‘வருகிற கனடா ஓபன் டோர்ன்மென்டில்.
டபுள்ஸில எங்க பேர் தான் சொல்லி அடிக்கும்’ என பிரஸ் மீட்டில் வீராவேசமாக கமலேஷ் பேட்டி
கொடுத்து முடித்த போது அந்த செய்தி வந்தது.
“ஏஜிஎம்.. ..சார். கான்டீன்ல
இருக்காரு.. உங்களுக்காக வெய்ட் பண்றாரு..’ ஆபீஸ் அசிஸ்டென்ட் சொல்ல.,
‘இசிட்?” இங்ககேயா
வந்திருக்காரு?” கமலேஷ் ஆச்சரியமானான் .
அது தென்னிந்திய டென்னீஸ் சங்கத்தின் கட்டடம். அந்த கட்டிடம் சென்னையில் முக்கிய பகுதியில்
2000 சதுர அடியில் மூன்று தளங்களாக இருந்தது
அவன் கேண்டின் பக்கம் பரபரப்பாக
செல்ல,
“ஹாய் மை பாய்.. இங்க இருக்கேன். வா கமல்” என குரல் கேட்டது.
“ ஹலோ குருமூர்த்தி சார் “அவன் புன்னகைக்க
“ம்ம்
உக்காரு “ என்றான் குருமூர்த்தி.
‘இல்ல சார் பரவால்ல நான் நிக்கிறேன். சொல்லுங்க
சார் . “ அவனுக்கு ஏஜிஎம் ஆறு மாசம்
பெங்களூரில் டிரெயினிக் கொடுத்த விசுவாசம் வேறு. அவனுக்கு குரு மீது பணிவையும்,
பவ்யத்தையும் கொடுத்திருந்தது. அவனது ஆரம்ப
காலத்தில், பார்வேர்ட், பேக்வார்ட்
நுணுக்கங்களை குருமூர்த்திதான் மேம் படுத்தினான்.
அடிக்கடி
டபுள் ஃபால்ட் செய்து பாய்ண்டுகளை இழக்கும் கமலின் சர்வீஸ்களை குருமூர்த்தி சொல்லி
சொல்லி திருத்திய காலமெல்லாம் இருக்கிறது.
‘கூப்பிட்டு இருந்தா நானே வந்து இருப்பேனே?””
அரக்க பரக்க வந்து நின்றான் கமலேஷ்.
“வேணாம்.
நான் இங்க வேறு விஷயமாக வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு உக்காரு கமல்” என குருமூர்த்தி
மறுபடியும் சொல்ல, உட்கார்ந்தான்
“என்ன சார் கொஞ்சம் ஹாப்பியா இருக்கீங்க போல .
“என கமலேஷ் சொல்ல,
“ ஹாப்பி தான் கமலேஷ். அந்த ரகு இன்னிக்கு காலையில நான் போட்ட போடுல தண்னித்தண்னியா ஆயிட்டான். அவனால கண்ட்ரோல் பண்ண முடியல. என்னோட
பிரசன்ஸ் அவனுக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. அதே சமயத்துல ஷாக்கிங்கா இருந்துச்சு.
அவனுக்கு என்ன பண்றதுன்ணே தெரில. அதனால ஹாப்
டே லீவ் போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டானா பாத்துக்கயேன்”
“அதான்சார்
என்னால நம்ப முடியல.., ரகு நல்ல தைரியமான பையன். எங்க போனாலும் படாரெ’னு
கை நீட்டிடுவான். முரட்டு ஆளு. ஆனா உங்க கிட்ட இப்படி பயப்படுகிறான்.”
“ஏஜிஎம்
முன்னா சும்மாவா?’
“ எனக்கு ஒரு விஷயம்
புரில சார். நீங்க அவனை இப்படி கட்டம் கட்டி அடிக்கறதுக்கு, கரம் வெச்சி
தாக்கறதுக்கு ரகு உங்ககிட்ட என்ன மரியாதை இல்லாம நடந்துக்கிட்டான்னு,
எனக்கு தெரில. நீங்க அவனை எதுக்காக
இப்படி விரட்டறீங்கன்னு சுத்தமா
புரியலண்னு உங்ககிட்ட கேட்டேன். நீங்க சொல்லவே
இல்ல”
‘...................”
