மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, August 5, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1814

 

சஞ்சனா வீட்டில் அனைவரும் மாறி மாறி இரண்டு நம்பர்களுக்கும் போன் போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால் போன் போகவில்லை. அதன்பிறகு சுரேஷ் ஏமாற்றமாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொள்ள.

சரிங்க சுரேஷ் .மலர் அக்கா. இல்லன்னா என்ன?  நான் இருக்கேன்ல? கேக் வெட்டுவோம். வாங்க. அவங்க அப்புறம் வந்து ஜாயின் பண்ணிக்கட்டும் என சொல்ல, அதை சஞ்சனாவின் கணவன் அவள் சொன்னதை ரசிக்கவில்லை என்பது சுரேஷுக்கு தெரிந்த்து.

ஆமாம் குழந்தைங்க எல்லாருக்கும் பசிக்குதுஎன சுஜாதாவும் சொல்ல

மலர்விழி இல்லாமலேயே சுரேஷுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி முடித்ததும் சந்தோஷமாக பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் அவள் கணவனும் தூங்கப் போக மலர்விழிக்கு காத்திருப்பதாக சுரேஷ், சுஜாதா, சஞ்சனா மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 சுரேஷுடன் பேசப்பேச சுஜாதாவிற்கு இதற்கு முன்பு இருந்த மன அழுத்தம் வெகுவாக குறைந்திருந்தது. ஈஸ்வரின் ஞாபகம் முற்றிலும் போயிருந்தது. அவளுக்கு முதலில் இருந்த குற்ற உணர்வு விலகி தானாகவே உற்சாகம் பொங்கியது.

அதேவேளையில் ஈஸ்வர் சந்திரனில் இருந்து கிளம்பிய அந்த அடர்த்தியான உள்ளுணர்வு எண்ணங்களின் பரவல்கள் அந்த வீட்டின் நுழை வாசல் தாண்ட முடியாமல் தவித்தது. அந்த வீட்டில் வீசிய புதுப்புது வாசனைகளால் ஈஸ்வர் சந்திரன் குழம்பினான். உள்ளே போவதா? திரும்பப் போவதாக என யோசித்துக் கொண்டிருந்தான் .

தன் வீட்டில் இருந்த ஈஸ்வர் கண்களை திறந்தான்.. சுஜாதாவிற்கு போன் செய்தான்.  போன் சுவிட்ச் ஆப் அவன் மிகவும் கோபமாக இருந்தான்.  உக்கிரமானான்

இன்று மட்டும் சஞ்சனாவை எப்படியாவது தொட்டுவிட்டால் வாழ்நாள் முழுக்க சஞ்சனா என்னும் அழகுமிக்க குடும்ப இல்லத்தரசியை தனது ஆசை நாயகியாக வைத்துக் கொள்ளலாம் என்கிற திட்டம் தோல்வி அடையுமோ? என  அவனுக்கு மென்மேலும் கோபம் அதிகமானது.

 அவனது கோபம் அதிகமாக அதிகமாக அவனது வழக்கமான புத்திக்கூர்மையும் உள்ளுணர்வும் மங்கிப் போனது.

 கிட்டத்தட்ட அதே சமயத்தில் தான் பரந்தாமன் சாஸ்திரி தனது வேலையை தொடங்கி இருந்தார்.  தனது யாகத்தை தொடங்கி இருந்தார்.  இரவு 10 மணிக்கு தொடங்கிய அவரது யாகம் 50  நிமிடங்கள் வரை நீடித்தது அந்த 50 நிமிடங்களில் சற்குணம்,ரேகா மற்றும் ஈஸ்வர் அபகரித்த நிலத்தின் சொந்தக்கார கிழவரின் வாரிசுகள் ஆகியோர் செய்த கூட்டு யாகத்தின் பலனாகவும் அந்த பெரியவரின் ஆன்மாவும் இப்படி ஒரு தருணத்திற்காக வெகு நாட்களாக காத்திருந்த தூய ஆன்மாவுக்கு சொந்தக்காரரான சமரனும் ஒன்றிணைய அந்த அளவிலாத ஆன்ம சக்தியின் பலனாக முதன்முறையாக ஈஸ்வர் சந்திரனின் புத்தியில் ஏகப்பட்ட விரிசல்கள் விழுந்து கொண்டே இருந்தது.

அவன் தனக்கு உண்டான எதையும் கவனத்தில் கொள்ளாது  திரும்ப திரும்ப சஞ்சனா வீட்டையே அவன் புத்தி சுற்றி வந்தது. இறுதி முயற்சியாக அவன் அந்த வீட்டுக்குள் நுழைய அவனது பலவீனமான எண்ன அலைகள் மிக கஷ்டப்பட்டு வாசலை தாண்டி, வீட்டுக்குள் உள்ளே நுழைந்து சஞ்சனாவை தேட அவளுக்கு மிக அருகில் சுரேஷ் என்னும் அன்னிய ஆணின் வாசனையும் ஆளுமையும் பரவி கிடக்க அவளது நிழலை கூட தொட்டு பார்க்க முடியாமல் அவை திரும்ப சென்றன.

அவனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த சுஜாதா நம்மை ஏமாற்றிவிட்டாளா? இல்லை சுஜாதாவிற்கு யாரேனும் சொல்லி கொடுக்கிறார்களா? அந்த வீட்டில் இருக்கும் அந்த புதியவன் யார்?

சுஜாதா நாயே புத்தியை காட்ட்டிட்டேல்ல.. இருடி உங்களை சாவடிக்கிறேன். உன் வர்ஷாவை என்ன பண்றேன் பார்.. அவன் திரும்ப தன் அறையில் டவல் போட்டு தரையில் உட்கார.. அப்போதுதான்  அவனக்கு பல விபரீத எதிர்மறை சக்திகள் தென்பட்டன. அவன் அலைகழிக்கப்பட்டான்.

