மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 19, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 69

 

 டெல்லியில் அவனது  கன்ட்ரி சி.இ.ஓ வின், மனைவி கூட ஒரு முறை ‘ ‘குருமூர்த்தி டெல்லி வந்தா, ஒருமுறை  வீட்டுக்கு நேர்ல வா உன்ன  பாக்கணும், உன்கிட்ட பேசணும்என சொல்லிவிட்டு சென்றாள்.

 அவன் அதை ஏதும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை . அவன் டெல்லிக்கு போன போது ரொம்ப ஞாபகமாக அவளுக்கு போன் செய்ய,

இல்ல  குரு.. இப்ப வேணாம்  அவர் வீட்டுல  இருக்கார். அவர் போகட்டும்”  என அவள் ரகசியமாக சொல்ல,  இவனுக்கு தூக்கி வாரி போட்டது.

“நம்முடைய பாஸ் இல்லாத டைமில், அவளை போய் பார்த்து என்ன பேசுவது? ””  என அவன்  திகைத்து கொண்டிருக்க,  ஒரு மணி நேரம் கழித்து

அவளே லைனில் வந்தாள்’ “ம்ம் குரு.... இப்ப நீ வரலாம்.  அவர் இல்ல. வீட்டுக்கு வாஎன்றாள்.

 அவன்என்ன மேடம்?’ என பயந்து யோசிக்க

சரி மேடத்துக்கு என்ன வாங்கிட்டு வருவே?”

“.. மே..மேடம்...”

“பெல்லா விட்டா.. லக்சரி செக்சில்;பெர்ப்யூம். எனக்கு  ரொம்ப பிடிக்கும். யெஸ்.. அது ரொம்ப பிடிக்கும் .அது வரும்போது எனக்கு வாங்கிட்டு வரியா ?”

“.............”

அப்புரம் ஒரு டூரக்ஸ், இனிவிசிபிள் “என கேட்டபோதுதான் அவளது  நோக்கம் தெரிந்து விட்டது.

 அவ்வளவு தான் அவள்  நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டு அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்து விட்டான்.

 சென்னைக்கு வந்ததும் அவன் அவன் செய்த முதல் வேலை.

 அழுக்கான யோனிகள்என்ற தலைப்பில்

சதா மூடி கிடக்கும் யோனிகளை
சாதாரணமாக
திறக்கின்றன கள்ளச் சாவிகள்   எனகவிதை எழுதியது தான்.

மன இருளில் குமுங்கி
உதடு
சுழித்து நீ  போனில் உளறிய
சொற்களனைத்தும்
என் காதோரம் புழுதிப் படிந்து கிடக்கிறது.

யோனிகள் கண்ணியமானவை தான் - ஆனால்
கள்ள சாவிகளுக்கானவை அல்ல,.

 என  கோப கவிதை எழுதினான். ஆனால்  அந்த கோபமும், பதட்டமும் ஒரு நாள் தான்.  நாளடைவில் ,மனதின் பதட்டம் குறைந்து, உடல் முறுக்கியது. ஓ இது தான் ஆணுக்கான பெண் ஸ்பரிசம் தேடலோ? இளமைப் பருவத்தின் முறுக்கோ?

மணமான அந்தப் பெண்ணின் குரலும் அவள் கூப்பிட்ட விதமும் அவனை மிகவும் தொந்தரவு செய்தது . இரவெல்லாம் அவள் வாட வாட என அழைத்தாள். அதை மறக்க பல கவிதைகளை எழுதினான். என்ன இருந்தாலும் அவனால் அதை அழைக்க முடியவில்லை.

ஒரு முறை போய் வந்திருக்கலாமோ? மனம் திடீரென சஞ்சசலப்பட “த்தூ “ என தனக்கு தானே உமிழ்ந்தான்.

 ஏன் இப்படி மனதில் கூடா காமம் வந்தது. அவளது அழகா? குரலா? எது எனக்கான தூண்டில்?

மனதை மடைமாற்ற அவன் அதிசயமாய் ராமாயணம், பாரதம் படித்தான் . அதை கவிதையாக சுருக்கமாக எழுத கற்றுக் கொண்டான்.

அதை ஒருநாள் உட்கார்ந்து முழுக்க முழுக்க அதை புதுக்கவிதையில் எழுதிப் பார்த்தான். மிகவும் நன்றாக இருந்தது . ராம ராம எனச் சொல்லி மனதை மாற்ற நினைத்தான்.

 காமத்துக்கு பயந்து, தன் மனதின் திசை மாற்ற, ஒரு வளார்ந்த ஆண் , முதிர்ந்த ஆண் பரபரவென கவிதை எழுதுவது, அதுவும் ராம காவியத்தை எழுதுவது அபூர்வம்’ என்பது கூட அந்த  அப்பாவிக்கு தெரியவில்லை.

கொஞ்ச நாள் அலைபாய்ந்த அவன் மனதை தன் சுக்கான் பிடித்து இழுத்து மாற்றி விட்டாள் இந்த கைகாரி ஷோபனா.