“நல்ல சம்பளம் வாங்குற வேலையை விட்டுட்டு, அவனுக்கு பாஸா
வரணும்னு பிளான் பண்ணி இந்த வேலைக்கு வந்து இருக்கீங்க,”
“எல்லாத்துக்கும்
ஒரே காரணம் . நான் அவன் தலையில உக்காரனும். அதேபோல , இனி உன் கூட டபுள்ஸ்
ஆடக்கூடாது .
” அதான் எனக்கு ஒன்னும் புரியல
சார்” கமலேஷ் சொல்ல அவன் சிரித்தான்.
“கமல்.
எப்பவும் வாயில் அடிக்கிறவன வாயில அடிக்கணும், கையால அடிச்சவனை கையால அடிக்கணும், சுத்தியில அடிச்சா சுத்தி, துப்பாக்கியால சுட்டா
துப்பாக்கி. ஆனா இவன் என்ன வாழ்னாள் முழுதும் மறக்காத படி செஞ்சிருக்கான் .
ஒரு டீபான வடுவை என் மனசுல கிரியேட் பண்னிட்டான். “
‘..................”
“அதேபோல நானும் அவனை மறக்காத படி செய்யணும். மத்தபடி என்னை வேறு ஏதும் கேட்காதே .
நான் சொல்ற புராஜெக்டை மட்டும் செஞ்சு கொடு”
“இல்ல சார். அவன் உங்களை எந்த விதத்தில் டார்ச்சர் பண்ணான்னு
நான் தெரிஞ்சக்கனும். ஏன்னா அவன் சென்னைக்காரன். நீங்க பெங்களூர்.
அவன் உங்க நிழலை தொட கூட
சான்ஸ் இல்ல.”
“வாஸ்தவம்”
“ அவன் உங்க ஆபீஸ் கேரியர் குறுக்க
வந்தானா? டென்னிஸ் கேரியர்
குறுக்க வந்தானா? இல்ல லைஃப் கேரியர்
குறுக்க வந்தானா? அவன் உங்களை என்ன இடைஞ்சல் பண்ணனனு
தெளிவா சொன்னா தான் நான் உங்களுக்கு முழுசா ஹெல்ப் பண்ண முடியும்?”
என்ன இருந்தாலும் அவன் ஃப்ரெண்டு இல்லையா?”
“அப்படியா?
என்ன இருந்தாலும் உன் பிரண்டா ?
ஓ ஐ சீ ! உனது உயிருக்கு உயிரான
காதலி மஞ்சுமாவை
ரகு அபகரிச்சிக்கிட்டானே!”
‘................சார்
உங்களுக்கு எப்படி” மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை சொல்றானே இந்த ஆள்?
“ அந்த மாபாதக வேலையை அவன்
செஞ்ச அப்புறமும் உன் பிரண்டா?”
‘..........................”
‘
அப்போ உனக்கு காதலி விட
கேரியர்தான் முக்கியம் இல்லே? நீ எத்தனை பேர் கூட டபுள்ஸ்
ஆடினாலும் செட் ஆகாது. தோத்து போவே. ரகுகூட ஜோடி
ஆடுனாதான் டபுள்ஸ் ஜெயிக்க முடியும்லே? “
‘...................................”
“அந்த ஒரு விஷயத்துக்காக அவன் உன்னுடைய லவ்வர தொட்டது மன்னிச்சிடுவியா ?
அப்போ உனக்கு காதலை விட கேரியர் முக்கியமா? அப்ப நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்தா அவண் கேட்டாலும் ஒய்பை நீ கொடுத்துடுவாயா?”
“ சார்”
“ சாரி கமல். உனக்கு சொரணை வரணும் என்றதுக்காத்தான் அந்த மாதிரி சொன்னேன். ரகு உன் லைஃப்ல மட்டும் இல்ல, நிறைய ப்ரண்ட்ஸ் லைஃப்லையும் இப்படித்தான் பூந்திருக்கான்.
