அத்தியாயம் 3
அது நடந்த 5 மாதங்களுக்கு பின் பரசு குடும்பம்
சென்னைக்கு மாறியது.
சென்னைக்கு
கிளம்பும் போது, என்ன தான் டெல்லி பிடிக்கவில்லை என்றாலும். இந்த பதினொரு
வருசம் இருந்த அரசாங்க வீட்டை விட்டு பிரிவது கடினமாக இருந்தது.
அது ஒரு மினி பங்களா. ஓல்ட் டைப்தான். ஆனாலும் அந்த
வீட்டின் கட்டடகலை தென்னிந்திய கட்டடக்கலை போல இருக்கும் அவளுக்கு அது தான்
டஹய்வீடு. என்னமோ தெரியவிலை மனதுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
. பலகணி, ஜன்னல், கதவுகள் அலமாரிகள் ஒவ்வொன்றும் கலை
அம்சத்துடன் இருக்கும். விஸ்தாரமான வீடு , அகலமான தாழ்வாரம் என அஞ்சு சென்ட்டில் அமைந்த அதிகாரிகளுக்கான வீடு அது. கிச்சனே படுக்கயறை
போல பெரிதாக இருக்கும். அதில் மொத்தம் 4 படுக்கை அறைகள், அதில் இரண்டை பூட்டி
வைத்துவிட்டு, இரண்டை பூட்டி இருந்தார்கள்.
சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றி விட்டு, விஜி அந்த
வீட்டை பிரிய மனமில்லாமல் ஜன்னல் கிரில்லை போட்டு சுரண்டி கொண்டிருக்க, பரசு வந்து
அணைத்துகொண்டான்.
அவள் ஏறிட்டு பார்க்க, அவளது மோவாயில் நீர் முட்டி
நிற்க
"இங்க பார்.. நாங்கல்லாம் நாடோடி மாதிரி.
அதுக்கு தான் இத்தினி காசு, சம்பளம்.,
இந்த வீட்டை விட மடிப்பாக்கம் கோர்ட்ரஸ் ரொம்ப மாடர்னா இருக்கும். ரோ ஹவுஸ்
சிஸ்டம் . உனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கயும் இதே மாதிரி டான்ஸ் கிளாஸ் நடத்து..
நீயும் உங்க தங்கச்சியும் ஆட்டம் போடு. யாரு கேட்டா?"
"..................." அவள் மௌனமாகவே
இருந்தாள். வீட்டைப் பற்ரிய துக்கம் இன்னும் அவளுக்கு மேலிட,
"இங்க பாரு விஜி. ஒரு பொருளை விட்டு பிரியறோம்,
இல்லை இழக்கறமுன்னா. அது சம்பந்தமா நடந்த கெட்டதை
நினைச்சுக்கனும். "
"ச்சீ என்ன பேச்சு இது?"
"ஆமா அப்பத்தான் பிடிப்பு போகும். "
"இந்த வீட்டுல எந்த கெட்டதும் நடக்கல.
நீங்க பெரிய அதிகாரி ஆனீங்க. அவார்ட் வாங்கினீங்க. .ஷோபனாவுக்கு ரொம்ப
வருஸ்ம கழிச்சி கல்யாணம் ஆச்சு. ஷிவானி பெரிய மனுஷி ஆனா..நான் டான்ஸ்ல ரொம்ப பேமஸ்
ஆனேன்.' அவள் இன்னும் பேச முடியாமல் நன தழுதழுக்க.
"ம்ம் கரெக்ட் தான். ஆனா,. இங்க தான்..."
"................"
"நம்ம ஷோபனாவுக்கு டைவர்ஸும் ஆச்சு.."
"ப்ச்... என்னங்க?"
" நீ சொன்னதால நான் சொல்றேன். அதே மாதிரி நாம்
இங்க வந்த., அந்த மாசம் தான்,,, உனக்கு.." அவன் பாதியில் நிறுத்த
"வேணாம் சொல்லாதீங்க"
"யூ காட் அபார்ஷன் ஆப்டர் அ லாங்க் டைம்
பிரக்னன்சி"
"சொ...சொல்லாதீங்கன்னு சொல்றேன்ல?" அவள்
சீறீனாள்.
