மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, April 28, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2049 ( திபூவை இறுதி பாகம்)

 

ம்ப்யூட்டர் சென்டரில்

மலரின் கேபின் போய்  சர்டிபிகேட்டை வாங்கியவுடன் சந்தோஷத்துடன் அவளை அணைத்துக்கொண்டான்.

ஹெ ஹேய் லூசு.. இது சென்டர்ஞாபகமிருக்கட்டும் மலர் சொல்ல,.

ரொம்ப  ரொம்ப தேங்க்ஸ் .. மலர். உன்னால தான் இது முடிஞ்சது

ஸோ.. நீ பெங்களூர் போற இல்லை அவள் டக்கென கவலையானாள்.

போய் தானே ஆகனும்.. இன்னும் அங்க என்னென்ன குழப்பம் இருக்கோ தெரியல

நீ பெங்களூர் போறது  தான் நல்லது

யாருக்கு?”

எல்லாருக்கும்மலர்  லேசாக கசிந்த கண்னீரை துடைத்து கொண்டாள்.

பை தி பை ., உனக்கு  கஷ்டப்பட்டு இந்த மூஞ்சிக்கு எஸ்ஏபி சர்டிபிகேட் வாங்க்கி கொடுத்திருக்கேன்.  எனக்கு என்ன செய்யப் போறே?” என அவள் அவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.

மலரின் அந்தக் கேள்வியில் ஆயிரம் விஷயங்கள் பொதிந்து இருந்தன. என்னை இப்படியே வைத்துக் கொள்ளப் போகிறாயா? இல்லை கழட்டிவிட போகிறாயா? இல்லை என்றாவது ஒரு நாள் மட்டும் அழைப்பாயா? என பல கேள்விகள் அவள் முகத்தில் இருந்தது. இதற்கு ஒரு முடிவான பதில் சொல்ல முடியாமல் சுரேஷ் மென்று விழுங்க ,

ஒன்னும் பயப்படாதே, உன்னை தர்மசங்கடத்தில் எல்லாம் வாட விட மாட்டேன்.ம் ஃபேமிலி கூட நீ ஒரு அவுட்டிங்க் வரணும் என்றாள்.

ஃபேமிலி  அவுட்டிங்கா? இல்ல அது சரியா இருக்காது . உங்க அம்மா வருவாங்க.  சஞ்சனா ஹஸ்பண்ட் வருவாங்க. அப்போ நான் உன் கூட இருக்கிறது, அவங்களுக்கு அண் ஈசியா இருக்கும் என சொல்ல,

சார் ரொம்ப கனவு காணாதீங்க,.  என் பக்கத்துல உட்கார்ந்து கிட்டு என்ன உரசிக்கொண்டே வரணும்னு. நினைக்காதீங்க ஜஸ்ட் ஒரு ஃபேமிலி அவுட்டிங்க் போறோம். நீங்க எதுல எங்க கூஅ இருக்கனும். தட்ஸ் ஆல  என்றாள்.

அப்படி என்ன எந்த இடத்துக்கு போறீங்க?” என அவன் கேட்க,

எங்க குலதெய்வம் கோயிலுக்கு போறோம். ரொம்ப நாளா தள்ளி போய்கிட்டு இரூக்கு .. கண்டிப்பா இந்த சன்டே போகனும். எனக்கும் மனசு சரியில்ல என்றாள்

சரி நீங்க போயிட்டு வாங்களேன். நான் எதுக்கு?” என சொல்ல

நோ.நோ.,நீ எப்போ என்னை எங்க வீட்டுல வெச்சு, தொட்டியோ அப்பவே நீ என் ஃபேமிலிக்குள்ள ஒருத்தனாகிட்டே, உன்னை அழைச்சிட்டு வர்றேன் ன்னு நான் வேண்டிக்கிட்டு இருக்கேன்.

உன்னை மட்டுமா தொட்டேன்? சுரேஷ் மனதில்  நினைக்க

 ., சரி., எங்க இருக்கு உங்க குல தேவம் கோயில்?”

