ஆனால் போலீஸ் அவனுக்கு பரிச்சயமனது தான்.
“சார் ., மணி மாறன் சார்!” ஜாக்கி பவ்யமாய் கும்பிடு
போட,
“ஏய் இங்க வாடா” இன்ஸ்பெக்டர் காரிலிருந்து இறங்கி கூப்பிட்டார்.
அவனுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் .
“ச..சார்.. மணி மாறன் சார்..:” அவன் வணக்கம் சொல்ல,
‘அட.. ஜானகிராம்.. டேய் ஜாக்கி? நீ எங்கடா இங்க?
“ஸார் சும்மா.. இங்க...”
“ஏன்டா.. இங்க மண்டபத்துல ., கஞ்சா விக்கறதா போன்
வந்துச்சி. வந்து பாத்தா நீ நிக்குறே? நீ தான் இதெல்லாம் பண்றியா?”
“..அ.அய்யோ இல்ல சா..சார்... ” அவன் கண்கள் சுழல.,
“ஏட்டு உள்ள .,வெளிய செக் பண்ணுங்க.... யோவ் பைக்கை
நிறுத்து. தூக்கி பிடி. தரோவா செக் பண்னு. இவனையும் செக் பண்ணு ”
“சார் என்ன சார்
இப்படி பண்றீங்க... நான் அப்படி செய்வேனா.?”
“ ஆமா! நீ ஒழுங்கு மயிரு. “
“சார்” அவன்
லேசாக முறைக்க,
“ஏய்ய் இருட்டுல உனக்கென்னடா இங்க வேலை ? அப்படி ஓரமா
நில்லுடா லவடக்க பால் ”.
“சார்’ அவன்
கத்தினான். கவுன்சிலர் பச்சை முத்து இன்ஸுக்கு நெருக்கம். அதனால், இவர் தனக்கும்
நெருக்கம். அவனே வாராவாரம் ஒரு அமௌன்டை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு
வருவான். அவன் எப்போது ஸ்டேஷன் போனாலும் அவனை உக்கார வைத்து பேசும் இன்ஸ்பெக்டர்,
இப்போது, ஆபாசமாக திட்டுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆனால். கவுன்சிலர் பச்சைமுத்துவிடம் காசு வாங்கும்
இன்ஸ் வேறு, இந்த கஞ்சா புகாரைக் கேட்டதும் பதறி ஓடி வந்திருக்கும் இன்ஸ் வேறு’ என
அந்த புல்லட் ஜாக்கிக்கு தெரியாது.
‘என் ஏரியாவில் கஞ்சாவா? பாஞ்சோத்’ என பதறியபடி, வந்திருக்கிறார்.
‘யோவ் போலீஸ் ஜீப் வேண்டாம். தூரத்திலேயே பார்த்து ஓடி
விடுவானுங்க” , என தன் சொந்தக் காரை எடுத்து தன் டீமை கிளப்பிக் கொண்டு இவ்ளோ
தூரம் வந்திருக்கிறார். காரணம் கஞ்சா.
போதை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அவர் அதற்கு முதல் எதிரி.
‘ இந்த மண்டபத்துல கஞ்சா மட்டும் இருந்தால் ??
அப்புறம் ஜாக்கியாவது , ஜூக்கியாவது?
தூக்கி போட்டு மெறிக்க வேண்டியதுதான். இன்ஸ்பெக்டர் யோசிக்க.,
“ சார் ரெண்டு பொட்டலம் இருக்கு சார்” உள்ளே இருந்து
ஏட்டு கத்த, இன்ஸ்பெக்டர் டக்கென லத்தி
தூக்கினார்.
“ அய்யோ ‘சார் எனக்கு தெரியாது சார்.. என்னதில்ல ” ஜாக்கி இன்ஸ்பெக்டரின் கையை பிடிக்க, லத்தியை
திருப்பி ஜாக்கியின் இடுப்பை தப்தப்பென போட்டார்.
“ ராஸ்கல்., ஏதோ அடியாள், கைகலப்பு கேசுன்னு பாத்தா,
கஞ்சாவாடா விக்குறே?”
மற்ற போலீஸ்காரர்களும் மாறி மாறி அவனை போட்டு
பொளந்தார்கள்.
“ அய்யோ.. அம்மா..”
அவன் கதறி அழ,
‘சார் பச்சை அண்ணனுக்கு வேணா போன் போட்டு கேளுங்க
சார்’
“மயிர்ல பச்சை... போனை கொட்றா’
‘சார் என் போன் எங்கிட்ட இல்ல சார்’
“எங்க போச்சு?”
அவன் ரம்யாவின் பேரை சொல்லலாமா? என யோசித்தான். வேண்டாம்
நம் பேரும் சேர்ந்து நாறும்.
“இல்ல சார் போனை எடுத்து வரலை சார்”
“அடிங்க்.. பொய்யா சொல்றே? ” .. மாறி மாறி அடி
விழுந்தது. அவனது பைக் ஓரம் கட்டப்பட்டது.
‘சார் மல்லிப்பூ,.
மண்டபம் பூரா சிதறி கிடக்கு..
