மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 20, 2023

NEXT NOVEL

 ஹாய் ரீடர்ஸ் !

எல்லாரும் மெயிலில் அடிக்கடி கேக்கும் ஒரு கேள்வி அடுத்த  நாவல் என்ன? எப்போ? என்பது தான்.,

எனக்கும் நிறைய சப்ஜெக்ட் எழுத ஆசைதான் .

அந்த இன்சூரன்ஸ், டிகெடிவ் கிரைம்,  ஹிஸ்டரி  ஜானர்  தவிர,  வித்தியாசமான 5, 6 திரைக்கதைகள் மைன்டில் உள்ளன.  

அவற்றை தனித்தனி பாகம் எழுதுவதற்கு பதிலாக ஒரே பைன்டட்  நாவலாக கன்டியூனிட்டியாக எழுதலாம்.  இது நான்கைந்து பாகங்கள் வரை  நீளலாம்.

அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சில குடும்பங்களின் இன் - அவுட்   ரிலேஷன்ஷிப்பில் நிறைய மூமென்டுகளை அட்டகாசமாக புது சூழலில்களில் இதுவரை இல்லாத திரைக்கதையில் எழுதலாம் என நினைக்கிறேன்.

தொடர்ச்சியாக வரும் விடுமுறையில் ஆடியோ ரெக்கார்டை பதிவு செய்து அதன் பின் அதை விவரித்து எழுத வேண்டும். அடுத்தமாதம் ஒரு பாகத்தையாவது ஃபினிஷ் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

எழுத்து ஃப்ளோவும்,  எழுதும் மூடும் இருந்தால் சீக்கிரமாகவே தருகிறேன். (ஆவலுடன் கேட்பவர்கள் , மனமுவந்து வாங்கவும் செய்தால் தான்,  எனக்கும் எழுத விருப்பமாக இருக்கும்).

அதற்கு முன், இந்த நாவலுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்? என்பதை  நீங்களே சொல்லுங்கள்.  

பொருத்தமான டைட்டிலை சொல்வோருக்கு இதன் எல்லா பாகங்களும் பரிசாக  அனுப்பி வைக்கப்படும். கமென்ட் அல்லது மெயிலிலும் சொல்லலாம்.  கமென்டில் மெயில்  ஐடியை தெரிவிக்க வேண்டாம். 

- என். வி

குறிப்பு : தயவு செய்து " குடியிருப்பு", "ரோஜா காலனி" என்றெல்லாம் பேர் சொல்லாதீர்கள். . 

ஏனெனில் இது வெறும் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை மட்டுமல்ல. 

 நாவலின் டைட்டில் கொச்சையாக, ஆபாசமாக இல்லாமல் சொல்லுங்கள்.