மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, August 26, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1830

 மறுநாள் காலை, எழுந்து துணிகளை எடுத்துக்கொண்டு போய் குளித்துவிட்டு வந்தாள் காமினி.  கோபாலின் சித்தி அவளை ஓடி வந்து பிடித்துக் கொண்டாள்.

நல்லா இருக்கியா.,? நல்லா இருக்கியா?”என சூசகமாக கேட்டாள்.

அவள் தயக்கமாய் ம் என்று தலையசைக்க அவளது கன்னத்தை தடவி திருஷ்டி கழித்தாள் .

போய் பிரஷ் பண்ணிக்கிட்டு வந்து உட்காரு. டிபன் செஞ்சி வைக்கிறேன். சாப்பிடு என்றாள்

இல்ல த்தை நான் தான் உங்களுக்கு டிபன் செய்து தரனும் . லேட்டா எழுந்துட்டேன்என சொல்ல

அடடே அப்புறம் எனக்கு என்னம்மா  வேலை இருக்கு?  இங்க பாரு உன்ன நான் எதுவும் செய்யும் சொல்ல மாட்டேன். நீ எதையும் செஞ்சா நான் தடுக்க மாட்டேன். எந்த வேலையும் உனக்கு நான் சொல்ல மாட்டேன்.

நீ முதல்ல கோபால் பொண்டாட்டி, அதுக்கப்புறம் தான் இந்த வீட்டுக்கு மருமக, அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ என்று சொல்லி அவளிடம் கரிசனமாக பேசினாள்.

காமினிக்கு அத்தையை மிகவும் பிடித்திருந்தது. இவளை விட கோபாலின் அப்பாவுக்கு 24 வயது அதிகம் என கோபால் சொல்லி இருந்தான். அவளது உறவினர்களே அத்தையை  யாரது மாப்பிள்ளைக்கு அக்காவா? என கேட்டார்கள். அத்தை வித்யா இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். தனது வறுமக்காகவே இவள் சோம்தேவிற்கு  இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டிருக்கவேண்டும் என நினைத்தாள் காமினி.

அவளுக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது. அத்தை காபி கொடுக்க அதை கொண்டு போய் திண்ணைக்கு வெளியே கணக்கு பார்த்து கொன்டு இருந்த மாமாவிடம் கொடுத்து விட்டு வந்தாள். பல்துலக்கி கொண்டே இன்னொரும் முறை வீட்டை முழுதும் சுற்றிப் பார்த்தாள். அமர் இருக்கும் அறை இன்னும் திறக்கப்படவில்லை. அவன் எழுந்தவுடன் அவனுடன் ஆதராவாய் பேசவேண்டும்.

தோப்பில் உள்ள  மரங்களை கணக்கெடுத்தாள்.  அதற்குப் பிறகு மஞ்சள் ரோஜா தோட்டத்தில் நுழைந்தாள். தோட்டத்தில் ஒரு ஓரம் தண்ணீர் தொட்டி இருந்தது. ஏறி பார்த்தாள். 2000 லிட்டர் கொள்ளக்கூடிய தண்ணீர் தொட்டி அது. பின் மோட்டர் ரூம் உள்ளே போய் பார்த்தாள். சில துணிமணிகள் இருந்தது. பின் வெளியே வந்தாள்.

இதெல்லாம் அவளுக்கு பார்க்கவே புதிதாக இருந்தது. தோட்டத்தில் மூலையில் கூலியாள்  சோனு கால்வாய் வெட்டி கொண்டிருந்தான்.  தூரத்தில் அவளை வருவதை பார்த்துவிட்டு அவன்  மண்வெட்டியைக் கீழே போட்டு அவளை கையெடுத்துக் கும்பிட்டான்.

 காமினி தலை அசைத்துக்கொண்டே வீட்டைச் சுற்றிக் கொண்டு வீட்டின் முன் பக்கம் வந்தாள் . வீட்டு வெளியில் கோபால் அப்பா யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.

காமினி வந்ததும் என்னமா மாமா டிபன் சாப்பிட்டாச்சா? எல்லா இடத்தையும் சுத்தி பார்த்தியா? என கேட்டாள்.

எல்லாம்  ஆச்சி மாமா உங்களுக்கு ஏதாச்சும் வேண்டுமா?” எனக் கேட்க

வேணாம்மா. இப்பதான் நீ காபி கொடுத்தே. குளிச்சிட்டு நீ கோபாலை அழைச்சிகிட்டு இந்த ஊரை சுத்தி பார்த்துட்டு வா.

