மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 7, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1769

 

அன்று இரவு முழுக்க சஞ்சனாவுக்கு விழிப்பும் தூக்கமுமாகவே நகர்ந்தது. சம்பந்தமே இல்லாமல் ஈஸ்வரின் தெளிவில்லாத முகம் அவளது கனவில் வந்து கொண்டே இருந்தது. பெங்களூரில் புதிதாக நகைக்கான  டிசைனிங் செய்வதற்காக  ஆர்டர் கிடைத்த சந்தோஷம் அவளுக்கு ஏனோ இல்லை.  மனம் முழுக்க ஒரு இனம் புரியாத பதட்டம் நிறைந்திருந்தது. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்க போவதாக அவளது உள்ளுணர்வு அவளை இம்சை படுத்தியது. மெல்ல தூங்கி போக., அதிகாலையில்..மீண்டும் கனவு சஞ்சனா சேவ் மீ என சுஜாதா அழைக்கிறாள். நிறைய வண்ணப் புடவைகள்., அதில் சுஜாதா நடமாடுகிறாள். மம்மியா  இது ? எதற்கு இந்த ஆனந்த நடனம்.. 'மம்மி வா.'

"வரமாட்டேன் போ.. "மம்மி ஆடிகொண்டே இருக்கிறாள்.

விழிப்பு வந்தது.,

குலதெய்வம் கோயிலுக்கு போய் வெகு நாளாகியது. திடீரென நினைவுக்கு வந்தது. அவசர வேலையெல்லாம் முடிந்த பின் மம்மியை கூப்பிட்டு கொண்டு போக வேண்டும்.

 மறுநாள் காலை அந்த வீடு தனது அன்றாட அலுவல்களைப் பார்க்க பரபரப்பாக இயங்கியது.

" நீ எங்கடி கெளம்பிட்ட சஞ்சனா?" மம்மி  கேட்டாள்

" மம்மி ஒரு புது டிசைன் பண்ணி இருக்கேன்,. பாரீஸ் போகனும்.,  கௌதம் ஜூவல்லரஸ் போயி அந்த டிசைன் டெம்ப்ளேட். காட்டணும் " சஞ்சனா சொல்ல.,

"அப்போ நீயும் போயிட்டா எப்படிடி?  உன் வீட்டுக்காரரும் ஆபீஸ்க்கு கிளம்பிட்டாரு "

"சரி. இப்ப அதுக்கு என்ன ?" கேட்டாள்.

" என்னடி விளையாடுறியா ? குழந்தை வர்ஷாவை அந்த பிரையின் சென்டருக்கு கூட்டிட்டு போகணும் தெரியாதா உனக்கு ?" எனக்கேட்டாள்.

" ஆமாம்மா ..,அவரு நேத்து கூட்டிட்டு போய் இருக்காரு.பட்., அந்த ஸ்காலரே நேத்து இல்லையாம்..  இன்னிக்கி கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்கல்லே..  என்ன பண்றது?  அடுத்த வாரம் பார்க்கலாமா மம்மி ?"என கேட்டாள்.

" என்னடி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுற?  நான் ஏதாச்சும் ஒரு வைத்தியம் பண்ணி அவளை சரிப்படுத்திடனும்னு நானும் பார்க்கிறேன்.,  எட்டு வயசுக்குள்ள இந்த பிரச்சனை சரியானா தான் உண்டு., இல்லன்னா அவளுக்கு காலம் முழுக்க ஆவரெஜுக்கு கீழ தான் இருக்குமுன்னு ., டாக்டர்ங்க சொல்லி இருக்காங்கலே"

 "சரிம்மா., இப்ப நாலுதானே ஆகுது.."

'நீ சரியான சேம்பேறிடி"

"இல்ல மம்மி ஒர்க் இருக்கு"

"பொல்லாத ஒர்க் போ. குழந்தையை பாக்கறச்ச எனக்கு பகீர் ன்னு இருக்கு., . நீ என்னடான்னா அடுத்த வாரம் அடுத்த மாசம்ன்னு இழுத்துக் கிட்டே போறியே ., இன்னிக்கு நீ போய் குழந்தையை காட்டிட்டு வந்துடு சஞ்சனா ., "

"மம்மி நாட் டுடே'

"சொல்றத கேளு "என்றாள்  சுஜாதா

"ஐயோ கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா ., இது ரொம்ப முக்கியமான டிசைன் இதை நேரில் போய் நான் காட்டிட்டு வரணும் ., வேனுமுன்னா  நீ அழைச்சிட்டு போறியா?"  என கேட்டாள்

"எனக்கு இன்னிக்கு மதியம் கோர்ட்ல வேலை இருக்கேடி" என்றாள்

"அப்ப ஒன்னு பண்ணு. வேலை மதியம் மேல் தானே., வர்ஷாவை காலையில அழைச்சிட்டு போயேன்.."

"......................"

"ப்ளீஸ் மம்மி"

"சரி சரி போறேன்"  சுஜாதா வேறு வழியில்லாமல் சஞ்சனா கிளம்பிப் போன அரை மணி நேரத்தில், குழந்தை வர்ஷாவை அழைத்துக்கொண்டு
ஆர் ஏ புரத்திலுள்ள ஈஸ்வரின் பிரைன் டெவலப்மென்ட் சென்டருக்கு கூட்டிச் சென்றாள் .

சுஜாதா, வர்ஷாவுடன் அங்கு  போகும் போது மணி 11 ஆகி விட்டிருந்தது. சுமாரான கூட்டம். வழக்கமான மாணவர்கள் மாலை தான் வருவார்கள் போல, இப்போது வெறும் கவுன்சிலிங் மற்றும் அட்மிஷன் நடப்பதாக வாசலில் செக்யூரிட்டி சொல்லி இருந்தான்.

அவள் உள்ளே செல்ல விவரம் கேட்டார்கள்.  குழந்தையை பரிசோதித்தார்கள்.

" இது நேத்து வந்த சைல்ட் இல்ல?"

"ஆமாங்க. நேற்று ஸ்காலர் இல்லன்னு சொன்னாங்க ."

"ஒன்னும் பிரச்சினை இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் உள்ள இன்பர்ம் பண்றேன் "என்ன சொன்னார்கள்.

 சிறிது நேரத்தில் சுஜாதாவை அழைத்தார்கள்.

" குழந்தை இங்கேயே இருக்கட்டும், முதல்ல நீங்க போய் சாருக்கு எக்ஷ்பிளெயின் பண்னுங்க., குழந்தைகள் பிரச்சினையை குழந்தைக்கு எதிரில் பேச வேண்டாம்.,நீங்க போய் ஸ்காலர பாருங்க" என்றார்கள்.

சுஜாதா., அந்த நீளமான வராண்டாவில் நடந்து சென்று இடது புறம் திரும்ப உள்ளே,  ஈஸ்வர் சந்திரன் உட்கார்ந்திருந்தான் .

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1768

 

" ஹாய் மேடம் ஐ ஆம் ஈஸ்வர் ., ஈஸ்வர் சந்திரன்' என கை நீட்ட.,  அவள் கை கொடுக்காமல் தலை மட்டும் அசைத்துவிட்டு விறு விறு வென சென்றுவிட்டாள்.  அது அவனுக்கு இரண்டாவது ஏமாற்றமாக இருந்தது .அவன் சஞ்சனாவின் பின்னழகையே  பார்த்து நின்றான். அவள் திரும்புவாளா? என் எண்ணி குறுகுறுப்பாக பார்க்க.,  அவள் திரும்பவில்லை. அழுத்தகாரிதான்.

அவன்  அடுத்த கட்டமாக., சஞ்சனா உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு சென்றான். ஏதேனும் அவள் உடமைகள், குடித்து போட்ட பெட் பாட்டில், உதிர்ந்த மல்லிகை பூச்சரம், அட் லீஸ்ட்  வியர்வை ஈரம் இருக்குமா ? என ஒரு துப்பறியும்  நாய் போல தேடிக்கொண்டிருக்க , அதற்குள் விமான சிப்பந்திகள் அருகே வந்து 'எனி ப்ராப்ளம் சார் ஏதாவது மிஸ் பண்ணிட்டீங்களா? பட் உங்க சீட் அங்க தானே "  என கேட்க

இல்லை இல்லை என்று சொன்னபடியே ஏமாற்றத்துடன் விமானத்தை விட்டு இறங்கினான் . ச்சே எதுவும் சிக்கவில்லை.

செக் இன்னில் கிளியரன்ஸ் முடிந்த உடன், அவன் ஏர்போர்ட் வளாகத்தில்  பரபரப்பாக சஞ்சனாவை  தேடினான்.  எங்கே அந்த அழகி ?' என தேடிக்கொண்டிருக்க.. வாசலில் நகரும் கூட்டத்தில்  அந்த இளஞ்சிசிவப்பு சேலை. அவள் தான்., யெஸ்..  அந்த பெண் தான் நான் ஃபிளைட்டில் பார்த்த பெண் .,

அவன் சுறுசுறுப்பானான்.

தன் மனதை ஒருமுகப்படுத்தி திரும்பத் திரும்ப அவள் முகத்தை காட்டு' என அவன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க அனிச்சையாக சஞ்சனா சடக்கென யாரோ தோளை தொட்டு திருப்பியது போல திரும்பினாள்.  அவள் திரும்பிய வேகத்தில் அவளது புடவை கொசுவம் ஒரு பக்கம் விலகி அவளது பெண்மையின் முக்கோணத்தை பொம்மென  என்று அவனுக்குக் காட்ட., சில மீட்டர் தொலைவில் அவன் சஞ்சனாவை அருகே நின்று பார்த்தான் .

அவளும் திக்கி திணறி அவனை பார்த்தாள். மிரண்டாள்.

ஈஸ்வர் அவள் அருகே சென்று " ஹாய்...ஐஆம் ஈஸ்வர் சந்திரன் ..'என  சொல்ல அவள் அவனையே திகைத்து பார்க்க

"ஹாய் சஞ்சனா? என்ன பண்ற?  லூசு மாதிரி எதையோ பாத்துகிட்டு நிக்குறியே"  என அவள் தோள்களை தொட்டான்  கூட்டத்தில் இருந்து வந்த அவளுடைய கணவன் .

 அவசரமாக சஞ்சனா பார்வையிலிருந்து மறைந்தான் ஈஸ்வர்.

"நீங்களா ? நீங்க  இங்க?" அவள் ஈஸ்வர் மறைந்த திசையையே பார்த்து நின்றான்.

"இங்க எதை பாத்துக்கிட்டு நிக்கற?'

"யா.யாரோ கூப்டாபோல இருந்துச்சு"

"எதுக்கு இப்படி பயந்த போல இருக்கே? என்ன ஆச்சு?" என கேட்க.,

" இல்ல அங்க ஒரு ஆளு,  அதோ அங்க பாருங்க., கிரே கலர் கோட் சூட் போட்டு போறானே..அவன் தான்னு நினைக்கறேன்"

" சரி அவனுக்கு என்ன?"

" இல்ல அவன் ரெண்டு மூணு தடவை என்கிட்ட பேச ட்ரை பண்ணான்.,  யார்னு தெரில., ஏதோ ஆன் என்கிட்ட சொன்னான்"  அவள் பயந்தாற் போல இருந்தாள்.

" அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உன்னை யார் இந்த மாதிரி அண் டைம் -ல பெங்களூர்  போவ சொன்னது .."

"இல்லங்க  பெங்களூர் ஃப்ளைட் டெக்னிக்க்ல இஷ்ய்யூல் கேன்சல் ஆகிடுச்சி. இது மும்பை பிளைட்.."

"அதை போன் பண்னி இன்பார்ம் பண்ணாம எதுக்கு மெசேஜ் அனுப்பர? நான் இப்ப தான் மெசேஜ் பாத்தேன். உங்கம்மா அங்க திட்டிட்டு இருக்காங்க... .வா..."

"சரி நீங்க வர்ஷாவை  கூட்டிகிட்டு போனீங்களா?

"எங்க?

"அதான் ஆர் ஏ புரத்துல ஒரு பிரெய்ன்  செண்டர் இருக்காமே..அங்க"

"ம்ம் போனேண்... அந்த ஸ்காலர் இல்லியாம்.. மும்பைக்கு போயிருக்காராம்.  நாளைக்கு வர சொன்னாங்க"

"யாரு"

"யாரோ. ஈஸ்வர் சந்திரனாம்.."

சஞ்சனாவுக்கு அந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருந்தது..

-------