சென்னை டூ பெங்களூர் நெடுஞ்சாலையில் சுரேஷ் கிராண்டனியின் அந்த உயர்தர வெளிநாட்டுக்கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது .
ஆர்த்தி சுரேஷின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தாள் .
பின் சீட்டில் அவர்களது பெண் குழந்தை அயர்ந்து தூக்கி கொண்டிருந்தது.
“என்ன
ஆர்த்தி டல் ஆகிட்டியா?.. புராஜெக்ட் நேம் கெட்டு போச்சுன்னு”
“ப்ச்..
விடுங்க”
“அதெல்லாம்
ஒன்னுமில்ல., ஜனங்க அதெல்லாம் மறந்துடுவாங்க. ஒரு பேமிலி லேடியை சேவ் பண்ணோம்ல
அதான் திருப்தி.”
“ம்ம் இன்னும் கொஞ்சம் லேட்டா போயிருந்தா கூட, அந்த ரேகாவை ரெண்டு பசங்களும் சின்ன பின்னமாக ஆக்கி இருப்பாங்க இல்ல?”
காரை ஓட்டும் இந்திக்கார டிரைவருக்கு கன்னடமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் ஆர்த்தி தமிழிலேயே பேசிக் கொண்டிருந்தாள்.
“ம்ம்” என்றான் சுரேஷ் .
“ரெண்டு பொம்பள பசங்களை வைச்சிகிட்டு, அந்த ரேகா பொறுப்பு இல்லாம நடந்துக்கிட்டா ? இல்லையா ”
“ஆமா”
“முன்ன பின்ன தெரியாதவங்க தற்ர மாத்திரைகளை போட்டு இப்படி பெரிய தப்பு செய்யலாமா? டூ பேட்”
ஆர்த்திக்கு இன்னும் படபடப்பு தீரவில்லை என நினைத்தான் சுரேஷ்.
“ அது ஏங்க செக்ஸ்னா இந்த காலத்து ப\சங்க இப்படி அலையுறானுங்க?. அதுக்காக எந்த லெவலுக்கும் போவானுங்க போல. ச்சே”
“........................”
“ நான்
ஒன்னு சொல்லட்டுமா? ஒரு பெண், ஆணை விரும்புவதால் செக்ஸ் வெச்சுக்கறா. சரியா ., ஆனா
ஒரு ஆம்பளை செக்ஸ் வேனுமுன்னு தான் அவ, உடலுறவு கொள்கிறான்.” சுரேஷ் அவளை பாக்க.,
“
உங்களுக்கு வித்தியாசம் தெரிதா? இங்கு பெரும்பாலும், செக்ஸ் பார்ட் என்பது ஒரு ஆணுக்கு
உடல் சார்ந்த விஷயம். ஆனால் ஒரு பெண்ணுக்கு செக்ஸ் ங்கிறது உடல் ரீதியாகவும், உணர்ச்சி
ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம். இது ரொம்ப பேருக்கு புரியல...சுரேஷ்”
“அப்படின்னா?”
“ ட்ரூ
லவ் காரணமா ஒரு பெண் தன்னை அவனுக்கு கொடுக்க சம்மதிக்கிறா. ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக
மட்டுமே ஒரு ஆம்பளையால செக்ஸ் பண்ன முடியும்.”
“.............ம்ம்
“
“ ஆனா ஒரு
பொம்பளை ஆண்கிட்ட படுக்கனுமுன்னா., அவ
அவன்கிட்ட மனரீதியான ஒருமித்த உணர்வுகளை கொண்டிருக்க
வேண்டும். அவனை ரசிக்கனும். அவன ஏத்துக்கனும். அவன நம்பனும். “
“..........அடேயப்பா”
“ஒரு பெண்
தான் காதலிக்காத ஆணுடன் படுக்கறது நீங்க கேள்வியேபட முடியாது. அவ பெய்டு கேர்ளா இருந்தா
தவிர.”
“சரிதான்”
“ஆனா ஒரு ஆணுக்கு,
இது தலைகீழாக இருக்கு. அதன பிரச்சனை. அவனுக்கு அவ உடம்பு தான் ஈர்ப்பு. ஒரு ஆணுக்கு
ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் அவ ஒரு செக்ஸ்
அப்பீலிங்க் ஆப்ஜக்ட்”
“கரெக்ட்”
“ அதான் ஒரு
ஆண் பிராட்டிடியூட் கூட படுக்க தேடலாம். அவன்
தன்னோட செமனை ரிலீஸ்க்காக போற விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன்னா அவன்
தன் செக்ஸ் ஆசைக்கு தீனி போட ஒரு பெண்ணை
தேடறான். அதுக்கு தேவையான பணம் கூட கொடுப்பான். இதெற்கெல்லாம் காரணம் அவனுக்கு
தேவை செக்ஸ்.. அந்த பெண்ணை இல்ல..”
