மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, June 10, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1773

 

"மேடம் நீங்க எந்த ஊரு ?" என்றான்.

" நாங்க சேலத்து பக்கம்,ஆனா ரொம்ப நாளா சென்னையில தான் இருக்கோம்."

" அது சரி உங்க மகளோட கர்ப்பகாலத்தில் உங்க கூட இருந்தாங்களா? இல்ல உங்க மாப்பிள்ளை வீட்டுல இருந்தாங்களா?"

" ஏழு மாசம் வரைக்கும் அவ அவளோட மாமியார் வீட்டுல தான் இருந்தா சார்..  அதுக்கு அப்புறம் தான் நாங்க சென்னைக்கு கொண்டு வந்து பிரசவம் பார்த்தோம்"

"ம்ம்  உங்க பொண்ணுக்கு சில கெட்ட ஆத்மாக்கள் அவங்க கருவை தொந்தரவு செய்ய முயற்சி செஞ்சிருக்கு..."

"சார்ர்ர்"

"பயப்படாதீங்க... ஆனா அது சென்னையில் நடந்ததா இல்லை சேலத்தில் நடந்ததா ? ன்னு  தெரியலை.,சரி..  உங்க பொண்ணு கன்சீவா இருந்தப்போ அவங்க இருந்த வீட்டுக்கு அக்கம்பக்கத்துல இல்ல,  அந்த தெருவில் ஏதேனும் ஒரு துர்மரணம் கெட்ட அசம்பாவிதம் நடந்து இருக்கா?"

" சார்  சென்னையில ஒன்னும் நடக்கல சார். .இங்க  ஒரு பிரச்சினையில்லை ஆனால் சேலத்துல அவ மாமியார் வீட்டுல இருக்குறப்போ அந்த தெருவில் யாரோ ஒரு சின்ன பையன் .. தூக்கு போட்டு இறந்துட்டான்னு கேள்விப்பட்டோம்.  சொல்லப்போனா அதனாலதான் இரண்டு வாரம் கழித்து சென்னைக்கு வர வேண்டிய பொண்ணு சீக்கிரமாகவே சென்னைக்கு வந்துட்டா"  என சொன்னாள் .

"ஓ ஐ சி ?"

"சா ..சார்.எதாச்சும் தப்பா ஆயிடுச்சா?"  அவள் பயந்தாள் .

"தப்புன்னு சொல முடியாது ஒரு அஜாக்கிரதை...தான் "

"புரில சார்"

"அதாவது சாதாரணமாகவே ஒரு இறந்த உடலை மயானத்தில் தகனம் செய்துவிட்டு திரும்புறப்ப  அவங்க யாரும் எதிர் படக்கூடாது .குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எதிர் படக்கூடாது. அதை மீறி உங்க பொண்ணு எதிர்ப்பட்டிருக்கா?"

"சார்..  புரியலையே"

"மேடம்..  அந்த இறந்த குடும்பத்திலிருந்து சில பேர் மயானத்திற்கு போய்விட்டு திரும்பும் போது அவங்க கூடவே அந்த ஆத்மா ஒட்டிக்கிட்டு தான் திரும்ப வரும்.. ஒரு ஆத்மா இறந்த நேரம், இழந்த நோக்கம், ஒரு ஆத்மாவை கெட்ட ஆத்மாவா ஒருவேளை மாறி இருக்கலாம்."

"..................."

" அப்படி இருக்கக் கூடிய ஆன்மாக்களுக்கு அழிவைத் தவிர வேறு எதுவுமே கண்ணுக்கு தெரியாது . எதிர்ப்பட்ட ஆளுங்களை எல்லாம் அழிக்க நினைக்கும். பயமுறுத்த நினைக்கும். அது உங்க பொண்ணு வயிற்றிலிருக்கும் இருக்கிற கருவ பயமுறுத்தி இருக்கு .முடங்கிப் போக செய்திருக்கு.  இத ஆங்கில மருத்துவத்தில் 1008 பேரு வெச்சி  அந்த  மேனியா  இந்தபோபியா  ன்னு சொல்வாஙக..."

"சார் இங்கு அதை குணப்படுத்த முடியும் இல்லை? "அவள் பரிதாபமாக கேட்டாள்.

