"ஏய்ய் "
சக்திவேல் மிரண்டான்.
"என்னடா சக்திவேல்..? "
"ஏய் யார்யா நீ ?" சக்திவேல் கோபமாக கத்த
"என்னடா என்னை மறந்துட்டியா? டென்னிஸ் கிளப்
மீட்டிங்க்ல உன்னை போட்டு உதைச்சேமே?"
"..............."
"என் அடியை கூடவா மறந்துட்டே நீ?"
"ஏய்ய்ய் யார்ரா" அவனுக்கு சட்டென
விளங்கவில்லை.
"சரி மறுந்துருப்பே? அஞ்சு வருசம் ஆச்சுல்லே? " என் பேரு ரகுபதி.
விஜி மேடத்தோட, அதான் இவங்களோட மருமகன்"
"இவங்க மருமகனா நீ? இங்க என்ன பண்றே ஆடிஷன்ல? வெளியே போய் வெயிட் பண்ணு. நான் அனுப்பி வைக்கிறேன்.
வெளில போ" சக்திவேல் திமிராக சொல்லிவிட்டு
சேரில் போய் உட்கார்ந்தான்.
"ம் மருமகன் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனா இன்டர்மீடியேட் டென்னிஸ் கிளப் பிரசிடென்ட் நான் என் பேரு ரகுபதி பாஸ்கரன் டென்னிஸ்
பிளேயர்."
" எ..என்னது"
"உனக்கு அப்படி சொன்னா தான் நான் தெரியும். ஏன்னா நந்தனம் ஒய் எம் சி ஏ
கிளப்புல உன்னிய கூப்ட்டு வெச்சி வெச்சி ஓட ஓட உதைச்சேமே. அந்த லேடீஸ் மேட்டர்ல?"
சக்திவேலுக்கு ஞாபகம் வந்தது. வெளீறி போனான். மறக்க
முடியுமா அந்த அடியை.. யப்ப்பா...
ஆனால் விஜி எதிரில் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
"ஏய்ய் நான் யாருன்னு தெரியாம பேசுறீங்க" ரகு
சொல்ல, சக்திவேல் முகத்தை புருவத்தை சுருக்கினான் .
"ஓ கேள்விப்பட்டு இருக்கேன். ரகுபதி. நீ ..
நீங்க டென்னிஸ் பிளேயர். சாரி சார்.. உங்க
பேமிலியா இது?" அவனுக்கு உள்ளுர திகைப்பு. அவசரப்பட்டு விட்டோமோ? இவன்
காட்டானாச்சே.
போன் காமிராவை ஆன் செய்து மாமாவின் சட்டையில் வைத்து
விட்டு, ரகு அருகே வந்தான். அய்யோ என்ன செய்ய போகிறான். எனது திடீர் ஆசை நாயகி
எதிரில்? அய்யோ..
"தம்பி.
இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன் மேடம். டான்ஸ் கேட்க வந்தாங்க., அதுதான் ரிகர்சல், ஆடிஷன் பாத்துட்டு இருக்கேன்"
" ஆடிஷன் பாக்குறதுக்கு நீ என்ன பெரிய புடுங்கியா
? சபாவுல டேட் இருக்கா இல்லையான்னு சொல்லு. ஜட்ஜஸ் கூப்பிடு. அவ்வளவு தான்டா நாயே உன் செக்ரட்டரி வேலை. அதை விட்டுட்டு என்னடா
பேசுற?"
"ஏய்ய் நாயே கீயே என்று சொன்னா மரியாதை அவ்வளவு தான்.
நான் யாருன்னு தெரியாம பேசாத தம்பி"
"டேய் வேலு.., நீ யாரு, இந்த சபாவை வைச்சி நீ என்ன என்ன பண்ற? இந்த
போஸ்ட்க்கு நீ எப்படி வந்த? நீ எவ்வளவு கேவலமான டம்மி பீஸ்? ரங்கான்னு ஒரு
அப்பாவியை எப்படி ஏமாத்துனே? ன்னு உலகத்துக்கு தெரியாம இருக்கலாம் . எனக்கு தெரியும்.
நான் இதே கிண்டியில் தான் வாழ்ந்து பழம்
தின்னு கொட்டை போட்டிருக்கேன்."
"ஓ அவ்வளவு தூரத்துக்கு பேசுறியா? மூணு பேரும் வெளியே
போங்க., யாருக்குமே சான்ஸ் கிடையாது."