இந்த ஊர்ல விஷ்ணு கோவில் ரொம்ப பிரசித்தம். அப்புறம் அந்த காலத்துல, ராஜபுத்திரர் கட்டுன கோட்டை கூட பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டு அதெல்லாம் போய் பார்த்துட்டு வா , டேம்.. ஆறெல்லாம் போய் பாத்துட்டு வாங்க.. அவன் அடுத்த வாரம் காலேஜுக்கு போய்டுவான்ல என்றார்

சரிங்க மாமா என்றபடி அவள் உள்ளே போ., வீட்டு கூடத்தில் மூலையில் கிச்சனுக்கு அருகே இருந்த டைனிங் டேபிளில் கோபாலின் தம்பி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் .

அவனது அம்மா அவனுக்கு பரிமாறிவிட்டு மீதி சட்டினியை தள்ளி வைத்து விட்டு கிச்சனில் இருந்தார்கள். இவன் அதை கையை வீசி வீசி தேடிக்கொண்டிருந்தான்.

இவள் ஓடிப்போய் என்னப்பா சட்னி வேணுமா?’ என கேட்க. அவள் சத்தம் கேட்டு அவன் விழிக்க.

யாயார்..”

நான் தான் உன் அண்ணி. காமினிஎன்றாள்.

ஓ அண்ணியாகுட் மார்னிங்க் அண்னிஅண்னன் எழுந்துச்சா

“.. எழுந்தாச்சு. குளிச்சிகிட்டிருக்கார்.. உனக்கென்ன வேணும் சட்னியா?” எனக் கேட்டு.,  அவள் அவன் தட்டில் சட்டினி ஊற்ற வேறு ஏதோ திசையில் பார்த்தான்

இங்கே இருக்கேன் என்றாள்

என்ன அண்ணி? உங்களுக்கு ஏன் சிரமம்?” அவன் எங்கோ பார்த்து பேச அவனை பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது

பரவால்ல அமர் என்றபடி அவனுக்கு சட்னி ஊற்றி அவனிடம் பேச ஆரம்பித்தாள். அவனும் அவளிடம் ஆர்வமாக பேசினான். அவன் கல்லூரி முத்ல ஆண்டிற்கு பிறகு போகவில்லையாம். ஆனால் தபாலில் டிகிரி படித்து விட்டானாம். அவர்களுக்கு என இருந்த பிரத்தியேகமான கல்விகூடத்தில் டிகிரி வரை படித்துவிட்டு அத்தோடு படிப்பை நிறுத்திக் கொண்டான். நிறைய புத்தகங்களை ஆடியோ வடிவத்தில் கேட்டு பெரிய அறிவை தனக்குள் பெருக்கி இருந்தான். அவன் பேசுவதைக் கேட்க இவளுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தனக்கு பார்வை இல்லை என்பதையே ஒரு குறையாக நினைக்காத அவனை பார்த்து அவளுக்கு விசித்திரமாக இருந்தது.

அவள் பேசிக் கொண்டிருக்க அதற்குள் வித்யா வந்துவிட்டாள்.

இவன்.,அமர்.. சாதாரண ஆள் இல்ல காமினி.  வாய தொறந்து பேஆரம்பிச்சான்னா., உலக அரசியலில் இருந்து உள்ளூர் பொருளாதார வரைக்கும் சூப்பரா பேசுவான். எப்போவும் ஹெட்போன போட்டுக்கிட்டு எல்லா ஆடியோவும் கேட்பான். உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா புரட்சியாளர்கள் வரலாறு இவனுக்கு தெரியும். சாதனையாளர்களை பத்தி தெரியும் படிக்கிறதுக்கு பதிலா ஆடியோ கேட்பதுதான் அவனுக்கு அப்படி ஒரு விருப்பம். அவன் அப்பாவுக்கு இவனை எப்படியாவது  ஐ சி டபிள்யூ படிக்க வெச்சு ஆடிட்டர் ஆக்கனும்னு தான் ஆசை.. ஆனா விதி இப்படி ஆகிடுச்சி.” எனசொல்லி விட்டு போக., காமினிக்கு அவன் மீது முதலில் இருந்த பாவம், பரிதாபம் மறைந்து போய் அவனிடம் பெரிய பிரமிப்பு ஏற்பட்டது

கோபாலிடம் அமரின் திறமையைப் பற்றி பேச அவனும் அதையே ஆமோதித்தான். அவனுக்கு கண் மட்டும் பெரிதாக இருந்திருந்தால் அவன் என்னை விட பிரமாதமான வேலையில போய் சேர்ந்து இருப்பான். இன்னேரம் பெரிய ஆடிட்டராக பிராக்டீஸ் செய்துகொன்டிருப்பான் என்றான்

அதன்பிறகு கோபாலும் காமினியும் காரில் கிளம்பி வெளியே போனார்கள். காரில் ஊர் சுற்றினார்கள். இரவு வீட்டிற்கு வந்தார்கள்.




 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 65 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)