அவன் ஒழுக்கமான பையன் இல்ல. அவன் கை வைக்காத இடமே ரொம்ப ரொம்ப குறைவு. நிறைய விஷயம் அவனை பத்தி நான் சேகரிச்சி வெச்சிருக்கேன் “
‘சார் அதான் சார் எனக்கும் ஒன்னும் புரியல. உங்களுக்கும் கல்யாணம் ஆகல. சோ உங்களுக்கு மனைவி இருக்க முடியாது. அப்படின்னா அவன் உங்க லைஃப்ல எப்படி வந்தான்? அதை சொல்லலாம்ல?” என
கமலேஷ் கேட்க
“ என் லைஃப்ல இல்ல, எனக்கு ரொம்ப தெரிஞ்ச நண்பர் லைஃப்ல அவன் கை வச்சிருக்கான். அவங்க சொசைட்டியில
பெரிய இடத்துல இருக்கறவங்க. யாரு? என்ன ண்னு விவரம் எதுவும் என்னால சொல்ல முடியாது . எனக்காக நீ நான் சொல்றத செஞ்சு தான் ஆகணும் கமல் “
“கண்டிப்பாக செய்றேன் சார் “ என்றான்.
ஏனெனன்றால் கமலேஷ் இனி முழுக்க முழுக்க ஏஜிஎம் என அழைக்கப்படும் ஏ.குருமூர்த்தியின் கட்டுப்பாடுக்கு உட்பட்ட சங்கத்தின் கீழ் தான் விளையாடுகிறான் . என்னதான் தரமான டென்னிஸ் பிளேயர் என்றாலும் சங்கத்தின் சேர்மனை பகைத்து கொண்டு எல்லாம் டென்னிஸ் ஆட முடியாது. வேண்டுமென்றால் தனியே போய் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் நல்ல ஸ்பான்சர் வேண்டும் ஸ்பான்சர் இருந்தால் தான் விமான பயணம், வெளிநாட்டு ஹோட்டல், தங்கும் இடம், சாப்பாடு,
தரமான விளையாட்டு சாதனங்கள் எல்லாம் கிடைக்கும்.
அவன் குருமூர்த்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க,
“ இங்க பாரு கமலேஷ் இது ரகுவோட ஒய்ஃப் . பேரு ஷிவானி. ஜெயின் காலேஜ்ல பி எஸ் ஸி படிச்சிருக்கா. “ என சொல்லி புகைப்படத்தை தூக்கி போட, அவனுக்கு பகீர் என்று இருந்தது .
ரகுவுக்கு கல்யாணம் ஆன நாள் முதல் யார் பின்னால் தான் ஓடிக் கொண்டிருக்கிறானோ, சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் காரில் வைத்து அவளது மேலே கூட கை வைத்து விட்டான்.
இன்னும் கொஞ்சம் அவன் துணிந்திருந்தால், அடுத்த ஓரிரு வாரத்தில் அவள் உடைகளை உரித்து பார்த்திருக்கலாம் . ஆனால் அதற்குள் அவள் சுதாரித்துக் கொண்டு ‘ இனி அண்ணனாக நினைத்தால் தான் என்னுடன் பேச வேண்டும்’ என்று உறுதியாக சொன்னதால், அத்தோடு
கட்.
மேற்கொண்டு முயற்சிக்க வில்லை. இதோ இரண்டு மாதம் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஷிவானியை மறக்கக்கூடிய ஒரு நிலைக்கு வந்த போது தான் இப்போது குருமூர்த்தி ஷிவானியின் போட்டோவை தூக்கி போடுகிறார்.
கூட இருந்த ஷாம் கூட அப்போது சொன்னான்.
“தப்பில்ல மச்சான். உன் லவ்வர் மஞ்சிமாவை அவன் சாப்ட்டான் இல்ல. இப்ப அவன்
ஒய்ப் ஷிவானியை நீ உஷார் பண்ணு. கண்டிப்பா உனக்கு மாட்டும்” என ஷாம் சொல்லி சொலி
உசுப்பேற்றினான்.