“சரி. பைனலா
என்ன சொல்ல வரே?”
“ நேசிப்பு இல்லாத செக்ஸ் உண்மையில்லாதது,. அத
ஆண் வெளிப்படுத்தினா சரிதான் போடான்னு’ உமென் தள்ளி போய்டனும். என்ன யோசிக்கறீங்க”
“
அன்பு மட்டும் போதுமென்றால்., நாய்க்
குட்டி போதும். காமம் மட்டும் போதுமெறால் ஒரு தாசி போதும்,. அன்பும், காமமும்
எந்தப் புள்ளியில் சேர்க்கிறதோ அந்தப் புள்ளி தான் காதல்’ ணு எங்கேயோ
படிச்சிருக்கேன்”
“ நானும்
படிச்சிருக்கேன். வெறும் கள்ளம்
கபடத்திலயெல்லாம் வர காமம் நிலைக்காதுங்க
. இந்த திருட்டு பசங்களைப் பாருங்க. யார் எப்படி அழிஞ்சாலும் பரவாயில்லை. எந்த குடும்பம் கெட்டாலும் பரவாயில்லை. நம்ம சந்தோஷம்தான் முக்கியம் நினைக்கிற இந்த மனப்பான்மையை என்னன்னு சொல்றது?..” ஆர்த்தி நிஜமான கவலையுடன் கேட்டாள்.
” ஒரு பொண்ணு தொடறதுக்கு முன்னாடி அவளுக்கு அதுல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காம, அவளை மிரட்,டி பலவீனப்படுத்தி , த்ரட்டன் பண்ணி , டிரக்ஸ் கொடுத்து, பிளாக் மெய்ல்
பண்ணி எப்படியாச்சும் அவளை அனுபவிச்சு ஆகணும் ‘ என்ற இந்த எண்ணம் வச்சிருக்கிற ஆளுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? “ அங்க அவள் கொஞ்சம் சீற்றத்துடன் கேட்க.,
கார் டிரைவர் லேசாக திரும்பிப் பார்க்க., சுரேஷ் சாலைக்கு வெளியே வெறித்துப் பார்த்தான். அவன் மனம்
உள்ளுக்குள் நடுங்கியது.
“என்ன நான் கேட்கிறேன். நீங்க எதுவும் பதில் பேச மாட்டேங்கிறீங்க ?”
சுரேஷ் திரும்பி பார்த்தான். “ ஆர்த்தி கொஞ்சம் நேரம் சும்மா இரு. கத்தாத . பின்னாடி பாப்பா
தூங்குதுல்ல?”
“ அது இல்லைங்க உங்க லைப்ல என்ன தவிர வேற ஏதாச்சும் பொண்ணுங்க வந்து இருக்காங்களா ? உங்க அழகு., காசு . இதுக்கு யாராச்சும்
சுத்தி வந்தாங்களா? இல்ல நீங்க போயிருக்கீங்களா?’
“ப்ச்.,
என்ன பேச்சு இது? சும்மா இரு”
“நீங்க ஆசைப்பட்டு இருக்கீங்களா? தொட்டு இருக்கீங்களா? “
“...ப்ச்...
விடு..”
இப்படி ஒரு அற்ப எண்ணத்தோடு நடந்திருக்கீங்களா? சொல்லுங்க “
“எதுக்குடி கத்துற?”
“ எனக்கு
சொல்லுங்க.. ஒரு பொண்ணு கூட உங்களை சலனப்படுத்தலையா? நீங்க சலனப்படலையா?’
“கீ..கீர்த்தனா”
என்றான் சட்டென.,.
“என்னது?”
அவன் திரும்பி பார்த்தான் .
“கீர்த்தனா எழுந்துக்கப் போறா” என்றான்.
“கத்தாத
ஆர்த்தி.” கீர்த்தனா சத்தம் கேட்டு அசைய. ஆர்த்தி குழந்தையை மெல்ல தட்டிக் கொடுத்தாள்.
சுரேஷ் சீட்டில் சாய்ந்து உட்கார., சென்னையில் மனோ வீட்டில் முதன் முதலாக காலெடுத்து வைத்த
அந்த நாளை நினைவுகொள்ள., கார் வேகமெடுத்தது.
சுரேஷ் யார்., ஆர்த்தி யார்? கீர்த்தனா, மனோ யார்? என தெரியாதவர்கள் திரும்புடி பூவைவெக்கனும் நெடு நாவலை படிக்கவும்.
( கள்ளம் கபடம் காமம் .. முற்றும்)
காமப் பெரு நதி விரைவில்..