மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 3, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2054 ( திபூவை இறுதி பாகம்)

 

ந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் எல்லோருக்குமே தங்களை பற்றிய மதிப்பீட்டை அங்கே நினைத்து அசை போடுவதற்கான களமாக அந்தக் கோயில் வளாகம் இருந்தது.

அவன் மலருடன் குல தெய்வத்தை வணங்கிவிட்டு அவர்கள் கோயில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

கோயில் மணி அடித்து. வெயில் குறைவாக இருந்தது.  கோயிலை சுற்றிலும் மரங்கள் காற்றில் வேகமாக அசைந்தன. அந்த வேகமான அசைவால் பறவைகள் பறக்க.,

அந்தக் கிழவர் மரத்தின் மெல்லிய கிளை மீது உட்கார்ந்து கொண்டு சுற்றுப்புறமும் பார்த்து பார்த்து கொண்டிருந்தார். அவர் தனது மனைவியை தேடிக் கொண்டிருக்க., அந்த அம்மா பின்பக்க மரக்கிளையிலிருந்து தவழ்ந்து  வந்து அவரது பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.

அது தானே நம்ம பையன்?” என  கிரான்டனி கிழவன் சொல்ல

சுரேஷின் அம்மா சிரித்தார். பெத்த புள்ளைய உங்களுக்கு அடையாளம் தெரியல

சுரேஷின் அம்மா சொல்ல., அது குரல் இல்லை... சத்தமும் இல்லை... சொல்லப்போனால் மொழியும் இல்லை.. அது ஒரு அனுமானம்...உணர்வு..

அவர்கள் ரொம்ப நாளாக அதில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்..

 

ம் .. சுரேஷ் ரொம்ப ளைச்சி போய்ட்டான்

ஒழுக்கமில்ல., அப்போ உடம்பு இளைக்காம என்ன செய்யும்? அவன பத்தி என்கிட்ட பேசாதீங்க. ஒழுக்கமும் இல்லை, கண்ணியமும் இல்ல, இவனைப் போல நம்ம பரம்பரைல யாருமே இல்லைஎன அம்மா சொல்ல

அப்படி சொல்லாத தாயே..எங்க அப்பாவோட தாத்தாவுக்கு 8 பொண்டாட்டிங்க என சொல்ல அந்த அம்மா அவரை முறைத்தார்.

துக்காக இவன் செய்யறதை சரிந்னு நான் சொல்லல. கிரகக் கோளாறு, ஜாதகக் கோளாறு, அவனுக்கு எடுத்துச் சொல்ல ஆளில்லை. கூடப்பிறந்த அண்ணன் சரியில்லை. அவந்தான் இவனுக்கு தப்பான வழியை காட்டி இப்படிக் கெடுத்து வச்சிருக்கான்.”

“,, அவன் யார் சொல்லியும் திருந்த மாட்டான். எப்பவுமே ஒருவன் தன்னைப் பத்தி  தானே யோசிக்க ஆரம்பிக்கனும்.. “

இப்ப அவன் திருந்த ஆரம்பிப்பான் மாதிரி தெரிது

மண்ணாங்கட்டி.,  து எல்லாம் சும்மாங்க., ஏதோ கோயில் வந்திருக்கோம்  நாலு விஷயம் நல்லதாக நினைக்கத் தோணும் . திரும்ப கோயிலை விட்டு வெளியே போனா,  அப்புறம் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தான் என அம்மா சொல்ல

ஏய்ய்ய் பையனுக்கு காபந்து பண்ணு தாயேஏற்கெனவே அவனுக்கு கண்டம் இருக்கு..”

சுரேஶ் தள்ளிவிட்டப்ப., அந்த சிபு எப்பவோ தரையில முட்டி சாக வேன்டியது. பையனுக்கு கொலைகாரன் பேரு வரக்கூடாதுன்னு மரத்துல முட்ட வெச்சி ., காப்பாத்தி விட்டா., இப்ப பாரு அது கையில கத்தி எடுத்து வந்திருக்கு

அம்மா தூரத்தில் தெரிந்த சிபு காரின் பானட்டில் இருந்த ஒரு தண்ணீர் கிளாசை கோபமாக தள்ளி விட்டாள்.

ஹேய்ய்ய் காத்து தள்ளுதுப்பா.. கிளாசை கையில் புடிங்க சிவம் சொன்னான்.