 அவனுக்கு இது அதிகபட்சம் மூன்று வார  வேலைதான். எளிதில் குணப்படுத்திவிட முடியும் என நினைத்தான் ஆனால் இவளை ஆறு வாராமாகவாவது வரவழைக்க வேண்டும்..

"மேடம் .நிச்சயம் குணப்படுத்திடலாம். உங்களால இந்த குழந்தையை தொடர்ச்சியாக  ஒரு சிக்ஸ் வீக் ஈவ்னிங்க் ஆறு மணிக்கு கூப்பிட்டு வந்து என்னை பாக்க முடியுமா?'

"நிச்சயம் சார்..ஷ்யூர்"

"அப்ப க்யூர் பண்னிடலாம்.. நோ ஒர்ரி.. வர்ஷா மூளையில் இருக்கக்கூடிய சில வெற்று முடிச்சிகளை  நாம சரி படுத்திட்டோம் என்றால் அது சராசரி குழந்தையா ஆகிடும். இன்னும் சொல்லப்போனா சராசரிக்கு மேலேயும் நாம உருவாக்கி விடலாம்"

"நி..நிஜமாவா..சார்?"

'யெஸ்.மேடம்'

சுஜாதாவிரற்கு பேரானந்தமாக இருந்தது. அவனை கையெடுத்து வணங்கினாள். அவன் மீது அவளுக்கு அதிக மதிப்பு உருவாகியது .

அவள் போய் அன்று மாலையே திரும்ப வந்தாள். தொடர்ந்து வந்தாள்.

ஒவ்வொரு நாளும் எந்த வேலை இருந்தாலும் இல்லை என்றாலும் மாலை 6 மணிக்கு வர்ஷாவை அழைத்து அவனிடம் அழைத்து வந்தாள்.

அவன் வைத்தியத்தை பொறுத்தவரை உண்மையாகவே நடந்து கொண்டான். அவனது மாநசீக குரு  சமரன் கொடுத்திருக்கும் புத்தகங்களை ஆய்வுகளை ஆராய்ந்து வர்ஷாவுக்கு என்ன மாதிரியான வைத்தியம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதன்படி தினசரி செய்து வந்தான்.

வர்ஷாவின் செயல்பாடுகளில் சில நாட்களிலேயே பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.,  அவள் ஐ க்யூ முன்னேற அவனிடமிருந்து அவன் பணியாளர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டாள். அவர்கள் சென்டரில் சிறப்பு யிற்சி கொடுத்தார்கள். நினைவுதிறன் மேம்பட நிறைய விளையாட்டுகள், செய்முறைகள்.. அளித்தார்கள்..

சுஜாதாவும் ஈஸ்வரிடம் வித்தியாசம் காட்டாமல் பழகினாள்.  பேசினாள். அவனுடன் சினேகமானாள்.  ஆரம்பத்தில் வர்ஷா பற்றியே இருவரும் பேசினார்கள்.  ஆனால், நாளடைவில் ஈஸ்வர் சுஜாதாவை தனிப்பட்ட முறையில் அடிக்கடி அழைத்து பேசினான்.

அவன் தொந்தரவு அதிமாவது போல் தெரிந்தால் ., செண்டருக்கு வர்ஷாவுடன் அவள் அப்பாவை அனுப்பினாள்.

ஆனால் ஒருநாள் சுஜாதா மையத்திற்கு வரவில்லை என்றாலும் ஈஸ்வர் போன் பண்ணி கேட்டான். சுஜாதாவிற்கு ஒருபக்கம் வர்ஷாவின்  உடல்நலம், மன நலம் சீக்கிரம் குணம் ஆகி வருகிறது என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஈஸ்வரின் பார்வைகள், செய்கைகள், பேச்சுகள் ஒரு பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே வருகிறதே என கவலைப்பட்டாள்.

ஈஸ்வர் 40 வயது திருமணம் ஆகாதவன். ஆனால் நாம் 43 ஐ கடந்துவிட்டோம்., நமக்கு திருமணமாகி ஒரு பெண் அவளுக்கு குழந்தைகள் என கிட்டத்தட்ட தாம்பத்திய வாழ்க்கையின் எல்லையில் நிற்கிறோம் . கணவன் அனுபவித்தானா ? நாம் நிறைவாக அனுபவித்தோமா?  அதெல்லாம் தெரியாது. இப்போது  வயது நாற்பதை கடந்து விட்டது.

