மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 21, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1825

" மஞ்சள் ரோஜா "

படம் துவங்கியது. 

காமிரா அந்த கிராமத்தின்  பெரிய திரை முழுக்க நிரப்பியது.

அது நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத நடுத்தர ஊர். 1500 குடும்பங்கள் அதில் இருந்தன. பிரசித்தி பெற்ற சிவன் கோயில், வற்றாத ஆறு, வளமான மண், பழங்கால அணை., மலைக்கோட்டை என பல பிரசித்தி பெற்ற புராதான அடையாளங்கள் கொண்ட அந்த ஊர் கொல்கத்தாவிலிருந்து 30 கிமீ தொலைவில் இருந்தது.

பால், பழம், காய்கறிகளை கொல்கொத்தாவின் வயிற்றுக்கு தினம் தினம் வழங்கும் அனுப்பி படி அளக்கும் அந்த ஊர் அன்று சாம்பல் கலந்த காலையில் விடியத் தொடங்க..

அந்த ஊரில் அந்த வீடு பரபரப்பாக இருந்தது.  அந்த தெருவில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். புது உடைகள் சரசரக்க திரிந்து கொண்டிருந்தார்கள்.

அந்த பெரிய தெருவின் கடைசியில் இருந்த, அந்த வீட்டின்  வாசலில் பெங்காலி மொழி பாடல்கள் ஓயாமல் ஒலித்து கொண்டிருந்தன. அது கல்யாண வீடு. ந்த ஊரிலியே பெரியவீடு. நம்ம ஊர் காரைக்குடி செட்டி நாட்டு வீடுகளை  நினைவுபடுத்தும்  பழங்கால ஓட்டு வீடு.

ன்று அந்த வீட்டின் மூத்த மகன் கோபால் சர்மாவுக்கு கோவிலில் திருமணம் நடந்து மதிய வேளையை ஆக., புது மணத் தம்பதிகள் வீட்டிற்கு அடியெடுத்து வைக்க தயாராக இருந்தனர். நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான கோயிலில் திருமணம் நடந்து முடிந்து, காலையில் அந்த ஊரின் எல்லைக் கோயிலில் தங்கி இருந்தார்கள். மதியம் ஆக அவர்கள் வீட்டிற்கு திரும்பி னார்கள்.

அந்த ஊரின் அனைத்து குடும்பங்களும் அழைக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட, கல்யாணத்திற்கு வராத குடும்பங்களுக்கு., வீட்டிற்கே சென்று உணவு வழங்கப்பட்டது.. மூன்று நாள் உணவு. ஊர் வந்தாலும், கேட்டாலும் கொடுக்கும் படி உத்தரவு.

அடடா என்ன சாப்பாடு? என்ன சுவை?’ பலரும் அகமகழ்ந்திருக்க

ஆமாம்பா 1944-ல கவாஜான்னு ஒரு ராஜா இங்க இருந்தாரு. அவரு கல்யாணத்துல தான் இப்படி ஊரெல்லாம்  மூனு நாள் சாப்பாடு போட்டங்கனு கேள்விஒரு பெருசு அளக்க

யோவ் பொய் சொல்லாதே.., 24 வருசம் முன்னாடி 5 நாள் கல்யாண சாப்பாடு சாபிட்டோமே..” இன்னொரு ஆள் ஞாபகப்படுத்தினான்.

“5 நாள் சாப்பாடா? என்னய்யா புதுகதையாய் இருக்கு? யாரு

வேற யாரு? இவங்களே தான். இந்த குடும்பம் தான்., இப்பத்து மாப்பிள்ளைக்கு அப்பாவுக்கு ரெண்டாம் கல்யாணம் நடந்துச்சே?” 

அட., ஆமாம்பா.., சோம்நாத்துக்கு ரெண்டாம் கல்யாணம், முத கல்யாணத்தை விட சிறப்பா நட்ந்துச்சுன்னு பழைய ஆளுங்க சொல்வாங்க

சோம் நாத்துக்கு மச்சம்யா

மச்சம், கிச்சம்லாம் கிடையாதுஎல்லாம் அந்த ரோசா பூ வருமானம். வருசத்துக்கு 15 லட்ச ரூபா.,வருமானம் . அதான் முத பொன்டாட்டிக்கு கோபாலை பெத்துட்டு ரெண்டாவது பொன்டாட்டியை கட்டிகிட்டு வந்துட்டான்

ஆமா .., கிளி மாதிரி அழகு.. அதோ போறாங்களே.. அவங்க தான் வித்யா.. அப்ப எப்படி பாத்தாமோ. அப்படியே தான் இப்பவும் இருக்காங்க..” அவன் கை காட்ட

ச்சி கையை காட்டி பேசறியே.. துக்கரியாராச்சும் பாத்தா...தோப்புல கட்டி உரிச்சிடுவாங்கவந்தோமா.,  வண்ணமா துன்னோமோன்னு இரு..”

