மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, June 13, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1774

  இவனை எப்படி தவிர்ப்பது? இவனை எப்படி ஒதுக்குவதுட்ரீட் மெண்ட்  கொடுத்தோமா? பேஷண்டுக்கு  குட் பை சொன்னோமா ? என இல்லாமல் என்ன அவஸ்தை இதுஎன நினைத்தாள் சுஜாதா .

"சார்.. நீங்க எப்ப வேணாலும் கால் பண்ணலாம் சார் உங்களுக்கு நாங்க எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கிறோம் ., " என்றாள் நாசுக்காக.,

" என்னங்க இப்படி சொல்றீங்க ? நீங்களும் உங்க மருமகனும் தான்  இங்க வரீங்க.,  உங்க மருமகன் ஓரிரு தடவை வந்தாரு, ஆனால் இந்த பெண்ணுக்கு அம்மா நேரில் வந்து நன்றி சொல்லவே இல்லையே "என்றான் ஈஸ்வர்

"அச்ச்சோ அப்படி இல்ல சார்.. .நிச்சயமா. இன்னிக்கு வரனும்னுதான் இருந்தா..ஆனால் கடைசி நேரத்தில் வர முடியாம போயிடுச்சி. உங்களுக்கு மனமார்ந்த நன்றியை என்கிட்ட  சொல்லி சொல்ல சொன்னா. .கண்டிப்பா நேர்ல வந்து உங்களை பாக்கனும்னு இருக்கா சார்.. நன்றி சார் நான் வரேன் " என்று சொல்லிவிட்டு விறுவிறுவென புறப்பட்டாள்.

அவளை அவனால் நிறுத்த முடியவில்லை. அன்று அவன் அறைக்கு வெளியே  சுஜாதாவின் மாப்பிள்ளையும் காத்திருந்ததால் அதற்குமேல் ஈஸ்வரால் சுஜாதாவை பிடித்து வைக்க முடியவில்லை.

சுஜாதா குழந்தை அழைத்துக்கொண்டு காரில் ஏறிய  உடனேயே ஈஸ்வரின் நம்பரை பிளாக் செய்து விட்டாள்.  அன்று இரவு 10 மணிக்கு மேல் ஈஸ்வரன் இருந்து போன்கால்கள் வந்தன. எதுவுமே கனெக்ட் ஆகவில்லை . ஈஸ்வரின் பிளாக்கட் கால்களை அடிக்கடி சென்று சோதித்து கொண்டிருந்தாள் சுஜாதா.

மறுநாள் காலை, அவள் எதிர்பார்த்தது போல புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. "ஹலோ நான் ஈஸ்வர்" என்றவுடன் அவள் "ஹலோ.. ஹலோ.நான் கோர்ட்ல இருக்கேண்" என சொல்லி போனை கட் செய்துவிட்டாள்.  அன்று முழுவதும் வெவ்வேறு நம்பரில் இருந்து போன் கால்கள் வந்துகொண்டே இருந்தன .ஒன்றையுமே அவள் அட்டெண்ட் செய்யவில்லை..

ஆனால், அப்படி ரொம்ப நேரம் செய்ய முடியவில்லை. மறுநாள் இரவு போனை எடுத்தாள். ஈஸ்வர்  நம்பரில் இருந்தும் புதிய நம்பரில் இருந்தும் நிறைய போன்கால்கள்.  எடுக்காமல் இருந்தது அவளுக்கே அது தவறாக தெரிந்தது. ஒன்றரை மாதம் தன்னுடைய குழந்தைக்கு மூளை பயிற்சி கொடுத்து புதிய குழந்தையாக மாற்றி இருக்கிறான்.  நாங்காண்டு கால் துன்பத்தினிய நாண்கே வாரத்தில் சரிசெய்திருக்கிறான். இந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய நன்றியை செய்திருக்கிறான்.

நாம் இப்படி ஒரேயடியாக புறக்கணிப்பது தவறு. குறைந்தபட்சம் அவனை அழைத்து நம்முடைய நிலையாவது அவனுக்கு விளக்கி விட வேண்டும் என நினைத்தாள். அவனுக்கு கால் செய்தாள்.

