மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, January 6, 2025

க.வெ.கொ பாகம் 6 : அத்தியாயம் 142

 

ரகுவின் கார் 120 கிலோமீட்டர் வேகத்தில் மும்பை நோக்கி பறந்து கொண்டிருந்தது . “ஃபுல்மூன் ‘ ஹோட்டல் என மஞ்சிமா மெசேஜ் அனுப்ப.  இன்னும் 3 கிமீ தான்.. காரை இன்னும் வேகப்படுத்தினான் ரகு.  ஹோட்டலை நோக்கி பறந்தான்.

‘அடேய்ய்  ராணா.. நீ துப்பாக்கி வெச்சிருக்கியா?  இல்ல கத்தி வெச்சிருக்கியான்னு தெரியலையே.’, மும்பை நெருங்க நெருங்க அவனுக்கு திக்’ திக்’ என அடித்தது.

ராணா பயங்கரமான முரடன்’ என்பதை ரகு கேள்விப்பட்டிருக்கிறான். அவனிடம் தர்ம நியாயத்துக்கு எல்லாம் இடமில்லை, தன்னுடைய உயிருக்கு உயிரான காதலி பாஸ், விட்டுடுங்க’  என  கெஞ்சினால் கூட, அவன் விட மாட்டான் .

‘ஏதாவது ஒரு இடைவெளி கிடைத்தால் மஞ்சிமாவை தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும்’  என்பதில் முனைப்பாக இருந்தான். கமலேஷ் இல்லாத இந்த நேரம் நமது ஹீரோயிசத்தை காட்ட சூப்பர் நேரம். அதுவே, கமலேஷ் இங்கே இருந்தால்,. ரானாவிடம் நேரில் போய் பேசி கூட சமாதனப்படுத்தி விடுவான். ஏனெனில் கமலேஷ் கொஞ்சம் பாப்புலர். எம்.பி. எம்..எல்.ஏ என  யாரையாவது பிடித்து மஞ்சிமாவை வெளியே கொண்டு வந்துவிடுவான். ஆனால் அவன் இப்போது இங்கே இல்லாதது பிளஸ் பாய்ண்ட். இந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக்கி விட வேன்டும்.

நிமிடத்திற்கு நிமிடம் மஞ்சுமாவிடமிருந்து மெசேஜ் வந்து கொண்டு இருந்தது. அவள் அவனுக்கு  மெசேஜ் அனுப்புவதை அவர்கள் பார்க்காத வரை நல்லது. பார்த்து விட்டால், சகலமும் போச்சு. அதற்குப் பிறகு  ராணா கொஞ்சம் கூட பேசுவதற்கு நேரமே கொடுக்க மாட்டான். பாலிவுட் நிறைய நடிகைகளை அவன் இது போல அராஜகம் செய்து அனுபவித்திருக்கிறான். எதிர்பார்த்ததற்கு மேலே காசு கொடுப்பதால் பாதிக்கப்பட்ட நடிகைகளும் பெரிய அளவில் புகார் சொல்வதில்லை. தெலுங்கு நடிகைகளும் தமிழ் நடிகைகளும் ஏன் கேரள நடிகைகள் கூட அவனிடம் இருந்து தப்ப முடியாது.

 பத்திரிகையில் முதல் பக்கத்தில் வரும் விளம்பரத்தில் ஏதேனும் அழகான பெண் மாடல் என்றால் உடனே வர சொல்லி விடுவான். அதுபோலத்தான் இந்த மஞ்சிமாவும் அவனது கண்ணில் பட்டிருக்க வேண்டும். மஞ்சுமா தன்னுடைய காதலி இல்லை என்றாலும் கூட அவளை எப்படியாவது  ரானாவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

முதலில் ராணா,  அதற்கு பிறகு கமலேஷ்ஷிடமிருந்து மனிமா குட்டியை  . காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், அவள் அத்தனை அழகி. அவன் பார்த்த பெண்களிலே நெஞ்சம் பழுத்த நல்ல அழகி மஞ்சிமா.  அவன் பல கேரளா பெண்களை அனுபவித்திருந்தாலும் கூட, அவர்களிடம் இல்லாத ஒரு அழகு மஞ்சுமாவிடம் இருக்கிறது. அந்த அழகு ஆராதிக்க வேண்டிய அழகு.

