ரம்யா, அதன் பிறகு தன்னுடைய அந்தரங்க விஷயத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. அப்பாவிடம் மட்டும் ,” நீங்க அந்த மதுரைக்கார வரனை எனக்கு பார்த்து முடித்துடுங்கள் அப்பா நான் கட்டிக்கிறேன் “ என்றாள்.
“ ஏன்மா ? அவனுக்கு தான் எட்டு வயசு அதிகம்னு சொன்னியே. “
“ பரவால்லப்பா வயசு ,உருவம் எதுவுமே முக்கியமில்லை’ன்னு எனக்கு புரிஞ்சிருச்சுப்பா. நான் அவரையே கட்டிக்கிறேன்” என்றாள்.
அந்த வாரத்திலேயே நிச்சயம் அதற்கு அடுத்த மாதத்தில் ரம்யாவுக்கும் மதுரைக்கார மாப்பிள்ளை ரவிச்சந்திரனுக்கும் திருமணமானது.
மைதிலியும், ஜாக்கியும் என்ன ஆனார்கள்? ‘ என்று தெரியவில்லை .
அவன் அடிபட்ட புலியாக எப்படியாவது தம்மை திரும்பி வந்து பார்ப்பான். என அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவள் வீட்டு முகவரி மைதிலிக்கு தெரியாது,
அவனுக்கும் தெரியாது
அந்த போன் இருக்கும் வரையில் நமக்கு எப்போதுமே ஆபத்து இருக்கும் என்பதை அவள் உணர்ந்து இருந்தாள். ஆனால், அவனுக்கு எதிராக
இது சூப்பர் எவிடென்ஸ். இது இருக்கட்டும் என் கூட.
இனி எல்லா தொல்லையும் தீர்ந்தது என்று அவள் நம்பி மனம்
உற்சாகமனாள். அவளுக்கு மதுரையில் கல்யாணம் ஆனது. ரவிக்கு கழுத்தை நீட்டினாள் .அவனும் நல்லபடியாகத்தான் பார்த்துக் கொண்டான் .
கல்யாணம் ஆனதும் சென்னைக்கு அழைத்து வந்தான். அடிக்கடி அந்த மண்டப காட்சிகள் அவளை குற்ற உணர்வில் அலைக்கழித்தாலும்,.
கணவன் ரவியுடன் கருத்தொருமித்து வாழ்ந்து குடித்தனம் நடத்தினாள். சாந்தமான கணவர்,
அனுசரனையான துணை கிடைத்த மகிழ்வில் அவள் ஆழ்ந்தாள்.
ஆறுமாதம் முன்பு அவள், தனது வாழ்க்கை ஒரு கந்தல் துணியாகி போல ஆகிவிட்டதே?’ என அவள் நினைத்து இருந்தாள். ஆனால் , ரவியுடன் சுகமான திருமண வாழ்வை தொடங்கியிருந்தாள்.
இப்போது கணவனுடன் சந்தோஷமாக, நிறைவாக தாம்பத்தியத்தை அனுபவித்துக் கொண்டு அவனுக்கு அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளையும் பெற்று போட்டாள்.
பிள்ளைகள் இரண்டு முத்து முத்து மணிகள். ‘தனது வாழ்வே பறி போச்சு’ என அழுது மாய்ந்தது
ஒரு காலம். ஆனால் இப்படி ஒரு சென்னை வாழ்க்கை அமையும் என்றும் சாந்தமான கணவர்
கிடைப்பார் என்றும் அவள் கனவில் கூட நினைத்ததில்லை.
தனது கடந்த கால வாழ்க்கையில் எப்படி ஒரு அழுக்கு இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. முதல் இரவில் அவனது கணவன் கூட கேட்டான்
“ரம்யா! ஏன் கல்யாணத்துல ரொம்ப உம்மென்று டல்னு இருந்தே?” ஏதாச்சும் லவ் பிராப்ளமா? யாராச்சும் உன் லைஃப் இருக்காங்களா ?’என அவன் புரிந்து கொண்டு கேட்டான் .
“ஐயையோ அப்படியெல்லாம் இல்லைங்க . “
“அப்ப நான் உனக்கு குறையா இருக்கேனா? என்னுடைய முன் மண்டை, இல்லண்னா வயசு வித்தியாசம்? இப்படி ஏதாச்சும் காரணமா ?” என சொல்ல அவள் சிரித்துக் கொண்டே மழுப்பினான்.
‘ஓகே எனக்கு புரியுது. உன்ன மாதிரி அழகான படிச்ச பொண்ணுங்க விரும்புற அளவுக்கு எனக்கு பர்சானிலிட்டி இல்ல. ஆனாலும் கவலைப்படாத. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை நான் கொடுப்பேன்” என்றான் சொன்னது போலவே அவன் நல்ல வாழ்க்கை தான் கொடுத்தான்.
ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை. கரிச்சு கொட்டும்
மாமியார் இல்லை. மாமானாரும் ரொம்ப கண்ணியம். நாசுக்கு தெரிந்தவர். என்ன தான்
பிள்ளை சென்னையில் ஃபிளாட் வாங்கினாலும் இவர்கள் மதுரை வீட்டிலேயே இருந்தார்கள்.
எப்பவாவது பண்டிகை , விடுமுறைக்கு
வருவதோடு சரி. யாருக்கு அமையும் இப்படி வாழ்வு? அதுவும் மண்டபத்தில் பல முறை ஒரு
ஊர், பேர் தெரியாதவனுடன் ஏமாந்து சோரம் போய், அழுது, வாழ்வதா? சாவதா? என்ற
ஊசாலாட்டத்திலிருந்து விடுபட்டு, சராசரி வாழ்க்கைக்கு திரும்பி.. அப்பபா நினைத்து பார்க்கையிலே அவளுக்கு மூச்சு
முட்டியது.
அவள் ‘திருமணத்தை பிறகு வேலைக்கு போகிறேன்’ என சொன்னால் கூட,
‘ நோ நோ கண்டிப்பா நீ வீட்ல தான் இருக்கணு’ம் உன் அழகு மேல சந்தேகப்பட்டு இந்த முடிவு எடுக்கல. நான் என்னுடைய 20 வயசுல மதுரையில வேலைக்கு போறப்போ அங்க இருக்கிற அங்க பஸ்ல பொம்பளைங்க நிறைய பேரு சாப்பாடு பேக் மாட்டிகிட்டு வேலைக்கு ஓடுவாங்க.
ஒரு பக்கம் மில்லுலையும் ஒரு பக்கம் கம்பெனி வேலையிலும் வேலை பாக்குற பொம்பளைங்க அவங்க . அவங்கள பார்க்கும்போது நான் நினைக்கிறது என்னன்னா இவங்களுக்கு புருஷனும் ,வீடும், அப்பா, அம்மாவும் சரியா இருந்தா ஏன் இப்படி கஷ்டப்பட போறாங்க? அப்படின்னு நினைப்பேன். எனக்கு நாளை, பின்ன கல்யாணம் ஆச்சுன்னா கண்டிப்பா என் பொண்டாட்டியை இப்படி கஷ்டப்படுத்தக் கூடாது. அப்படின்னு நான் நினைச்சுப்பேன் ரம்யா. “
“ சூப்பர்ங்க. இப்படியே எல்லாம் ஆம்பளைங்களும்
நினைச்சா நல்லது”
‘ சோ, நீ எப்பவும் வேலைக்கு போகக்கூடாது” என சொன்ன
அபூர்வ புருஷன் ரவி. இப்படிப்பட்ட உயர்வான சிந்தனை உடைய ,ஒரு கணவனுக்கு மனைவியாக இருக்கக்கூடிய பெயரை விட, வேறு எதுவும் அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை.
அவள் எந்தவித அபிப்பிராய பேதம் இன்றி கணவநோடு குடும்பம் நடத்தினாள். கல்யாணம் ஆகி இந்த ஐந்து ஆண்டுகளும் இப்படித்தான் அவள் நடத்தி இருக்கிறார்.
ஆனால், ரம்யா சென்னைக்கு வரும்போது அவள் திடமாக ஒரு முடிவு எடுத்தது இருந்தாள். ஏனென்றால், தன்னுடைய பெரிய குறை என்பது கண்டிப்புடன் இருப்பது, மற்றவர்களை ஏகத்துக்கு விரட்டுவது, தன்னைவிட கீழானவர்களிடம் பேசாமல் இருப்பது, மட்டம் தட்டுவது’
இதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்,என்று தான் நினைத்தாள். ஆனால் , அன்று அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியை பார்த்தவுடனே அவள் மனம் மறுபடியும் மரத்தின் மேல் ஏறிவிட்டது. காச் மூச்சென கத்தி திட்டிவிட்டாள்.
ரம்யா அவனை கண்டிப்புடன் திட்ட அந்த செக்யூரிட்டி பார்த்த பார்வை, ஏனோ அவளுக்கு ஜாக்கியின் பார்வை போல இருந்தது தெரிந்தது. தெரியாமலையோ இது போன்ற ஆண்களின் வெறுப்பை நாம் சம்பாதித்துக் கொள்கிறோம்’ என அவள் நினைத்துக் கொண்டாள்.