என்ன? என்ன ஆச்சு எனக்கு? ஏதோ தப்பு நடக்கிறது? அவன் தனக்கு என்ன  நடக்கிறது? யார் செய்கிறார்கள்? என்பதை தெரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள் அவனது அடர்த்தியான ஆன்ம சக்தி அடங்காத யோக சக்தி தூள் தூளானது.

அவன் நெடுநேரம் போராடினான். தனக்கு தெரிந்த வித்தை களையெல்லாம் செய்து மீண்டு வர முயன்றான். முடியவில்லை. அவனது வாய் கோணியது. தொண்டை அடைத்தது. சுவாசம் தடைபட்டது. நுரையீல விரிவடையாமல் சுருங்கியது.

என்னமோ தப்பு? யாரோ நம்மைக் கட்டுகிறார்கள்.?

ஸ்சே எப்படி  நான் கவனிக்காமல் போனேன் என் உள்ளூணர்வு சக்தி என்னவாயிற்றூ? காமத்தில் தெரியாது போனதோ?

கடவுளே எனக்கு என்ன ஆனது? நான் செய்த பாவமெல்லாம் ஒன்றாகி எனக்கு எதிராக.

அய்யோ யார் யார்? அவன் கண்கள் தானாகவே சொருகின.

அவன் கண் மூட… முதலில் தெரிந்தது. அந்த  யாக குண்டம். பக்கத்தில் .. யார் யார்? ஸ்ஸ் டேய்பரந்தாமன் சாஸ்திரியா? நீயா?

அய்யோ எனக்கு இதெல்லாம் ஏண் தெரியாமல் போச்சு? அடங்கா காமத்தில் மோகத்தில் சிக்கி அய்யோ…. நான் செய்த ஒரு  நல்லது  கூட ஏன் துணை வரவில்லை?

அரவம் கேட்டு அவன் பாதி கண் திறக்க.. எதிரில்..எதிரில்… இன்னொரு புகைக் குவியல்.. . கடவுளே.. அய்யோ இது சமரனா?

சமரன் அவனை பார்த்து சிரிப்பது போல அவனுக்கு தோன்றியது.

சீக்கிரம் நான் உன்னை சந்திப்பேன் ஈஸ்வர். அப்போது நீ பெரிய துக்கத்தில் இருப்பாய்பல ஆண்டுகளுக்கு முன் சமரன் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

போ..போ..’ அவன் சமரனை விரட்டினான். ஆப்டர் ஆல் சமரனால் என் வீட்டுக்குள் நுழைய முடிகிறது என்றால் என் சக்தி அழிந்துவிட்டதென்று தானே பொருள்?

அவனது வீட்டில் அவனுக்காக தண்ணீர் எடுத்துக் கொடுக்கக் கூட ஆள் இல்லாமல் தரையில் விழுந்து துடித்தான்  ஈஸ்வர்.

மரணமா? மூசடைப்பா.. வாயு தொந்தரவா இல்லை., இல்லை.,மயக்கமா., ஏண் நினைவு தட்டுபடுகிறது.

ஈஸ்வரின் அனிச்சையாக வாய் இறுக மூடிக்கொண்டது. நரம்புகளில் ரத்தம் பாய மறுத்தது. இதயம் அசாதாரணமாக துடித்தது. நாடித்துடிப்பு அதிகரித்தது. பிறகு கொஞ்ச நேரத்தில் குறைந்தது. அவன் நார்மலாகவே இல்லை. அவனுக்கு ஆழ்ந்த உறக்கம் தேவைப்பட்டது.  அவனால் எழுந்து உட்கார கூட சக்தி இல்லாமல் படுத்து கிடந்தான்.

நாழிகை கடந்த்து. அவன் நகர்ந்து நகர்ந்து சோபாவிற்கு அடியில் ஒரு நாயைப் போல புகுந்தான். அவன் உடல் முழுக்க இப்போது ஒரு அளவிலாத நடுக்கமும் பயமும் திடீரென ஏற்பட்ட துவங்கியிருந்தது. நான் ராட்சசனா? மனுசனா? கடவுளா? அரக்கனா? எது நான்? என உள்ளுக்குள் தேடினான்.

மிகவும் குழம்பி போய் இருந்தான். அவன் மெல்ல மெல்ல தனக்குள் அடங்கினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் தானாகவே வழிந்தது.

அவன் தான் தோற்றதை விட, தான் தோற்க போவது தெரியாமல் இருந்து விட்டோமே? ச்சே காமத்தில் மூழ்கிவிட்டோமே என நினைத்து வேதனைப்பட்டான்.

மரித்து போனால் நன்றாக இருக்கும். எல்லாரையும் கலங்கடிக்கலாம என வன்ம்ம் பொங்கியது . அது சரி என அவனுக்கு தோன்றியது. ஆனால் மரணம் இப்போது இல்லை., என அவனுக்கு சொல்லப்பட்டது.

அவனது உடலில் எப்போதும் கலந்து வீசிக் கொண்டிருந்த மரிக்கொழுந்து வாசம் அவனை விட்டு சுத்தமாக அகன்றது.

அவன் கண்கள் சோர்ந்து மெல்ல உறங்க ஆரம்பித்தான். உடலின் நாடி துடிப்பு அதீதமாக குறைய.,

இரவு பத்தே முக்கால் ஆக பரந்தாமன் சாஸ்திரி சுரேஷ்க்கு போன் செய்தார்.

சுரேஷ் அற்புதம் மிக அற்புதம். இது ஒரு அற்புதமான வெற்றிஎன்றார் உற்சாகமாக.