ராஸ்கல் ஐட்டம்களை கூட்டி வந்திருக்கான் சார்” திரும்ப அடி . திரும்ப மிதி..,
அவனால் தப்பிக்கவே முடியவில்லை.
கூடா நட்பும்., தீய ஒழுக்கமும் அவனை இம்சித்தது.
அய்யோ ராட்சஸி வசமாக மாட்டி விட்டாளே! மொத்த
காட்சியையும் போலீஸ் வீடியோவாக எடுத்தது .
ஜாக்கியின் மீது
கஞ்சா விற்பனை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவன் குடும்பம் மிகவும் அழுதது. அவனது காதலி மைதிலியும் வந்து பார்த்து விட்டு போனாள்
அவன் மிகவும் நம்பி இருந்த கவுன்சிலர் பச்சமுத்து , ஜாக்கி மேல் கஞ்சா
கேஸ் என்றதும் அவனை கை கழுவி விட்டார்.
அவன் அந்த வழக்கிலிருந்து வெளிவர பெரும் செலவு செய்தான்.
யாரையெல்லாம் நோகடித்து, மிரட்டி காசு சம்பாதித்தானோ. அதெல்லாம் வழக்கு செலவுக்கு சரியாக
போனது.
ஆறு மாத தண்டனைக்கு பிறகு, தன் பைக்கை வாங்க
அப்பாவுடன் ஸ்டேஷன் போனான்.
‘தம்பி உன் பேக்ரவுண்ட் ரொம்ப கிளியரா இருக்கு,
கஞ்சா, அபின்லாம் போற ஆளு இல்ல நீ. எனக்கு தெரியும். கண்டிப்பா நீ கஞ்சா விக்கல. ஆனா கஞ்சா இருக்கிற ஸ்பாட்ல நீ இருந்திருக்கிற. அதான்
எவிடென்ஸ். நாங்க வீடியோவும் எடுத்து இருக்கோம்
.”
‘......................”
‘ஆனா எனக்கு புரியுதுப்பா. உன்னை இதில சிக்க வைக்க, உன் கூட்டாளியோ
இல்லன்னா, உன் கிட்ட அடிவாங்குன ஆள் யாராச்சும்,
இதை செய்து இருக்கலாம். “
“ஸார் ஆண் குரலா? பெண் குரலா?
“ஆண் குரல் தான் ஏன் ..?”
“ இ.. இல்ல சார் எனக்கு ஒரு பெண் மேல் தான்
டவுட்..அதான்..”
“ம்கூம்ம் . இதெல்லாம் லேடீஸ் செய்ய மாட்டாங்க. உங்க கூட்டாளியா
இருக்கலாம்,. இல்ல எதிராளியா இருக்கலாம். ஏன் பச்சமுத்துவே கூட காரணமாக
இருக்கலாம். “
‘சரிங்க சார்”
“இனிமே இந்த மாதிரி ஆளுங்க கூட சேராத. அப்பா கூட
மளிகை கடையில ஒத்தாசையா இரு. எனக்கு பச்சமுத்து மேலயும் டவுட் இருக்கு. அந்த ஆளே கூட
கஞ்சா விக்கறதா எங்களுக்கு போன் செய்திருக்கலாம்” இன்ஸ்பெக்டர் போட்டுக் கொடுத்தார்.
ஜாக்கியும் வெளியே வரும்போது பச்சமுத்து மேலே தான் கோபமாக
இருந்தான்.
பச்சமுத்துவை பாக்கபோனால் அவனது வீட்டுக்குள் அவனை
விடவே இல்லை, கொஞ்ச நாளிளேயே அவனது கெத்து எல்லாம் மாறி போனது. ஆனால், தனது போனை திரும்ப
பெற வேண்டி, ரம்யாவிடம் இருக்கக்கூடிய தனது போனுக்கு அவன் கால் செய்த போது விஷயம் வேறாக
இருந்தது
கடை போனிலிருந்து,அவனது நம்பருக்கு போட்டான்.
நீண்ட நேரம் கழித்து ‘அவன் போனை, ரம்யாதா தான் எடுத்தாள்.
“ஹலோ யப்பா கால் பண்ணிட்டியா? உன் கிட்ட பேசறதுகுதான் இந்த ஆறு
மாசம் உன் போனை சார்ஜ், ரீசார்ஜ் பண்ணிக்கிட்டே இருந்தேன். “ சிரித்தாள். அவனுக்கு
அவளது திமிர் ஆச்சரியமாக இருக்க.,
“ஏய் என்னடி மயிரு? என் போனை ஏண்டி எடுத்துட்டு போனே?”
“என்னடா.. இன்னும் நீ அடங்கலியாடா?’
“ஏய்ய் “
“இப்ப தாணே கஞ்சாவில இருந்து வந்தே? திரும்ப பொம்பள
கேசுல போகனுமா?”
“ஏய்ய் கையில மாட்ணே செத்தேடி”
“வாய்ப்பில்ல தம்பி”
“என் போனை மட்டும் கொடுத்துடு., உன்னை விட்றேன். போனை
ஏண்டி எடுத்துட்டு போனே?”
