மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, April 10, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 58

 

சினிமாவிலும் பல நல்ல உள்ளங்கள் இருந்தன.  'போயும் போயும் ரங்கராஜ் சார்' இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு தனது மகளை கொடுத்துவிட்டு அவஸ்தைப் படுகிறார்கள் என பரிதாபப் பட்டார்கள் மெல்ல முடியாமல் விழுங்க முடியாமல் தவித்தார்கள். வெளியூர் என்றால் அவன் பட்டப்பகலியே ஹீரோயின் தோள் மீது  கையை போட்டு கேரவானுக்கு கூட்டி போனான்.

உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து விட்ட மருமகனை என்ன சொல்லி திட்டுவது திருத்துவது என புரியாமல் ரங்கராஜும்  திண்டாடினார்.

 தொழில் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் ஒழுக்கம் பற்றி சொல்லிக் கொடுக்க அவனது அப்பாவால் தான் முடியும். ஆனால் அந்த ஈன்ம கெட்டவன் வாய் திறக்காமல் இருக்கிறான்.

அவருக்கு தனது மகள்களின் பிரச்சினையே,  பெரிய பிரச்சினையாக இருந்தது. அவருக்கு ரெண்டு பொண்ணுமே பிரச்சனை. இளைய மகளை கனடா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்திற்கு மருமகளாக அனுப்பி வைத்தார். அவள் வாழ்க்கையும் சரியில்லாத போல இருக்கிறது. ஒரு விதத்தில் அவர்கள் உறவுக்காரர் கூட. மாப்பிள்ளையை அவருக்கு பார்த்தவுடனே பிடித்துவிட்டது.

 தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளையின் சராசரி முகம் மென்பொருள் நிறுவனத்தில் சொந்தமாக மென்பொருள் நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தான் இளைய மாப்பிள்ளை தினேஷ்.  ஆண்டுக்கு 15 கோடி வருமானம் மாப்பிள்ளை இளமையாக அழகாக இருந்தார். சந்தியாவுக்கும் பிடித்திருந்தது.  இப்போது என்ன பிரச்சினை?  என தெரியவில்லை.

 அடிக்கடி அழுது கொண்டே அவள் அம்மாவுக்கு போன் செய்கிறாள். பணம் இல்லாதவர்களுக்கு பணம் தான் பிரச்சனை. பணம் இருப்பவர்களுக்கு பணத்தை தவிர மீதி எல்லாமே பிரச்சனை 'என்கிற கதையாகிவிட்டது.

 ஒரு தம்பதியின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கையில் என்ன பிரச்சினை என்று போய் விசாரிக்க யாருக்குமே உரிமை இல்லை. சந்தியா அடிக்கடி அப்பாவின் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் வரும்போதெல்லாம் அவள் கூடவே அவளது புருஷன் வர வேண்டியதாக இருந்தது.

இதனால் அவனது நிறுவனத்தின் பணிகள் தடை பெற்றன. ஆனால் அதையெல்லாம் அப்பா சொன்னால் கூட அவள் கேட்கவில்லை.

"என்ன  பெரிய கம்பெனி?  பெரிய வருமானம்? எங்க அப்பா வோட ஒரு நாள் இன் கம்  என்ன தெரியுமா?"' என சம்பந்தமே இல்லாமல் கணவனிடம் எகிறுகிறாளாம்.

அவளால் அவனுக்கு அவமானமாக இருந்தது.

" உனக்கு வேணும்னா நீ கனடாவிலேயே இரு,. நான் சென்னையில் இருக்கேன்' என விதண்டாவாதம் பேசினாள். எல்லோரும் புத்திமதி சொல்லி அவளை அனுப்பி வைக்க மறுபடியும் மூன்று மாதத்தில் திரும்பி சென்னைக்கு வந்தாள்.

மகள்களால் அவருக்கு நிம்மதியே இல்லை. தலை வெடித்துப் போகும் அளவிற்கு இரு மகள்களும் மாறி மாறி தங்கள் புருஷனை பற்றி புகார்கள் சொன்னார்கள்.