அதுகில்லப்பா., இந்த மஞ்சள் ரோஜா ஒன்னு போதும்., ஜில்லாவிலேயே இந்த விளைச்சல் இல்லியே., அவங்க ரோஜா பூ வித்த வருமானத்துக்கு., மூனு நாள் என்ன? முப்பது நாள் கூட சோறு போடலாம்.போ..”

யோவ். என்னப்பா எப்ப பாத்தாலும் சாப்பாடு தானா உனக்கு. கல்யாணா ஜோடி சூப்பர்பா. .மனசு மட்டுமில்ல., வயிறும் நிறைஞ்சிடுச்சு.. எனக்கு தெரிஞ்சு பெரியவர் பரம்பரையில் இவங்க ஒரு முக்கியமான தம்பதிப்பாஒரு கிழவர் சொல்ல எல்லாரும் ஆமோதித்தார்கள்.

அந்த கல்யாண பொண்ணு ரொம்ப அழகு.. பொன்புன்னா அவ்ளோ தான் உயரம் இருக்கனும்.. உடம்பு  இருக்கனும்,. தொடை வரைக்கும் கூந்தல்..அடடா

யோவ்வ் அசிங்கமா பேசாதீங்கப்பா. பொண்ணு வீட்டுகாரங்க காதுல கேக்கப் போகுது…”

என்னய்யா அசிங்கம்?.உலகமே அதுல தான் இருக்கு.. இவ்ளோ செலவு, இவ்ளோ ஜனம்,. இதெல்லாம் எதுக்கு? அது ஒன்னுக்குதான்அந்த ஆள் கண்ணடித்து சொல்ல.,  எல்லாரும் சிரித்தார்கள்.

காலை சிற்றுண்டி ஆகிவிட்டது., மதிய உணவுக்காக காத்திருந்தார்கள்.

சமையல்காரன் கொல்கத்தாவிலிருந்து கார்ல வந்திருக்கான்.. வெள்ளை பூசணியை அரிஞ்சி., அதுல அல்வா செய்யறாம் பாரு,. செம்ம டேஸ்ட்பா.. காசினி அல்வாம்”

அவர்கள் இன்னும் இன்னும் உணவு பற்றியே பேசினார்கள்., அவ்வப்போது பெண்களின் அவயங்கள் பற்றியும் பேசினார்கள். இரண்டும் இல்லாத போது மதுவில் மூழ்கி இருந்தார்கள்.

திருமணம் நடந்து முடிந்த கையோடு பலரும் வீட்டிற்கு திரும்பி இருக்க. அந்த கல்யாண வீடு சொற்பமான நண்பர்கள், உறவினர்களால் நிரம்பியிருந்தது. சுபமுகூர்த்த நேரம் குறிக்கப்பட்டு ஒரு நல்ல நேரத்தில் அந்த வீட்டின் மருமகள் காமினி, காமினி மஹாதேவ் இப்போது காமினி கோபாலாக மாறி, தான் புகப்போகும் வீட்டின் வாசற்படியில் நிற்க, ஆரத்தி தட்டுடன் மங்கள இசை ஒலிக்க, அவள் சந்தோஷமாக வரவேற்கப்பட்டாள்.

வாசற்படியில் படிஅரிசி வைத்து அதை அந்த கல்யாணப் பெண் காலால் லேசாக உதைக்க, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள். மாப்பிளையின் பெரியம்மா அவளை கன்னத்தை தடவி திருஷ்டி முறித்தாள்.

எங்கள் குடும்பத்தின் தேவைதைகளே! பூத கணங்களே! இதோ எங்கள் பரம்பரையை அடுத்த தலைமுறைக்கு ஏந்தி செல்ல வந்திருக்கும் இந்த செல்ல மகளை ஆசீர்வதியுங்கள்பெரியவர்கள் பெங்காலி மொழியில் வாழ்த்தினார்கள்.

