மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 26, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1757

ஒரு ஞாயிறு அன்று சென்னை, அரும்பாக்கம் டிபி வைஷ்ணவா .  கல்லூரி வளாகத்தில் ஒரு ஆன்மீக கண்காட்சி நடக்க ஈஸ்வர் போனான்

கண்காட்சி தினங்களில் அரங்கின் பின்புறம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஏதேனும் ஓர் தலைப்பில் யாரேனும் பேச்சாளர் ஒருவர் திறந்தவெளியில் ஒரு ஓரமாக பேசிக் கொண்டிருப்பார். சுற்றிலும் 40-50 ஆட்கள் இருப்பார்கள். அன்றும் ஒருவர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார்.

ஆன்மாக்களுக்கும்உள்உணர்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு என்ற தலைப்பில் அவர் பேசிக்கொண்டிருக்கஅந்த தலைப்பில் அவரது பேச்சைக் கேட்க அந்த கூட்டத்தில் வெறும் பத்து பேர்தான் வந்திருந்தார்கள்.

அந்த பத்து பேருமே காதல் ஜோடிகள். அவர்களுக்கும் அந்த  கூட்டத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது அவர்கள் செய்து கொண்டிருந்த செய்கைகளை பார்த்தே தெரிந்தது.

ஆனால்ஈஸ்வருக்கு அந்த தலைப்பு மிகவும் ஆர்வமாக இருந்தது. காலங்காலமாக தன் மனதில் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு அந்த கூட்டத்தில் விடை கிடைக்கும் என நம்பினான். அந்தப் பேச்சாளர் அறுபது வயதை கடந்தவர். அவர் ஒவ்வொரு ஆன்மாவிற்கும்உள்ளுணர்விற்கும் தொடர்புண்டு. உள்ளுணர்வு தான் ஆன்மா என பக்கம் பக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால்அதை கேட்கத்தான் யாருமே இல்லை. அவர் பேசி முடித்ததும்அவர் பின்னாலே போய் நின்றான். அவர் தனது பழைய ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருக்க,

திரும்பி பார்த்து "என்ன" என்றார்?.

"சார் நீங்க பேசின நிறைய விஷயங்கள் எனக்கு புடிச்சிருக்கு. என் மனசில இருந்த நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைச்சிருக்கு" என சொல்லஅவனை அதிசயமாக பார்த்தார்.

நமது பேச்சையும் ஒருத்தன் பிடிச்சிருக்கு என்கிறானேஇருவரும் ஹோட்டல் போய் காப்பி சாப்பிட்டார்கள். பேசி நெருக்கமானார்கள். அவர் லேசாக காலை விந்தி விந்தி நடந்தார். காலில் சில ஆண்டுகளுக்கு முன் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அதன் பின்அவனை அந்த ஞாயிறு தன் வீட்டிற்கு வர சொன்னார் .

"உங்க பேர் சார்?"

"என் பேர் சமரன்"

வாழ்க்கையில் தான் சந்திக்க வேண்டிய ஒரு மனிதனை ஈஸ்வர் சந்திரன் சந்தித்தான்.

வாழ்க்கையில் தான் சந்திக்கவே கூடாத  ஒரு மனிதனை ஆக சிறந்த ஞானி சமரன் சந்தித்தான்.

 அந்த சந்திப்பு பல பேரின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.

(தொடரும்...)

------------------------------

 

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1756

 தஞ்சைக்கு அருகே நீடாமங்கலம் தான் ஈஸ்வரின் சொந்த ஊர். தனக்கு அசாத்தியமான உள்ளுணர்வு இருக்கிறது என்பது ஈஸ்வருக்கு இருபது வயது வரை பெரிதாக தெரியாது. அவன் அடிக்கடி சொன்ன உள்ளுணர்வு விஷயங்களை அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டார்கள். 

கிரிக்கெட் ஆடும்போது இந்த பாலில் அவன்  நண்பன் அவுட்டாகிவிடுவான் என முன்கூட்டியே சொன்னான். அவன் அவுட் ஆகும் போது ''ஏன்டா வாய வச்ச?'' என திட்டுவார்கள்.

