி.."

"ஏய்ய்ய்ய் அவ்ளொ தான்..நீ இதுக்கு மேல பேசுனே?.."

"இல்லடி சில விஷயம் சொன்னா புரியது..செஞ்சி காட்டுறேன்'

"என்ன? சூனியம் வைக்க போறீயா? தலைமுடி வேணுமாடா?'

அவள் பயப்படவே இல்லை.

"அமுதா., எங்க மழை பொழியுதுன்னு  என்கிட்ட கேட்டே இல்ல.,? ஒன்னு சொல்றேன் கேளு..உனக்கு ரெண்டு பிள்ளை இல்லே..,?"

'டேய்ய்ய்ய்"

"அதுல பெரிய பையன் இருக்கான்ல., நாளைக்கு காலைல அவன் படுக்கையில இருந்து எழுந்தவுடனே. இன்னிக்கு அரிசு உப்புமா செஞ்சி தான்னு கேப்பான்...அதை கேட்டுட்டு எனக்கு சொல்லு .,"

"ஹேய்ய் ரஸ்கல்...'

" நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள உன் புருஷனுக்கு கால் கட்டை விரல் அடிபடும்.."

"மிஸ்டர ஈஸ்வர்.." அவள் மிரள.,

:அவன் சிரித்தான்..

":ஏய் சயின்ஸ் புடுங்கி... என்னடா இவன் நல்லதே சொல்லலயேன்னு நினைக்காதே..நல்லது நடக்கும்..ஆமா உனக்கு நல்லது நடக்கும்.... "

'......................."

" நாளைக்கு  நைட்டு உன் படுக்கையில உன் கூட நான்.."

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"


 

******************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1741

 

அவன் ஆரம்பத்தில் மனவளம், ஐ க்யூ, மூளை திறன்., மூளைக்கு பயிற்சி, மனதிடம், மனக்கட்டுப்பாட்டின் அவசியம், உள்ளூணர்வு பற்றியெல்லாம் சொல்லி கொண்டு வந்தான்..

"அதென்ன சார்..உள்ளூணர்வு தான் இம்பார்டெண்ட் தான்னு சொன்னா.. படிப்பெல்லாம் முக்கியமில்லையா?"

அவள் கேட்க.,

"இந்த உலகமே உள்ளூணர்வால் ஆனது தான் அமுதா., மனிதர்களை தவிர உலகில் எல்லா உயிரினங்களும் உள்ளூணர்வால் தான் பேசிக் கொண்டிருக்கிறன. மனிதனுக்கும் அதான் ஒரு காலத்தில் பிரதான விஷயம். உள்ளூணர்வும்,   பாடி ரிபெளெக்ஷனும் ஒன்னுக்கொன்னு தொடர்புடையது. எப்போது பாஷை வந்ததோ அப்போதே நமக்கு உள்ளூணர்வின் அவசியம் குறைந்து விட்டது.  பூகம்ப வருகையை பறவைகள், விலங்குகள், ஊர்வன புரிந்து கொள்கின்றன. ஆனால், மனிதர்களுக்கு  ஒரு வெங்காயமும் தெரிவதில்லை....,"

"ஆனால் பகுத்தறிவு இருக்கே சார்?"

"அதை வெச்சி.."

"அதை வைத்து தான்., விஞ்ஞானத்துல டெவலப் ஆகிட்டோம்.."

"ஆகிட்டீங்களா? சரி ஹார்ட் ரீ பிளாண்டேஷன் பண்ரீங்க...ஏண் பிரெயின்  ரீ பிளாண்டேஷன் உங்களால பண்ண முடியல"

"அது எப்படி சார் அது இன் பில்ட் ஆர்கான்"

"ஹார்ட்டும் இன் பில்ட் ஆர்கான் தான் அமுதா.,என் கேள்வி  ஹார்ட்டை  இன்னொரு ஆளுக்கு மாத்த முடியற உங்க சயின்சால் ஏண் பிரெய்ன் மாத்தி வெக்க முடியல...ஏன்னா ? அது  விஞ்ஞானத்துல முடியாது ஆனா மெய்ஞ்ஞானத்துல முடியும்..."

"அப்படின்னா.. ?

"அப்படீன்னா நான் உங்க மூளையா மாற முடியும்.. உங்க  மூளையில என் எண்ன அலைகளை பதிய வைக்க முடியும். அதான் உள்ளூணர்வு.."

"..................."

"ஃபார் தி எக்ஸாம்பிள் ., ஒரு பாட புக்கை  ஒரு ஸ்டூடண்ட் பாக்கறப்ப., இது பரீட்சைக்கு வருமுன்னு அவன் சரியா கெஸ் பண்னா..அதான் உள்ளூணர்வு., அது டெவலப் பண்ணா., அது பெரிய லெவலுக்கு வரும்..அதுல பல ஸ்டெப் இருக்கு... ஞானிகளுக்கு அது நிறைய இருக்கும். அதான் அவங்களை முக்காலமும் அறிந்த  ஞானி என்கிறோஂ..'

"புரியல சார்.."

"ஒரு போன் அடிக்கறப்ப , அது யார்னு நம்மள்ள நிறைய பேர்.,  சரியா கெஸ் பண்ணுவோம்.. .இதான் உள்ளுணர்வோட பேசிக்.. இதுல ஆரம்பிச்சு...எக்சாட்டா என்ன மார்க் கிடைக்கும்? எந்த டீம் ஜெயிக்கும்?., எந்த கட்சி ஜெயிக்கும்? போற காரியம்  சரியா நடக்குமா? நாம பாக்க போற ஆளு நம்மளை பாப்பானா?  நாளைக்கு மழைவருமா? .இதெல்லாம்., சரியா கெஸ் பண்றது ஹை கிரேட் லெவல்.."