ஜெய்ப்பூரில் இருந்து மாற்றலாகி, டெல்லி வந்த
போதெல்லாம் விஜிக்கு, ஷிவானிக்கு பிறகு 5 வருசம் கழித்து இன்னொரு மலர் தன் வயிற்றில் உருவாகி
இருக்கிறது என தெரியாது. பையனோ? பொணோ யார் கண்டா?
அத்தை மட்டும் 'என்னடி என்னடி?" என
எச்சரித்தாள்.
"அதெல்லாம் ஒன்னுமில்லத்தை. அடிக்கடி
இப்படி நாளு தள்ளி போவுது." அவள் வயிற்றில் தப்பி தவறி உருவான சில வாரங்கள்
கருவோடு வீட்டை காலி செய்து கொண்டு டெல்லிக்கு வந்து சேர., வீட்டில் பொருள்களை
ஏறக்கட்டி சுத்தம் செய்ய , அயராத வேலை
காரணமாக அந்த கரு சிதைந்து போக., அப்படியே ஒடுங்கி போய் விட்டாள் விஜி. என்ன
செய்தும் அடுத்த இன்னொரு கருவை தன் மணி வயிற்றில் கொண்டு வரமுடியவில்லை.
அத்தை அதற்காகவே அடுத்த சில மாதங்கள் பேசாமல்
இருந்தாள்..
"சரி இப்ப எதுக்கு அதெல்லாம் கண்ணை
துடைச்சுக்கோ. சோ உனக்கு நான் சொல்றது இது தான் . ஒரு இடத்தை விட்டு பிரியனுமுன்னா
அங்க நடந்த கசப்பான விஷயத்தை
நினைச்சுகிட்டா அந்த இடத்தை விட்டு போகனும்னு தோனும். அதுக்காகத்தான்
சொன்னேன்.. கிளம்பு. யார் கண்டா. போன இடத்துல ஏதாச்சும் புதுசா
கிடைக்குதான்னு" பரசு அவள் வயிற்றறை தடவ.
" ச்சீ வெளிய அத்தை இருக்காங்க, கூட ஷிவானி
இருக்கா..இப்ப போய்" அவள் விலக., அவன் சிரித்தான்.
"எனக்கு என்னமோ இந்த வீட்டை விட்டு போறது கஷ்டமா
இருக்கு.."
"அதான் சொன்னேனே. ஒரு வீட்டை விட்டு
போகனுமுன்னா, அந்த வீட்டுல நடந்த நமக்கு பிடிக்காத விஷயத்தை.. நினைச்சுக்கனுமுன்னு''
'அச்சோ என்ன பேச்சு இது. விடுங்கோ ப்ளீஸ்"
"..விஜி இந்த வீடு ரொம்ப ஸ்பெஷல். அப்படி ஈஸியா
யாருக்கும் அல்லாட் பண்ண மாட்டாங்க.. ஒருவேளை ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சி எனக்கு
டெல்லியிலயே மறுபடியும் போஸ்டிங்க போட்டா., இந்த வீடே கேக்குறேன். போதுமா?"
'அவன் அவளை சமாதனப்படுத்தினான்.
அவர்கள் சாமான்கள் வண்டியில் வர, அவர்கள் விமானத்தில் வந்து சென்னை
சேர்ந்தார்கள். சென்னையில் கோர்ட்ரஸ் வீடு
அமர்க்கமாய் இருந்தது. தனி தனி காம்பவுண்ட்.. பிரைவசி. கொஞ்ச நாளில் விஜி டெல்லி
வீட்டை மறந்து போனாள்.
சேலையூர் கிரிஸ்டி கல்லூரியில் ஷிவானி ஐ டி பிரிவில் சேர.,
அடுத்த 4 ஆண்டுகள் விர்ரென ஓடின.