தெருவில் நடந்து செல்லும் நாய் இப்போது கல்லடி படப்போகிறது என நினைத்தான், அது கல்லடி பட்டது. வலதில் திரும்பும் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழப்போகிறது என்று நினைத்தால், அது விழுந்தது. தான் நினைத்ததால் அது விழுந்ததா? அல்லது விழப் போவது நாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டோமா? என்பதெல்லாம் அவனுக்கு தோன்றவில்லை.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விட தனக்கு மற்றவர்களை விட ஏதோ ஒரு அசாத்தியமான உள்ளுணர்வு இருப்பதாக நினைத்தான். சைக்கிளில் அவனின் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, யாரோ தன்னை உற்றுப் பார்க்கிறார்களே என்று எண்ணி திடீரென சைக்கிளை நிறுத்தி திரும்பி பார்த்தான். யாருமே இல்லை. ஒரு குறிப்பிட்ட வீட்டின் பால்கனியை பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த பால்கனியில் இத்தனி நேரம் மறைந்து இருந்த ஒரு பெண் எட்டிப் பார்த்து, மறுபடியும் ஒளிந்து கொண்டாள். 

அவனுக்கு அந்தப் பெண் தன்னை பார்ப்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், எப்படி ஒரு பெண் தன்னை பார்க்கிறாள் என்பதை முதுகுக்கு பின்னால் இருந்து நாம் தெரிந்து கொண்டோம் என்று தான் அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

அவன் இதை யாரிடமே அதிகம் சொல்லவில்லை. அப்படி சொன்னாலும் அவன் அங்கீகரிக்கப்படவில்லை. 

உண்மையில் எல்லா மனிதர்களுக்குமே அசாத்தியமான ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. ஒரு போன் அடித்தால் இது அவராகத்தான் இருக்கும் என நினைக்கிறோம். அவர்தான் அவர் குறிப்பிட்ட அந்த நபர் தான் நமக்கு போன் செய்திருக்கிறார். 

இன்று மாலை ஒரு உறவினர் தமது வீட்டுக்கு வருவார் என நினைத்தால் அவர் வந்து விடுகிறார். ஒரு தெருவுக்குள் நுழையும்போது, குறிப்பிட்ட வீட்டை கடக்கும் போது அந்த நபர் வந்து எட்டிப் பார்ப்பார் என்று நினைக்கிறோம். அவர் வந்து எட்டிப் பார்க்கிறார்.

இது எல்லாருக்குமே நடக்கக் கூடிய விஷயங்கள் தான்.

ஆனால், ஈஸ்வருக்கு அந்த உள்ளுணர்வின் வீரியம் மிக அதிகமாக இருந்தது. அதுதான் மிகவும் ஆச்சரியம். 

படிக்கும் போதே எந்த கேள்வி தேர்வுக்கு வரும்? வராது என அவனால் கணிக்க முடிந்தது.

அவன்  தஞ்சை நூலகத்திற்கு அடிக்கடி போனான். அது சம்பந்தமான நிறைய நூல்களைப் படித்தான். படித்து படித்து உள்ளுணர்வு, ஆன்மா, யோகம் போன்ற விஷயம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். 

25 வயதை தாண்டிய பிறகு ஈஸ்வர் முற்றிலும் வேறாக சிந்திக்க ஆரம்பித்தான். அவனது நடை, உடை, பாவனை எல்லாம் மாறத் துவங்கியிருந்தது. அவன் வழக்கமான் இளைஞனாக இல்லை. 

ஒருமுறை நூலகத்தின் ஏணியில் ஒரு பெண் ஏறிக்கொண்டு ஆறாவது அலமாரியை தோண்டி கொண்டிருக்க, அந்த ஏணி கீழே விழுந்து அந்தப் பெண்ணின் உதட்டில் அடிபடும் என அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த 5 வினாடிகளில் அதுதான் நடந்தது. ஆனால், அந்த ஏணி விழுவதற்கு முன்பே அவன் ஓடிப் போய் நின்று அவளை காப்பாற்ற நினைத்தான். அதனால்தான் அந்தப் பெண்ணிற்கு உதட்டு அடியோடு நின்று போனது. அந்த பெண் கட்டிப்பிடித்து நன்றி சொன்னாள். 