பெங்களூரு- ஹோசூர்,  தமிழ்நாடு பார்டர்ல இருக்கிற பானசங்கரி அம்மன் கோயில் தான் எங்கள் குல தெய்வம் என அவள் சொல்ல சுரேஷ் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

..என்னடி சொல்ற பானசங்கரி கோயிலா?”

ஆமா.. ஏன் என்னாச்சு பா?” கறுத்து போன அவன் முகத்தை பார்த்து கவலையாக கேட்டாள் மலர்.

அட அது எங்க குலதெய்வம் கோயில்.. ஆனா சொல்லும் போதே அவன் மனதில் ஒரு குற்ற உணர்வும் இருந்தது.

 ஏனென்றால் அம்மா இறந்த பிறகு, ஒரே ஒரு தடவை அவனது பெரியப்பா அந்த கோயிலுக்கு அவனை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால், அதன் பிறகு ஒருமுறை கூட அந்த கோயிலுக்கு போகவில்லை, அல்லது போக வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

 ஒவ்வொரு குடும்பமும் தங்களது குல தெய்வம் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று தங்கி வணங்கி விட்டு வர வேண்டும் என சொல்வார்கள்.

 ஆனால், பத்தாண்டுகளுக்கு மேலாக சுரேஷ் அந்த கோயிலுக்கு ஒரு தடவை கூட போகவில்லை என்பதை உணர்ந்து வருத்தமுற்றான்.

 பானசங்கரியம்மன் கோயில் தான் உங்களுக்கும் குல தெய்வமா? அட வெரி இன்ட்ரஸ்டிங்

அவர்களது பரம்பரை பூர்வாங்க விஷயங்களை பற்றி இன்னும் பேசி அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

அனேகமாக காம்ம் அற்று அவர்கள் பேசியது இப்போது தான்.

ரொம்ப நல்லதா போச்சு . சுரேஷ்  .நீங்களும் ரொம்ப நாளா அந்த கோயிலுக்கு போகலகின்னு சொல்றீங்க,. அப்படின்னா எங்க கூட வாங்களேன்என்றாள்.

அவனுக்கும் போகலாம்  என தோன்றியது.  நேராக பெங்களூரில் போய் இறங்குவதற்கு பதில் ஏன்   அந்த கோயிலுக்கு போக கூடாது என நினைத்தான்.

ஆனா சுரேஷ்., அந்த கோயிலுக்கு போரப்ப விரதம் இருக்கனுமுன்னு சொல்வாங்க,. “

…”

கொஞ்சம் சுத்தமாவும் இருக்கனும்னு சொல்வாங்க. சோ.. நோ ட்ரிங்க்க்ஸ்,  நோ சிகரெட்.. நோ குட்டீஸ்கண்ணடித்தாள்

உடனே  தன் கைப் பையில் இருந்த ஒரு மஞ்சள் கயிறை அவன் கை மணிக்கட்டில் கட்டி விட்டாள்.

அட கீர்த்தனாவும் ஒரு கயிற்றை கட்டி இருந்தாளே. வாட் ஏ கோ- இன்சிடென்ட்? அவன் மனம் ஏனோ இருண்டு போனது.

கோயில் போற வரைக்கும் கொஞ்சநாள் சுத்தபத்தமாக இருக்கணும்  சார்என்று சொல்லி அவள்  மீண்டும் கண்ணடித்தாள்.

 ஆனால் அவன் எதையும் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவேளை கீர்த்தனாவை விட்டு போகிறோமே , சென்னையை விட்டு போகிறோமே அதற்கா? கிட்டத்தட்ட திக்பிரமை பிடித்தாற்போல் அவன் தன் அறைக்கு வந்தான்.

அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

கீர்த்தனா எப்போதும் போல அவனிடம் சகஜமாக பேசினாள். அவன் ஹோசூரில் பானசங்கரியம்மன் கோவிலுக்கு போவதை அறிந்து சந்தோஷப்பட்டாள். அவன் கையில் கட்டியிருந்த விரத கயிற்றை பார்த்ததும் ரஞ்சிதா கூட விலகி போய்விட்டாள்.