டெல்லிகாரியும், ராம கவிதையும் அவன் மறந்துவிட்டான். ராமயாண கவிதை எழுதிய கைகளால் இப்போது  காதல் கவிதைகள் அவன் தாளில் நிரம்பி வழிந்தன.

“” அடி ஷோபனா உனக்கு தெரியாது.
நீ என் கெட்ட சோபனங்களை துரத்தி விட்டாய்..”
என எழுதினான்.

படுக்கையில் அவன் கவிதை  நோட்டை  தற்செயலாகப் பார்த்து அம்மா அவனை கூப்பிட்டாள்.

 ‘ ஏன்டாப்பா என்னடா வாலி மாதிரி புதுகவிதையில் ராமயாணம் எழுதறன்னு சொல்லிட்டு, இப்ப காலி பையன் மாதிரி லவ் பொயட்ரி எழுதறே? “

“ அய்யோ அதெல்லாம்  நீ ஏன்  எடுக்ககற?”  அவன் பதட்டப்பட்டான்.

“அது ஏண்டா யாரோ ஷோபனாவை கூப்பிடறே?”

“இ.இல்லம்மா... அது வேற.. ராம கவிதை நல்லா வந்திருக்கு. பாக்கறியா? . தோ” அந்த நோட்டை பிடுங்கி போட்டு, டேபிள் டிராவில் இருந்து  நீளமான நோட்டை எடுத்தான்.

அம்மாவிடம் காட்டிய போது அம்மா படித்து வியந்து  பாராட்டினாள்.

“ அட குரு பையா., .உன்னை என்னமோ நினைச்சிட்டேன். அதிகபட்சம் டென்னிஸ், பாட்மின்டன்  ஆடத்தான்  லாயக்கு, ஆபீஸ் உத்யோகம் தான் சரிப்பட்டு வரும்னு பாத்தா, கவிதைல கூட பொளந்து கட்றியே”

“ நல்லா இருக்காம்மா” அவன் ஏக்கமா கேட்டான்.

உலகளந்த பெருமானை என் வார்த்தையால் அளக்க வந்தேன்.. அடேயப்பா... சூப்பரா இருக்குடா.  இதை அப்படியே போய் நங்கநல்லூர்  பெருமாள் கோயில்ல ஒரு முறை சொல்லிட்டு வா’ என்றாள் அவனுக்கு அம்மா பாராட்டியது சந்தோஷமாக இருந்தது .அம்மா ஒரு தமிழ் பேராசிரியை.

ரொம்ப நல்லா எழுதுற குழந்தை அதுவும் கடைசியா சொல்ற பாரு

“சரண் என வந்தால் ராவணனையும் காக்கும் ராமகரம்
சாந்த  விபூஷுணனுக்கு  இல்லாமல் போகுமா ராமகரம்?
ஆஹா என்ன ஒரு வார்த்தை  பியரயோகம். ரொம்ப நல்லா இருக்குடா .

ராவணின் அன்பு என்பது அம்பு போன்றது..
ராமனின் அம்பு என்பது அன்பு போன்றது”

அடடா என்ன ஒரு வார்த்தை ஜாலம்டா .இதையா அம்மா கிட்ட காட்டாம, பொட்டியில வெச்சி பூட்டிக்கிற..?

தம்ழி பேராசிரியை அம்மா கவிதையில் கரைய.,

“எங்க எங்கிட்ட காட்டு” அப்பா பிடுங்கி படித்தார்.

அடுத்து வந்தான் இந்திரஜித்து.,
அவன் அறிந்ததெல்லாம் மந்திர சித்து”
பின்னிட்டேடா., எங்கேடா கத்துகிட்டே.?”

மாறி மாறி பாராட்டினர்கள்.  குருமூர்த்தி எப்படி ஒரு அபூர்வமோ, அவனது பெற்றோரும் ஒரு அபூர்வம்தான்.

“போடா.. பெருமாள் கோயில்ல ஒரு முறை சொல்லிட்டு வா. கல்யாணமே வேணாமுன்னு சொல்லிட்டிருக்கே இல்ல? உன் மண வாழ்க்கையில் திருப்பம் வந்தாலும் வரும்..போய்ட்டு வா’”

“தேங்க்ஸ் மா’”

அவன் அந்த ராமாயண கவிதை அரங்கேற்றத்தை, அவன் மனதுக்கினிய மங்கை ஷோபனா,  கோவிலில் இருக்கும் போது தான் சொல்லி அசத்த வேண்டும்’ என காத்திருந்தான். ஆனால் அவள் வெகு நாட்கள் வருவதாக இல்லை . மீண்டும்  ஒரு இடைவெளி. அவள் கோயிலுக்கே வருவதில்லை.

அன்று ராம நாவமி.

