அந்த சில வினாடிகள் மஞ்சுமாவிற்கு போதுமானதாக இருந்தது .அவள் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து வேகமாக கிச்சனூள் நுழைந்து சென்று விட்டாள். எதிர்பட்ட ஆட்களை தள்ளிக்கொண்டு, வேகமாக கிச்சனின் பின் வாசல் நோக்கி எங்கே? என கேட்டு ஓடினாள்.
ஸ்டோர் ரூம் கதவை திறந்து, மளிகை பொருட்கள் உள்ளே வரக்கூடிய அந்த சிறிய வாசல் வழியாக அவள் அந்த ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே வந்தாள். ராணா கும்பலிடமிருந்து சூப்பராக எஸ்கேப் ஆனாள்.
கார் பார்க்கிங்கில் ரகு சொன்ன கார் எது என பார்த்து அதில் ஓடிப் போய் உட்கார்ந்தாள். அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள். ரகு உடனே வந்தால் தன் மீது சந்தேகம் சந்தேகம் வரும் என்பதற்காக “ நீ
காரை எடுத்துட்டு வெளிய போய்டு. கோவா ஹைவேஸ்ல வெயிட் பண்ணு “ என ரிப்ளை செய்தான். அவள் காரைக் கிளப்பி கொண்டு போக.,
கொஞ்ச நேரம் அங்கேயே அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான். குழந்தைகள் அவனை சூழ., ராணாவின் ஆட்கள் மெல்ல அந்த மேசையை
விட்டு விலகினார்கள்.
“அவ எங்கேடா?” ராணா கேட்டான்.
“பாத்ரூம் போனாஜி”
“என்ன சோப்பு போட்டு குளிக்கிறாளா?
தூத்தேறி உள்ளே போடா”
அவர்கள் பரபரப்பானார்கள்.
உள்ளே நுழைந்து வரிசையாக இருந்த ஆறு பாத்ரூமையும் தட்டினார்கள். ஆள் இல்லை.
வெளியே வந்து., “ ஜி லடிக்கி எஸ்கேப்”
“பேஞ்ச்சோத்.. “ சொன்னவனின் கன்னத்தில் அறைய ஒட்டு மொத்த ரெஸ்ற்றாண்டும்
திரும்பி பார்த்தது.
“தேடுறா..”
“அவ ஓடி போவமாட்டா பாஸ். உங்களை பிடிச்சி தான் வந்தா”
“போடா.. சோம்பேறி.. நல்லா தேடுறா..”
அவர்கள் பரபரப்பாகி “மஞ்சிமா எங்கே? எங்கே?” என சல்லடை போட்டு தேடினார்கள்.
“எல்லாம் அந்த டென்னிஸ்..ஆளால வந்தது..” அவர்கள் அலுத்துக் கொண்டார்கள்.
ரகு இன்னமும் குழந்தைகளோடு செல்பி எடுப்பதை பார்த்தார்கள்.
“எங்கேடா போயிருப்பா?”
கிச்சனில் இருந்து வெளிப்பட்ட வெயிட்டர் ஒருவனை பிடித்து உலுக்க. ,அவன் ஸ்டோர் ருமை காட்டினான்.
ரானா கோபமானான் . “ எதுக்கு ஓடறா? என்னடா சொன்னீங்க” மஞ்சுமாவை தேடுவதற்கு ஆட்களை அனுப்பினான்.
“அந்த ஷூட்டிங்க் கம்பெனிக்கு ரெண்டு பேர் போ.. அவ நம்பர் தெரியுமா?”
“அச்சா ஜி”
“அப்புறம்.. அவ அபார்ட்மென்ட் அட்ரஸ்க்கு ஒருத்தன் போ..ஏதுக்கு ஓடுனான்னு
கேளு.. என்னடா சொல்லி கூட்டி வந்தீங்க பான்சோத்...”
“எப்படியும் அவ வெளிய ஆட்டோ பிடிச்சி தான் ஓடியிருப்பா..”
“சரி நான் ரூமை வெகேட் பண்னிடு வரேன். ஹோட்டல் எங்கிறதால பயப்படுறா
போல., ஆபீஸ்ல் வெச்சி பேசுவோம் “ ரானா நகர,
“எதுக்கு ரூம்ல வெயிட் பண்ணுங்கஜி. ஒன் ஹவர்ல நான் அவளோட வரேன்..”
“இல்லடா ஆபீஸ் போலாம்..: ரானாவின் பேச்சை யாரும் கேக்க வில்லை.
ஆட்கள் திசைக்கு ஒருபக்கமாக நகர, ரகு பதட்டத்தை வெளி காட்டாமல்,
தன்னுடைய சீட்டில் போய் உட்கார்ந்து ஒலாவில் கார் புக் செய்து காத்திருந்தான். ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தான்.
அதன் பின் இயல்பாக வெளியே வருவது போல வந்து, ஓலா காரில் ஏறினான்.
காரில் உட்கார்ந்து மஞ்சிமாவின் லொகேஷனை சேஸ் செய்து போனான். மஞ்சிமாவை
நெருங்கும் முன்பாகவே காரை விட்டு இறங்கி நடந்தான்.