விஜி அடிக்கடி பிறந்த ஊருக்கு போய் வந்தாள். மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் குறையில்லாத அந்த
குடும்பத்தில் அவர்கள் சென்னைக்கு வந்த அஞ்சாவது வருசம், அதாவது இந்த வருசம் தான்,
ஒரு சறுக்கல் வந்தது.
பரசுவின் அம்மா நோய்வாய்ப்பட்டு மேலோகம் போய்
சேர்ந்தாள்.
திடீர் ஜூரம்., கபம், சேர மூன்று மாதம் குடும்பத்தை பாடாய் படுத்தி விட்டு பரசுவின் அம்மா
ஒருவழியாய் கயிலாயம் போய் சேர., விஜிக்கு ஒரு கை இழந்தது போல இருந்தது.
பேரன் பேத்தி பாக்கமா போறேனடி? என கூட சொல்லவில்லை.
"கடைசிவரைக்கும் உன்னை மேடைல ஏத்திவிட்டு அழகு
பாக்காம போவறேனே. அதான் என் கவலை"
அடாடா அத்தையின் மனசு யாருக்கு வரும்?. அவளே தன் மகள்
வயிற்றில் பொண்ணா பிறப்பாளா? ஷிவானி வயத்தில பொண் குழந்தை பிறந்தா அது அத்தையா
தான் இருக்கும். அப்போதே அவள் தீர்மானித்து விட்டாள்.
'அம்மா செத்து ஒரு வருசம் ஆகி, திவசம் கொடுக்கறத்துக்கு
முன்னாடி, ஷிவானிக்கு கல்யாணம் பேசி முடிச்சிடனும்.."
பரசு தீர்மானித்தான். பல ஜாதகம் பார்த்து பொருத்தம்
பார்தது ரகுபதியை ஓகே செய்தான். ஷிவானிக்கும் பிடித்திருந்தது.
"ரகு ரொம்ப மேன்லியா இருக்கார்மா"
"என்னது?" விஜயலட்சுமி சீற.
"இல்லம்மா ஹானஸ்டா., மெச்சூர்டா இருக்கார்..ரொம்ப
ரெஸ்பெக்டா பேசறார். நாலட்ஜபிள் பர்ஸன்,. ஷார்ப் மைன்ட்..ஹியூமனடிக்
ஹார்ட்..ஸ்டராங்க், பிசிக்க்
"ஏய் போதும்டி"
"ஏங்க வயசு டிஃபரன்ட் இருக்கே..இவளுக்கு 21
அவருக்கு 29 பரவாயில்லையா?" விஜயலட்சுமி தயங்கி தயங்கி பரசுவைக் கேட்க
"ஏன் நாம கட்டிக்கலையா? 11 வருசம் டிபரண்ட்ல?
ஒன்னும் பாத்தா அப்படி தெரில. யங்கா தான் இருக்கார்.. ஸ்போர்ட்ஸ் பெர்சன்..
அதில்லாம நம்ம ஷிவானி திமுதிமுன்னு இருக்கா.. அவளுக்கு 24, 25 பசங்கள்ளாம் ரொம்ப
சின்னவனா தெரியும்.. பாக்க, அக்கா, தம்பி
போல இருந்தா ரொம்ப கஷ்டம். லைப் பூரா ஏட்டிக்கு
போட்டியா இருக்கும்."
பரசுவின் வாதம் விஜிக்கு சரியாக தான் பட்டது. ஷிவானி
பக்கத்தில் நிற்க வேண்டும். அவளை ஆண்டு அனுபவிக்க வேண்டும், ஊர் மெச்ச குடித்தனம்
நடத்தனும் என்றால் ரகுபதி பாஸ்கரன் தான் சரி..ஆள் மாநிறமா இருந்தாலும் களையா
இருக்கான். நுனி நாக்கில் ஆங்கிலம், பல
ஊர் பாஷை பேசுகிறான். ஷிவானிக்கு ரொம்ப மேட்சிங். அந்த தம்பதி ரொம்ப
யோசிக்கவில்லை.