 எப்படியாவது மஞ்சிமாவை காப்பாற்றி விட்டால், மஞ்சுமா நமக்கே கிடைத்தாலும் கிடைப்பாள்.  கமலேஷ் அவளை அதிகமாக தொட்டிருக்க மாட்டாள். ஏனென்றால், அவளைப் பற்றி பல தடவை சொல்லி இருக்கிறான்.

மேலே கை வைச்சா, முறைக்கிறா மச்சி. இல்லன்னா தள்ளி விட்டுடறா.. ரொம்ப பியூர் பிராண்டு..”   என பெருமையாக  சொல்லி இருக்கிறான்.

 அப்படிப்பட்ட மஞ்சுமா, காதலனே தன் மீது கை வைக்க விடாமல் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கமலேஷின் காதலி,  இந்த கன்னி கழியாத, மஞ்சிமா நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இந்த ரானா மேட்டரை நமக்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எப்படியாவது மஞ்சுமாவை ராணா கும்பலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

 ஆனால் அது அத்தனை எளிதல்ல, மோதி ஜெயிக்க முடியாது, தந்திரமாகத்தான் காப்பாற்ற முடியும். இந்நேரம் மஞ்சுமா அந்த கும்பலிடம் இணக்கமாக நடந்து கொண்டிருப்பாரள். அப்படி நடந்து கொண்டால் தான் அவளது ஃபோனை பிடுங்க மாட்டார்கள், அவளை சுதந்திரமாக விட்டு வைப்பார்கள். அப்படி மட்டும் செய்துவிட்டால் மஞ்சுமாவை நாம் காப்பாற்றுவது எளிது,.

மறுபடியும் ஒரு மெசேஜ் மஞ்சுமாவிடமிருந்து.

“அரைவ்ட்..” என மெசேஜ் வந்தது.

ஓகே ஓகே ,. உன் லொகேஷன் கிட்டக்க வந்துவிட்டேன்.”எனக்கு  2 கிலோமீட்டர் தான். வந்து விடுவேன். நீ எப்படியாவது ரூமுக்கு போவதற்கு முன்பு நேரத்தை கடத்து..”

எப்படி?”

இப்போது காரில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

முன்னாடி இரண்டு பேர். என் பக்கத்தில் ஒருவன்”

நீ டைப் செய்வதை, உன்  மெசேஜ் படிக்கிறார்களா ?”

இல்லை .அவர்களுக்கு ஹிந்தி தாண்டி எதுவும் தெரியாது போல

சரி . நீ காரில் விட்டு இறங்கிய உடனே, ரெஸ்டாரண்டில் ஏதேனும் பசியாக இருக்கிறது, என சொல்லி, ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்து சாப்பிடு கொண்டே இரு, நான் உன்னை ரெஸ்டாரண்டில் சந்திக்கிறேன்”

அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ரகு.  அவர்ளின் கண்காணிப்பு தாண்டி என்னால் எதுவும் செய்ய இயலாது”

சொல்வதைக் கேள். நீ ரெஸ்டாரண்டில் இரு. அடம் பிடித்து சாப்ப்பிடு. கொல
பட்டினி என சொல்’

“முயற்சிக்கிறேன்”. அவள் சொல்ல , அவள் ஹோட்டல் நோக்கி நடத்தப்பட்டாள்.
 ஹோட்டல் ரிஷப்ஷன் தாண்டும் போது,
 அவள்மிகவும் பசிக்கிறது” என்றாள்?

“எல்லாம் ரூமில்  தயாராக இருக்கிறது . பாஸ்  ராணா  ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். வாருங்கள்” என்றான் மரியாதையாக.