தனக்காக இல்லையென்றாலும்
மஞ்சிமாக்காக கமலேஷ் முயற்சித்தாஒலுன்ம், ஷிவானியின் உறுதிக்கு முன்னாடி
புராஜெக்ட் கை விடப்பட்டு ரெண்டு மாதம் ஆகிறது. நடுவில் இந்த கச்சோடி தலையன்
திரும்ப வந்து புராஜெக்டை டேக் ஆன் செய்ய சொல்கிறான்.
என்னாடா இது பிகரை கவுத்து ., போட்டு செய்ய காசா? அவன் யோசிக்க.
“ இங்க பார் நம்ம செய்யறது விவசாயம் .அதாவது கள புடுங்குறது. இதுல நாலு களப்புடுங்கும் போது ஒரு நெல்மணியும் சேர்த்து தான் புடுங்க வேண்டி இருக்கும். இந்த ஷிவானியை அந்த மாதிரி நினைச்சுக்கோ “
‘சார். இப்ப நான் என்ன பண்ணனும்?”
“ என்ன கமல் புரியாத மாதிரி கேக்குற? எப்படியாச்சும் இவளை உன் வழிக்கு கொண்டு வந்து அவளை நீ அவளை அடைஞ்சி தீரனும்”
“ என்ன சார் சொல்றீங்க ? அது என் பிரண்ட் வைஃப் சார்”
“கரெக்ட் கமலேஷ். ஆனா அந்த மாதிரி அவன் உன்ன நெனச்சானா? பிரண்ட் லவ்வர் அப்படின்னு நினைச்சேனா? நினைக்கலியே. கிடைச்ச கேப்புல குதிரை ஓட்டிட்டான் இல்ல?”
“ சார் “
‘நீயும் கோபப்பட்டே. ஆனா வேற வழி இல்லாம அவன் கூட இருக்க வேண்டிய சந்தர்ப்பம் . சோ மஞ்சிமாவை விட்டு கொடுத்திட்டே? அந்த இன்சிடென்ட் மட்டும் நடக்கலனான்னா., இப்ப ரகுவுக்கு முன்னாடி உனக்கு
மேரேஜ் ஆகி இருக்கும். நீ புள்ளையும் பெத்திருப்பே?”
“...................” அவன் அதிர்ச்சியாக பார்க்க.,
“எனக்கு எல்லாம் தெரியும் கமல். நீ என்னதான் சூப்பர் ஃபார்வேர்ட்
பிளேயரா இருந்தாலும், உன்கூட ஆடுற ஆளுக்கு, உன்னுடைய நீக்கு போக்கு, டெக்னிக்கல்
தெரிஞ்ச ஆளா இருக்கனும். உன்னோட கெமிஸ்ட்ரியோட ஒத்து போற ஆளா இருக்கணும். அப்படி ஒரு ஆளு தான் இந்த ரகு. அந்த ஒன்னுக்காக நீ அவனை மன்னிச்சிட்டே?”
“...” கமலேஷ் தலைகுனிய
“ இங்க பார் கமலேஷ்.. இவனை ஒரு புள்ளியில் ஸ்டாப் பண்ணனும் கமல். இனி அவன் ஜென்மத்துக்கும் மத்த வீட்டுப் பெண்களை பற்றி நினைக்க கூடாது. பார்க்க முடியாது. அவனுக்கு சரியான இடத்தில் சூடு போடணும். அதுக்கு தான் உன்னோட ஹெல்ப் எனக்கு தேவைப்படுது.”
“..................”
“ உன்னை இந்த வேலைக்கு நான் எடுத்ததற்கு ரெண்டு காரணம். ஒன்னு ஏற்கனவே நீ அவனால பாதிக்கப்பட்டு இருக்கே. மெல்லவும்
முடியாம முழுங்கவும் முடியாம துடிக்கிறே”
“..................”
“ தொண்டைல மாட்டுன மீன் முள்ளு
மாதிரி இது உனக்கு வேதனை. கண்டிப்பாக இன்வாலமென்ட்டா இதை நீ செய்வே. ரெண்டாவது உன்னுடைய அழகு, கம்பீரத்தில் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. ஷிவானி மாதிரியான அப்சரஸ் பொண்ணுங்கள, லேசுல
மடியாத அவளை மாதிரி பொண்ணுங்களை கவுக்க., உன்ன மாதிரி ஆளுங்க தான்
சரி.”
