மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 7, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1816

சஞ்சனா வீட்டில் இன்னும் பொலிவு கூடியிருந்ததுசுஜாதாவிற்கு மனம் லேசானதுமிகப்பெரிய விடுதலையை உணர்ந்தாள். இதுவரை அவளது உடலையும் மனதையும் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு சக்தி அவளை விட்டு அகன்றது போல் உணர்ந்தாள் அவளது மனமும் உடலும் வெகு மலர்ச்சியாக இருந்தது. தனக்கு ஏதோ நல்லது நடந்திருக்கிறது.

 அது சுரேஷால் நடந்திருக்கிறது என்பதை அவள் உள்ளுணர்வால் உணர்ந்தாள். சஞ்சனாவும் அந்த மெல்லிய மாற்றத்தை உணர தொடங்கினாள்எப்பவும் இருக்கும் தலை பாரம்லேசான மயக்கம் இப்போது இல்லைசுரேஷ் வந்த்தால் உண்டான மகிழ்ச்சியாக கூட இருக்கலாம்எல்லாம் சரி, இந்த மலர் ஏன் காதலனின் பிறந்த நாளுக்கு வரவில்லை?

அதன்பின் வெகுநேரம் அந்த மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்கணவன் தூங்க போய் விடநாம் மட்டும் இவனுடன் பேசி கொண்டிருந்தால்  நல்லா இருக்குமாஒருவேளை கணவன் தூங்காமல் இருந்தால்என நினைத்தபடி மனசே இல்லாமல்  சஞ்சனா சுரேஷிடம் விடைபெற்றுக் கொண்டு தனது அறைக்குள் தூங்கப் போனாள்அதற்குள் கணவன் தூங்கி போயிருந்தான்.

வெளியே மணி 11.30 ஆக., சஞ்சனா  போனவுடன் மறுபடியும் சுஜாதா கைகளை கூப்பி அவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தாள்.

 “ஐயோ எதுக்கு இந்த நன்றி எல்லாம் சொல்றீங்க? இது என்னோட மலருடைய ஃபேமிலி இல்லையா? மலருடைய ஃபேமிலி என் ஃபேமிலி இல்லையா? அதற்காகத்தான் நான் இவ்ளோ வேலை செஞ்சேன் இனிமே உங்களுக்கு அந்த ஈஸ்வரால எந்த பிரச்சினையும் இருக்காது.”

எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சின்னு எனக்கு தெரியுது .சுரேஷ்

ஹன்ட்ரட் பர்சன்ட்.. கரெக்ட்

ஐயோ அந்த பாவிப் பையன் என்னை… டெய்லியும்…”  என அவள் ஏதோ சொல்ல வர.,

ஆன்ட்டி.,நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்உங்களுக்கு என்ன கிடைக்குமோ அது கிடைச்சிடுச்சி., உங்க பொண்ணுக்கு எது கிடைக்க கூடாது அது கிடைக்காமல் போச்சு., எல்லாமே நல்ல தான் நடந்திருக்கு., இனிமே அதை பத்தி யோசிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க., நீங்க போய் படுங்க., நான் கிளம்புறேன் என்றான்

என்ன விளையாடுறீங்களா மணி இப்போ 12 கப் போகுது., இன்னைக்கு நீங்க இங்கேயே படுத்து காலையில் போகலாம் என்றாள்தயக்கத்துடன் மறுத்தாலும்அவனுக்கும் அதுதான் சரியான யோசனை கப்பட்டது.

சுரேஷ்க்கு தேவையான தலையணை, போர்வை கொடுத்துவிட்டு அவள் தூங்க போனாள்.

அவள் போனபின், சுரேஷ் சஞ்சனா வீட்டின் ஹாலில் சிறிது நேரம் உலவினான்நாம் யார்? எங்கு பிறந்து எங்கு வளர்ந்து எந்த நோக்கத்திற்காக சென்னை வந்தோம்? இப்போது எந்த வீட்டில்? எந்த நேரத்தில்? எந்த நோக்கத்திற்காக இந்த புதிய உறவுகளைக் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்த போது அவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

அவனுக்கு திரும்பத்திரும்ப ரேகாவின் அப்ப நா தழுதழுக்க நன்றி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது .ஏதோ ஒரு நல்ல காரியத்தை இன்று செய்து முடிச்சிட்டோம் என மனதிற்குள் ஆனந்தப் பட்டான்.


