எபிசோடு : 6
ரம்யா திருமணமாவதற்கு முன் டிகிரி முடித்து முதல் முதலாக திருச்சியில் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலைக்கு சென்றாள். அங்கே எச். ஆர் அதிகாரிக்கு உதவியாளராக போய் சேர்ந்தாள். போய் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே எச்.ஆர் அதிகாரி முத்துலிங்கத்துக்கு ஆப்பு வைத்தாள். அந்த 45 வயதான ஈன பிறவி எச். ஆர் அதிகாரி என்ற பெயரில் அங்கு வேலை செய்யும் பெண்களின் பயோடேட்டாவில் இருந்து செல்போன் எண்களை ,போட்டோக்களை எடுத்து அவர்களிடம் நேரம் கெட்ட நேரத்தில், வெவ்வேறு பெயரில் எண்ணில் இருந்து யாரோ பேசுவது போல பேசி கடலை போடுவதை கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தெரியப்படுத்த, உடனே அந்த அதிகாரியை வேலை விட்டு துரத்தினார்கள் .
அவனும் இந்த
வாட்ச்மேன் போலவே அன்று வன்மம் கக்கிய பார்வை உதிர்த்து விட்டு போனான்
முத்துலிங்கம் போன இடத்தில் காலியாக இருந்த சீட்டில் , அதிரடியாக ரம்யா அந்த சீட்டில் உட்கார வைக்கப்பட்டாள்.
சம்பள் உயர்வும் கூட, 22 வயது நிரம்பிய இளம்பெண் ரம்யாவிற்கு அந்த பதவி கிடைக்க அவளுடைய ஒழுக்கம், கண்டிப்பு
பெரிய காரணமாக இருந்தது.
தான் உட்கார வைக்கப்பட்டிருக்கும் சீட்டு எப்பேற்பட்டது என்பதை புரிந்து கொண்ட ரம்யாவும்,
உடனே அது தொடர்பான நிறைய படிப்புகளை படித்தாள். மனித வள
மேலாண்மையை கரைத்து குடித்தாள்.
அலுவலகம் மேலாண்மை, நிர்வாக மேலாண்மை எல்லாவற்றையும் தேடி தேடி படித்தாள்.
அவளிடம் எச்.ஆர் மட்டுமன்றி, அவள் கணக்கு வழக்குகளில் சூரப்புலி என்பதால் அக்கவுண்ட்சையும் ஒப்படைத்தார்கள். அவளும் கணக்கியலை
முறைப்படுத்தி, ஏற்கெனவே இருந்த பல முறைகேடுகளை சரி படுத்தினாள்.
ஆறே மாதத்தில் நல்ல
பெயரை எடுத்தாள். சிக்கன நடவடிக்கைகள் பல எடுத்தாள். எல்லா பில்களுக்கும் கணக்கு
கேட்டு பேமென்ட் கொடுத்தாள்.
எப்போதோ ஆபிஸ் வந்து
போகும் முதலாளி கூட வெகுவாக பாராட்ட, ஏற்கெனவே இருந்த சக ஊழியர்கள், அதிகாரிகள்
நெஞ்சில் தேவையே இல்லாமல் வஞ்சினம் பரவ ஆரம்பித்தது.
ஆனால், ரம்யாவுக்கு ஒரு முதிர்ச்சியான நிறுவன அதிகாரிக்குரிய அத்தனை தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுடைய முக்கியமான இலக்காக இருந்தது.
“நாளைக்கே கல்யாணம்
ஆன கூட , இந்த வேலையை விட்டுடக்கூடாது, திருச்சியிலேயே எனக்கு மாப்பிள்ளை
பாருங்கப்பா., “ என அவள் வீட்டில் தீர்மானமாய் சொல்லி இருந்தாள்.
“உன் திறமைக்கும்
அழகுக்கும் நீ அமெரிக்காவில வேலை செய்யனும்டி”
மெத்த படிப்பும், மற்றவர்களது பாராட்டும் தந்த கர்வம் அவளை இன்னும்
பல படி மிதப்பில் கொண்டு போய்விட்டது .அது ஒரு மிகப்பெரிய ஆபத்தின் தொடக்கப் புள்ளியாக ஆனது தான் வேதனை .
அந்த லாஜீஸ்டிக் நிறுவனத்தில் பேக்கிங்கில் பிரிவில் மூன்று இளைஞர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரு ஆண்டுகளாக இருக்கிறார்கள். சப் காண்டிராக்ட் ஆட்கள். அவர்களுக்கு. பளு தூக்கும் வேலை, காண்ட்ராக்ட் வேலை என்பதால் அதை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளே வேலைக்கு எடுத்து விட்டார்கள். எச். ஆருக்கு தெரிவிக்க அவசியமில்லை.
இப்படி கம்பெனிக்கு ரெகுலராக வரும் சப் காண்ட்ராக்ட் ஆட்கள் என அவர்களை ரம்யாவுக்கு அறிமுகப்படுத்தவே இல்லை. இது பற்றி எச்.ஆர் அதிகாரி என்றமுறையில் ரம்யாவுக்கு தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்டடத்தின் கிடங்கில் பின்பகுதியில் தான் வேலை செய்வார்கள்.
எப்போதும் பொதுவாக அவர்கள் ரம்யாவின் கண்ணில் படுவதில்லை.
ஒருமுறை மட்டும் , உதவி மேலாளர் மைதிலி, லாஜீஸ்டிக் லோடிங்க் அன்லோடிங்க் ‘ பில்லை நீட்ட.,
“என்னது பாண்டியன் என்ற பேர்ல, லோடிங்க் பில் கேக்கறீங்க?.. பாண்டியன் வென்டார் கோட் எங்கே? டிடிஎஸ் பிடிக்கலையா?” ரம்யா கேட்க,
“இது சப் காண்டிராக்ட் பில் மேடம். இதுக்கு முன்னாடி நம்ம ஆள் தான் பிரைவேட் வண்டி பிடிச்சி, நம்ம ஆளுங்களை வெச்சி ,லோடு ஏத்தி அனுப்பினோம். ஜி. எம் தான் தனியா சப் காண்டிராக்ட் போட்டுக்கன்னுட்டார். டூ இயர்ஸா பில் போடுறோம். நீங்க புதுசுங்கிறதால இது தெரியல” மைதிலி விவரமாக எடுத்துரைத்தாள்.
“ நம்ம பில்டிங்ல தான் பேக்கிங்க் & லோடிங்க் நடக்குதா?”
“யெஸ் மேடம்”
“எத்தனை பேர்?”
“மூனு பேர். ஒரு டெம்போ”
“ஆளுங்க எப்படி? நான் பாக்கனும்”
“பாக்கலாம் மேடம். முதல்ல இந்த பில்லை பாஸ் பண்ணுங்க”
ஆனால், மைதிலி அவர்களை அதன் பின் கூட்டி வரவில்லை.
அப்படி ஆட்கள் இருப்பதை தெரிந்து கொள்ளாதது தான் பெரிய பிசகாய் விட்டது.