“ இந்த போனை வச்சு தான் என்னை மிரட்டிட்டு இருக்க. அதான்டா எடுத்துட்டு போனேன் நாயே.”
“ஏய் என்னடி வாய் நீளுது உன்ன நேர்ல பார்த்தேன் ,அவ்வளவுதான்.”
‘ அதை பார்க்கிற அன்னைக்கு பேசிக்கலாம்டா. அப்பவே வழியில உன் போனை உடைச்சி போட்டு தூள் தூளாக்கனும் தான் நினைச்சேன். ஆனா, உன் கிட்ட கடைசியா ஒரு தடவை பேசணும் என்றதுக்காக தான் இந்த போனை வச்சிருக்கேன். உன்கிட்ட பேசினப்பறம், ஒடச்சிடுவேன் “
“ஏய்ய் அப்படி பண்ணிடாதே. அந்த போன்ல முக்கியமான காண்டாக்ட் எல்லாம் இருக்குடி “
‘ம்ம் பார்த்தேன். பார்த்தேன் எவ்வளவு பொண்ணுங்கடா . நீயெல்லாம் வெளியவே இருக்க கூடாது, அந்த மைதிலி கூட உன் கீப்பாடா? அவ வீடியோவும்
பாத்தேன். ச்சீ .. ஒரு வயசு வித்தியாசம் இல்ல? இப்படி இருந்தா அவ புருஷன் ஏன் ஓடி போக
மாட்டான்? அடிக்கடி அவ தான் இந்த நம்பருக்கு கால் பண்ணா. அவளுக்கு வெக்கமே இல்லையாடா? எல்லாமே உன் வயசு மீறின பொண்ணா இருக்களுங்க டா.”
‘..................”
‘ சின்ன சின்ன காலேஜ் பொண்ணுங்களை கூட விட்டு வைக்கலையா நாயே. என் வீடியோ மட்டும் டெலிட் பண்ணிட்டு இதை அப்படியே இது அப்படியே போலீஸ் கிட்ட கொடுக்கிறேன்டா. “
‘அய்யோ ரம்யா.. அப்படி பண்ணிடாதே எல்லா வீடியோவையும் டெலிட் பண்னிட்டு என் போனை மட்டும்
கொடுத்துடு”
“ஹஹ்ஹஹா சிரிப்பு சிரிப்பா வருதுடா எனக்கு”
“ஐயய்யோ என்ன மன்னிச்சிடு ரம்யா.. ப்ளீஸ் ஒரு
கோவத்துல தான். பண்ணிட்டேன்.. மன்னிச்சிடு என்னை “
‘ மன்னிக்கிறது எல்லாம் இருக்கட்டும் மரியாதையா என்கிட்ட வாங்கன காசு எல்லாம் சேர்த்து எடுத்துட்டு வந்து குடுடா . மொத்தம் ரெண்டு லட்சம் வரனும்“
அவளது அசாத்திய தைரியம் அவனை திடுக்கிடச் செய்தது.
என்னமா அழுத்து கெஞ்சி கால்ல விழுந்தா. இப்ப என்னட்டான்னா? சே
“ சரி. உன் பணத்தை கொடுக்கிறேன் .எங்க வரணும்” அவன் டக்கென கேட்டான்.
“ மறுபடி உன் மூஞ்சில முழிக்கிற போல இல்ல, இருந்தாலும் முழிக்கிறேன்.
ஏன்னா என் கிட்ட தோத்து போன ஜாக்கியோட
முகரகட்டை எப்படி இருக்குன்னு பாக்கனும். ஒரு வாரம் உனக்கு டைம். “
“ரம்யா”
“ம்ம் அப்புறம்.. அந்த கஞ்சா கேசு?. அந்த உண்மை
தெரியாட்டா உனக்கு தலையை பிச்சுக்குமே”
“..................”
“மண்டபத்துல , அதை போட்டதும் நான் தான். போலீஸ்கிட்ட போட்டு கொடுத்ததும் நான் தான்..”
“ர..ம்.யா” அவன் வாய் உலர,
“கஞ்சா எனக்கு எப்படி வந்துச்சு? ன்னு கேக்காதே., அதை
கண்டுபிடிக்க உனக்கு வயசு பத்தாது. நானே சொல்றேன். உன் கூட்டாளிங்கதான்
கொடுத்தானுக. உன்னை அழிக்க என்னை விட அவனுங்க தான் வெறியா இருந்தாங்க.. ஏன்டா?”
“ரம்யா’
“பொம்பளன்னா இளக்காரமா உனக்கு? உன் கூட படுக்கறது
தவிர வேற வழி இல்லன்னு நினைச்சிட்டு தானே ஆட்டம் போட்டே? “
“ ரம்யா.. நான் .நா.. நான்.”
ஏய்ய் போனை வெச்சுட்டு ரெண்டு லட்சத்தை எப்படி
புரட்டறதுன்னு யோசிடா மக்கு... சொறினாய்”
“ ரம்யா” அவன் ஆத்திரத்தில் பல் கடிக்க
“போன வைடா மயிறு”
அவள் போனை கட் செய்தாள்.