லட்டு மாதிரி இருக்கே. சீக்கிரம் எங்களுக்கு இன்னொரு லட்டு கொடுஎன்றாள் பெரியம்மா.

ஆமா கோபால் கொலை வெறியில இருக்கான்.  முகத்தை பாருங்க

எல்லாரும் சிரித்தார்கள். மாப்பிள்ளையை பார்த்து கண் சிமிட்டினார்கள்.

அந்த வீடு அவளுக்கு சினேகமாக இருக்கும் போல இருந்தது. வீட்டின் அமைப்பே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது

பெரிய இடம் தான். எல்லாம் இந்த கோபாலால் கிடைத்தது. கோபால் நமது காதலால் கிடைத்தான். இவன் இத்தனை வசதியான ஆள் என்றெல்லாம் தெரிந்து பிடிக்கவில்லை. தானாக அது மலர்ந்தது.

 மதியத்திற்குப் பின் மதியம் விருந்து இன்னும் தடபுடலாக நடந்தது. விருந்து முடிந்த பின் பெரும்பாலோர் காரில் ஏறி சென்று விட்டார்கள். அந்த மணப்பெண் காமினியின் தாய் தந்தையர் மட்டும் மாலை தான் கிளம்பினார்கள்.

அப்பா காமினியிடம் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு வாசலில் காத்திருக்க, அம்மா காமினியின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.

23 வருஷம் கூடவே இருந்துட்டு இப்ப ஒரு புது வீடு, புது குடும்பம், புது சூழல், புது மனிதர்கள் பழக புதுசா இருக்கும். ஆனா பழகிக்க..”

சரிம்மா

நான் விசாரிச்ச வரைக்கும் பையன், ரொம்ப நல்ல பையன். அதிர்ந்து பேசாதவர். உனக்கு தெரியாதா என்ன? ஒரு வருஷம் லவ் பண்ணி இருக்கே? உங்க மாமனார் சோம்நாத் கூட நல்லவர்தான், யார் வம்புக்கும் போகாதவர். இந்த குடும்பம் ஒரு காலத்தில் இன்னும் ஓகோ என்று இருந்த குடும்பம். இப்பவும் குறைவில்லை.

இந்த ஊரில பாதி நிலம் இவங்கதுதான். இந்த கிராமத்திலேயே பாதி பேர் இந்த வீட்டில் தான் சாப்பாடு சாப்பிட்டு இருக்காங்க. அன்னதானம், விருந்துன்னு ஊரு மெச்சுக்க செலவழிச்சி.. இப்ப நடுத்தர நிலைக்கு வந்திருக்காங்க.

வியாபாரத்திலும், தானதர்மத்திலும் இந்த சோம்நாத் ஃபேமிலிய அடிச்சுக்க முடியாதுன்னு எல்லாரும் சொல்றாங்க. இவரு தலையெடுத்த அப்புறம் வியாபாரத்தில் கவனம் செலுத்தாம போக., வீட்டுல வெறும் தானதர்மம் தான் நடந்திருக்கு.. சொத்தெல்லாம் இப்போ குறைஞ்சு போச்சுன்னு சொன்னாலும்

இந்த வீடு வீட்டை சுத்திய இடம் மட்டும் 8 ஏக்கராம். அது தவிர ஊருக்கு வெளியே 20 ஏக்கர் தரிசு நிலம் இருக்குன்னு சொல்றாங்க. உங்க மாமனார் மாமியாருக்கு அப்புறம் அது உன் புருஷனுக்கும் மச்சினனுக்கும் மட்டும்தான்.

ஏம்மா அதெல்லாம்?

இவங்க  ஒன்னும் வெறும் பயல் இல்லேன்னு சொல்றேன். இந்த வீட்டுக்கு, பின்னாடி  நாலு ஏக்கர் தோப்பு, இந்த பக்கத்துல மூனு ஏக்கர் ரோஜா தோட்டம்.. நல்ல வருமானம்.. இவங்களோட மஞ்சள் ரோஜாவுக்கு ஏகப்பட்ட கிராக்கி, இவங்களை இந்த ஊர்ல விசாரிக்க அப்பா வந்தப்ப, ‘ஹலுதா நுனியாகுடும்பமான்னு தான் கேட்டாங்களாம்

சாப்பாட்டுக்கும், வசதிக்கும் ஒரு குறையும் இல்லை. ஆள், படைக்கு குறையில்லை. ஆனா நம்ம டவுன் வசதி இருக்காது.”