கார்த்திகையில் பேசி முடித்து இதோ, தை மாச ஜாம்
ஜாமுன்னு கல்யாணம். மண்டபத்தை தவிர, வெளிய பெரிய அண்டா வைத்து வருவோர் போவோர்க்கு
பூந்தி கொடுத்தார்கள். இரன்டு அண்டா தீர்ந்து போய்,. மூனாவது அண்டா ரெடி செய்து
வாரி இறைத்தார்கள். உச்சி வெயிலில் நீர் மோர் கொடுத்தார்கள்.
"பரசு சார், ரொம்ப சந்தோஷம்., என்ன தான்
சென்ட்ல் கவர்ன்மென்ட்டுனாலும், மாச சம்பளக்காரரச்சேன்னு நாங்க கொஞ்சம்
யோசிச்சோம். ஆனா தடாபுடால்னு தூள் கிளப்பிடீங்க. ஸ்டேட்டை தூக்கி
சாப்பிட்டுட்டீங்க" அவர் தன்னை சொன்னார்.
மண்டப வாசலில் ரகுபதியின் அப்பா பாஸ்கரன் பரசுவின்
தோளைப் பிடித்து அழுத்திக் கொண்டார். ரகுவின் அம்மாவும் கைகூப்பி நன்றி சொன்னாள்.
" நீங்க
சந்தோஷமா இருந்தா போதும். அப்ப தான் உங்க வீட்டுல என் பொண்ணு சந்தோஷமா இருப்பா"
"அட சம்பந்தி சார்.. என்னங்க நீங்க., இனிமே அது
அவங்க வீடு. நாங்க யாரு நாட்டாமை பண்ண.? கல்யாணம் முடிஞ்சி தேனிலவு போய்ட்டு
வரட்டும்,. அதுக்கப்பறம் நங்க நல்லூர் வீட்டுலஇருந்து நாங்க கிளம்பிடுவோம். எங்க கோயம்புத்தூர்ல
பூர்வீக வீட்டுக்கு போய்டுவோம். அவங்க வீட்டுல உன் பொண்ணு ராஜ்ஜியம் தான்"
ரகுவின் அம்மா சொல்ல,
"என்னங்க
தடக்குன்னு கிளம்பறீங்கன்னு சொல்றீங்க. குழந்தைகளை தனியா
விட்டுட்டு.."
" அச்சோ பரசு சார்., என்ன தான் மானே தேனேன்னு,
தங்கமா வெல்லமா இழைஞ்சாலும் காலப்போக்குல ஒரு சின்ன பிணக்கு, வந்தாலும்
எல்லாருக்கும் கஷ்டம்.."
"அச்சோ என் மக. அப்படியெல்லாம் .."
"அட உங்க மகளை சொல்லலங்க. ஷிவானி தங்கமான
பொண்ணு. ஆனா, காலம் ஒரே மாதிரியா இருக்காது, ஒரு அடி தொலைவா இருந்தா தான். பிடிமானம்
இருக்கும். அவங்களுக்கு நாங்க தர்ர பெரிய
பரிசு தனிமை, சுதந்திரம்.. நாம பொழுது
முச்சூடும் வீட்டுல இருந்தா, அச்சோ வீட்டுல பெரியவங்க இருக்காங்களே., நேரத்துக்கு
வீட்டுக்கு போகனுமுன்னு விழுந்தடிச்சி ஓடியாறனும். எதுக்குங்கறேன்..? இது அவங்க
லைப். அவங்க இஷ்டம்." ரகுபதியின் தந்தை பாஸ்கரன் சொல்ல,
"சார் ரொம்ப பெரியவங்க நீங்க.." பரசு நா
தழுதழுத்து, அருகே இருந்த பிளாஸ்டிக் சேரில்
உட்கார,
"இப்ப அவங்களுக்கு என்ன குறை?. ரகுவுக்கு பெருங்களத்தூர்ல
வேலை, நங்கநல்லூர் டூ மடிப்பாக்கம் 3 கிலோ மீட்டர் தூரம்.. .ஷிவானிக்கு வேனுமுன்னா
அங்க போகட்டும். இல்ல உங்க வீட்டுல ஆசைப்பட்டங்கன்னா, நங்க நல்லூருக்கு
ஓடியாறட்டும். நாங்க என்னாத்துக்கு நடுவுல அங்க?"