 சமூகத்தில் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறோம் . இளமையில் பருவகாலத்தில் வந்த எத்தனையோ அழைப்புகளை உதாசீனப்படுத்தி விட்டோம். திருமணமாகி கணவனுடன் இல்லை என்பதை தெரிந்துகொண்டு எத்தனையோ ஆண்கள் என்னென்னமோ வழிகளில் அவளை அணுகி இருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் தன்னுடைய இளமைப் பெட்டகத்துக்கு பூட்டை போட்டு விட்டு, தன்னுடைய மகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒன்றுதான் குறி என்பதாய் தன் இளமைக் காலத்தை பெரும் மனக்கட்டுப்பாடுடன  கழித்தாள்.

இப்போது அந்த ஸ்காலர் ஈஸ்வர் பேசுவதெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிறது. நெடுநேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

வர்ஷாவிற்கு அங்குள்ள பெண் நிபுணர்கள் பயிற்சி அளிக்கும் போது வரண்டாவில், வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கும்  சுஜாதா பெரும்பாலும் அவனால் அழைக்கப்பட்டாள். இது அவளுக்கு  பெரும்சங்கடம்.  எந்த வேலையும் இல்லை என்றாலும்  கூப்பிட்டு உட்கார வைத்து ஈஸ்வர் ஏதேதோ பேசுகிறான்.

"இன்று ஏன் இத கலரில்  உடை?'  இன்று என்ன சாப்பிட்டீர்கள்?  உங்களுக்கு சமைக்க தெரியுமா?  வேற என்ன எல்லாம் தெரியும்? உங்களுக்கு எது பிடிக்கும் ?என மிக அந்தரங்கமாக பேசுகிறான்.

அடிக்கடி போனில் பேசினான். மெசேஜ் அனுப்பினான்

 காதலிக்கும் வயதை தாண்டியவள் தானே நான்?  அவனது பார்வையும் பேச்சும் அவளிடம் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்கு தெரியாதா என்ன?  ஆனால் இதெல்லாம் சரிப்படுமா?  யாராவது கேட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தெரிந்தால் என்ன ஆவது? அதுவும் தன்னை விட வயது குறைந்த ஆணை? "  என சுஜாதா நினைத்தாள்.


 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1772

 சுஜாதாவிற்கு உள்ளுக்குள் தயக்கங்கள் பல இருந்தாலும்ஈஸ்வர் சந்திரனுடனான சுஜாதாவின் ஒவ்வொரு சந்திப்பும் அவளை மென்மெலும் சங்கடப்படுத்தியது. பேசும்போது ஓரிரு சமயங்களில் அவளது கைகளை தொட்டான், அவளது விரல்களைப் பார்த்தான். ரேகை பார்த்து பலன்கள் சொன்னான். மோதிரங்களை பார்த்தான்.

"உங்க மோதிரம் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு" என்றான்

இன்னொருமுறை அவள் எதிர்பாராத சமயத்தில் சுஜாதாவின்  கழுத்தை தொட்டான் .

"இந்த செயின் ரொம்ப நல்லா இருக்கு. எங்க வாங்கினீங்க?" எனக்கேட்டான்.

" இது என் பொண்னு டிசைன் செய்த நகை "என்றாள்.

"ஓ ..வர்ஷாவின் அம்மவா?'

"ம்ம்.அவ  ஜ்வல் டிசைனர்"

" ஓ..அப்படியா? சரி.. நானே கேட்கனும்னு  என நெனச்சேன். வர்ஷா மம்மியை  ஏன்  இதுவரைக்கும் இங்க நீங்க கூட்டி வரல?" அவன் கேட்க., அவளுக்கு பகீரென இருந்தது.,

அவளுக்கு இங்கே வர ஆசைதான். வர்ஷாவின் மன நல முன்னேற்றம் கண்டு சஞ்சனா பெரிதும் ஆனந்தப்பட்டாள்..

