அந்த நாள் இரவு ஹரிஷ்க்கு கடினமாக கழிந்தது.
மறுநாள் காலை வாசு காட்டேஜில்..
' எங்க வெளியே போலாம் ன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தீங்க? மணி ஒன்பது ஆச்சு இன்னும் ரூம்ல என்னங்க பண்ணிட்டு இருக்கோம் " என ஷில்பா கேட்க.,
வாசு எப்படியும் ஹரிஷ் தனக்கு கால் செய்வான் என காத்திருந்தான் இப்படி ஒரு அழகான அப்சரஸ் பெண்ணை பார்த்த பிறகு அவளிடம் பேச ஏதேனும் ஒரு சாக்கு கிடைத்து., எதற்காவது தன்னை அவன் கூப்பிடுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் . அதனால் மெதுவாகத்தான் ரூமை விட்டு கிளம்ப வேண்டும்" என நினைத்துக் கொண்டிருந்தான் வாசு.
"பக்கத்தில் ஒரு ஏரி இருக்கிறதாமே போட்டிங் போகணும் என நச்சரித்துக் கொண்டே இருந்தாள் ஷில்பா இவனும் "இரு இரு" என்பதால் நேரம் கடத்திக் கொண்டே இருக்க .,
எதிர்பார்த்தபடி ஒன்பதரை மணிக்கு போன் செய்தான் ஹரீஷ் .
"ஹலோ சார் சொல்லுங்க சார்"
" பிரேக்பாஸ்ட் ஆயிடுச்சா வாஸ்?"
"ஆச்சி சார்..உங்களுக்கு? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா சார்?"
" எனக்கு ஒன்னும் வேணாம் . நான் லேண்ட் பார்க்க போறேன் ஒரு புது பிராஜக்ட்டை பாண்டிச்சேரி லாஞ்ச்ச் பண்ணலாம்னு இருக்கேன் . முதலில் நமக்கு சைட் பிடிக்கணும் நீங்க ப்ரீயா இருந்தா வரீங்களா ? சாசி ஐ ஆம் டிஸ்டர்பிங் யூ " என்றான் ஹரிஷ்
"ஒன்னும் பிரச்சனை இல்ல சார். நான் வரேன் சார்"
" உங்க கூட உங்க ஒய்ப் இருப்பாங்களே"
" யெஸ் சார்..ஷில்பா தனியா ரூம் இருபப.. அதான் யோசிக்கிறேன் "என்று சொல்ல
"சாரி சாரி எனக்கு புரியுது நீங்க பர்சனலா ஃபேமிலி டூர் வந்து இருக்கீங்க நான் உங்களை தொந்தரவு பண்றேன் சரி ஓகே நோ ப்ராப்ளம் யூ கேரி ஆன் நான் பாத்துக்குறேன் "என சொல்ல
உடனே வாசு "சார் பரவால்ல சார் நான் வேணா அவளையும் கூட்டிட்டு வந்துட்டு மூணு பேரும் போலாமே .சார்" என்ரான்.
" உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்ன அப்படியே செய்யலாம் வாசு" ஹரீஷ் சொல்ல.,
வாசுவுக்கு அது ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது.
ஹரிஷ்ஹும் ஜெவ்வெனபறந்தான்.
இரவு வெளிச்சத்தில் பார்த்த அந்த அற்புதமான அழகிய இளமையை பகலில் பார்க்கலாம் என நினைத்தான்
"உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே " என்றான் ஹரிஷ்
"சரிங்க சார். நான் பார்க்கிங்க்ல வெயிட் பண்றேன் சார் " என்றான் வாசு
"ஓகே " என சொல்லி போனை வைத்தான் ஹரிஷ்
"என்னங்க நம்ம போட்டிங் போலாம் ன்னு சொன்னீங்க இப்போ சைட் போலாம் அங்க போலாம் கூப்பிடுறீங்க" என்றாள் ஷில்பா
" அவரு கிட்ட எல்லாம் நான் பேசணும்னா வே நாலஞ்சு ஆபீஸர் தாண்டி தான் பேச முடியும் இப்ப என்னன்னா அவரே என்ன பர்சனலா வா என கூப்பிடுறாரு இந்த சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண முடியுமா அவர் கூட எனக்கு இருக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு . இது எவ்வளவு பெரிய விஷயம் இது தானா அமைத்த வாய்ப்பில்லையா? இதனை பயன்படுத்திகிட வேண்டாமா? இது என் கேரியருக்கு ரொம்ப உதவும் ஷில்பா" என சொன்னான்.
" நீங்களும் அவரும் பிசினஸ் பேசிக்கொண்டே வருவீங்க . நான் கூட உக்காந்தா போர் அடிக்குமே “ என்றாள்.
"நோ நீயும் வா"
" நான் வேணா இங்கே இருக்கிறேன் நீங்க போயிட்டு மதியம் வாங்க மதியத்துக்கு மேல போட்டிங் போலாம்" என கேட்டாள் ஷில்பா .
"ஐயோ அது நல்லா இருக்காது நீ வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன் . அப்புறம் அவர் தப்பா நினைச்சிக்க போறாரு " என்றான்
அவளுக்கு வெளியே போக சம்மதம் தான் ஆனால் ஹரீஷ்ஷை நினைத்துதான் அவளுக்கு கூச்சமாக இருந்தது நேற்று இரவில் ரெஸ்டாரண்டில் நன்றாக வெறிக்க வேடிக்கை பார்த்து சைட் அடித்தவன் அவன் அவன் காரில் அவனுடன் நாம் பயணம் செய்வது என்பதே ஒரு அண் ஈசியாக இருக்குமே என நினைத்து யோசித்தாள் .
ஆனால் வாசுவும் அவளை வலுக்கட்டாயமாக அவளை ரெடி செய்து அழைத்து வந்தான்
To continue this story
திரும்புடி பூவை வைக்கனும் 25 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2 Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 16 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 17 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 18 - Available in Amazon
திரும்புடி பூவை வைக்கனும் 19 - Available in Amazon