மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 19, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 70

 திடீரென ஷோபனாவை பார்த்த மகிழ்ச்சியில் விளைந்த அடக்கம் முடியாத உணர்ச்சி பெருக்கில் தத்தளித்தான் குரு.

 “ நீ நீ நீங்க   நீங்களா?”

அவன் பேச்சு வராமல் தவித்தான் .

‘அட ஷோபனா வந்துவிட்டாளா? என் கவியரங்கத்தை கேட்டு விட்டாளா? அவனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. பெருமானே உனக்கு நன்றி! ஆஹா என்ன ஒரு  திருப்பம்? அம்மா  சொன்னது போல.,

ஐயோ என் மனம் கவர்ந்த பெண்மணி இருக்கிறாளே?  யார் கண் எதிரே யார் முன்னே நான் இந்த கவிதையை வாசிக்க வேண்டும் என நினைத்தேனோ, அந்தப் பெண்ணா? என அவன் ஆச்சரியத்தில் உச்சியில் சென்று விழிகள், விரிய பேச்சு வராமல் அவளையை பார்க்க, அவள் புன்சிரிப்புடன் கை நீட்டி அவனை அமர்த்தினாள்.

ஷோபனா எதுவும் பேசாமல், மெல்ல்லிய புன்னகையுடன் அவனுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள். திரும்பி போனாள்.,

“ஏங்க.. ஏங்க....” கூட்டத்தின் கூச்சலை மீறி அவன் கத்தியும்,

அவள் செவி மடுக்காமல்,  அந்தக் கூட்டத்தை விட்டு விலகினாள். ஓர் இருமுறை அவனை பின்னால் திரும்பி பார்த்தாள். அவன் அவளையே பார்த்தபடி அதற்கு பின் வந்த பல பேருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

அவள் எங்கே ?”தனது விழி வட்டத்தை தாண்டி போய்விடப் போகிறார்களோ என்ற பதைப்பு அவனுக்கு இருந்தது. ஆனால் அப்படி எல்லாம் அவனை அவள் அல்லாட வைக்கவில்லை.

 அவன் கண்ணெதிரே படும்படி ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.எல்லாவற்றையும் முடித்துவிட்டு  சாவகாசமாக வா’ என்பது போல இருந்தது அவளது செய்கை .

அவன் வேக வேகமாக அவளை நோக்கி சென்றான் .

ஹாய்ய் நீ நீங்க ?”

நீ நீங்கதான் நான் நாங்கதான்என சொல்லி மறுபடியும் ஷோபனா  சிரித்தாள். ஒரு பெண்ணின் சிரிப்பு இப்படி சினுங்கல் சங்கீதமாக ஒலிக்குமா என்ன?

பைதிபை..  ஐ யாம் ஷோபனா”

“ நான் குருமூர்த்தி ..அப்பா பேரு ஆராவமுதன். அம்மா ரிட்டையர்ட் புரபசர், குயீன் மேரீஸ் காலேஜ். சென்னை” அவன் கடகவென ஒப்பிப்பதை கண்டு  நாணத்துடன் சிரித்தாள்

“ நான்  ஸ்ரீரங்கம்’

“ஓ  ஐ சீ.. ’

“ ரொம்ப நல்லா இருந்துச்சுங்க உங்க கவிதை

‘............”

இந்த காலத்துல கவிதை எழுதுவது ரொம்ப குறைஞ்சு போச்சு. அதுவும் நீங்க ராமாயணத்தை கவிதையாக எழுதி இருக்கிறது என்றது ரொம்ப ரொம்ப புதுசாவும் இருக்கு,  வாலி சார் விட உங்க டெம்ப்ளேட் ரொம்ப கிரிஸ்பா இருந்துச்சு. மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கு,”

“தேங்ஸ்ங்க., “

“ராமாயணத்தில் எனக்கு நான் படிச்ச பல பாகங்களை  உங்க கவிதையா படிக்கிறப்போ ரொம்ப சந்தோசமா இருந்தது”

“...........“தேங்ஸ்ங்க., “

“ யூ ஆர் சோ ஜீனியஸ்..”

‘........அய்யோ நீங்க வேற”

“ இல்லங்க .

இந்த வில்லில் யாரும் நாணேற்ற வில்லை.

எனவே தான் சீதாவை  மண மேடையில் நான் ஏற்ற வில்லை.

வாவ்வ் .ரெம்ம டிஃபிகல் கன்டென்ங்க. தட்ஸ் ஒன் ஐ செட் .யூ ஆர் சோ ஜீனியஸ்.. தமிழ்ல என்ன படிச்சிருக்கீங்க. குருமூர்த்தி

“தமிழ்லாம் இல்லங்க., எம் காம், ஐ சி டபிள்யூ”

அவர்கள் பரஸ்பரம் படிப்பு, வேலை விவரங்களை பரிமாறிக் கொண்டார்கள்.