ஈஸ்வர் சந்திரசேகர் வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்தான்.

தனது உள்ளுணர்வு பற்றியே அதிகம் சிந்தித்தான். தன்னைத்தானே பலமுறை பரீட்சித்துப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு வயதாக, வயதாக முப்பதி நெருங்க அந்த அசாத்திய சக்தியின் வீரியம் அதிகமாக கொண்டே இருந்தது.

அதற்கு பின் ஈஸ்வர் மார்க்கெட்டிங்க் அலுவராக பணியாற்றும் போது அந்த அலுவலக கட்டடத்தின் மூன்றாவது மாடியில் ஜன்னலுக்கு அருகே தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளையில் இருந்த ஒரு கூட்டில் பறவைகளையும், அதன் முட்டைகளையும் எட்டிப் பார்த்தான்.  அதை அவன் தினமும் பார்த்து வந்தான். 

ஆனால் அன்று ஏனோ அவன் மனதில் 'இப்போது பெரிய பறவை ஏதேனும் வந்து அந்த முட்டைகளை தூக்க போகிறது' என நினைத்தான். உடனே, அந்த பெரிய ஹாலில் தேடி ஒரு நீளமான கட்டையை எடுத்துக்கொண்டு ஜன்னல் கம்பிக்குள் விட்டு காத்துக் கொண்டிருந்தான். எதிர்பார்த்தபடி ஒரு பெரிய பறவை வர கட்டையால் போட்டு தாக்கினான். அங்கிருந்தவர்கள் அவனை அதிசயமாக பார்த்தார்கள். அவனும் தன்னை தானே அதிசயமாக பார்த்துக் கொண்டான். 

அந்த சம்பவத்திற்கு பிறகு அவனை அவனாலேயே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு சிகரம் அமைத்தாற் போல ஒரு சம்பவம் நடந்தது.

அவன் அப்பாவுக்கு நகைக் கடைவேலை. அன்று அவனுக்கு ஆபீஸ் லீவு என்பதால்., வீட்டுல போய் அம்மா கிட்ட சொல்லி எனக்கு சாப்பாடு எடுத்து வாடா" என சொன்னார்..

அவன் வீட்டுக்கு போக அம்மா  டிவி பார்த்து கொண்டு ஹாலில் இருக்க சாப்பாட்டு பையை தூக்க வந்தான் ஈஸ்வர் . அம்மா மதிய டீவி சீரியலில்  மும்முரமாக இருக்க.,

"சாப்பாடு  கொடும்மா ..அப்பாவுக்கு கொண்டு போகனும்"

"கிச்சன்ல இருக்கு.,   எடுத்துக்கிட்டு போப்பா " என விரட்டினாள்.

கிச்சன் நோகி போக., அவனுக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது. . இப்போது அம்மாவும், நாமும் இந்த வீட்டில் இருக்கிறோம். ஆனால், நம்மை தவிர இந்த வீட்டில் யாரோ ஒருவர் இருக்கிறார்கள் என நம்பினான். சப்பாட்டை எடுத்து கொண்டு 'போகட்டுமாம்மா"

"போடா பத்திரம்"

"அம்மா நம்ம வீட்டுக்கு யாராச்சும் வந்தாங்களா?"

"இல்லியேடா?'

"வந்தா மாதிரி இருக்கு"

"என்ன..ஈஸ்வர் இன்ஸ்டிங்க்ஷனா? சீக்கிரம் லஞ்ச் எடுத்து போடா"

"இல்லம்மா என்னால் தெளிவா சொல்ல முடியுது... ஒரு சுரூட்டு தலையன்... அழுக்கு டிராயரோட..நம்ம விட்டுல?"

"என்னடா சொல்றே?" அவள் திகைக்க.,

"ஆமா. திருட வந்திருக்கான்.."

"அய்யோ...எங்கேடா?" அம்மா எந்த  நேரமும் மயங்க இருந்தாள்.

"தோ அந்த ரூம்ல..."

அவன் கிரிக்கெட் மட்டையை எடுத்து கொண்டான்..