---------------- 


உள்ளே கணவன் குழந்தைகள் அருகே படுக்க போன சஞ்சனாவிற்கு தூக்கம் வரவே இல்லை.

ஏன் இந்த மலரக்கா சுரேஷின் பிறந்த நாளுக்கு,  கொண்டாட வீட்டுகு வரவில்லை? ஏன் சொல்லிவைத்தாற்போல மலரின் போனும் அவளின் அம்மாவின் போனும் நாட் ரீச்சபிள் என்று வருகிறது என அவள் யோசித்தாள்.

அவளது அறையின் வெளியே பேச்சுக்குரல் நின்று போயிருந்தது கதவை மெல்ல திறந்து பார்த்தாள். அம்மா கூட இல்லை உள்ளே போய்விட்டு இருந்தாள். எப்படியோ அம்மா நார்மலாக ஆகி விட்டாள் .தினம், பத்து மணிக்கெல்லாம் படுக்க போய்விடும் மம்மி இன்று 11.30 வரை சந்தோஷமாக பேசி கதை அடித்து கொண்டிருக்கிறாள்.  

இந்த சுரேஷ் மட்டும் தூங்காமல் ஹாலில் உலவிக் கொண்டிருக்கிறான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, மிகப் பெரிய பணக்காரன் மலர்விழியின்  காதலன் நம் வீட்டில் எதற்கு வந்திருக்கிறான்? ஈஸ்வர் பற்றி போனில் கேட்டான். இங்கு வந்தவுடன் ஏதும் பேசவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நல்லது நடந்திருக்கிறது. சூழலே மாறிவிட்டது. எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறோம். எனக்கும் கூட ஒரு மிகப் பெரிய பாரம் இறங்கியது போல் இருக்கிறது.

இத்தனை நாளும் என்னை சுமையாக அமைத்துக் கொண்டிருந்த பாரம் சுத்தமா இறங்கி விட்டு மனசு லேசாகி இருக்கிறது. இந்த சுரேஷ் ஏதோ வேலை செய்திருக்கிறான்? நமக்கு நல்லது செய்திருக்கிறான். பூஜை சாமான்களை  எப்போதும் துக்கி வைக்க கூட நமக்கு மனசு போகவே போகாது. ஆனால் சுரேஷ் வருகிறான் என்ற உடனே நம்மையும் மீறி பூஜை அறையை நாம் சிறப்பாக அலங்கரித்து விட்டோம்.  வீட்டுக்கு புது களையே வந்து விட்டது.

சரி மலருக்கு போன் போடுவோம், இப்போதாவது போன் போகிறதா? என நினைத்தபடி மலருக்கு போன் போட, ‘அட போன் ரிங் போனது.’ கொஞ்ச நேரத்தில் மலர் போனை எடுத்தாள்.

என்ன நீங்க தூங்கலையா?” எனக்கேட்டாள்

இல்லடி தூங்கல, நெக்ஸ்ட் வீக் ஸ்டூடன்ட்ஸ்க்கு எஸ் ஏபி எக்சாம் இருக்குல்லே . சோ வேலை இருக்கு. என்ன சொல்லுடி. இந்த நேரத்துல? என்ன உன் புருசன் இன்னிக்கும் தூங்கிட்டானா?

ம் தூங்கிட்டார்.. சரி உங்களை ஒன்னு கேக்கனும்…”

என்னடி?”

உங்க ஆளு சுரேஷ்க்கு , இன்னிக்கு பிறந்தநாளுக்கு விஷ் பண்ண வருவீங்கன்னு நான் பார்த்தேன். ஏன் வரலை?”