கனடாவிலிருந்து வீடியோ காலில் 'உங்களை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது டாடி'  என சொல்லி  சந்தியா அழ

'சரி நீ கிளம்பி வா'  என்றார் ரங்கராஜ் .

அடுத்தநாள்  சந்தியாவும், தினேஷும் வந்தார்கள். என்ன பிரச்சினை ? என கேட்டபோது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

' அங்கிள் எல்லார்கிட்டயும் திமிரா நடந்துக்கறா.  மரியாதை இல்லாம பேசுறா.  எல்லோருக்கும் எதிராக என்னை மட்டமா திட்டறா? அவளுக்கு என்ன பிரச்சனை ? என்ன எதிர்பாக்குறா?' என எனக்கு தெரியவில்லை " என தினேஷ் சொன்னான்.

"சரி சந்தியா எங்க?"

"மேல ., சுஷ்மிதா பசங்கல்லாம் வந்திருக்காங்கல்ல ., அங்க இருக்கா"

ரங்கராஜ் சந்தியாவைத் தேடி மேல் போனார்., அவளை அழைத்து  தனியாக கேட்டபோது"  அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா எனக்கு கனடால இருக்க பிடிக்கல. செம்ம போரிங்க். நம்ம வீட்டை விட்டு போனா ஏதோ மாதிரியா இருக்கு, சுஸ்மிதா , சுஸ்மிதா பசங்க,  நீங்க உங்க கூடவே  இருந்துட்டேன் . எங்க எனக்கு புடிக்கல. அத சொன்னா அவரு புரிஞ்சிக்க மாட்டேங்க்கிறாரு.. ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை தான் அனுப்புவேன்னு கண்டீசன் போட்டா எனக்கு கோபம் வரும். அந்த மாதிரியெல்லாம் எனக்கு ரூல்ஸ் போடுறது ரொம்ப எரிச்சலா இருக்கு" என்றாள் சந்தியா.

யோசித்துப் பார்த்தால் எல்லாமே வெற்று பிரச்சினைகள்தான். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தான்

' சரி இனிமேல் நீ இங்க வரணும்னா என் கிட்ட போன் பண்ணி சொல்லு. நான் மாப்பிள்ளை கிட்ட பர்மிஷன் கேக்கறேன்.."

"அட  என்னப்பா நீ?  அந்த ஆள் கிட்ட நீங்க போய் பர்மிஷன் கேக்கேறேன்னு சொல்றீங்க?" அவள்  பேச

" வாய மூடு சந்தியா. உன்னோட இந்த வாய் தான் உனக்கு கெட்ட பேரு கொடுக்குது.  நாட்டுக்கு ராஜான்னாலும்  வீட்டுக்கு வேலைக்காரன் தான் . இனிமே சென்னைக்கு வரனும்னா எனக்கு போன் பண்ணு "என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்.

அவள் கோபமாக தன் ரூமுக்கு வர, ரூமில் தினேஷ் படுத்துக் கொண்டு டிவி பார்க்க ரிமோட்டை எடுத்து டிவி ஆப் செய்தாள்.

அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவளுடன் ஏன் வாய் கொடுக்க வேண்டும்?.

 

அன்று இரவு , அந்த வீட்டில் தனியறையில் படுத்து இருக்க வேண்டுமென்றே தாமதமாக வந்த சந்தியா அவனுடன் படுக்காமல் தரையில் தலையணை போட்டு படுத்தாள். புடவை கூடமாற்றாமல் வந்து படுத்தாள். அவள் செய்கை  அவனுக்கு  அவமானமாக இருந்தது .

சந்தியா

“......................

“ஏய் சாண்டி?

“ என்ன சொல்லு

"இப்ப நீ மேலே எழுந்து வரியா ? இல்லை  நான் கீழே வரட்டுமா? ' என்றான்

"மேலே எழுந்து வந்தா என்ன நடக்கப்போகுது?"  என எடக்காக கேட்டாள்.

 இவளிடம் பேசிப் பயனில்லை என அவன் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனான்.

