மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, April 7, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 31

 

‘ஜாக்கி’ என்கிற அந்த ஜானகிராமன் அதிர்ந்து போயிருந்தான். அவளிடம் சிறுக சிறு  நிறைய  பணம் வாங்கி இருப்போம் .  இப்போ ரெண்டு லட்சம் கேட்கிறாள்’  என்ன நாம் ஓவராக தான் ஆடிவிட்டோம்.

ரம்யா பற்றி தெரியாமலேயே , மண்டபத்தில் நாம் போனை அசால்ட்டாக வைத்து விட்டோம். அவள் கோணத்திலிருந்து பார்த்து,  அவள் இந்த வலையிலிருந்து எப்படி தப்பிக்க திட்டம் போடுவாள்’ என்பதை கொஞ்சம் கூட நாம் யோசிக்கவே இல்லை .

ஆனால், இந்த கஞ்சா கேஸ்..? ரம்யாவுக்கு கஞ்சா கொடுத்து அனுப்பி என்னை மாட்டி விட்டானுங்களே!  கூட இருந்தே கழுத்தறுத்த நாய்களை விடக் கூடாது.

அவன் வெகுண்டு அவர்களை தேடிப் போய்  நியாயம் கேட்டான். அது இன்னொரு தப்பாகி விட்டது.

“மச்சான்., அவ நம்மளை கோத்து விடறா. கஞ்சால்லாம் நாங்க நினைச்சி பாக்க முடியாத விஷயம்..” டெம்போ பாண்டியும், சகாக்களும் சொல்வதை அவன் கேட்காமல் எகிற, ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்க் ஏரியாவில் ஜாக்கி செம்மையாக அடி வாங்கினான். ஆட்கள் விலக்கி விட்டார்கள். அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி வீட்டுக்கு வந்தான்.

அவனுக்கு எது ஒன்று ஆனாலும், அவனுக்காக பரிந்துரைத்து, அவனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் ஆட்கள் ஒவ்வொருவராக அவனை விட்டு போனார்கள்.

அவனது வீடு, குடும்பம், கவுன்சிலர் பச்சமுத்து, இப்போது அதைத் தொடர்ந்து நண்பன் டெம்போ பாண்டி, அவனது சகாக்கள் எல்லோருமே அவனுக்கு ஒரே சமயத்தில் எதிரியானார்கள்.

ரம்யா திட்டம் போட்டு தன்னிடமிருந்து ஒவ்வொருவராக பிரித்து இருக்கிறாள்,  என்பதைக் கூட அவன் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை.

 

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்பது நீண்ட காலத்து பழமொழி . அப்படித்தான் ஜாக்கியின் எதிரி ஒருவன் ரம்யாவை சந்திக்க, அவனது உதவியுடன், ஜாக்கிக்கு எதிராக அங்கே ஒரு புது வியூகத்தை ரம்யா அமைத்தாள்.

வார வாரம் ஜாக்கி ரம்யாவை கூப்பிட்டு, சீரழித்துக் கொண்டிருந்த சமயம் அது.

 ரம்யா தான் ஏமாற்றப்பட்டதற்கும், தனக்கு அந்த ஜாக்கி பொறிவைத்து பிடித்ததற்கும் காரணமாக இருந்தது மைதிலி தான் என்பதை அவளே மெல்ல ஊகித்துக் கொண்டாள்.

தான் அந்த ஆல்பா நிறுவனத்தை விட்டு வெளிவந்த பிறகு தன்னிடம் யாருமே பேசுவதில்லை. அதுவரை  ஒரு பிரச்சனையுமில்லை. பின் மைதிலி தன் நம்பரை கண்டுபிடித்து பேச ஆரம்பித்தாள். அவளுக்கு தான் நம்மை பற்றி எல்லாம் தெரியும் நம் வீட்டு அட்ரஸ் தவிர, அது பின் தான் பிரச்சனை..

ஆனால் இப்போது  தான் பணிபுரியும் ஆடிட்டர் அலுவலகம், தன்னுடைய தினசரி அட்டவணை முதற்கொண்டு  அந்த ஜாக்கிக்கு தெரிந்திருக்கிறது. அப்படியெனில், இதெல்லாம் ஜாக்கியிடம் மைதிலி  தான் தெரிவித்திருக்க வேண்டும். 

]ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் ஏதோ காண்டாக்ட் என அரசல் புரசலாக  கொஞ்சம் கம்பெனியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்படி என்றால் ஜாக்கிடம் நம்மை முழுமையாக அடமானம் வைத்தது மைதிலி தான் . மைதிலி உதவியுடன் தான் அவன் நம்மை வீழ்த்தி இருக்கிறான்’ அவளுக்கு பற்றி எரிந்தது.

மைதிலியை தேடி ரம்யா போனாள்.

“ஏண்டி நீ எல்லாம் ஒரு பொம்பளையாடி?  ஒரு பொண்ண கெடுக்குறதுக்கு கூட இருந்து எல்லாத்தையும் போட்டு கொடுத்து இருக்கியே?  நான் எங்க வேலை செய்றேன்.  என்ன பண்றேன்?  எங்க போற எல்லாத்தையும்  ஜாக்கிக்கு கூட இருந்து சொல்லி கொடுத்திருக்கிறியே  நாயே ! 

