மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, December 13, 2025

க.க.கா பாகம் 5 : எபிசோடு : 204

 அவனுக்கு கல்யாணம் ஆன இளம் பெண்களை இந்த  மாதிரி அடிக்ஷன்  மாத்திரை  கொடுத்து  வீழ்த்துவது கைவந்த கலை.  பெரும்பாலும் குடும்ப பெண்கள்  இதில் சிக்கி விடுவார்கள் . சில பேர் தங்கள் உள்ளுணர்வு சொல்லும் விபரீதத்திற்கு பயந்து ஒதுங்கி விடுவதும் உண்டு . ரேகா தனியாக இருக்கும் பெண்.  ஏகப்பட்ட பிரச்சனைகளின் நடுவே தவிக்கிற ஒரு ஜீவன் . இவளுக்கு நாம் தந்த அந்த ட்ரக்ஸ் மாத்திரை மிகவும் சூட்டாகிவிட்டது.

 இதுவரை மூன்று டோஸ் சென்று இருக்கிறது .அதற்கே ஆட்டம் காண்டு விட்டாள்.  சீக்கிரம் எடுத்துவா’ வென துடிக்கிறாள்.  இன்னும் நாலு மாத்திரை சாப்பிட்டால், அடுத்த மூணு மாத்திரைக்கு ஆயிரம் ரூபாய் கூட கொடுப்பாள்.

அதற்கு பிறகு நாம் சொல்வது தான் விலை. இது யாரோ ஒரு பெண்ணாக இருந்தால் கூட இத்தனை கிக்கு இருக்காது . இது ஜாக்கியின் சகோதரி  . ஊரெல்லாம் ஜாக்கி சூறையாடி இருக்கிறான்.  இப்போது நான் ஜாக்கியின் வீட்டுக்குள் புகுந்து சூறையாடப் போகிறேன். அவனுக்கு நினைக்கும் போது இனித்தது.  சரியாக  மூனு மணிக்கெல்லாம் அந்த அப்பார்ட்மெண்டில் நுழைந்தான்.

ஜிம்மின் வாசலில் ஜாக்கியின் பைக் நிற்பதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.  உங்க அக்காகிட்டதான்டா போறேன்’ என்றான். மூன்றாவது மாடிக்கு சென்று கதவை  தட்டி அழகுமிக்க கவர்ச்சி தேவதையாக வந்து நிற்கப் போகும் ரேகாவுக்காக அந்த 10 வினாடிகள் காத்திருந்தான்.

யாரு ?” என அந்த தேன் பலா குரல் கேட்டது

நான்தான் இம்ரான்என்றான்.  ஒரு நிமிடம் எந்தவித சத்தமும் இல்லை வளையல் சத்தமும் புடவை சித்தமும் சில நிமிடங்கள் கேட்டது.  என்னமோ தயார் செய்கிறாள் போல .

அவள் தடக்கென கதவை திறந்தாள். ஊட்டி மலர் கண்காட்சில் ஒரே ரோஜா இருந்தால் எப்படி இருக்கும்?  அப்படி இருந்தாள் ரேகா ..அன்றை விட இன்று மிகவும் அழகாக இருந்தாள்.

 அன்று, ஏதோ ஒரு பழைய புடவையில் வாரிசுருட்டி வந்திருந்தாள். இன்று தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்து இருக்கிறாள் என்பது அவளை பார்த்த உடனே புரிந்தது .வழக்கமாக அவள் ரவிக்கையில் அக்குளில் கொப்பளிக்கும் வேர்வை ஏதும் இப்போது இல்லை . இந்த ஜாக்கெட்டை இப்போதுதான் அணிந்து இருப்பாள் போல இருக்கிறது .

முகத்தில் லேசாக பவுடர்  பூச்சு  தெரிகிறது . அந்த நடு உச்சி பொட்டு அவளை பன்மடங்கு  ஹோம்லி அழகாக்கி சிலிர்க்க  வைக்கிறது. புடவையை  லோ ஹிப்பில் கட்டாமல் நன்றாக தூக்கி கட்டி இருக்கிறாள். முகம் முழுக்க ஒரு பிரஷ்னஸ் இருக்கிறது,.