அவன் மனம் முழுக்க பலவிதமான குழப்பங்கள் ஓடின. ஏன் நாம் பெரிய இடத்து பெண்ணை அழகான பெண்ணை பார்த்து கட்டிக் கொண்டு வந்தோம்?.  சுஷ்மிதா எவ்வளவு அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறாள். தன்னை விட வயது குறைந்த புருஷனுக்கு மரியாதை கொடுக்கிறாள். வேலைக்காரர்களுக்கு மரியாதை கொடுக்கிறாள்.  ஆனால் , சந்தியாவுக்கு தான் மிகப்பெரிய பணக்காரு என்கிற திமிர் எப்போதும் இருக்கிறது.

 தான் முன்னால் சென்றால் புருஷன் பை தூக்கி ஓடி வர வேண்டும் என விரும்புகிறாள்.

 கனடாவில் பரவாயில்லை . யாருக்கும் தெரியாது .ஆனால் இந்தியாவில் அதுபோல செய்தால் அது அவளுக்குத்தான் அசிங்கம்.

 கல்யாணம் ஆகி இந்த இரண்டு வருடத்தில் நானும் அவளும் சந்தோஷமாக பேசி சிரித்த நாட்கள் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம் போல இருக்கிறது.

' எனக்கு ஏன் எல்லா செல்வங்களும் சரியாக  அமைந்தும்,  மனைவி மட்டும் எனக்கு சரியாக அமையவில்லை ? புருஷனை கொஞ்சுகிற கொண்டாடுகிற ஆராதிக்கிற ஒரு சராசரி மனைவி கூட எனக்கு கிடைக்கவில்லையே ? மனப்பொருத்தம் பார்க்காமலேயே கல்யாணம் செய்து கொண்டது தவறு.  எதற்கெடுத்தாலும் எல்லாம் தெரிந்தது போல பேசுகிறாள்.  படுக்கையில் கூட கடமைக்குதான் படுகிறாள் வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது என அவன் பல விஷயங்களை யோசித்து கொண்டிருந்தான்.

பேசாமல விவாகரத்து கொடுத்து விடலாமா ? என்று கூட அவன் யோசித்தான்.  இதுபோன்ற கணவனை மதிக்காத பெண்களுக்கு பெண்களே பெண்களுக்கு விவாகரத்து கொடுத்து விட வேண்டும்.  அது தான் சரி என அவன் நினைத்தான் .

ஆனால், ரங்கராஜன் சார் நல்லவர். சினிமாவில் மரியாதையானவர். இந்த விவகாரத்தால் அவருக்கு இன்னும் பெரிய தலைவலி வந்து விடும்.

அவர் முகத்தைதான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதேபோல் யோசித்துக் கொண்டிருந்தான்.

தூக்கமும் விழிப்பும் ஆக அவன் கட்டிலில் படுத்து கிடந்தான். மெல்ல கண் விழித்து பார்த்தான். ‘ சரி அவள்தான் கட்டிலுக்கு வரவில்லை.  நாம் தரையில் போய் படுப்போம் என எழுந்து கீழே பார்த்தான்.

சந்தியா இல்லை.

கொஞ்ச நேரம் அவன் படுத்திருந்தான். அவள் வரவே இல்லை.

அவன் மெதுவாக எழுந்து பெரிய  ஹாலுக்கு வந்தான். தண்ணீர் குடித்தான்.  இரவு நேரத்தில் எங்கே போனாள்?  வீட்டைச் சுற்றிக் கொண்டு போனாள்?.

வீட்டுக்குப் பின்னால் இருக்கும்  தோட்ட அறையில் யாரோ முனகும் சத்தம் கேட்டது. பெண் முனகும் சத்தம் தான் .  அவன் பரபரப்பாகி  நடுவில் இருந்த ஆறடி சுவரைப் பிடித்து எம்பி சுவற்றை தாண்டி முகத்தை மட்டும் எட்டிப் பார்த்தான்.

அங்கே சந்தியாவின் சேலையை  தூக்கி அவளது முழங்காலில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் நடிகன் மாதேஷ்.

-----------