‘...................”

உன் வாழ்க்கை இப்படி ஆயிப்போச்சுன்னு நானா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பேன் தெரியுமா ? ஆனால் நீ என்னடான்னா உனக்கு கிடைக்கிற அற்ப சுகத்துக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு என்ன அவனுக்கு கூட்டி கொடுத்து இருக்கீயேடி.  உனக்கெல்லாம் நல்ல கதியே வராதுடி” என நேரில் பார்த்து திட்டி தீர்த்தாள்.

கோபமாக ஸ்கூட்டியில் அந்த தெருவினைக் கடக்கும் போது ஒரு ஆள் கை நீட்டி நிறுத்தினான். அவள் கலவரமாக அவனை  பார்க்க

“ சிஸ்டர். நான் மைதிலியோட புருஷன்” என அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“நான் என் குழந்தையை பார்க்க மைதிலி வீட்டுக்கு வரப்ப, நீங்க என் மனைவி மைதிலி கிட்ட பேசிட்டு இருக்கறதை பார்த்தேன் சிஸ்டர். உங்களுக்கும் அந்த ஜாக்கி ஏகப்பட்ட கொடுமையை பண்ணிருக்கான்றது எனக்கு புரியுது. இத்தனைக்கும் காரணம் என் பொண்டாட்டி’ தான் நினைக்கும் போது எனக்கு ரொம்ப பதறுது . இப்ப கூட நான் அவ கூட சேர்ந்து வாழணும்னு நினைக்கிறேன். ஆனா அதுக்கு நடுவுல நிக்கிறது அந்த ஜாக்கி தான். உங்களுக்கும் எனக்கும் பொதுவான எதிரி அந்த ஜாக்கி தான்.”

’................சார்’

“ நீங்க மட்டும் உதவி பண்ணுங்க. என் பொண்டாட்டியும் தப்பிச்சுப்பா. நீங்களும் தப்பிச்சுக்கலாம்” என அவன் சொன்னபோது அவளுக்கு ஏதும் புரியவில்லை. ஆனால் அதள பாதாளத்தில் விழுகிற ஒரு மனிதன் கையை காலை நீட்டி கயிறு, கிளை, வேர் என ஏதாவது ஒன்று கிடைக்குமா?’ என எதிர்பார்ப்பது போல ரம்யாவுக்கு கைக்கு கிடைத்த ஒரு தாம்பூல கயிறு தான் மைதிலி புருஷன்.

 அவன் கொடுத்த ஐடியா படி துணிந்து கஞ்சாப் பொட்டலங்களை அவன் கொடுக்க, அதை வாங்கி மண்டபத்தில் வைத்து ஜாக்கியின் ஃபோனையும் எடுத்துக் கொண்டு வந்து, தன்னை வெகு நாளாக சித்திரவதை செய்த அனுபவித்துக் கொண்டிருந்த ஜாக்கிக்கு அன்று முடிவு கட்டினாள் ரம்யா.

திட்டமிட்டபடி, ரம்யா  மண்டபத்திலிருந்து வந்தவுடன், மைதிலி கணவன் போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுத்தான்.

ரம்யா மிகப்பெரிய பாவ வலையிலிருந்து, மைதிலி புருஷனின் உதவியோடு மீண்டு  வெளியே வந்தாள்.  ஜாக்கியிடம் மைதிலி புருஷன் என்பதற்கு பதிலாக அவனது கூட்டாளிகளின் பெயரை சொல்லி அவர்களுக்குள்ளே சண்டையை மூட்டியும் விட்டாள். போதாததற்கு தான் இழந்த பணத்தையும் தரசொல்லி உத்தரவு போட்டாள்.

 

அவளது அடுத்தடுத்த மூவிற்கு ஜாக்கியால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. ரம்யா செய்த திரை மறைவு வேலைகளை பற்றி ஏதும் தெரியாமல் துடித்துக் கொண்டிருந்த ஜாக்கி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

ரம்யாவோ, ஜாக்கியிடம் போன் செய்து,’ இன்னும் ரெண்டு நாள் தான் கெடு. பணத்தை ரெடி பண்ணியா இல்லையா? லேட் ஆச்சுனா உன் போன், நேரா போலீஸ்க்குதான் போகும். கூரியர் பண்ணி விட்டுடுவேன்’ என மிரட்டி எச்சரித்தாள் ரம்யா.

கஞ்சா கேஸில் நம்மை தள்ளி விட்டவள், இனி என்ன வேண்டுமானாலும் செய்வாள்.

‘சரி  நேரில் பார்த்து  காசு கொடுக்க வேண்டும்என்று தானே சொல்கிறாள். கொடுத்து விடுவோம் .அங்கே காசை  தருவது போல் தந்து, வாங்கும் போது ஒரே போடாக போடலாம் .  

அவனுக்கு அவள் மீது நெடுனாள் கோபம். அவன் உள்ளுக்குள் உறுமிக் கொண்டிருந்தான்.