" நீ என்னடா மயிறு சான்ஸ் கொடுக்கிறது? ஒரு டான்ஸ் பர்சனாலிட்டி செலிபிரிட்டி வந்தாங்கன்னா,
அவங்கள பிராப்பரா கைடு பண்ணி, டேட் அலாட் பண்ணி , ஆடிஷன்ல் செலக்ட் பண்ணி, ஈவன்டை ப்ரோமோட்
பண்றது மட்டும் தான் உன் வேலை. நீ ஒரு சாதாரண கோ-ஆர்டினேட்டர். அதை விட்டுட்டு இந்த
மாதிரி பர்சனலா ரூம்ல கூட்டி வைச்சி.. முன்ன பின்ன திரும்பி பார், திரும்பி காட்டுன்னு
சொல்றதெல்லாம் எவ்வளவு அதிக பிரசங்கி வேலைடா
பிராடு. ? "
ரகு மிரட்ட, சக்திவேல் .," இப்ப நீங்க மூனு பேரும் என் ரூமை விட்டு போகலன்னா., போலீசை
கூப்பிடுவேன்.."
"கூப்பிட்றா போலீசை.. பிராடு நாயே., நீ பண்ண வேலையெல்லாம்
என் மாமா ரகசியமா கேமரால சூட் பண்ணி இருக்காரு. த்தா உன் வேலையெல்லாம் அதுல பதிவாகிருக்கு. நீ மட்டும்
இருக்கிற அந்த வீடியோவை நாங்க வெளியே விடறோம். நாறட்டும்"
"தாராளமா பண்ணு தம்பி, எனக்கும் அதான் வேணும் , நானும் பாப்புலர் ஆவனும்
இல்ல? அப்படியே இந்த அம்மாவை கீழிருந்து மேல
காட்டு . இன்னும் பாப்புலர் ஆகும்" என அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில்
பலமாய் அறைந்தான் ரகு.
திடீர் அடி , இடியாய் இறங்கி அவன் கண்ணுக்குள் நட்சத்திரங்களை பிளக்க.,
"அய்யோ..ஆஅஆ ஏய்ய் என்னையா அடிக்கிறே.?"
அவன் கன்னத்தை பிடித்து கொண்டான்.
".இங்க பாரும்மா விஜி மேடம்.. என்ன அடியாளை
கூட்டி வரியா?"
"அடியாளா? எங்க மருமகன் அவர்" விஜி சீற.,
"நீங்க கிளம்புங்க. உங்களுக்கு சான்ஸ் இல்...
" அவன் சொல்லி முடிப்பதற்கு முன் அவன் தாடையில் பலம் கொண்டு இன்னொரு அடி அடித்தான்
ரகு.
"ஏய்ய் " சேரோடு சக்திவேல் பின்னால்
போனான்.
மறுபடி டேபிளில் எட்டி மார்பில் ஒரு குத்து விட்டான்
ரகு.
"அய்யோ.." சக்திவேல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிய., எட்டி அவன்
சட்டையை பிடித்து முன்னால் இழுத்து போட்டான் ரகு. டேபிளில் இருந்த பொருட்கள்
எல்லாம் உருண்டு சிதறின.
"அய்யோ விட்றா என்னை?" சக்திவேலை அலுக்காக
தூக்கி தரையில் போட்டான்.
அவனது ஆறே கால் அடி உயரம் தொன்னூத்து சொச்ச கிலோ
எடைக்கு முன்னே சக்திவேல் கோழிகுஞ்சாய் சுருண்டு விழ.., அவனை தூக்கி நிறுத்தி..,
"த்ததா. இந்த அடி சான்ஸ் இல்லன்னு சொன்னதுக்கு
இல்ல..எங்க அத்தையை பேர் சொல்லி கூப்டத்துக்கு,." பளார் என இன்னொரு அறை.
தொடர்ந்து கன்னத்து எலும்பில் ஒரு குத்து.. கிடந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி
ஆட்டினான்.
"ஆஆஅ அய்யோ" அவன் அலற., அந்த விசாலமான அறை
ரகுவுக்கு விளையாட மிகவும் வாட்டமாய் இருக்க. சரிந்து கிடந்தவனை உலுக்கினான். நம்
மாப்பிள்ளை இவ்ளோ கோவக்கரனா? பரசுவும் திணறிக் கிடக்க.,
"விட்றா.. " அவனை திருப்பி அடிக்க அந்த
வியூகமும் அமைக்க தெரியாத சக்திவேல் காற்றில் கையை வீச, அவனது கையை முறுக்கி சுவற்றி
போய் தள்ளினான்.
இவ்வளவு நாள் இதே சபாவில் வெட்டிப் பந்தா, செல்வாக்கு இருந்த சக்திவேல், காட்டான் ரகுபதியின் ஒரே ஒரு
அடியில் நிலை குலைந்தான். அய்யோ என
கெட்டகாலம் இது? நமது கேபினில் நம்மை வைத்து இப்படி மிதிக்கிறானே.