அன்று தான் கோயிலில் அவனுக்கு தேதி கொடுத்திருந்தார்கள். அந்த ராம கவிதையை  வாசித்து கோயில் நிர்வாகம் அன்று கவிதையை அரங்கேற்ற கூப்பிட்டார்கள். மைக், ஸ்பீக்கர், பேனர் எல்லாம் கோவில் நிர்வாகமே செலவு செய்தது.

ஷோபனாவுக்கக காத்திருந்து, வேறு வழி இல்லாமல் ஷோபனா ரொம்ப நாளாக வராத அந்த தொடர்  நாளில் தான், அவன் மனதுக்கினியாள் இல்லாத சன்னதியில், பெருங்கூட்டத்தில்  அவன் தன் கவிதை புத்தகத்தோடு ராம கவிதை சொல்ல ஆரபம்பித்தான்.

“இது ராமாயணத்தை சுருக்கும் முயற்சி அல்ல,
தமிழின் நுட்பத்தை விரிவாக சொல்லும் முயற்சி’
என சொல்ல கரகோஷம் வானைப் பிளந்தது.

“தசரதனின் மனைவியரின் எண்ணிக்கை சொல்ல விரல்கள் போதாது.

“ஊர் மக்கள் விரல்களை உதவிக்கு கொண்டாலும் காணாது”

அவன் கவி அரங்கில் ஆரம்பத்திலேயே அசத்த, கூட்டம் கட்டி போட்டது போல அயர்ந்து போய் கிடந்தது. அவன் நிறுத்தி நிதானமாக வாசிக்கும் கவிதையைக்  கேட்டது. சமஸ்கிருதம், மந்திரம் கீர்த்தனை இல்லாமல் சுத்தமான எளிய தமிழில் முக்கால் மணி நேர கவியரங்கம்.. மைக் வழியே ஸ்பீக்கரில் ஒலித்த கவி ருசியில் தெருவில் போன ஜனங்களும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள்.

அடடட ‘என் உச்ச் கொட்டி ரசித்தார்கள். போனில் படம் பிடித்தர்கள். பதிவு  செய்தார்கள்.

அவன் இராமாயணத்தின் எல்லா முக்கிய பகுதிகளையும் தன் கவிதையால் தடவி கடந்து போனான்.

ஒவ்வொரு வார்த்தையும் மின்னல் வெட்டியது போல வந்து விழுந்தன. முழு கவிதையும் அந்த அரங்கேற்றத்தில் படித்தான்.

நேர் அறியேன்..  நிரை  அறியேன்.. யாப்பு அறியேன்.. கவி அறியேன்..
இன்று
எல்லாம் அறிந்தேன்  ராம உன்னை அறிந்த பிறகு.,என அவன் கண் கலங்கி கவியரங்கத்தை நிறைவு செய்ய, கூட்டம் ஆர்பரித்து கைதட்ட.,  அவன் சந்தோஷமாக அத்தனை கைதட்டுகளிலும் ஏற்றுக்கொண்டு மேடை விட்டு இறங்கினான்.

கோயில் நிர்வாகம் வாழ்த்தி பேசியது, மாலை, சால்வை அணிவிக்கப் பட்டடன. அவன் எல்லோரிடமும் பாராட்டுகளை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தான்.  ஆண்கள், பெண்கள் என பலருடன்  செல்பி எடுத்துக் கொண்டான்.

எப்படிங்க?  புதுக்கவிதையில இவ்வளவு சிறப்பா உங்களால கவிதை சொல்ல முடியுதுஎன சொல்லி சொல்லி  பாராட்டினார்கள்.  அவன் வாசித்த கவிதைகளில் சில பகுதிகளை பல பேர் மனப்பாடமாக சொன்னதைக் கேட்டு அவனுக்கே பெருமையாக இருந்தது.

 சிறியவர்கள் பெரியவர்கள் என மாறிமாறி செல்பி எடுக்க திடீரென தான் அந்த வெண்ணிலாவுக்கு கை முளைத்தது  போல் திடீரென தோன்றிய அந்த பெண்ணை பார்த்து திகைப்படைந்தான்.

“ஒரு செல்ஃபி ப்ளீஸ்”

“ நீ நீங்களா?” அவன் விழிகள் அகலமாகி புருவங்கள் வில்லாய் விரிய,,

எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து புன்னகையுடன் நின்றிருந்தாள் ஷோபனா.


கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற:




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com

5 comments:

  1. All short poetry based on ramayanam are v nice

    ReplyDelete
  2. vera level write up..its not a sex story at all bro

    ReplyDelete
  3. முழு ராமயாணமும் கவிதையில் சொல்வதாக இருந்திருந்தால் அருமையாக இருக்கும்...மனதினை கோள்ளை கொள்ளும் வரிகள்...போங்கள்

    ReplyDelete
  4. the bg of guru is Unique.. and Fentastic ... thats one we tell you are a rare creator

    ReplyDelete
  5. சூப்பரான ரொமான்ஸ்.. அப்படியே சினிமாவுல சீனா வைக்கலாம்.

    ReplyDelete