"விலகி இரும்மா.. "

அவன் கதவை திறந்து  உள்ளே போக உள்ளே ஒரு திருடன் பிச்சுவா கத்தியை வைத்து கொண்டு என்ன செய்வதேன தெரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தான்.. பீரோ திறந்திருந்தது

சட்டென காலில் விழுந்தான்..

அவனை மடக்கி உட்கார வைக்க. அரை மணியில்.. அப்பா ஓடி வந்தார்..

"அய்யோ சாப்பாடு எடுத்துட்டு  ஈஸு போயிட்டிருந்தா என் கதி?" அம்மா புலம்பினாள்.

அவனை விசாரிக்க.,

"இந்தம்மா மாடியில் துணி காய வைக்க போனப்ப, வீட்டுல சட்டுன்னு நுழைஞ்சிட்டேன் சார்.. மன்னிசுக்குங்க.. உங்க பையன் கண்டுபிடிக்கல்னனா நகை, பணத்தை ஆட்டைய போட்டிருப்பேன்..'

அந்த திருடன் ஒரு பகல் நேர கொள்ளையன். நீண்ட நாளாக அகப்படாதவன். அந்த தெருவின் பலரிடம் அடிவாங்கினான். உதடு கிழிந்து தொங்கியது., ஏரியா இன்ஸ்பெக்டர் வந்து ஈஸ்வரை பாராட்டிவிட்டு போனார்.,

தெருவே தலையில் வைத்து கொண்டாடியது.

"உனக்கு பேசிக்கலாவே செல்பி ரிப்ளெக்சன் , இன்ஸ்டிங்க்ட்ஷன் இருக்குப்பா. உன்  கிட்ட இருக்குற இன்ஸ்டிங்க்ஷனுக்கு போலீஸ்ல போகலாம். "

":சைக்கலாஜி இல்ல கிரிமினாலஜி படிப்பா.."

"கேம்பீளிங்க் ஆளுங்க பாத்தாங்கனா உன்னை அள்ளிகிட்டு போய்வாங்க.."

"இன்னிக்கு என் ஆளூ கோயிலுக்கு வருவாளா? இல்லையா சொல்லு"

"நீ கண்டிப்பா ஆதிசங்கரர்  மாதிரி பெரிய ஞானிங்களோட ரீ  பர்த்தா இருக்கனும்"

அதில்  அந்த வட்டிகடை செட்டியார் மட்டும் தான்  உருப்படியாக சொன்னார்.

"இங்க இருந்து மார்கெட்டிங்க்ல சாவாதே? சென்னை போ.. நிறைய புக்ஸ் படி., அங்க மெடிடேஷன் செண்டர் நிறைய  இருக்கு அங்க போய் சேரு.. நீ பெரிய ஸ்காலர் ஆகலாம்..போ... நான் தங்கற அட்ரஸ் தரேன்.. "

அவன் லோக்கல் வேலையை விட்டு சென்னை வந்தான். அலைந்து திரிந்து  நீலாங்கரையில் பரந்தாமன் என்னும் ஸ்காலர் பற்றி கேள்விப்பட்டு அவரிடம்  சேர்ந்தான். ஆனால் அது சென்டர் இல்லை. ஓட்டு வீடு. பணவரவு பெரிதாக இல்லை

சில மாதங்களில் அவரை விட்டு ஒரு பெரிய தியான  மையத்தில் வேலைக்கு  சேர்ந்தான். அவனை பார்த்ததும் அவனது தனித் தன்னமையை  தெரிந்து கொண்டார்கள். 

எடுத்த உடனே 25 ஆயிரம் சம்பளத்தில் அவனுக்கு அங்கே வேலை கிடைத்தது.

அதற்குப்பிறகு மேன்ஷன் ரூம் என ஏதேதோ கிடைத்த வாழ்க்கையை அலுப்பாக வாழ்ந்து பார்த்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆற்றலை வளர்த்துக் கொண்டு, அதன் மூலமாக சம்பாதிக்க துவங்கியிருந்தான் ஈஸ்வர் சந்திரன்.

ஆனால், ஈஸ்வரின்  முக்கியமான  நகர்வு கட்டம் அவன் முப்பாதாவது வயதில் நடந்தது.

---------------------------------


வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,