“முடியாது முதல்ல சாப்பாடு. அப்புறம் தான் எல்லாம்”

“வரியா இல்லையா?’

“என்ன நீங்கள்? சாப்பாடு கேட்டால்,  மிரட்டுகிறீர்கள்? ராணா சாரை பார்க்கும்போது , எனக்கு பசி. களைப்பா இருக்குன்னு சொன்னா, நல்லாவா இருக்கும்? “ என மஞ்சிமா விடாப்படியாக சொல்ல ,

அந்த பெண் சொல்வது சரி, அவளுக்கு என்ன வேண்டுமோ வாங்கி கொடுமூன்றாவது ஆள் ஒத்துக் கொண்டான்.

“ மேடம் பசியாக இருக்கிறது,  என சொல்லியும் எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அதற்கும் பாஸ் திட்டுவார்என இன்னொருவன் சொல்ல,

 அந்த மூன்று பேரும் அவளை ஹோட்டலின் ஓரத்திலித்திருந்த ரெஸ்டாரண்டிற்கு போனார்கள். அவள் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவளது கண்கள் ரகு எங்கும் தேடிக் கொண்டிருக்க,

நான் வந்துட்டேன். சட்டுன்னு பாக்காதே.. உன்னை நான் பாத்துட்டேன் நார்மலா இரு” என்றான் ரகு.

“மஞ்சிமா அவர்களது கவனத்தை  திசை திருப்பி உன்னால் தப்பித்து வெளியே வர முடியுமா?”

நிச்சயம் முடியாது. எல்லாரும் பாக்கெட்டில் கன் வைத்திருக்கிறார்கள். நான் பார்த்தேன்.”

“ஓ மை காட்”

நான் ஒரு அடியை, வேறு திசையில் வைத்தால் கூட, என்னை பிடித்து உட்கார வைத்து விடுவார்கள்..”

அப்படியா பாத்ரூம் போகிறேன் என்று சொல்லி வர முடியுமா?”

அதெல்லாம் முடியாது. அதுவும் தவிர பாத்ரூமில் இருந்து வெளியே போவதற்கு  வேறு தனி வழி இருக்க வேண்டும்”

ஆங்க்..மஞ்சிமா ஒன்று செய்யலாம்.  எப்படியாவது நீ ரெஸ்டாரன்ட் கிச்சன் போவதற்கு முடியுமா?  என்று மட்டும் பார்”

அது எப்படி முடியும்?”

பாத்ரூம் போவதாக சொல்லி டிரை பண்ணு”

‘...”

‘பாத்ரூம் போகும் வழிக்கும், கிச்சன் வழிக்கும் நான்கடி தானே இடைவெளி உள்ளது. டக்கென கிச்ச்சனில்  நுழைஞ்சி வெளியே போய்டு”

  உங்களுக்கு எப்படி  இதெல்லாம் தெரியும்?”

நான் உனக்கு பின்னால்  நாலு ரோ தள்ளி உட்கார்ந்து இருக்கிறேன்..”

இங்கேயா? எங்கே ?”

எங்கேனு  தயவுசெய்து என்னை தேடாதே . நீ தான் மாட்டிக் கொள்வாய். பாத்ரூம் நுழைவது போல போய் டக்குனு கிச்சனில் நுழைந்து விடு”

“அங்கே வழி இல்லன்னா?”

“கிச்சன் என்றால் கண்டிப்பாக புரவிஷன் வந்து போக இன்னொரு எக்ஸிட் இருக்கும்”

சரி..”

மஞ்சிமா கொஞ்சமா சாப்பிட்டு முடித்தப்பறம், அவஸ்தையாய் நெளிந்து அங்கே இங்கே என திரும்பி திரும்பி பார்க்க.,

“என்ன மேடம்?”

“அவசியம் உங்க கிட்ட சொல்லனுமா?” வெயிட்டரைக் கூப்பிட்டாள்.

“ரெஸ்ட் ரூம் எங்கே?” இயல்பாக கேட்டாள்.