" ஐயோ சார் விட்டுடுங்க விட்டுடுங்க "
" ஐயோ மாப்பிள்ள வேணாம் விட்டுடுங்க. நாயி
பொழைச்சிட்டு போறான்" விஜி அவனை தடுக்க பார்த்தாள்.
" அத்தை! நீங்க சும்மா இருங்க அத்த . இந்த மாதிரி
நாய்ங்க தான் எல்லா இடங்களிலும் உட்கார்ந்துகிட்டு எவ கிடைப்பாளோனு அலையுறானுங்க"
என சொல்லி மறுபடியும் அவன் முதுகில் ,
கழுத்தில்; உதைக்க அவன் சுவற்றோடு சரிந்து விழுந்தான்.
அப்படியும் ரகு அவனை விடவில்லை.
"மாமா காமிரால இவன் மூஞ்சு மட்டும் தானே
தெரிது?"
"ஆமா ரகு"
"இவனையே ஃபோகஸ் பண்னுங்க"
ரகு, சக்திவேல் தூக்கி நிமிர்த்தி இடுப்பில் எட்டி உதைக்க
நான்கு ஐந்து அடி தூரம் சக்திவேல் பறந்து போய், சுவற்றில் நிலைகுலைந்து போய் குப்பையாய்
விழுந்தான். பரசு கச்சிதமாய் படம் பிடித்தார்
"ஆஅ...அஅய்யோ"
இனி அவன் எழுந்திருக்க முடியாது என்னும் பட்சத்தில் அவனை
மறுபடியும் எழுப்பி அவனது சட்டையை டார் டாராக கிழித்தான்.
"அய்யோ விட்டுடுங்க" அவன் ஈனஸ்வரத்தில்
அலர,
"மன்னிப்பு கேள்றா" ரகு கடும் கோபத்தில் இருந்தான்.
கண்கள் சிவந்து போய் இருந்தான்.
"சா...சாரிங்க..க"
விஜியின் காலை தொடப் போனான்.
"டேய்ய் தொடாம கேள்றா"
"மேடம்.. மன்னிச்சிடுங்க மேடம்..விட
சொல்லுங்க"
"த்தா.. " சரமாரி அடிகள் ..உதைகள் ,
மிதிகள்
"நாயே , குடும்பத்து பொம்பளை சான்ஸ் கேட்டு
வந்தா, கைய தூக்க சொல்லியாடா பார்க்கிறே? இனி நீ உன் கையையே தூக்க கூடாதுடா "
அவன் கையை மிதிக்க, படக்கெனெ ஏதோ ஒன்று முழங்கையில் முறிய.
"அய்யோ.. என்ன மன்னிச்சிடுங்க...அம்மா ஆஆ"
:என் அத்தை உனக்கு சுடி போட்டு., லெக்கிங்க்ஸ் போட்டு
உனக்கு முன்னாடி வந்து நிக்கனுமா?"
"மாப்பிள்ள போதும், அவனை விட்டுடுங்களேன்.. செத்து
கித்து தொலைக்க போறன். விஜி அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள்.
"பாக்கறீங்களே.! வந்து பிடியுங்களேன் இவரை"
அவள் புருஷனை உதவிக்கு அழைத்தாள்.
அப்படியும் ரகு இன்னும் விடாது, மாறி மாறி அவனது கன்னத்தில் அறைந்தான்.
"எனக்காக விட்டுடுங்க. இனி சபாவும் வேணாம்.
டான்சும் வேணாம்... ப்ளீஸ் எனக்காக விட்டுடுங்க" விஜி , கோபத்தில் இருந்த ரகுவை அசையவிடாமல்
பிடித்து பார்த்தாள். ம்கூம் முடியவில்லை.
"அப்படியெல்லாம் விடக்கூடாது அத்தை. என்னை
விடுங்க. இவனை பொளக்கனும்.."
சக்திவேல், கன்னம்
வீங்கி, ரத்தம் கட்டி, அதற்கு மேல் அவன் அடியே தாங்க முடியாது என்ற போது, அவனது தலைமுடியை
இழுத்து பிடித்து தரதர வென இழுத்துக் கொண்டு போய் அவனது சீட்டில் உட்கார வைத்தான்.
"இப்ப சொல்றா, எங்களுக்கு டேட் கிடையாதுன்னு "
"ஸார்..சாரி சார்.." அவன் கை கூப்ப
" அஞ்சு வருசம் முன்னாடி, இப்படி தான் என்னோட
பிரண்டு டென்னிஸ் வுமன் பிளேயர், இந்த சபாவில
ஈவன்ட் நடத்த உங்கிட்ட வந்து டேட் கேட்டா .,படுக்க கூப்ட்டது நீ தானே?"
அவனது விரல்களை பிடித்து பின்னோக்கி மடக்கினான்.