" ஹலோ ஹலோ மேடம் என்ன ஆச்சு ? ஏன் போன் எடுக்க மாட்றீங்க புது நம்பரில் இருந்து போட்டாலும் எடுக்கல..?"

" ஐயோ சாரி சார் நான் இன்னைக்கு பூரா பிசியா இருந்தேன் .,அதான் மிஸ்டு கால் பார்த்து நான் கால் பண்றேன் "

"ஓ நைஸ்..அப்படியா? "

"'.............................."

" வேலை முடிஞ்சிருச்சு இனிமேல் நீ எதுக்கு பேசனும்னு நீங்க முடிவு எடுத்துட்டீங்கன்னு  நான் நினைச்சேன் மேடம்" என்றான்.

" ஐயோ அப்படி எல்லாம் இல்ல சார்., உங்களை நான் மறக்க மாட்டேன் சார்"

" என்னை மறக்க மாட்டீங்களா? இல்லை என் உதவியை மறக்க மாட்டீங்களா?" என அவன் கேட்டான்.

".................."

 அவள் எதுவும் பேசவில்லை

' சொல்லுங்க சுஜா., "

"ஆங்....லைன்ல தான் இருக்கேன் சார் "

"ரொம்ப தொந்தரவு பண்றேனா?"

"நோ..சார்.. சர்ட்டன்லி நாட்...உங்களுடைய ஹெல்ப் பெரிய ஹெல்ப் சார் ., எனக்கு தெரிஞ்சி சயின்டிஃபிக் விர்ச்சுவல்ல.,  இப்படி யாரும்  வொர்க் பண்றதே கிடையாது"

" ஐயையோ உங்ககிட்ட காம்ப்ளிமென்ட் சர்டிபிகேட் வாங்கவா போன் பண்ணேண்..நான்?"

" சொல்லுங்க சார் வேற என்ன விஷயம்?"

" என்ன சுஜா? தெரியாத மாதிரி கேக்குறீங்க ?"

"................"

"எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா?"

 அவளுக்கு திக்கென்று இருந்தது.

" இங்க பாருங்க  சுஜாதா. நான் உங்களுடைய சிச்சுவேஷனை யூஸ் பண்றேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க "

"அ...அ அப்படி இலல் சார்"

இங்க பாருங்க.. எனக்கு புரப்போஸ் பண்னல்லம் தெரியாது. உங்கள முதல் தடவை பார்க்கும் போதே நான் ரொம்ப எக்சைட் ஆயிட்டேன்

" அய்யயோ என்ன சார் சொல்றீங்க?"

" ஏன்னா இந்த பிரபஞ்சத்துல எனக்கு புடிச்ச ஒரு பொண்ணை., எனக்கு ஏத்த  துணையை  இத்தனை வருஷமா தேடிகிட்டு இருந்தேன் ."

"............................."

"உங்களை பாத்ததுக்கப்புறம்........................"

"'சா,............சார்.. என்ன சார் சொல்றீங்க?"

" கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க ..உங்க குழந்தைக்கு நான் ட்ரீட்மென்ட் கொடுத்தேன். அப்படிங்கறதால உங்க கிட்ட  அட்வான்டேஜ் நான் எடுத்துக்கல புரிஞ்சுதா சுஜாதா"

"அ..ஆது புரியுது சார்.."

"டோண்ட் மிஸ்டேக்கன் மீ"

"நோ..நோ..சார்."

சுஜா...."

'.............."

'சுஜா..எனக்கு  நீங்க.."

'.........."

" நீங்க எனக்கு வேணும்னு தோணுச்சு.. சோ தட் நான் ப்ரொபோஸ் பண்ணிட்டேன் "

"சா.சா..சார்..ஐயோ என்ன சார் பேசுறீங்க நீங்க யாரு? நான் யாரு ? என் புருஷன் .,என் குடும்பம்ம. என் பொசிஷன்.."

"........."

" என்ன சுஜா? என்னங்க  உங்க பொசிஷன் ?  உங்களுக்கு கல்யாணம் ஆகியும் ஆகாத மாதிரி ., எனக்கு கல்யாணம் ஆகல  இதுதான் நம்ம விஷயம் "

'ச்ச்..சார்...ஐயோ ப்ளீஸ் ஸ்டாப் சார் இது சுத்த நான் சென்சாசா இருக்கு   அவள் கோபப்பட்டாள்.

