மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 7, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1815

  என்ன ஆச்சு சாஸ்திரிசொல்லுங்க என்றான் சுரேஷ்

அந்த ராட்சசன் இன்றோடு தொலைந்தான்.,”

அட செத்துட்டானா?”

அய்யய்யோ அவன் உயிரை எடுக்க  நாம யார்? அதெல்லாம் இல்ல.,  உயிர் இருக்கும். ஆனால் இனி ஒரு சராசரி மனுஷனா தான் இனிமே இருப்பான். இனிமேல் அவனால எதையும் நம்மள மாதிரி சிந்திக்கக் கூட முடியாது., இனிமேல் அவனால யாரையும் கட்டுப்படுத்தவும் முடியாது .தப்பான வேலைகளை செய்யவும் முடியாது.  அவன் காசை  வாங்க்கிட்டு பல நல்லவங்களை வாயை கட்டி தொன்டையை கட்டி முடக்கி போட்டான். இப்போ அவனுக்கு அதே நிலைமை. நடை பிணம் மாதிரி. ஒம்போது வருஷம் இந்த அவஸ்தை இருக்கும். அதுக்கபறம் தான் மரணம். அதுக்குள்ள செஞ்ச்ச தப்பை நினைச்சி அவஸ்தப்பட்டு., அவன் ஆன்மா சுத்தாமவும். பேக் ஃபையர்அவள் விளக்கினியார்

ரொம்ப ரொம்ப ..ரொம்ப சந்தோஷம் சாஸ்திரி

“இல்லப்பா. உன்னால தான் இது முடிஞ்சது. சுரேஷ், யாகம் நடக்குற நேரம் நீ அவ கூட இருந்தது தான் பெரிய பிளஸ். அவனால அந்த வீட்டுல நுழையவே முடியலஇரு ரேகா அப்பா உன் கிட்ட  பேசுறார்

கொடுங்க சாஸ்திரி

சுரேஷ் ரொம்ப தேங்க்ஸ்பா.. என் பொண்ணு நார்மாலாயிட்டாப்பா.. மயக்கமா இருக்கா., விடிஞ்சா சரியாகிடும்னு சொல்றார் சாஸ்திரி..” அவர்  நா தழுதழுக்க.,

சூப்பர் சார்.. கிளம்பி பத்திரமா போங்க.. காலைல பேசுவோம்.”

சரிப்பா.. ஆங்க்  .இருங்க அந்த பெரியவரோட பசங்க பசனுமாம்

கொடுங்க.சார்.’

அந்த அபகரிக்கப்பட்ட நிலத்தின் வாரிசுகள் பேசினார்கள்.

சார்..ரொம்ப நன்றி சார்..அந்த ஆளு தொல்லை இனி இருக்காது. . உங்களுக்கு நன்றி சார்

இல்லங்க நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். ஒரு சொத்தை முறையற்ற வழியில ஒருத்தன் அபகரிச்சிட்டா, அதுல பாதிக்கப்பட்டவங்க கண்னீருக்கு அதிக சக்தி இருக்குமுன்னு சாஸ்திரி சொன்னதால தான் நான் உங்க ரெண்டு பேரையும் கூட்டி வந்து, அங்க உக்கார வெச்சு உங்க கையால யாகத்தை செய்ய வெச்சேன். தேங்க்ஸ்

சார் இனி அந்த இடம் எங்களுக்கு கிடைச்சிடும்..இல்லே சார்

கண்டிப்பா கிடைச்சிடும்.. சில பார்பாமலிட்டீஸ் முடிஞ்சா போதும். நானே   அந்த சென்டைரை இடிச்சிட்டு அந்த இடத்துல உங்களுக்கு வீட்டை கட்டி தர சொல்றேண்

ரொம்ப தேங்க்ஸ் சார்.. இருங்க அந்த எம் எல் ஏ பேசனுமாம்

ம் கொடுங்க…”

ஹலோ.. தம்பி நான் சற்குணம் பேசறேன்”

என்ன ய்யா?..”

சுரேஷ் தம்பி!  நீங்க  சொன்னபடி வந்து முடிச்சி கொடுத்துட்டேன்…”

சரி கிளம்பு.., “

அந்த ஹோட்டல் அடி தடி கேசுல இருந்து என்னை

“……….ம்ம் பாக்கலாம் போ

சுரேஷ் கடைசியாக சாஸ்திரியிடம் பேசிவிட்டு போனை வைத்தான். மனதுக்கு  ஏதோ சாதித்தாற் போல தோன்றியது.

1 comment:

  1. Sakthi vaintha Edward Chandran a evalo asalta muduchu tingalae

    ReplyDelete