‘...................”
“ இந்த ஷிவானி மேட்டரை நீ எனக்காக முடிக்கணும் . அது தான் என் ஈகோவுக்கு கிடைக்கிற வெற்றி. “
“சார்..அவன் ஒய்ஃப் பிரக்னன்ஸின்னு கேள்விபட்டேன்.. இப்ப போயி”
“தெரியும். இப்ப ஸ்டார்ட் பண்ணி வெய்யி, இப்ப நங்கூரம் போட்டு வெச்சா.
குட்டி போட்டப்பறம்.கவுத்துடலாம்... லேட் பண்ணாதே”
“ஸார் அவன் பண்ணதுக்கு.,அவங்களை போயி.....”
‘”அவனை எல்லாம் நாம இப்படித்தான் பழி வாங்க முடியும். “ குருமூர்த்தி தீர்மானமாய் சொன்னான்.
‘ ஓகே சார்.. ஷிவானி சரி.. இப்ப வர ஆப் கமிங்க் ஈவன்ட்? கனடா ஓபன்”
“அது ஆஸ் இட் இஸ். நடக்கட்டும். நோ
சேஞ்ச். “
“ என்னது? இப்ப நடக்க போற கனடா ஓபன் டூர்ல அவன் கூட விளையாடனுமா?
“யெஸ்.. இதை கான்சல் பண்ன கூடாது. இது ஆல்ரெடி த்ரீ மந்த் முன்னாடி ப்ரஸ்ல
டிக்ளேர்ட். சோ. லாஸ்ட் மினிட்ல அதை மாத்தக் கூடாது. அது முடியவே முடியாது. அது பண்ணா அசோசியேஷனில் நிறைய கொஸ்டின்ஸ் வரும். “
“ம்ம்.. அன்டர்ஸ்டுட்”
“ ஏன்னா, இன்னைக்கு தேதியில உங்களுடைய ஜோடி தான் நேஷ்னல் லெவல்ல நம்பர் ஒன் ஜோடியா இருக்கு. இதுக்கு ஒரு ஆல்டர்னேட் பேர நான் செட் பண்ண டைம் ஆகும்.
நிறைய ஆடிப் பாத்து டிரையல் பண்ணனும். அது மட்டுமல்ல, இப்ப கான்சல் பண்ணா அவன்
அசோசியேஷண்ஸ் மீறி, எதுத்துகிட்டு தனியா அப்ளை பண்ணி, ஓபன் ஆட டிரை பண்ணுவான்.
ஏதாச்சும் ஃபாரீன் பிளேயர்ஸ் கூட ஜோடி போட்டு, அதிசயமா ஜெயிச்சு கெழிச்சு வெச்சா எல்லாருக்கும்
அசிங்கம்... ”
‘................”
“ ஏதாச்சும் சொதப்பிடுச்சினா அப்பறம் மீடியாவுக்கு பதில் சொல்லணும். சோ.. கனடா டூர்ல அவனை கூட்டிட்டு போ . நோ பிராப்ளம். டோர்னமென்ட்டுல ஜெயிக்கிறது ஜெயிக்காதது உங்க இஷ்டம். ஆனால் எனக்கு தெரிஞ்சு அது தான் அவன் ஆடுற கடைசி டூரா இருக்கணும். இதுக்கு அப்புறம் ஒரு பெரிய இன்டர் நேஷன்ல டூர் வருது
இல்லே?”
“யெஸ் சார்..ஆஸ்திரேலியா விம்பிள்டன்”
“யெஸ்.. அதுல கூட எடுத்த உடனே அவன் டூர்ல இல்லைன்னு சொல்ல கூடாது., உடனே
ஆல்டர்னேட் தேடுவான். சோ, லாஸ்ட் லேட் முடிஞ்சப்பறம் சொல்லனும். இல்லன்னு சொல்ல
வைக்கனும். மைன்ட் இட் “
‘..............”