"ம்ம்ம்.."

நீ டவுன்ல வாழ்ந்த பொண்ணு. அதனால அங்க இருக்கிற எல்லாமே எங்க கிடைக்கும்னு ஆசைப்படாதே. அது வேணும் இது வேணும்னு கேக்காதே. மாமனார் மாமியாரை அனுசரிச்சு போகனும். அந்த சம்மந்தி அம்மா மட்டும்தான் கொஞ்சம் வெடுக்குன்னு பேசுறாங்க. அவங்க உன் புருஷனுக்கு அம்மா இல்ல ., சித்தி தான்.”

“..ம்ம் தெரியும் சொல்லியிருக்கார்

ஆனாலும் அவங்களும் ரொம்ப நல்லவங்க தான். என்னதான் இளைய தாரமாய் இருந்தாலும் தன்னுடைய மூத்த மகன் மேல, அதான் உன் புருஷன் மேல உயிரையே வச்சிருக்காங்க. தன்னோட சொந்த புள்ளையா நெனச்சி நடத்துறாங்க. "

"..ம்ம்"

" ஏய் இது பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். நாத்தனார், மூத்தார் பிரச்சினை இல்லாத குடும்பம். உன் ராஜ்ஜியம் தான். ஆனா எல்லார் கிட்டயும் நீ அனுசரணையாக நடந்துக்க. எந்த பிரச்சனையும் வராம பாத்துக்க .உனக்கு எந்த பிரச்சினையா இருந்தாலும், உன் புருஷன் கிட்டே மட்டும் தான் சொல்லணும். அப்படி உன்னால சமாளிக்க முடியலன்னா ,அப்பாவுக்கு போன் பண்ணு. ஆனா அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஒருநாளும் வர வெச்சுகாதே.”

ம்ம்

நீயா போய் தேடி கேட்ட., நானும் வாங்கி கொடுத்துட்டேன். இதை வைச்சிக்கதும் தொலைக்கறதும் உன் கையில் தான் இருக்கிறது என சொல்லும்போதே அந்த அம்மாவிற்கு கண்கள் கலங்கியது.

சரிம்மா . நான் பாத்துக்கறேன்…”

இன்னும் ஒன்னும் உனக்கு சொல்லனும். உங்க காலேஜ்ல எப்படி உன்னை பியூட்டின்னு கொண்டாடுனாங்களோ அந்த மாதிரி, இந்த ஊர்ல கூட உன்னை பத்தி தான் பேசறாங்க., யாரோ உன் மாமியா கிட்ட என் காதுபடவே கேக்குறாங்க. “எதுக்கு சாதாரண பேமிலியில சம்பந்தம் பண்ணி இருக்கேன்னு’ கேக்குறாங்க.

அதுக்கு உன் மாமியா எல்லாம் மருமக அழகுக்காக தான்னு பெருமையா சொல்றா

‘…………………”

எதுக்கு இதை சொல்றேன்னா., எல்லாம் நம்மளை அழகுன்னு சொல்லி பாராட்டுறாங்கன்னா அதை தலையில் ஏத்திக்க கூடாது. கல்யாணம் ஆகறதுக்கு,முன்னாடி அழகுங்கிறது பொன்னுக்கு ஆயிரம் இருக்கும். ஆனா கல்யாணம் ஆன் பிற்பாடு நமக்கெல்லாம் அழகு ஒன்னு தான். எந்த காரணத்தையும் கொண்டு நம்ம புருஷனையும் குடும்பத்தையும் தலை குனிய விடாம பாத்துக்கறது தான் பேரழகு. நீ இந்த  வீட்டுக்கு மூத்த மருமக., எல்லாருக்கும் ஒத்தாசையா இரு.”

அம்மா இன்னும் என்னென்னமோ சொல்லி விட்டு., அப்பாவுடன் காரில் ஏறிபோக., காமினி அசதியில் தூங்கினாள்

அவள் போன பிறகு காமினி அவள் அறையில் எட்டிப்பார்த்த  அவளது மாமியார் வித்யாவிற்கு கட்டிலில் கால் பரப்பி மதியவேளையில்  தூங்கும் காமினியை பார்த்ததும் என்னவோ மாதிரி இருந்தது.


-- தொடரும்