"கிரேட் மம்மி.,  நான் அந்த ஸ்காலரை பாக்கனும்.... தேங்க்ஸ் சொல்லனும்' அவள் குதிக்க.,

ஈஸ்வரின் சுபாவம், இன்னொரு பக்கம் அறிந்த  சுஜாதா பயந்தாள். நாற்பதை தாண்டிய என்னையே தயிர்பானையை முகர்ந்து பார்க்கும் பூனை போல  சுற்றி வருகிறான். அவன் கண்ணில் சஞ்சனாவை காட்டலாமா?

அவளுக்கு சஞ்சனாவை இங்கே கூட்டி வர பயம்.நம்மையே இப்படி கடித்து தின்பதுபோல பார்க்கிறான். என் செல்வ மகளை இங்கே கூட்டி வந்தால்?

"சொல்லுங்க சுஜாதா.. உங்க பொண்ணை ஏன் கூட்டிட்டு வர மாட்டீறீங்க ?"

"சாரி..சார் அவ  ரொம்ப பிசியா இருப்பா..  நான் வீட்ல ஃப்ரீயா தானே  இருக்கேன்.  அதான் வர்ஷாவை நானே கூட்டிடு வரேன்.. கண்டிப்பா ஒரு நாள் கூட்டிடு வரேன்..." என்றான் .

"ஓகே ஐ ஆம்  எக்ஸ் பெடிங்க் டூ சீ யுவர் டாட்டர்"

 இவளிடம் சஞ்சனாவை கொண்டுவந்து நிறுத்தினால் வேற வினையே வேண்டாம். எப்படியாவது இந்த ஆறு வார கோர்ஸை முடித்து விட வேண்டும். வர்ஷாவை நல்லபடியாக  குணமாக்கி கொண்டு வீட்டுக்கு  போய் விட வேண்டும் என முடிவெடுத்து இருந்தாள். .

ஐந்தாவது வாரத்திலேயே வர்ஷா நார்மல் சைல்டாக மாறினாள். ஆறு வாரம் போக வர்ஷா முழுமையாக குணமடைந்தாள்.  அவள் முன்பு போல் அல்லாமல் சுறுசுறுப்பாக இருந்தாள். ஆஹா! இவன் உன்மையிலே திறமைசாலிதான். வெளியே  ஒரு சிலர் சொல்வது போல இவன் ஃபிராடு இல்லை. உண்மையிலேயே வேலை தெரிந்தவன் தான். என்ன ஒன்று நம்மைத்தான் வெட்கமில்லாமல் சைட் அடிக்கிறான் என நினைத்தாள்.

 கடைசி நாள் அவனிடம் நன்றி சொல்லிவிட்டு போக, அவன் வர்ஷா , சுஜாதாவுடன் ஸேர்ந்து செல்பி எடுத்துகொண்டன .சுஜாதவின் பெண் வாசனை அவனுக்கும், அவனது மரிக்கொழுந்து வாசனை அவளுக்கும் பரிமாறப்பட

அவன் திரும்பத் திரும்ப 'வேற வேற?" என கேட்டுக்கொண்டே இருந்தான்.

"வேறு ஒன்றும் இல்லை சார் "என சொல்லி அவள் விலகிக்கொண்டாள்.

"சுஜாதா "

"சொல்லுங்க சார்"

" இவ்வளவு நாளும் வர்ஷாவை  சாக்கா வெச்சு., உங்களுக்கு அடிக்கடி கால் பண்ணிட்டு இருந்தேன். இனிமே நான் என்ன சொல்லி உங்களுக்கு  கால் பண்ணட்டும்? "

"....................."

" திரும்பத் திரும்ப வர்ஷா எப்படி இருக்கா? இப்போ பரவாயில்லையா இதையேதான் கேட்கணுமா ? இல்லை..."  என இழுத்தான் ஈஸ்வர்.

 சுஜாதாவிற்கு அவனது நோக்கம் இதற்கு முன்பு அரசல் புரசலாக தெரிந்தாலும் இப்போது முழுமையாக தெரிந்து விட்டது. அவன் ஓபனாக நம்மை வேண்டும் என்று கேட்கிறான்.



 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்