"பட்டும் படாம பேசறீங்களே?"
"அச்சோ பெரிய வார்த்தை., இது விலகி இருக்கிறது
தான்., உதறி நிக்கறது இல்ல, குழந்தைங்க சந்தோஷமா வாழையா, ஆலமரமா வளரட்டும்..
எதுக்கு குரோட்டன் செடி மாதிரி தொட்டியில வெக்கறது?" பாஸ்கரன் சொல்ல.,
பரசுவுக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல
இருக்க, கண்கள் சொருகி, வாய் கோணி,. சேரிலிருந்து சாயப்போக..
"என்னங்க.. என்னங்க......? " விஜயலட்சுமி
பிடிக்க போக., அவர் இன்னும் துவள பாய்ந்து
வந்து தன் கரங்களில் பிடித்து தாங்கினார்.. பாஸ்கரன்.
"தண்ணி கொடுப்பா.. தண்ணி கொடுப்பா..."
திடீரென பரபரப்பு அதிகமாகி, கூட்டம் சேர.,
"ச் சே ஒன்னுமில்லப்பா... காத்து விடுங்க"
மணமக்கள் மண்டபத்துக்கு வாசலில் ஓடிவர,
சில நிமிட களேபரத்துக்கு பின் பரசு கண்விழித்தார்.
"அப்பா என்ன ஆச்சு?" ரகு கத்த,
"சக்கரைப்பா. இப்படி தான் ஆளை தூக்கும்..."
பரசு மலங்க மலங்க விழித்தார்.
"டயாலில்ஸ் பண்றீங்களா? என்ன? "
"சே அதெல்லாமில்ல"
"மன்னிக்கனும் சக்கரை எவ்ளோ?'
"இருனூறு. மாத்திரை போடல.. அத தவிர அலைச்சல்
.."
"ஆமா. பெரிய காரியத்தை பண்ணிட்டா ஒரு மன நிறைவு,
திருப்தி., ஒரு மூச்சடைப்பு அதான்., எதுக்கும் மாத்திரை போடுங்க.. வேட்டியை சரியா
கட்டுங்க"
"சம்பந்திம்மா . மாத்திரை எடுத்தாங்க"
"தோ" அவள் மண்டபத்தில் நுழைந்து தங்கள்
அறைக்கு நடந்தாள். மண்டப வாசலில் வேட்டி
சரிய, கணவன் மயங்கியது அவளுக்கு, அந்த இடத்தில்
ஒரு மாற்று குறைவாக இருந்தது.
மாத்திரை எடுத்து திரும்ப அடி வயிறு தளர்வாக இருக்க,
தொடைகள் துடிக்க,.திடீர் அவஸ்தையாக உடல் நெகிழ., வயிற்று தசைகள் இழுத்து பிடிக்க.
ஏதோ ஒன்று கரைய..
அய்யோ டேட்ஸா.? விரல் விட்டாள். ச்சே டேப்லட்
போட்டிருக்கனும். எப்படி விட்டேன்? ஆனா இன்னும் நாள் இருக்கே.? வேலை, அலைச்சல்..
அதான் சீக்கிரமா ஆகிடுச்சி..
பரசுவின்
டேப்லட்டை எடுத்து தங்கை ஷோபனாவை தேடி கொடுத்து அனுப்பி தனது ஹான்ட் பேக்கை துழாவி,
அடியில் ஒளித்து வைத்திருந்த பேட் எடுத்து கொண்டு பாத்ரூமில் நுழைந்தாள் விஜயலட்சுமி.
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "
என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.
Authornv(dot)com
என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi(dot)blogspot(dot)com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
Naveenavathsayana(at)gmail.com