பணத்தை கொடுக்க,  ரம்யாவை திருசி பஸ் ஸ்டான்டின் அருகே  ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னான் .

அவளும் வந்தாள். ஆனால் , அவளது கூட ஒரு ஆள். அது.. மைதிலியின் கணவன்.

 

அவன் அதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை .

இவர்தான்  அண்ணா  ஜானகிராமன்.  எல்லாரும் புல்லட் ஜாக்கின்னு கூப்பிடுவாங்க. ஒரு  காலத்துல ஏரியா வஸ்தாது. அப்புறம் எம் டெக் படிச்சி இஸ்ரோவுக்கு டிரை பண்றார். ஆனா கஞ்சா கேசுல மாட்டிகிட்டார்” அவள் ஜாக்கியை பற்றி  எகத்தாளமாக சொன்னாள்

‘..................”

என்கிட்ட 2 லட்ச ரூபா பணம் கடன் கேட்டார். அது கொடுக்கறது வந்து இருக்காருண்ணா ’ அவள்  இன்னும் எகத்தாளமாக பேச மைதில் புருஷன் சிரித்தான்.

“அப்[படியாமா ஆளை பாத்தா ஜெயில் ரிட்டர்ன்ஸ்  மாதிரி இருக்கார்.. சிறைப்பறவையோ?” அவனும் கிண்டல் செய்ய. ஜாக்கி மௌனமாக இருந்தான்.

பழைய ஜாக்கியாக இருந்தால் இந்நேரம் மைதிலியின் கணவனை ஒரு கை பார்த்திருப்பான். இப்போது உடலிலும் மனதிலும் தெம்பில்லை, கூட அவனது கவுன்சிலரோ,  டெம்போ பாண்டியோ எவனும் இல்லை.

 தம்பி பணம் கொண்டு வந்திருக்கியாப்பா?”  என கேட்டாள். அவன் எழுந்து பைக்கில் வைத்திருந்த அந்த பணத்தை கொடுத்தான்.

மேடம் அந்த போனு?” ஜாக்கி பவ்யமாய் கேட்க , ரம்யா சிரித்தாள்.

என்னடா போனு?  எல்லாம் வரும் போடாஎன்று உறுமலாக சொன்னான் மைதிலியின் கணவன்.  

போன் தரேன்னு சொல்லிதானே கூப்ட்டே ரம்யா?” அவன் நிலைமையை புரிந்து கொண்டு இதமாகச் சொல்ல,

“ வாங்கிய கடனை தானே கொடுத்திருக்கே? கொடுத்துட்டே. போயிட்டே இரு. “

இல்லன்னா என் போன் ?” ஜாக்கி மீண்டும் கெஞ்ச்சினான்.

“என்னடா மயிர்ல  போனு  போடாமைதிலியின் கணவன் சட்டை கையை முறுக்க., இன்னும் ஒரு வார்த்தை பேசினால் அவன் அறைந்து விடுவான் போல. ஏற்கெனவே வாங்கிய அடியை இப்போது திருப்பி கொடுத்தால்?

 ரம்யா இப்படி ஒரு ட்விஸ்ட்டை வைப்பான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் கண் எதிரிளேயே 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, அவள் கிளம்ப

“ரம்யா ரம்யா... ப்ளீஸ் என் போனை கொடு .. உன்னை கெஞ்சி கேக்கறேன். போனை கொடு. இன்னும் கூட ஒரு லட்சம் தரேன் . ப்ளீஸ்’

அவர்கள் ஆட்டோவில் ஏறினார்கள்.

இங்கே பார்! உன் புடி என் கையில இருக்கணும். அதை  போய் இங்க எடுத்து வருவேனா? அது ஜஸ்ட் ஒரு துருப்பு சீட்டு. அவ்வளவுதான். மத்தபடி என்னை மடக்காலமுன்னு நினைச்சுக்காத.   எனக்கு டிரபுள் கொடுக்காதே! நானும் கொடுக்க மாட்டேன். ஆனா, மறுபடியும் என் வாழ்க்கையில குறுக்கே  வந்தா, என் எதிர்ல வந்தா  வம்பு பண்ணா,  பிரச்சனை பண்ணா, இல்ல  எது நடந்தாலும்  நீ இருக்குற வீடியோ வெளியே போகும்.  அது  மட்டும் உறுதி. இனி உன்னை வாழ்னாளில் எப்பவும் சந்திக்கவே கூடாது. இதுக்கு அப்புறம் நம்பர் கால் பண்ணாத”  இதுதான் அவன் கடைசியாக ரம்யாவிடம் பேசிய வார்த்தை .

அதற்கு பிறகு அவர்கள் சந்திக்கவே இல்லை.

 

அவளது படு சுத்தமான கன்னித்தன்மையை சூறையாடியவனை இன்னும் கடுமையாக தண்டித்திருக்க வேண்டும் தான். ஆனால் ஒரு இளம் பெண்னால் இன்னும் எவ்வளது தூரம் போக முடியும், தன் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டு.

தான் கொடுத்த பணம் வந்து விட்டது. ஆனால், இழந்த பெண்மை?