அவன் கை காட்ட இவள் எழுந்து கொண்டாள்.  கூட ஒருவனும் இருந்து கொள்ள அவள் அவனை முறைத்தாள்.

என்னைய்யா பாத்ரூம் கூட பின்னாடி வருவீங்களா? ராணா சார் கிட்ட சொல்லட்டுமா ?’ என்ன கத்தினாள்.

சாரி மேம்.,  சாரி மேம்”

அவளை தனியாக பாத்ரூம் செல்ல அனுமதித்தார்கள் . ஆனாலும்  அவள் போவதையே, பின்னால்,  அவர்கள் பார்த்த பார்த்துக் கொண்டிருக்க கூடும் என்பது அவளுக்கு உள்ளுணர்வால் தெரியவே, அவள் கொஞ்சம் கூட திரும்பாமல் நேராக பாத்ரூமில்  நுழைந்தாள். காலியக இருந்த ஒரு டாய்லெட்டில் நுழைந்து, சில நிமிடங்களுக்கு பிறகு பாத்ரூமில் இருந்து  பூனை போல மெதுவாக வெளிவந்தாள்.

கறுப்பு வண்ணம்  பூசப்பட்ட வாசல் கண்ணாடியில் நின்றபடியே எட்டிப் பார்த்தாள்.  அந்த ரானா கூட்டம் இந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது.

ரகுவிற்கு  போன் செய்தாள்.

“எங்க இருக்கே..”

“ம்ம் இங்க .ப்ளூ.. டீ சர்ட்” அவன் லேசாக கையை உயர்த்த

“ பாத்துட்டேண் ரகு ..இப்போது என்ன செய்றது?”

“ மஞ்சிமா  நான் வந்துட்டேன்ல?.. கவலைப்படாதே. நான் எப்படியாவது அவங்க கவனத்தை திசை திருப்புறேன் . அதே சமயம் கிச்சனிலிருந்து யாரேனும் வைட்டர்கள் டிராலி தள்ளிக் கொண்டு வந்தாங்கன்னா, அந்த  கேப்பில் அவங்க  பின்னாடியே மறைஞ்சிகிட்டு, நீ கிச்சன்ல நுழைஞ்சிடு. சொதப்பிடாதே. ஓ மை காட்..”

“என்ன? ” அவள் பதறினாள்.

“ அந்த ராணா வரான்”

“அய்யோ”

உயரமும் பருமனுமாய் ஒரு சபாரி சூட் காரன் அந்த டேபிளை நெருங்குவதை கண்னாடிக்கு பின்னாலிருந்து பார்த்தாள்  முகமெல்லாம் கத்தி கோடுகள்“.அய்யோ இவனா?

“ஆமாம்”

“பாக்கவே பயங்கரமா இருக்கானே?’

“ நீ எந்த பிராப்ளமும் இல்லாம வந்துட்டேன்னு சொல்லி இருப்பாங்க, ரெஸ்ட்ராண்ட்ல  வந்துட்டோமுன்னு சொல்லி இருப்பாங்க, தலைவருக்கு பொறுக்க முடியாம உன்னை பாக்க ஓடியாந்துட்டான்.  பகல்லேயே  குடிச்சிருக்கான்”

“ரகு.. உன்னை தான் நம்பிட்டிருகேண்.”

“மாட்டினே சட்டினிதான். இவன் கண்னுல போய் பட்டியே”

“பயமுறுத்தாதே ரகு..”

“இரு அவங்க கிட்ட பேச்சு கொடுக்கறேன். நீ பயப்படாதே. ஏதாச்சும் ராங்காயிடுச்சினா..கூட  நீ பயப்படாதே, வெளியே என் கிரீன் கார் இருக்கு சிக்ஸ் த்ரி  சிக்ஸ் த்ரி..கார் சுசுகி எட்ரிகா. கீ அதிலேயே இருக்கு”

“ரகு”

“என்னை பத்தி பயப்படாதே. உனக்கும் எனக்கும் லிங்க்ன்னு அவங்களுக்கு தெரியாது. ஒரு ரிஸ்க் எடுத்து பாப்போம்.”