“அது வரைக்கும் அவனும் நீயும் தான் ஆடறீங்கன்னு சொல்றோம். பிரஸ்ஸுக்கும்
சொல்றோம். கன்பார்ம் பண்றோம். ஆனா., லாஸ்ட் மினிட்ல உன் கூட பிளைட் ஏற போறது,. ரகு
இல்ல., ஷாம்.. அப்படி ஷாம் ஒத்து வரலன்னா,
நார்த்ல கிஷோர், திலீப் குப்தா அப்படி
யாராச்சும். இவங்கள்ள ஒருத்தர் தான் உன் கூட டபுள்ஸ் ஆட போறாங்க. அது
மட்டும் கன்பார்ம். நீ ரெடி ஆகிக்கோ. மைன்ட் செட் பண்ணிக்கோ. கீப் திஸ் அஸ்
சீக்ரெட். வி வில் ஸ்காரம்பிள் பாஸ்டர்ட் ரகு”
‘.................யெஸ் சார் ...”
“ அவனை கொஞ்சமா கொஞ்சமா தொல்லை கொடுத்து, ஒவ்வொரு கதவா அடைச்சி, இருட்டுல
தள்ளி, கடைசில மொத்தமா சாகடிக்கனும் ”
“........ பட் நாங்க புது ஜோடி
செட் ஆகி மேட்ச் ஜெயிக்கனுமே சார்? .”
“ அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. கமல். நான் ரொம்ப காயப்பட்டு இருக்கேன்.
நீ ஷிவானியை முடி., ஆஸி டூருக்கு ரகு செட் ஆகாதுன்னு சொல்லிட்டு, அவனை கை கழுவு.
என் கிட்டே இருந்து , இழப்பீடா பிப்டி லாக்ஸ் உன் அக்கவுன்ட்டுக்கு வரும்..”
‘......................சார்......”
“ அந்த ரகுவுக்கு கேரியர் காலியாகி, ஜாப் இல்லாம, அவன் வீட்டுக்குள்ளே செல்லாக்காசா இருக்கணும். மஞ்ச பைய தூக்கிட்டு அவன் ஊருக்கு போய் புல்லு புடுங்கனும்... சிட்டிக்கு வரவே கூடாது.
தன்னுடைய சோரம் போன பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு
முள் மேல படுக்கையாய் வாழனும். இதுதான் என் பிளான் கமலேஷ் எதுக்கு நீ ஹெல்ப் பண்ணனும் .”
“..................”
“இதுக்கு நீ ஹெல்ப் பண்ணினா உனக்கு ஆப் த ரெக்கார்டு நான் நிறைய ஹெல்ப் பண்ணுவேன். நான் சேர்மனா இருக்கற வரைக்கும் நீ தான் அடுத்த 10 வருஷத்துக்கு
தோத்தாலும், ஜெயிச்சாலும் செல்லபிள்ளை. ”
“ யெஸ் சார். ஆனால் என்னதான் இருந்தாலும் அவன் என் பிரண்டு ஒய்ஃப் அதான் தான் பார்க்கிறேன். “
“ஹஹஹா நீ ஷிவானியை நேர்ல
பாக்கல..இல்லே? பாத்தா இப்படி சொல்ல மாட்டே? கமல். எனக்காக நீ ஷிவானியை தொட்டு தான் ஆகணும். ரகு
வாழ்க்கையை சீரழிச்சு தான் ஆகனும். கமலேஷ் . ப்ளீஸ் டூ இட்”
அந்த நடுத்தர வயது அதிகாரியின் புலம்பலும் கோரிக்கையும் கமலேஷுக்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தது.
மனதில் ஒரு ஓரம் ரப்பர் போட்டு அழிக்கத் தொடங்கிய இளம் மனைவி
ஷிவானியின் முகத்தை டேபிளில் கிடந்த ஷிவானியின் கலர் புகைப்படம் மறுபடியும் மீட்டு உருவாக்கம் செய்த தந்தது.
அவன் ஆசையாய் அதை எடுத்தான். அருகே வைத்து
பார்த்தான்.