.ய்.என்னது சுரேஷ்க்கு பிறந்தநாளா? என்னடி உளர்ற? இன்னிக்கா சுரேஷ்க்கு பிறந்தநாள்? யார்டி சொன்னது?”

சுரேஷ்க்கு இன்னிக்கு பர்த்டே இல்லையா? உனக்கு தெரியாதா?”

லூசுஅவன் ஷூ சைஸ், ஜட்டி சைஸ்லாம் தெரியற எனக்கு அவன் பர்டே தெரியாதா? சுரேஷ்க்கு பிறந்தநாள் ஜூலை 31 டி.  அதை நாங்க செலிபிரேட் பண்ணிட்டோமே.  அதை செலிபிரேட் பண்ணத்தான்  நாங்க பத்து நாள் முன்னாடி பாண்டிச்சேரி போனோம்

“……………………”

டூ டேஸ் அங்க ரெசார்ட் எடுத்துஅங்கச்சீ சரி விடு உனக்கு ஏன் அதெல்லாம்?

‘………………………….”

சுரேஷ்க்கு இன்னிக்கு பிறந்த நாளுன்னு யார்டி சொன்னா? அதிக பிரசங்கி

னக்கு யாரும் சொல்லல,  நானே நெனச்சி கிட்டேன். அவர் பேஸ்புக்கில பாத்தா மாதிரி ஞாபகம்..” சஞ்சனா சமாளிக்க.,

நீ ஏண்டி  அவனை நினைக்கிற லூசு? போய் உன் அம்மாஞ்சி புருஷனை கட்டிபுடிச்சி தூங்கு சரியா?

சாரி நான் எதோ குழப்பத்தில இருந்தேன். நீ சுரேஷ்கிட்ட இன்னிக்கு பேசுனியா? “

இல்லடி என் போனை ஒர்க் ஆகல. இப்ப தான் ஒர்க் ஆகுது . நாளைக்கு காலைல தான் பேசணும். இப்ப தூங்க போயிருப்பான் என்றாள்

சரிக்கா .,போனை வெச்சுடறேன்சஞ்சனா போனை வைத்துவிட்டு ஞ்சனா திகில் அடைந்தாள். என்ன நடக்குது இங்க?

பிறந்தநாளே இல்லாத ஒருத்தன் இன்று பிறந்தநாள் என சொல்லி நம் வீட்டில் ஏன் வந்து இவ்வளவு நேரம் இருக்கவேண்டும்? அவனது நோக்கம் என்ன? என யோசித்தாள்.

வெளியே தான் இருக்கிறான், அவனையே கேட்டுவிட வேண்டியதுதான். யெஸ் இதை விட்டா வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. என  நினைத்தபடி உடைகளை சரி செய்து கொண்டு, கணவனின் உறக்கத்தை உறுதி செய்தபடி, மெல்ல கதவை திறந்தாள்.

அப்போதுதான் சுரேஷ் சோபாவில் படுக்க போக, சஞ்சனா வருவதை
பார்த்து விட்டு .,

ஹாய் சஞ்சனா! என்ன நீ தூங்கலையா?” என கேட்டான்
சோ சாரி நீங்க மம்மி கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன். ம்ம்மி படுக்க போயிட்டாங்களா? “

யெஸ் போய்ட்டாங்க. இப்பதான் உள்ள போனாங்க. நானும் வீட்டுக்கு கிளம்புறேன்னு சொன்னேன். விடிஞ்சப்பறம் போறது தானேன்னு சொல்லி இங்கே படுக்க சொல்லிட்டாங்க என்றான்

சரி ., மலரக்கா ஏன் வரல? நீங்க போன் பண்ணி கேட்டீங்களா?”

கேட்கல., ஒருவேளை மறந்து இருப்பா போல இருக்கு உங்கக்கா. போன் தான் நாட் ரீச்ல இருந்துச்சே

கேடி நல்லா பொய் சொல்றீங்க என கேட்க க்கன திரும்பினான் சுரேஷ்.

ஏன் சஞ்சனா ?“ அவன் திகைத்தான்.