“பயமா இருக்கு ரகு”

“டோன்ட் பேனிக்... நான் பேசிகிட்டிருகேன்.. நீ டக்குன்னு  வெளிய வந்து, கிச்சன்ல நுழை...மஞ்சிமா”

“இது உன் லைப்ல முக்கியமான டைம்.. சொதப்பிடாதே. எப்படியாச்சும் என் கார்ல போய் ஏறிடு..”

“கடவுளே கிவ் மீ த பவர்..’

“போனை கட் பண்னு.. டேபிளையே பாத்துட்டிரு”

‘ம்ம்”

அவள் போனை கட் பண்ன.. ரகு பாக்கெட்டிலிருந்த ஒரு டென்னிஸ் பந்தை அவர்களது டேபிள்   நோக்கி  உருட்டி விட, அதைப்பார்த்த மஞ்சிமா தலையில் அடித்து கொண்டாள்.

‘இவன் என்ன லூசா? இதுவா அவன் ஐடியா? பந்தால நல்லா அடிவாங்க போறான்.. “ அவள் நினைக்க

பந்து நேராக., வந்து ரானாவின் பின் தொடையில் பட, அவன் திரும்பி பார்த்தான்.  ரகு ஓடிப்போய் அந்த டென்னிஸ் பாலை எடுக்க போக,.,

யோவ் என்னய்யா அறிவு இல்ல உனக்கு? ரெஸ்டாரண்ட்ல போய் பால் போட்டு ஆடற. பாகல்..” ராணாவின் கைத்தடி எகிற.,

“ஸாரி சார்...கையில் இருந்து மிஸ் ஆகிடுச்சி..வெரி சார் “

“பாகல்”

“ மாப் கரோ ஜி”

ஏன்யா பார்த்தா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்க,  பால உருட்டி விடரியா . ஜாவோ.. “

இன்னொருவன் திட்ட., ரகு குனிந்து பாலை எடுத்தான்.

ராணாவின் முகத்தை கூட துணிந்து ரகு பார்க்கவில்லை.

இன்னொருவன்  மட்டும்.. “ ஹேய் பையா..  நீ டென்னிஸ் ஆடுற ஆளா ?” என கூவ, ராணா ஏரிட்டு பார்த்தான்

நீ டென்னிஸ் பிளேயரா ?”

அச்சா சாப்.”

“ஹேய் தும்  நாம்... ஆங்க் கமலேஷ்...ஆங்க்”

“நஹி சாப் மேம் ரகு. ரகுபதி பாஸ்கரன் சாப்”

அப்படியா உனக்கு தெரியுமாடா இந்த ஆளை ? கிரிக்கெட் ஆடுற தம்பியா? ஐபிஎல்லால் என்ன டீம் நீ?” ராணா அலட்சியமாக கேக்க.,

கிரிக்கெட் இல்லஜி. டென்னிஸ். “ அவன் பந்தை காட்டினான்.

“ஆஅங்க் ரகு.. நல்லா தெரியும்.. படா கில்லாடி.. அவன் ரகுவை அறிமுகப்படுத்த ஒருத்தருக்கு ஒருத்தர் கைகுலுக்கி கொண்டார்கள். அவர்கள் அவனிடம் செல்பி எடுத்து கொண்டார்கள் . நிமிடத்தில் சூழல் மாறியது.

ரகுபதி ஒரு நேஷனல் லெவல் பிளேயர் என்பது என்ற விஷயம் அந்த ரெஸ்டாரண்டில் பரவ அவனை சுற்றி ஒரு சிறு கூட்டம் சூழ்ந்தது. பரபரப்பானது.  


3 comments:

  1. Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum Knp part 3 epo varum

    ReplyDelete
  2. these kind of thrillers are better tahn sex situations… exceping good thriller suspense novel from you

    ReplyDelete
  3. I need kpn part 3

    ReplyDelete