 லேசாக அவளைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தான்

“ஹய மேடம்”
டேப்லெட் எடுத்து வந்திருக்கீங்களா?  ரொம்ப தேங்க்ஸ்”  என்றாள்.

 ஒரு மரியாதைக்கு வீட்டுக்குள் வா’ என  கூப்பிடுவாள்,  தண்ணி, கிண்னி  கேட்கலாம் என பார்த்தால் எதற்கும் வழி இல்லை.  அவனை வாசலிலேயே கத்ரித்து அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

ரொம்ப கஷ்டப்பட்டு எங்க முதலாளிக்கு தெரியாம கொண்டு வந்தேங்க.  மூனு  டேப்லட் தான் இருந்துச்சு”

பரவால்ல மீதி எப்போ வரும் ?”

டூ த்ரீ டேஸ் ஆகும். வந்த உடனே உங்களுக்கு நான் போன் பண்ணட்டுமா?”

கண்டிப்பாக பண்ணுங்க.  எப்ப பண்ணுவீங்க?” என்றாள்.

முதல்ல இந்த  டேப்லெட் போடுங்க ., அப்புறம் சொல்றேன் . டேப்லட் வந்த உடனே எடுத்துட்டு வரேன்
சரி இதேபோல் நான் ஜி பிபே பண்ணிட்டேன்னா,  நீங்க  கொண்டு வந்துடுங்க”

“மேடம்..”

“ என்ன?”

“..உங்களுக்கு  இது புடிச்சிருக்கா”  என கேட்க

“ஏ..எது?”

“ இந்த டேப்லட்  உங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கா?”

“ இ... இ... இல்ல,  இத சாப்பிட்டா கொஞ்சம் மைண்ட் ப்ரீயா இருக்கு.,  அப்புறம் அந்த தலைவலி வரவே இல்ல .. அ... அதுக்கு தான்என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் பேச எதுவுமே இல்லை . மறுபடியும் அவளது கண்களையே கொஞ்ச நேரம் பார்த்தான் .

என்ன?”  எனக் கேட்டாள்.

“ஒ.. ஒன்னும் இல்ல  அன்னைக்கு சொன்னேன் இல்ல? “

‘என்ன?”

நீங்க பாக்குறதுக்கு  அசப்புல அந்த சீரியல் நடிகை மாதிரி இருக்கீங்கன்னு., “

“அதுக்கென்ன  இப்ப?” அவள் டக்கென முகம் மாறினாள் .

உண்மையில் நீங்க அவளை போல இல்ல,  அவ தான் உங்களைப் போல இருக்கா., இந்த டேப்லட் போட்டபறம் இன்னும் நீங்க பியூட்டியா ஆகிட்டீங்க”

சரி சரி.. ஓகே   பாக்கலாம்” என்றபடி அவள் கதவை சாத்த போவதற்குள் அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

இம்ரான் மனதில் கடுப்பு அதிகமாக இருந்தது .

என்னையாடி? வெளியே தள்ளாத குறையா கதவு மூடி அனுப்பின? இருடி  உன்ன பார்த்துக்கிறேன்

அவள் எப்படியும் 4 நாள் கழித்து கால் செய்வாள் என காத்திருக்க, அவள் அதிசயமாய் மூன்றே நாளில் கால் செய்தாள்.

“எ.. என்னங்க ஆச்சு டேப்லெட் காலி பண்ணிட்டீங்களா ?”

ஆமா..  நேத்து மத்தியானம் ஒரு டேப்லெட் போட்டேன். திரும்ப  ஈவினிங் தலைவலிக்குதுன்னு இன்னொரு டேப்லட்  நைட்டு போட்டேன்
ஐயையோ நைட்டு எதுக்கு போட்டீங்க ?”
இல்ல எங்க ஹஸ்பண்டு ஒரு மேரேஜ்க்கு போயிருந்தார் .நான் தனியா தான் இருந்தேன். அதனால ஒரு டேப்லட் போட்டு பாக்கலாம்னு போட்டேன் காலி ஆயிடுச்சு”

ஐயோ எதுக்கு இந்த மாதிரி  ஒரே நாள்ல ரென்டு டேப்லட். இங்க டேப்ல்ட கிடைக்கறட்தே கஷ்டமா இருக்கு”

“இ..இனிமே இப்படி போடமாட்டேன்...”