நான் மலர் கிட்ட பேசிட்டேன்., இன்னிக்கு தான் உங்களுக்கு பிறந்த நாள் இல்லையாமே.,”

“……………”

ஜூலை 31 தான் உங்கள் பிறந்தநாள்னு  மலர் சொல்றாசஞ்சனா கைகளை ஸ்டைலாக கட்டியபடி கேட்க,. சுரேஷ் சங்கடமாய் அவளை பார்த்தான்.

சொல்லுங்க என்ன ஆச்சு? எதுக்கு இந்த செலிப்ரேஷன் டிராமா? இந்த வீட்டுல? அதுவும் மலருக்கு தெரியாம?”  சஞ்சனா கேட்க., சுரேஷ் வேறுவழியில்லாமல் ஈஸ்வர் சஞ்சனாவை ஏர்போர்ட்டீல் பார்த்து அவளை முழுதாக ஆக்கிரமிக்க நினைத்த கதையை மெதுவாக சொன்னான்.

ஆனால் கொஞ்சம் கூட சுஜாதாவை கலங்க படுத்தாமல் சுஜாதாவை இந்த விஷயத்தில் சம்பந்தப்படுத்தாமல் விஷயத்தை வேறு கோணத்தில் சொன்னான். புதுப்பெண் ரேகா., சாஸ்திரி, யாகம் என முழுக்கதையும் சொன்னான்.

சஞ்சனாவுக்கு உடம்பே ஆடிப்போனது. தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டாள்.

கண்டிப்பா எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை நினைச்சேன் .அது ஈஸ்வரால கூட இருக்கலாம்னு எனக்கு தோணிச்சு சுரேஷ்.. நான் சயின்சை நம்பறவ., இப்படி கூட நிஜத்துல நடக்குமா என்ன?”

அவனை பிளைட்ல பார்த்தேன்.  ஏர்போர்ட்டில பார்த்தேன். அடிக்கடி கனவுல வர்ற அந்த மூஞ்சி எதுக்குன்னு தான் தெரில., ஆனா அதுக்கப்புறமா அவன் வர்ஷா கூட செல்பி எடுத்து அம்மாவுக்கு அனுப்பிச்ச போட்டோல தான் முழுசா  பார்த்தேன். இவன் தான் எதோ நம்மல விர்ச்சுவலா டிஸ்டர்ப் பண்றான்னு தோணுச்சு.  ஆனா கண்டிப்பா தெரியல.”

‘……….”

நல்ல வேளை சுரேஷ்.  என்னை நீங்க இதிலருந்து முழுசா மீட்டெடுத்து வந்தீங்க. ரொம்ப நன்றி என அவள் அழுது கொன்டே கைகளை பிடித்துக் கொள்ள .,

இட்ஸ் ஓகே. இப்பதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே. ஒய் கிரை?”

அய்யோ இதெல்லாம் என் ஹப்பிக்கு தெரிஞ்சா?”

யார்க்கும் தெரியாது.. ஏன் மலர்க்கு கூட தெரியாது ஓகேவா?”

கடவுளே உனக்கு நன்றிமேல பார்த்து கும்பிட்டாள்.

சரி விடு சஞ்சனா நீங்க போய் தூங்குங்க.. நான் காலையில எழுந்து போறேன் என்றான்

சரி டீ வைத்து கொடுக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

இந்த நேரத்துலயா?’

ஏன் குடிக்க மாட்டீங்களா? மலர்தான்  சொன்னாளே. அவ வீட்டுல இருக்குறப்ப ஒரு மணிக்கெல்லாம் டீ போட்டு குடுப்பாளமே?”

ஓ அதெல்லாம் சொல்லிட்டாளா?”

அவர்கள் சிரித்தார்கள்.

அவள் கிச்சன் போய் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.  இருவரும் பால்கனியில் உட்கார்ந்து டீ சாப்பிட்டார்கள்.

நள்ளிரவில் அந்த நடுநிசியின் அழகை ரசித்தார்கள். மேலிருந்த பௌர்ணமி தேய்பிறை கூட அவர்கள் கண்ணுக்கு அழகாக இருந்தது.


வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்