"ஆஆ அய்யோ..தப்பு தான், தப்பு தான்'.. அவன் அலற,.
அவன் கத்துவதை பார்த்து விஜி ஓடி வந்தாள்.
"அச்சோ விடுங்க ரகு. சொன்னா கேளுங்க " விஜி முடிந்த மட்டும் அவனை பிடித்து இழுக்க
பார்க்க. ம்கூம் முடியவில்லை.
"கடவுளே பெருசா ஏதாச்சும் பிரச்சனை வரபோவுது..
அவனை விடுங்க" அவன் மார்பை முட்டி தள்ள, அவனை அசைக்க கூட விஜியால்
முடியவில்லை. பரசுவும் அவனை விலக்கி விட முயற்சித்தாள்.
" அய்யோ
பிரச்சனை ஆகப் போவுது. விடுங்களேன்.... ப்ளீஸ்"
"ஆகட்டும் அத்தை பாத்துக்கலாம்.. இவனலலாம் ஒரு
ஆளா மாமா. "
"........அய்யோ அம்,மா"
"அப்பவே இவனை டிராப் வெச்சு புடிச்சி, நந்தனம் ஒய் எம்சிஏ கிரவுண்டுக்கு இவளை கூப்ட்டு
வெச்சி உதைச்சோம்..டேய்ய்ய் ஞாபகம்
இருக்கா?"
'இ இருக்கு சார்.........."
"....... அப்பவும் நீ இப்டி தான் கை கூப்பி
மன்னிப்பு கேட்டே? ராஸ்கல் திருந்தவே இல்லடா நீ?"
"ஆஅ..ஆஆஆ.. விட்டுடுங்க சார்"
.ஒரு குடும்பத்திடம் முன்னாடி, அதுவும் தனக்கு பிடித்த
ஒரு பேரழகு பெண்ணின் முன்னால் மரண அடி வாங்கிய சக்திவேலால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
'நாம் இன்று கொஞ்சம் ஓவராக போய் விட்டோம். ஒரு பெண் வந்தால் அவள் யார்? எப்படிப்பட்ட பின்னணி?
என்பது எதுவும் விசாரிக்காமல், அத்துமீறி நடந்தது தன்னுடைய வெறும் தவறுதான். என அவனது
மூளை அவனுக்கு தாமதமாக உணர்த்த சக்திவேல் அவனை அவன் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?
என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனை அடி மிச்சமிருக்கோ?
இவனது காலில் விழுந்து கூப்பி மன்னிப்பு கேட்கலாம் ஆனால்
அது மிகவும் கேவலமான பொழப்பாகிவிடும்.
இந்த பரசு
மாமா அதையும் வீடியோ எடுத்து போடுவான் போல இருக்கிறது. புருஷன் சாப்டு தான். ஒன்னுமே
சொல்லல. ஆனா இந்த அழகான சந்தனச்சிலைக்கு இப்படி ஒரு காட்டான் மருமகனா?
'இதுவரைக்கும் நீ வாங்குன அடி எல்லாம் வீடியோவா இருக்குது
அதெல்லாம் வெளியே வரலாம். அது வராம இருக்கணும்னா, மரியாதையாக இருக்கிற தேதியில பெஸ்ட் தேதியை இவங்களுக்கு
அலாட் பண்ணு."
"சார்ர்ர் ஆடிஷன்.."
"அடிங்... இந்த ஆடிஷன் ஜோடிசன், மயிறு எல்லாம் ஒன்னும் இவங்களுக்கு
கிடையாது. டேட்டை சொல்றா. கேநா புனா.."
"சார்.."
"த்த்தா இருடா,, வர்ற 17 ஆம் தேதிக்கு மேடம் டான்ஸ் ஆடுறாங்க. கன்பர்ம் பண்ணிட்டு,எனக்கு
கால் பண்ணு.. இந்த என் கார்டு. இந்த நம்பருக்கு கால் பண்றேன் .கால் பண்ணல வச்சுக்க..
நீ இதுவரைக்கும் பண்ணின எல்லா மேட்டரையும் குழிதோண்டி எடுப்பே. ஓடவும் முடியாது, .
ஒளியவும் முடியாது., இன்னொரு மேட்டரையும் கையில எடுப்பேன். சொல்லட்டா?'' என சொல்லி
"அத்தை, மாமா நீங்க இரண்டு பேரும் வெளியே இருங்க"
என சொல்ல, அவர்கள் தலை ஆட்டிவிட்டு வெளியே நகர, அவன் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தான்.
"அத்தை. உங்களுக்கு 17 கன்பர்ம் ஆகிடுச்சி. டைரக்டா
ஸ்டேஜ் பெர்மான்ஸ்.. கலக்குங்க"
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "