மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 7, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1769

 

அன்று இரவு முழுக்க சஞ்சனாவுக்கு விழிப்பும் தூக்கமுமாகவே நகர்ந்தது. சம்பந்தமே இல்லாமல் ஈஸ்வரின் தெளிவில்லாத முகம் அவளது கனவில் வந்து கொண்டே இருந்தது. பெங்களூரில் புதிதாக நகைக்கான  டிசைனிங் செய்வதற்காக  ஆர்டர் கிடைத்த சந்தோஷம் அவளுக்கு ஏனோ இல்லை.  மனம் முழுக்க ஒரு இனம் புரியாத பதட்டம் நிறைந்திருந்தது. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்க போவதாக அவளது உள்ளுணர்வு அவளை இம்சை படுத்தியது. மெல்ல தூங்கி போக., அதிகாலையில்..மீண்டும் கனவு சஞ்சனா சேவ் மீ என சுஜாதா அழைக்கிறாள். நிறைய வண்ணப் புடவைகள்., அதில் சுஜாதா நடமாடுகிறாள். மம்மியா  இது ? எதற்கு இந்த ஆனந்த நடனம்.. 'மம்மி வா.'

"வரமாட்டேன் போ.. "மம்மி ஆடிகொண்டே இருக்கிறாள்.

விழிப்பு வந்தது.,

குலதெய்வம் கோயிலுக்கு போய் வெகு நாளாகியது. திடீரென நினைவுக்கு வந்தது. அவசர வேலையெல்லாம் முடிந்த பின் மம்மியை கூப்பிட்டு கொண்டு போக வேண்டும்.

 மறுநாள் காலை அந்த வீடு தனது அன்றாட அலுவல்களைப் பார்க்க பரபரப்பாக இயங்கியது.

" நீ எங்கடி கெளம்பிட்ட சஞ்சனா?" மம்மி  கேட்டாள்

" மம்மி ஒரு புது டிசைன் பண்ணி இருக்கேன்,. பாரீஸ் போகனும்.,  கௌதம் ஜூவல்லரஸ் போயி அந்த டிசைன் டெம்ப்ளேட். காட்டணும் " சஞ்சனா சொல்ல.,

"அப்போ நீயும் போயிட்டா எப்படிடி?  உன் வீட்டுக்காரரும் ஆபீஸ்க்கு கிளம்பிட்டாரு "

"சரி. இப்ப அதுக்கு என்ன ?" கேட்டாள்.

" என்னடி விளையாடுறியா ? குழந்தை வர்ஷாவை அந்த பிரையின் சென்டருக்கு கூட்டிட்டு போகணும் தெரியாதா உனக்கு ?" எனக்கேட்டாள்.

" ஆமாம்மா ..,அவரு நேத்து கூட்டிட்டு போய் இருக்காரு.பட்., அந்த ஸ்காலரே நேத்து இல்லையாம்..  இன்னிக்கி கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்கல்லே..  என்ன பண்றது?  அடுத்த வாரம் பார்க்கலாமா மம்மி ?"என கேட்டாள்.

" என்னடி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுற?  நான் ஏதாச்சும் ஒரு வைத்தியம் பண்ணி அவளை சரிப்படுத்திடனும்னு நானும் பார்க்கிறேன்.,  எட்டு வயசுக்குள்ள இந்த பிரச்சனை சரியானா தான் உண்டு., இல்லன்னா அவளுக்கு காலம் முழுக்க ஆவரெஜுக்கு கீழ தான் இருக்குமுன்னு ., டாக்டர்ங்க சொல்லி இருக்காங்கலே"

 "சரிம்மா., இப்ப நாலுதானே ஆகுது.."

'நீ சரியான சேம்பேறிடி"

"இல்ல மம்மி ஒர்க் இருக்கு"

"பொல்லாத ஒர்க் போ. குழந்தையை பாக்கறச்ச எனக்கு பகீர் ன்னு இருக்கு., . நீ என்னடான்னா அடுத்த வாரம் அடுத்த மாசம்ன்னு இழுத்துக் கிட்டே போறியே ., இன்னிக்கு நீ போய் குழந்தையை காட்டிட்டு வந்துடு சஞ்சனா ., "

"மம்மி நாட் டுடே'

"சொல்றத கேளு "என்றாள்  சுஜாதா

"ஐயோ கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா ., இது ரொம்ப முக்கியமான டிசைன் இதை நேரில் போய் நான் காட்டிட்டு வரணும் ., வேனுமுன்னா  நீ அழைச்சிட்டு போறியா?"  என கேட்டாள்

"எனக்கு இன்னிக்கு மதியம் கோர்ட்ல வேலை இருக்கேடி" என்றாள்

"அப்ப ஒன்னு பண்ணு. வேலை மதியம் மேல் தானே., வர்ஷாவை காலையில அழைச்சிட்டு போயேன்.."

"......................"

"ப்ளீஸ் மம்மி"

"சரி சரி போறேன்"  சுஜாதா வேறு வழியில்லாமல் சஞ்சனா கிளம்பிப் போன அரை மணி நேரத்தில், குழந்தை வர்ஷாவை அழைத்துக்கொண்டு
ஆர் ஏ புரத்திலுள்ள ஈஸ்வரின் பிரைன் டெவலப்மென்ட் சென்டருக்கு கூட்டிச் சென்றாள் .

சுஜாதா, வர்ஷாவுடன் அங்கு  போகும் போது மணி 11 ஆகி விட்டிருந்தது. சுமாரான கூட்டம். வழக்கமான மாணவர்கள் மாலை தான் வருவார்கள் போல, இப்போது வெறும் கவுன்சிலிங் மற்றும் அட்மிஷன் நடப்பதாக வாசலில் செக்யூரிட்டி சொல்லி இருந்தான்.

அவள் உள்ளே செல்ல விவரம் கேட்டார்கள்.  குழந்தையை பரிசோதித்தார்கள்.

" இது நேத்து வந்த சைல்ட் இல்ல?"

"ஆமாங்க. நேற்று ஸ்காலர் இல்லன்னு சொன்னாங்க ."

"ஒன்னும் பிரச்சினை இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் உள்ள இன்பர்ம் பண்றேன் "என்ன சொன்னார்கள்.

 சிறிது நேரத்தில் சுஜாதாவை அழைத்தார்கள்.

" குழந்தை இங்கேயே இருக்கட்டும், முதல்ல நீங்க போய் சாருக்கு எக்ஷ்பிளெயின் பண்னுங்க., குழந்தைகள் பிரச்சினையை குழந்தைக்கு எதிரில் பேச வேண்டாம்.,நீங்க போய் ஸ்காலர பாருங்க" என்றார்கள்.

சுஜாதா., அந்த நீளமான வராண்டாவில் நடந்து சென்று இடது புறம் திரும்ப உள்ளே,  ஈஸ்வர் சந்திரன் உட்கார்ந்திருந்தான் .

No comments:

Post a Comment