சும்மா சும்மா இந்த மாத்திரையை போடாதீங்க . உடம்புக்கு நல்லது இல்ல ., அதே சமயம் மாத்திரை ரொம்ப காஸ்ட்லி”

பரவால்ல., 300 ரூபா தானே ?”

அதான் இல்ல. நிறைய பணம் கொடுத்து பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வாங்கிட்டு போறாங்க . இன்னொரு பக்கம் இதை ரெகுலரா ஸ்டாக் வெச்சிருக்குற டீலர் ஆள் அப்ஸ்கன்ட் ஆகிட்டாரு. இன்னொரு ஆல்டர்னேட் ஆளு யானை விலை சொல்றான். அது கிடைக்கிறதுக்கு செம்ம டிமான்டா இருக்கு ., ஒன்னு , ரென்டு கூட கிடைக்கல”

ஐயோ என்னங்க இப்படி சொல்றீங்க.,  நீங்க  தருவீங்கன்னு தான்  காலி பண்ணிட்டேன்”

அடடா என்கிட்ட நீங்க கேட்டு இருக்க கூடாதா ?  ஒரு மாத்திரை ஆயிரம் ரூபா கொடுத்தா கூட இப்ப கிடைக்கலைங்க ..”

அய்யோ.”

“நான் பசங்ககிட்ட கேட்டு சொல்றேன். நீங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு கால் பண்ணுங்க மாத்திரை கிடைச்சா நான் சொல்றேன்”

ஐயய்யோ ., ஆயிரம் ரூபாய் என்னால முடியாது

அப்படின்னா  பெஸ்ட். இந்த ட்ரக்ஸை விட்டுடுங்க.  இந்த மாத்திரையை இப்போ எல்லா இடத்திலும் பேன் பண்ணிட்டாங்க . இல்லீகலா ஆகிடுச்சி. பயங்கர டிமான்ட். சிட்டில கிடைக்கிறது  ரொம்ப குதிரை கொம்பா இருக்கு. நான் உங்களுக்காக தான் அந்த நாலு மாத்திரை கூட எடுத்து வச்சேன்.  இப்ப திடீர்னு மாத்திரை கேட்டா நான் எங்க போறது ?”

இம்ரான் ப்ளீஸ்! எனக்கு அந்த மாத்திரை வேணும் எங்கனாச்சும் எப்படியாவது அரேஞ்ச் பண்ணுங்க

எனக்கு உங்க அவஸ்தை புரியுதுங்க . நீங்க எதுக்கு இவ்வளவு சீக்கிரம் காலி பண்ணீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ,. உங்களுக்காக நான் எப்படியாச்சும் அந்த மாத்திரையை  எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கிட்டு வருவேன்”

ப்ளீஸ் ஏற்பாடு பண்ணுங்க”
‘வெயிட் பண்னுங்க,..
 டூ ஹவர்ஸ் கழிச்சி கால் பண்ணுங்க சொல்றேன்என்றான்.

எனக்கு மதியானத்துக்குள்ள வேணுமே ?”

சரி மத்தியானம் கால் பண்ணுங்க கிடைச்சா சொல்றேன்என்றான் . ரேகாவுக்கு நம்பிக்கையே இல்லை.  இந்த மாத்திரை இன்று கிடைக்குமா? இல்லையா ?என புரியவே இல்லை. அவளுகு பிபி எகிறியது.  இந்த மாத்திரை மட்டும் இல்லை என்றால்  இந்று இரவு தூக்கம் வராது என அவள் பயந்தாள்.  சே... ஏன் இதற்கு போய் நம் அடிமையானோம்?  இந்த வயதில் போய் நமக்கு இதெல்லாம் தேவையா?