 

வள் கோபத்தில் மரக் கிளைகளை சடசடக்க செய்ய.,

அவங்க  கிட்ட ஏன்  தாயே போறே? விடு.“

சரி எனக்கு ஒன்னு சொல்லுங்க.. சிபு, நம்மை பையனை என்ன பண்ணுவான்.. ?“

“……………..” அவர் ஒன்றும் சொல்லவில்லை.

சொல்லுங்களேண்… “

குத்துவன்னு தோனுது.. அவன் கத்தி முழுக்க நம்ம சுரேஷ் ரத்தம்.எனக்கு நல்லா தெரியுதுஅவர் சொல்ல

அந்த அம்மாவுக்கு சோகமாக இருந்தது.

ஒன்னும் வருத்தமில்லையே

இல்ல., அவன் இங்க வந்துட்ட்டும்.. பூமிக்கு பாராமா? எதுக்கு சுத்தனும்?” அம்மா கோப்ப்பட்டார்.

கிழவர் தாங்க முடியாத ஆத்திரத்தில் கிளையை ஆட்ட,. பறவைகள்  திகிலாகி உயர பறந்தன.

நீங்க ஒன்னு!  சரி விடுங்க, நம்ம சண்டை இருக்கட்டும் . இப்போ சுரேஷை என்னதான் பண்ணப் போறீங்க ?” எனக் கேட்க

தெரியலை என்றார் மேலே பார்த்து .,

அப்ப கோயில் வாசல் இருக்கிற அந்த தீவட்டி தடியனுங்க என் பையனை கொன்னுடுவாங்களா?” என அவள் கேட்டாள்.

தெரியலடி  தாயே.. நம்மளால நடக்கிறதுதான் புரிஞ்சுக்க முடியுமே.  தவிர நடக்கப்போவதை சொல்றதுக்கு நாம என்ன கடவுளா? ஆனா அந்த கத்தி முழுக்க ரத்தம் . சுரேஶின் ரத்தம் என சொன்னார். அவரால் வேதனையை தாங்க முடியவில்லை.

உங்களுக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா? ரொம்ப சூரிய உதயங்களுக்கு முன்னால,  நான்  உங்க கிட்ட நாம  நம்ம   பசங்களை ஒன்னும் பண்ன முடியாதா?  நம்ம பையனை நல்ல  வழிக்கு திருப்ப முடியாதா? ன்னு கேட்டேன். அதுக்கு நீங்க “ ‘இருக்கு..நம்ம குல தெய்வம் பானசங்கரி அம்மன் இருக்குல்லே? அங்க போய் வந்தான்னா., அவன் நிலைமை மாறலாம்...ஆனா இதை அவனுக்கு யாரு சொல்றது?'  ன்னு சொன்னீங்ககளே

ஆமா . சொன்னேன் தான். மறக்க நான் என்ன மனுஷனா? அது அன்னிக்கு அவன் பாவக்கட்டோட நிலைமை. ஆனா நிலைமை இப்ப அப்படியா இருக்கு?. அதுக்கப்பறம் அவன்  நிறைய ஆட்டம் ஆடிட்டான். எனக்கு தெரிஞ்சு அவனுக்கு மன்னிப்பே இல்லை. மங்களூர்ல அந்த லிங்கப்பா பொண்னை.. சொந்த  அண்ணிய..” அவர் அதற்கு மேல் சொல்லவில்லை.

சொந்த அண்ணிய சீரழைக்க ஆள் கூட்டி வந்த அயோக்கினை.. போய்…”

இருங்கஅவன் அதை வேணுமுன்னு செய்யலையே.. அவ கிட்ட நெருங்கி பழகுன்னு சொன்னான். அந்த திருட்டு பையன் தான் இது தான் சாக்குன்னுநம்ம மருமவளை

நம்ம  மருமளும் ஆசைப்பட்டுத்தான்.”

அவர் இழுக்க.,

அங்கே கனத்த மௌனம்..

ஆனாலும் அதுக்கு காரணம் அண்ணன் தானே.. அவன் பண்ன பிரச்சனையில., அவன் புத்தி பேதலிச்சு போய்…”

இருவரு, தலையை உலுக்கிக் கொண்டனர்.

ச்சே சரியான ஈன ஜென்மங்களை பெத்து எடுத்திருக்கோம்..”

அவர் அலுத்து கொண்டார்.

அவனுக்கு வாய்ப்பு கொடுங்க..”

அவர் அம்மாவை பார்த்தார்.

பெத்த பாசம்லே? செஞ்ச்சி தொலைக்கிறேன். ஆனா., பலன் இருக்காது

தெரியும்.  என் நிம்மதிக்கு?” அம்மா சொல்ல., அவர் யோசித்தார்.