"என்ன சார் ஃபன்னியா இருக்கு?"

"மெய்ஞ்ஞான்ம்கிறது உங்களுக்கு ஃபன்னி தான்." அவனுக்கு சட்டென கோபம் வந்தது.,

"சரி.,  நீங்க நாளைக்கு மழைவரும்னு சொல்றீங்களா சென்னைல?"

"இல்ல வராது.."

"ஹஹஹ் இப்ப வெயில் காலமில்ல..அதான் சொல்றீங்க.."

"மிஸ் அமுதா என்னோட விர்ச்சுவாலிட்டியை .,மெஷர் பண்றதுக்கு உங்களுக்கு  நாலேஜும் இல்ல, வயசும் பத்தாது.."

"கோவிச்சுக்காதீங்க சார்,.நான் சைக்கலாஜி படிச்ச பொண்னு...சயின்சை மட்டும் நம்பற பொண்ணு.. எனக்கு இதெல்லாம் மூட நம்பிக்கையா படறது.,"

"எது மூடநம்பிக்கை...? ராமாயணம் எழுதுன வான்மீகி யார்?"

"நார்த் இண்டியால இருந்த ஒரு முனிவர்.."

"அவரால எப்படி  சிலோன் போகாம, சௌத்  இண்டியா போகாம, தத்ரூபமா எல்லா ஜியாகிரபியையும் எழுத முடிஞ்சது? "

"விர்ச்சுவல் டூ போனாரோ?"

"உள்ளூணர்வு இல்லாத மனுஷங்க தான் உடம்பால நகரனும்.. ஆனா உள்ளூணர்வு இருக்கற மனுஷனுக்கு உலகமே ஒரு சின்ன பாத்திரம் தான் . எங்க வேணாலும் எப்ப வேணுமினாலும் போகலாம்..இப்ப உலகத்துல ஏதோ ஒரு மூலையில இருக்கற கம்ப்யூட்டரை நாம் இங்க இருந்து இயக்க முடியுது இல்ல. அதை ஒத்துக்கறீங்க. அதே மாதிரி நாம இன்னொருத்தர் மூளையை இயக்கலாம்....அவங்க அதை எதிர்க்காம இருந்தா.."

"நீங்க இப்ப வான்மீகி மாதிரி விர்ச்சுவல் டூர் போக முடியுமா? " அவள் நக்கலாக கேட்டாள்.

"போய் உங்களுக்கு என்ன நிரூபிக்கனும்.?."

"சரி தமிழ் நாட்டுல இப்ப இந்த டைம்ல மழை பொழியுது சொல்லுங்க ., நம்பறோம்.."

"ஹஹஹஹா" அவன் கோபத்துடன் சிரித்தான்.,

அஸ்ஸாம். புவனேஷ்வர்.., நெல்லூர்..,.. பாலக்காடு.,  காஷ்மீர்., பெங்களூர்., கொல்கத்தா.., உத்தரகாண்ட்., உத்த்ராஞ்சல்., காசி..,  பொள்ளாச்சி ., நகர்கோவில்  சுமத்ரா ஐலண்ட் இங்கெல்லாம் இந்த கணத்துல மழை பொழிஞ்சிகிட்டிருக்கு..வேர்ல்ட் லெவல்ல சொல்லட்டுமா?"

'ஹஹஹ என்ன சார்.., வரதுக்கு முன்னாடி..வெதர் நியூஸ் பாத்தீங்களா?" அவள் இடக்கு செய்ய., அவனுக்கு அவள் வந்த நோக்கம் புரிந்து போனது.,  நம்மை மட்டம் தட்டி டம்மியாக்கி., அவர்களின் சேனலை ஹிட் செய்ய வேண்டுமென்றே  டீஸ் செய்கிறார்கள்.

"சரி அதை விடுங்க சார்.. இப்ப நீங்க நடத்திட்டு இருக்குற உங்க .,மனவளக்கலை மையம்அதான் பிரெயின் டெவலப்மென்ட் சென்டர் இருக்குற 4 கிரவுண்ட் இடம் ஒரு பெரியவருருக்கு சொந்தமானதுன்னும் அதை மாஜி எம் எல் ஏ சற்குணம் கூட சேந்து நீங்க ஆட்டையை போட்டிங்கன்னும் அந்த பெரியவரோட வாரிசுகள் இடத்தை கேட்டு கோர்ட்டுக்கு போனாங்கறதுக்காக அவங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தீங்கன்னும் உங்க  ஒரு குற்றசாட்டு உங்க மேல இருக்கே..அதை பத்தி...."

'குற்றசாட்டு தானே அதை யார் வேணுமினாலும் ., சொல்லலாம்.. ஆதாரம் கொடுங்க., கோர்ட்டுல அதை நிரூபிக்கனும்"

"சரி அதை விடுங்க. உங்க கிட்ட கோச்சிங்க் வர ஸ்டுடண்ட்ஸ் படிப்பில சுமார்னாலும், நல்லா படிக்கிற பசங்களைவிட அதிகமா மார்க் வாங்க்குறாங்க.. இதுல நீங்க பண்ற  சீட்டிங்கை  சொல்லுங்க"

"நீங்க தான் சயின்ஸ் புடுங்கியாச்சே ., அதை கண்டுபிடியுங்க"

" எக்ஷ் கியூஸ் மீ..மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.."

"  ஸ்டாண்ட்  ஆல்வேஸ் வித் மை வேர்ட்ஸ்'

அவள் பேக்கப் செய்து எழுந்து போனாள்.

******************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்