 ஐயோ கடவுளே காப்பாத்து . நமக்கு ரெண்டு பெண் குழந்தைகள் ., அவர்களை வைத்துக் கொண்டு இந்த இழிவான வேலையை., செய்யலாமா? அய்யோ இது என் வாழ்க்கை. என் சந்தோஷம்! என் மனசு...”

அவள் எவ்வளவுதான் மனதை மாற்றிக் கொண்டு சென்றாலும் திரும்பத் திரும்ப அவளுக்கு அந்த மாத்திரையே ஞாபகத்திற்கு வந்தது. இந்த மாத்திரை வேறு எங்குமே கிடைக்கவில்லை. கண்டிப்பாக இது தப்பான மாத்திரை தான் .

அவன் சொன்னது போல பணக்கார பெண்கள்,  ஆண்கள், பிசினஸ்மேன்கள் , ஸ்டரஸ் பீப்பிள் போடுகிற டிரக்ஸ் மாதிரி போலிருக்கிறது. தெரியாத்தனமா அதை நான் போட ஆரம்பித்து விட்டோம் . இப்போது அவன் கொடுத்தால் அந்த மாத்திரையை இரண்டாக உடைத்து, இரண்டு நாள் போட்டு காலத்தை ஓட்டலாம் என அவள் நினைத்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்து இம்ரான் கால் பண்ணுவான் என பார்த்தால், அவன் பண்ணவே இல்லை . இவளே கால் செய்தாள்  அவன் மறுபடியும் ,

அதுக்கு தான் போய்யிட்டிருக்கேண்.. ஒன் ஹவர் கழிச்சி  கால் பண்ணுஎன்றான் .அவள் மறுபடியும் கால் பண்ணஅரை மணி நேரம் கழித்து கால் பண்ணுஎன்றான். அவள் பொறுமையாக சாயந்திரம் 5 மணிக்கு கால் செய்தாள். ரிங்க் போக., அவன் போனை கட் செய் தான். அவளுக்கு  ஷாக் ஆக இருந்தது.

ரேகா மாத்திரை கிடைச்சா நானே போன் பண்றேன்என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினான். கடையிலேயே இருந்தான். சிரித்தான்.

ப்ளீஸ் இம்ரன் டூ சம்திங்” அவள் ரிப்ளை மெசேஜ் அனுப்ப

டியர் ரேகா ப்ளீஸ் வெயிட் .. ஐ வில் கெட் ஃபார் யூ” என  இம்ரான் மறுபடியும் இன்னொரு மெசேஜ் அனுப்பினான்.

அவள் வெகு நேரம் காத்திருந்தாள். எந்த வேலையும் செய்ய தோன்றாமல் தவித்தாள். சாயந்திரம்  ஏழு மணிக்கு அவன் போன் செய்தான்.  அவள் மகள்கள்  ஹாலில் படித்துக் கொண்டிருக்க அவள் போன் எடுத்துக் கொண்டு ரகசியமாக டாய்லெட் ஓடினாள்.

“ பேட் நியூஸ்,  ரேகா மேடம்!’

மாத்திரை கிடைச்சதா ?”

ரொம்ப கஷ்டபட்டுட்டேன்..”

‘ப்ச்.. கிடச்சதா? கிடைக்கலியா?”

“ ஒரே ஒரு மாத்திரை தான் கிடைத்தது . பட் 4,000 ரூபாய் சொல்றாங்க
“அய்யோ!”  அவள் தலையில் கை வைத்து கொண்டாள்.

“ஏன் இஷ்டத்துக்கும்  விலை சொல்றீங்க?”

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா., லோக்கல் டீலர் கிட்ட பேசுங்க.. அவன் சொன்ன ரேட்டை தான் நான் சொல்றேன். வேனுமுன்னா அவன் கூட கான்ப்ரண்ஸ் போடறேன்..”

“இல்லல்ல..? நான் கண்டவங்க கூட ல்லாம் பேச முடியாது..எனக்கு டேப்லட் வேணாம்...”

“ரேகா மேடம்”

“யெஸ்... வேணாம்,” அவள் போனை கட் செய்ய., அவன் திகைத்தான்.


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க..