இன்னிக்கு நீங்க எப்போ வந்தீங்க ?’

நீங்க அரங்கேற்றத்தில் போய் மேடையில் உட்கார்ந்த உடனே நான் வந்துட்டேன்”

“அய்யோ.. இது தெரியம .. நீங்க வரலன்னு நான் மக்கு மாதிரி தவிச்சிட்டேன்’

“என்னது?”

“ நிஜமா சொல்லனுமுன்னா ஷோபனா ,  நான் உங்களை  மூனு மாசமா”

“ எ.எல்லாம் தெரியும்., மூணு மாசம் பின்னாடியே சுத்துறீங்க”

“எண்னது?” அவன் திடுக்கிகிட்டான்.

ம்ம் அப்பப்ப நான் காணாமல் போயிடுறேன், மறுபடியும் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது உங்களுக்கு  ஒரு ஷாக்’  என்ற போல ஒரு அதிர்ச்சி வருது  பேசனும்னு தவிக்கிறீங்க. ரைட்? “

‘..................”

‘மூணு மாசமா உங்களை தொடர்ந்து நானும் கவனிச்சுட்டு தான் வரேன்.”

அய்யோ ., நான் உங்க வீட்டுக்கு.. ஒரு தடவை”

தெரியும் தெரியும் ஒரே ஒரு தடவை நான் யாரு./, எந்த வீடு என்று பார்கக் ஸ்கூட்டி பின்னாடியே வந்தீங்க? மடிப்பாக்கம்  லஷ்மி நகர் வரைக்கும் வந்தீங்க? பைக் அங்கங்க நிறுத்தி நிறுத்தி வந்தீங்க .அதுவும் தெரியும்.

’..................”

ஆனா கண்டிப்பா உங்கள சட்டை பிடிச்சி கேள்வி கேக்க தான் நினைச்சேன்”

ஐயய்யோ

ஆனா ஒரே ஒருமுறை மட்டும் வீடு எங்க இருக்குன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் நீங்க  பின்னாடி வர்றதே இல்லை. சோ நீங்க ஒரு ஜென்டில்மேன் தான் இருக்கணும்னு நினைச்சேன். ஏன்னா,  இந்த மாதிரி நிறைய பேரு சுத்துவாங்க, டக்குனு வழியில நிறுத்தி பேசுவாங்க, பிடிச்சிருக்கா? இல்லையா இப்பவே சொல்லு. அப்படின்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு தெரிஞ்சுகிட்டு போயிடுவாங்க , ஆனா நீங்க எதுவுமே சொல்லாம இதயம் படம் முரளி மாதிரி சுத்த ஆரம்பிச்சீங்களா? சரி எவ்ளோ நாள் தான் இவர் சுத்துறார்ன்னு தெரிஞ்சக்கரதுக்காக நானும் எதுவும் பேசாமல் இருந்தேன். “

’................”

ஆனா இப்போ உங்களுடைய  கவிதை திறமை பார்த்த பிறகு தெரிஞ்சது நீங்க ஒரு அப்பழுக்கற்ற ஆத்மாஎன அவள் சொல்ல உள் மகிழ்ந்தான்.

 உணர்ச்சி பிரவாகத்தில் எதை சொல்ல வேண்டும் என முடிவு செய்ய முடியாமல் தவித்தான்.

உங்களுக்கு..” அவன் இழுக்க

என்ன எனக்கு மேரேஜ் ஆயிடுச்சா ன்னு  கேட்கிறீங்களா ?”

அவன் அதற்குப் பின்பு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

என் முழு பேரு ‘ஷோபனா ராமநாதன் , நடுவுல கொஞ்ச நாள் ஷோபனா கண்னன்னு இருந்தது, ஜஸ்ட் கொஞ்ச நாள் தான், அகெய்ன் இப்ப ஷோபனா  ராமநாதன் ஆயிடுச்சு என்றால் சூசகமாக.

“மேடம்....:” அவன் அதிர்ச்சியாக,

இங்க பாருங்க. என்னை ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு பிடிச்சிருக்கு ,உங்களுடைய கண்ணியம், அணுகுமுறை ,கூச்ச சுபாவம், இதெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு. அதிலும் இப்ப நீங்க வாசிச்ச தமிழ் அழகுக்கு பொம்பளைகளுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும் .

“.......”

ஆனால் இந்த சினேகத்தை இத்தோட நிறுத்திக்கிறது நல்லது’ ன்னு நினைக்கிறேன். சோ.,  திரும்பத் திரும்ப என் மேரேஜ் பத்தி கேட்காதீங்கஎன அவள் சொன்னபோது அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டிருக்கிறது என்பது அவனால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது .

அவன் இதயம் சுக்கு நூறாகி  உடைந்து கொண்டிருந்தது.

கல்யாணம் ஆயிடுச்சின்னா, ஆயிடுச்சுன்னு தான் அர்த்தம். ஆகவில்லை என்றால் ஆகவில்லை தான் அர்த்தம். எனக்கு கல்யாணம் ஆயும் ஆனா போல தான் இதுக்கு மேல எதுவும் கேட்க வேணாம் .பட் எப்பவும் இதே போல உங்ககிட்ட பேசுவேன், சிரிப்பேன். நட்பா இருப்பேன். இந்த கோவிலுக்கு வந்தா நம்ம அடிக்கடி சந்திக்கலாம்” என சொல்லிவிட்டு சென்றவள், நின்று

கோயில்ல மட்டும் தான்” என்றபடி போய்விட்டாள்

 அவனுக்கு இந்த வெற்றியை கொண்டாடுவதா? அல்லது இது வெற்றியா? என்பது புரியாமலேயே வெகு நேரம் கோயிலின் வாசலில்  நெடு நேரம் உட்கார்ந்து இருந்தான்.

 கூட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்து, இரவு மணி எட்டாகும் வரை அங்கேயே உட்கார்ந்து இருந்தான்.

சே.. இருந்திருந்து நம்மை ஈர்க்கிற நமது ரசனையை தெரிந்து கொள்கிற மிகவும் அழகான ஒரு பெண்,  தானாகவே தன்னை பற்றி நம்மிடம் எல்லாம் சொல்லிவிட்டாள்.

 ஆனால் அவளை தொடர்வதா? அவனும் ஏற்பாளா? என்று எதுவுமே தெரியாமல் இருக்கிறது. இந்த பெண் மட்டும் எனக்கு கிடைத்துவிட்டால் எனது வாழ்வில் நான் முழு திருப்தி உடையவனாக ஆவேன்.

“ஆனால், கல்யாணம் ஆகிவிட்டது’ என்கிறாள்.  அப்படி என்றால் விவாகரத்து ஆனவளா? விவாகரத்து ஆனவளை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?  வீட்டில் பெற்றோர்கள் ஏற்பார்களா ?நிச்சயம் ஏற்பார்கள்? இவள் என்னை நேசிக்கக் கூடியவள் .என் குடும்பத்தை நேசிக்க கூடியவள் .எனது பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த கல்யாணத்தில் அவளுக்கு ஏதோ ஒரு மனச்சிக்கல் இருக்கிறது. ஒருவேளை அது அவருடைய திருமணமாக இருக்க வேண்டும். திருமண மட்டும்தானா? அல்லது குழந்தைகள் இருக்கிறதா? என்று தெரியவில்லை ஒருவேளை குழந்தைகள் இருந்தால் என்ன? இந்த தங்க விக்கிரகத்துக்கு பிறந்த குழந்தைகளை சீரட்ட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 ஊரே மெச்சும்  பேரழகு உடையவளாக இருந்தாலும் அவள் முகத்தில் லேசான சோகம் அப்பி கிடக்கிறது. புன்னகையில் வறட்சி தெரிகிறது .ஆனால் என்னை பாராட்டிய பாராட்டில் உண்மை தெரிகிறது.

\ நான் பேச வருவேன்\ என்பதற்காக  கூட்டத்தை விட்டு விலகி அவள் காத்திருந்தது எனக்கு பிடித்திருக்கிறது .

ஆஹா என்ன பெண் இவள்? என்னால் விட்டுவிட முடியுமா ? கல்யாணமானவள் என்பதற்காக நான் விலகி விட முடியுமா? எப்படியாவது பெற்றோரிடம் சொல்லி சம்மதத்தை வாங்கி விட வேண்டும். இவளை மறுபடியும் எங்கே என்று தேடுவேன்? நாளை வரட்டும் பேசி விடுகிறேன்” என்றபடி அவன் வீட்டுக்கு உற்சாகமாக கிளம்பினான்.

மறுநாள் அவள் வரவில்லை. பெருத்த ஏமாற்றம் கோயிலில் இன்டு இடுக்கெல்லாம் தேடி  அலைந்து அவள் இல்லாத சன்னதியில் இலக்கில்லாமல் திரிந்து உட்கார்ந்து எழுந்து ஒரு வழியாக வீட்டுக்கு போக கிளம்பினான்.

அவனது  பைக்கை தேடி போக அவனது பைக்கில் சாய்ந்தபடி நின்று இருந்தாள் ஷோபனா.

 


கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற:




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com