"ஓ.அப்படியா அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.,  உங்ககிட்ட கேக்கனும்னு தோணுச்சு.,  உங்ககிட்ட சொல்லாமலேயே இருந்துட்டு,  ஒருவேளை நாம கேட்டு இருந்தா சரின்னு சொல்லி இருப்பாங்களோ..ன்னு நான் நினைக்க கூடாது இல்ல அதுக்கு தான் போன் பண்ணி என் அபிராயத்தை சொன்னேன்.  மத்தபடி உங்க இஷ்டம்" என்றான்.

அவள் எதுவும் பேசாமல் இருக்க "என்ன நான் போன் கட் பண்ணிடட்டுமா?"  எனக் கேட்டான் .

"இல்ல அப்புறம் யோசிச்சிட்டு நீங்களே கூப்பிடறீங்களா?'

"................"

" எப்போ கூப்பிடுவீங்க ? "

மௌனம். அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை.

"ஓகே சுஜா.. மறுபடியும் நீங்களா போன் பண்ற வரைக்கும்., நான் உங்களுக்கு போன் பண்ண மாட்டேன் சரியா ? இட்ஸ் பிராமிஸ். " என சொல்லி போனை வைத்து விட்டான் . சுஜாதாவிற்கு குப்பென்று வியர்த்துப் போனது. போனை வைத்து விட்டானே?  கோபித்து கொண்டானா?

என்ன இவன் பெரிய பிரசனையை உருவாக்கி விட்டானே?  ஊரில் இருக்கிற பெண்களை எல்லாம் விட்டுவிட்டு போயும் போயும் என்னை தேடி வருகிறேன் என்கிறானே?  நான் எப்படி அவனை?  இது என்ன அநியாயம் ? அனாகரிகம் ?

முதலில் என் தவறுதான். நான் அடிக்கடி சுடிதாரை போட்டி போட்டுக்கொண்டு போனதும் சின்னப்பெண் போல சிங்காரித்துக் கொண்டு போனதும் என் தவறுதான்.  ஒரு பெண்ணானவள்  தன் வயதிற்கு ஏற்றார் போல உடை அணிந்து போகவில்லை என்றால் என்னென்ன இடையூறு வரும்  என்பதற்கு இது ஒரு உதாரணம். என்  இளமையை தாண்டிய பிறகும் நான் இன்னும் இளமை கொண்டவளாக ஏன் இன்னொரு அன்னியனிடம்  என்னை காட்ட வேண்டும்?  அப்படி என்றால் என் உளவியல் சிந்த்னையில்தான் ஏதோ கோளாறு இருக்கிறது.

பிற ஆண்கள் என்னை பார்க்க வேண்டும். என் மேல் ஆசைப் பட வேண்டுமென இஷ்டத்திற்கு டிரஸ் செய்து கொண்டு போய்விட்டு இப்போது 'அவன் பார்க்கிறான் இவன் பார்க்கிறான் அவன் கூப்பிடுகிறான்'என எனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கிறேன். கோளாறு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அதாவது எனக்கு நானே தான் பிரச்சனை..

 ஒரு முறை சினிமாவுக்குப் போனபோது தெரியாமல் சுஜாதாவின் தொப்புள்குழி வெளியே தெரிய ஒரு ஆள் அவள் காதருகே வந்து 'உன் தொப்புள் செமயா இருக்குடி 'என சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.

அன்று முதல் லோகிப் வைத்து  புடவை கட்டுவது கிடையாது.  லிப்ஸ்டிக்கும் இடுவது இல்லை. லேஸ் பிரா.. எப்போதோ நிறுத்தியாகி விட்டது., அப்படி இப்படி என  எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தாலும் இந்த ஈஸ்வர் மாதிரி ஆட்கள் சதா கொக்கி போட்டு கொண்டே இருக்கிறார்கள்.

நம்மை  இந்த ஈஸ்வர் வலையில் மாட்ட பார்க்கிறானே? என நினைத்தாள்.

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்