மும்பை அவுட்டரில்,
பை பாஸ் சாலையை விட்டு இறங்கி இருந்த தன் காரை நோக்கி போனான். கதவை
திறந்து., பின் சீட்டில் மட்டையாக படுத்திருந்த மஞ்சிமாவை பார்த்து சிரித்தான்.
“ ரொம்ப தேங்க்ஸ் ரகு”
அவள் எழுந்து அவனை கட்டி பிடித்துக் கொள்ள., அவளது மென்மையான பாகங்கள்
அவன் உடலில் அமிழ்ந்த அவன் அதிர்ந்து போனான்.
“உனக்கு எப்படி தேங்க்ஸ்
பண்றதுன்னே தெரில..,ரகு யூ ஆர் சிம்ப்ளி ஜீனியஸ்... வெரி பிரேவ் மேன்...எனக்காக. அய்யோ
எனக்காக எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்தே? மை காட்
செத்துப் பிழச்சேன்”
“ மஞ்சிமா அதான் நான் இருக்கேன்ல..?”
“ரகு ஐ கேன் நாட் பர்கெட் யூ.. நீ என்னை காப்பத்திட்டே?”
“கூல் கூல்.. முதல்ல உன் போனை சுவிட்ச் ஆப் பண்ணு, அந்த ராணா உன்னை
ஜிபி.ஆர்.எஸ்..டிராக் பண்ணி வருவான் ”அவன் ஓவராய் பயமுறுத்த., அவள் போனை சுவிட்ச் ஆப்
பண்ணி தூக்கி போட்டாள். ரகுவின் நோக்கம் இனி அவள் கமலேஷ்ஷிடம் பேசக் கூடாது என்பது
தான்.
அவள் அப்பாவியாய் அவனை கட்டிக் கொண்டு “அய்யோ. என்னால இப்பவும் நம்ப
முடியல. அந்த ரானா குரூப் கிட்ட இருந்து காப்பாத்திட்டே.. நீ இல்லன்னா... அய்யோ”
கண்ணீர் முட்டி அழ., அவன் அவள் கூந்தலை ஒதுக்கி ஒரம் போட்டு, அவள் முதுகை தடவி விட்டான். “ அழாதே., மஞ்சிமா..
நான் தான் உன் கூட இருக்கேன்ல”
அவள் திரும்ப அவனை இறுகக் கட்டிப் பிடித்து கொண்டாள். அவன் கழுத்தை
தடவி விட்டான். அவளது அழைப்பில் தஞ்சம் இருந்தது. அவனது தடவலில் காமம் இருந்தது.
“டோன்ட் பேனிக்.. “
“ரகு ..அந்த ரானா என்னை என்ன பண்ணி இருப்பான்?”
“அது எதுக்கு விடு..”
“இல்ல சொல்லு..”
“உன் சம்மதம் இல்லாம உன்னை ... “
“சொல்லு”
‘ரேப் பண்னி இருப்பான்.. “
“அத்தோட விட்டுருவானா?’
”அதெப்படி? அவன் கூட மூனு பேரு இருந்தாங்களே?”
“என்ன சொல்றீங்க” அவள் பயத்தில் அவனை இன்னும் கட்டிப் பிடித்தாள்.
“அதில்லாம் அவன் உன்னை ஏதாச்சும். தப்பான இடத்துல“ அவன் வேண்டுமென்றே
,மிகையாக சொல்ல ஆரம்பிக்க.,
‘அய்யோ வேண்டாம் சொல்லாதே”
“மஞ்சிமா”
“ஐயோ என் வாழ்க்கையே நாசமா போயி இருக்கும். அந்த தாதா கையில நான் மாட்டிருந்தேனா அதுக்கப்புறம் என் கேரியரே போய் இருக்கும். என்னை யாரும் சட்டையே பண்ணி இருக்க மாட்டாங்க.. அய்யோ எனக்கே பயமா இருக்கு .”
“உனக்கு இனிமே மாடலிங்க், மும்பை எதுவும் வேணாம்., மஞ்சிமா. இட்ஸ்
நாட் சேஃப்”
“யெஸ் யூ ஆர் ட்ரூ..”
“ நல்ல பையானா பாத்து கட்டிகிட்டு ஊரோட இரு.. இந்த கமலேஷ் மாதிரி,
கோழையான ஆளு வேணாம்”
ரகு சமயம் பார்த்து ஊதி
விட்டான்.
“யெஸ் ரகு...” அவன் காதிலியே முனகினாள்.
ஆஹாஆஆ. அந்த அழகு தேவதை என் கரங்களில் வந்துவிட்டது. அவள் கூந்தல்
முதுகெல்லாம் அவன் உடலில் பட்டு வழிய.,
“ரகு இங்க இருக்க வேணாம்.. சீக்கிரம் கார் எடுங்க” அவள் விலகி
கொள்ள., ரகு காரை ரிவர்ஸில் எடுத்து ஹைவேஸ் ரோட்டில் கோவாவை நோக்கி சந்தோஷமாக செலுத்தினான்,